எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, February 2, 2014

குடியரசு தினம் – சில காட்சிகள்ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் வந்துவிட்டாலே இந்தியாவின் தலைநகர் தில்லியில் குடியரசு தினத்திற்கான முஸ்தீபுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்கும். டிசம்பர் மாத கடைசி/ஜனவரி முதல் தேதியிலிருந்தே அணிவகுப்புக்கான பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். விஜய் சௌக் பகுதியில் இருக்கும் அலுவலகங்கள் முழுவதிலும் விளக்குத் தோரணங்கள் கட்டுவது, வெளிப்புறச் சுவர்களில் இருக்கும் அழுக்குகளை நீக்குவது என, பார்வையாளர்கள் அமர்ந்து கொள்ள இருக்கைகள் அமைப்பது என இது மிகப்பெரிய வேலை.

குடியரசு தின நாளிலோ, மூன்று நாட்கள் கழித்து விடைபெறும் [Beating Retreat] நாளிலோ இந்த இடங்களில் பாதுகாப்பு காரணமாக புகைப்படக் கருவி எடுத்துச் செல்ல முடியாது.  அதனால் பயிற்சி செய்து கொண்டிருந்த நாட்களில் இந்த இடங்களில் அவ்வப்போது எடுத்த சில படங்கள் இந்த ஞாயிறில் உங்கள் பார்வைக்கு.....


பாராளுமன்றமும் நீர்நிலையும் – பகலில்......


விளக்குத் தோரணம் – சௌத் பிளாக் ஒரு பகுதி.
 


இயற்கை வரைந்த ஓவியம்....


அணிவகுப்பில் பயணம் செய்யக் காத்திருக்கிறோம் நாங்களும்....


பார்வையாளர்களுக்காக காத்திருக்கும் இருக்கைகள்!


பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் தூண்... குடியரசு தினம் முடிந்த பிறகு எடுத்தது! பாராளுமன்றம் – விளக்குகளின் ஒளியில்....விளக்குகளின் ஒளியில் North Block, South Block பகுதிகள் – எடுத்த சமயம் இரவு 09.30 – அடர்ந்த பனி மூட்டத்தில்! வாத்தியம் இசைக்கும் ராணுவ வீரர்கள்.


மாலை வேளையில் நீரூற்று – வண்ணமயமாக....


என்ன நண்பர்களே, இந்த ஞாயிறின் புகைப்படங்களை ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த ஞாயிறில் வேறு சில புகைப்படங்கள் பார்க்கலாம்.

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

46 comments:

 1. புகைப்படம் அனைத்தும் அருமை அருமை....!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 2. வணக்கம்
  ஐயா.

  அழகிய புகைப்படங்கள் பார்த்து ரசித்தேன்.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 3. வணக்கம்
  ஐயா.
  த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு நன்றி ரூபன்.

   Delete
 4. இயற்கை வரைந்த ஓவியம் உட்பட அனைத்தும் அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. புகைபடப் பகிர்வு மிக அருமை.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 6. தங்களின் கை வண்ணம் அழகு... வாழ்க வளமுடன்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 7. அனைத்து புகைப்படங்களும் மிக அருமை! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   Delete
 8. அழகான படங்களுக்குள் இயற்கை வரைந்த ஓவியம் முதலில் கவர்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 9. காணக்கிடைக்காத அற்புதக்காட்சிகள்..
  பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  இயற்கை வரைந்த ஓவியம்.... மனம் கவர்ந்தது ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி.

   Delete
 10. புகைப் படங்கள் அருமை வெங்கட். ஒரு சந்தேகம். இந்த அணிவகுப்பு நிகழ்ச்சிகளைப் பார்வையிட அனுமதிச்சீட்டு ஏதாவது வாங்க வேண்டுமா. ? சாதாரண மக்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறதா.?

  ReplyDelete
  Replies
  1. இதற்கான நுழைவுச் சீட்டு விற்பனை செய்கிறார்கள். அதைத் தவிர அரசாங்கத்தின் சார்பில் பலருக்கு அழைப்பிதழ் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 11. துல்லியமான தலைநகர் டில்லி காட்சிகள்! தங்கள் போட்டோகிராபி ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி.

   Delete
 12. இரவில் எடுத்த படங்களும், இருக்கைகளின் படங்களும் மிக அழகாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 13. அனைத்துப் படங்களும் அருமை. இயற்கை வரைந்த ஓவியம்... அற்புதம்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 14. அழகிய பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 15. புகைபடங்கள் மிக அருமை. பேசாமல் நீங்கள் ஒரு புகைப்பட கலைஞராக மாறலாம். உங்களுடைய எல்லா பதிவுகளிலும் கண்களின் திறமையை காண முடிகிறது.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 16. முதல் புகைபப்டத்தின் பாராளுமன்ற கட்டிடத்தை பார்த்தவுடன், 1987ஆம் ஆண்டு, பள்ளியின் மூலமாக "ஜனாதிபதி சாரணர் (PRESIDENCY SCOUT)" விழாவிற்காக டெல்லி வந்து, நம்முடைய பாராளுமன்ற நிகழ்ச்சிகளை பார்வையாளராக பாருளுமன்றத்திற்குள் அமர்ந்து பார்த்த நியாபகம் வந்துவிட்டது.
  நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   எனது பதிவு உங்கள் நினைவுகளை மீட்டியதில் மகிழ்ச்சி.

   Delete
 17. குடியரசு தினத்தை தலைநகரில் கொண்டாடுவது ரொம்ப ஸ்பெசல் தான் இல்லை!
  கண்கவர் காட்சிகள் !!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.

   Delete
 18. அருமையான படங்கள். இரசித்தேன். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 19. விளக்கொளியில் ஜொலிக்கும் படங்கள் அருமையிலும் அருமை !
  த. ம 9

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 20. அருமையான புகைப்படங்கள். எல்லாவற்றிலும் மிகவும் ஈர்த்தது இயற்கை வரைந்த ஓவியம். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 21. நேரில் கண்டது போல படங்கள்! தோற்றம் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 22. அனைத்துப் படங்களும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 23. அண்ணே!
  பார்க்க முடியாத காட்சிகள் பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....