எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, April 22, 2014

அழுமூஞ்சி சுப்பன்
 படம்: இணையத்திலிருந்து.....

என்னப்பா இது தலைப்பே இப்படி இருக்கே?அப்படின்னு யோசிக்காதீங்க! பொதுவா பெண்களைத் தான் இப்படி அழுமூஞ்சி சுப்பின்னு கிண்டல் பண்ணுவது வழக்கம். வழக்கத்துக்கு மாறாக அழுமூஞ்சி சுப்பன்அப்படின்னு எதுக்கு தலைப்பு?

ஒரு சிலரைப் பார்த்து இருக்கீங்களா? எப்போதும் எதுக்காகவாது புலம்பிக்கிட்டே இருப்பாங்க! என்னவோ உலகத்துல இருக்கற எல்லாக் கஷ்டங்களும் அவங்களுக்கு மட்டும் தான் இருக்கற மாதிரி எதிர்மறை எண்ணங்கள் மட்டுமே இருக்கும். எதையுமே நேர்மறையா யோசிக்க மாட்டாங்க. கடையில போய் சாப்பிடும்போது, சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தாலும், இவ்வளவு நல்லா இருக்கே, ஏதாவது கலந்து இருக்குமோ?அப்படின்னு தான் யோசிப்பாங்க.

இந்த மாதிரி ஒரு ஆளைத்தான் இன்னிக்கு பார்க்கப் போறோம். என்னுடைய அலுவலகத்தில் ஒரு நபர் – அவர் தான் இந்த அழுமூஞ்சி சுப்பன். காலையில அலுவலகத்துக்கு வரும்போதே ஏதோ ஒரு விஷயத்துக்கு அழுதுட்டே தான் வருவார். நேற்றைக்கும் அப்படித்தான் – வீட்டிலிருந்து அவர் புறப்பட்டு பேருந்து நிறுத்தத்திற்கு அவர் வருவதற்கும் அலுவலகத்திற்குச் செல்லும் பேருந்து புறப்பட்டுச் செல்வதற்கும் சரியாக இருந்திருக்கிறது. அதன் பிறகு வந்த பேருந்தில் கும்பல் அதிகமாக இருக்க, ரொம்பவும் கஷ்டப்பட்டு வந்தேன். எனக்கு மட்டும் தான் இப்படி நேர்கிறது என்றார்.

எப்போதும் அடுத்தவர்களுடன் ஒப்பிட்டுத் தான் பேசுவார் – “உனக்கு என்னப்பா, நல்ல சம்பளம் வருது, நிறைய காசு இருக்கு. எனக்கு ரொம்பவும் கஷ்டம் என்பார். இத்தனைக்கும் அவரைப் போலவே அவர் மனைவியும் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார். அவர்கள் இருவரது சம்பளமும் சேர்த்தால் மாதத்திற்கு ஒரு லகரத்தினைத் தொடும். ஒரு நாள் சம்பளம் பற்றி பேசுவார் என்றால் அடுத்த நாள் வேறு ஒரு விஷயம் பேசுவார்.

அந்த விஷயம் – அவருக்கு மூன்று குழந்தைகள் – அதுவும் மூன்றும் பெண் குழந்தைகள் என்பதில் அவருக்கு அதிகமாகவே அழுகை. மற்றவர்களுக்கு ஒரு குழந்தை, அதுவும் ஆண் குழந்தையாக இருந்துவிட்டால் அவ்வளவு தான் – அவர்களிடம் “உனக்கென்னப்பா, ஒரு குழந்தை, அதுவும் ஆண் குழந்தை, ஒரு செலவும் கிடையாது, என்ன மாதிரியா, மூணு பெண் குழந்தை. ஏகப்பட்ட செலவுஎன்பார். என்னவோ ஒரு ஆண் குழந்தை பெற்றவர் தான் இவரை மூன்று பெண் குழந்தைகள் பெற்றுக் கொள்ளச் சொன்னது மாதிரி பேசுவார்.

எப்போதும் எதாவது ஒரு விஷயத்தில் அலுவலகத்தில் இருக்கும் சக பணியாளர்களிடம் இப்படி புலம்புவது அவர் வழக்கமாகி விட்டது. எல்லோருக்கும் வேலை இருக்கத்தான் செய்கிறது. தனக்கு மட்டும் தான் அதிக வேலை, அதுவும் தனக்கு பிடிக்காத வேலைஎன்று சொல்லி மற்றவர்களிடம் வம்பு வளர்ப்பார். நாள் முழுவதும் ஏதாவது புலம்பி, அவரது வேலைகளை செய்யாது விட்டு, மாலை நேரத்தில் உட்கார்ந்து புலம்பியபடி வேலையை செய்து கொண்டிருப்பார். அப்போது வேலை முடித்த மற்றவர்களிடம் தனக்கு உதவும்படிச் சொல்வார்.

அப்படி அவர் கேட்டு உதவி செய்யாவிடில் ஆரம்பித்து விடும் புலம்பல் – “என்னை நீ உன் நண்பனாக நினைக்கவில்லை. அதனால் தான் நீ எனக்கு உதவி செய்ய மாட்டேன் என்கிறார். உன்னை நான் நண்பனாக நினைத்தது என் தவறுஎன்றெல்லாம் ஆரம்பித்து விடுவார். பல நேரங்களில் இவரது எதிர்மறை எண்ணங்களால் மற்றவர்களுக்கும் எதிர்மறை எண்ணங்கள் மனதில் வந்து விடும்படி நடந்து கொள்வார்.

பல நாட்களில் காலையில் அலுவலகம் செல்லும்போதே “இன்றைக்கு இந்த வேலைகளை முடிக்க வேண்டும்என்ற எண்ணத்தோடு சென்று, இவரிடம் மாட்டிக் கொண்டால், அந்த வேலைகளை முடிக்க விடமாட்டார். எதையாவது பேசிக்கொண்டே வேலை செய்ய விடமாட்டார். நாம் அவரை கவனிக்காது வேலை செய்ய ஆரம்பித்தால், புலம்பல் ஆரம்பித்து விடும்.

எத்தனையோ முறை அவரை கடிந்து கொண்டாயிற்று. பலமுறை ஏன் இந்த எதிர்மறை எண்ணங்கள், அது உங்களையே அழித்து விடும் என்று சொல்லிப் பார்த்தாயிற்று! எப்போதும் நம்பிக்கையோடு இருங்கள். உங்களை விட கஷ்டப்படுபவர்கள் உலகில் உண்டு. அவர்களோடு ஒப்பீடு செய்யும்போது நீங்கள் நல்ல நிலையில் இருப்பது புரியும்என்று சொன்னால், “முடியாது....  Bill Gates அளவு என்னிடம் பணம் இல்லையேஎன்று புலம்பினால் என்ன செய்ய முடியும்!

அவர் மாறுவதாக இல்லை! அதனால் நம்மைத்தான் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது! என்ன சொன்னாலும் புலம்புவது ஒன்றையே குறிக்கோளாக வைத்திருப்பவரிடம் என்ன சொல்லி புரியவைப்பது.

பல சமயங்களில் இவரைப் பார்த்தாலே எனக்கு பயம் வந்து விடுகிறது! இன்றைக்கு எந்த எதிர்மறை எண்ணத்தோடு நம்மை தொந்தரவு செய்ய வருவாரோ என்று ஒவ்வொரு நாளும் பயப்பட வேண்டியிருக்கிறது! இவரை என்ன செய்யலாம் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

57 comments:

 1. நானும் இதுபோல் சிலரை "பத்தி" விட்டிருக்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 2. என்ன சொன்னாலும் புலம்புவது ஒன்றையே குறிக்கோளாக வைத்திருப்பவரிடம் என்ன சொல்லி புரியவைப்பது.

  சில் புல்ம்பல் மஹாராஜாக்களும் புலம்பல் மஹாராணிகளும் நிரம்ப தொல்லை தான்..

  தனக்காகவும் தெரியாது சொன்னாலும் புரிவதில்லை..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete

 3. “தம்மின் மெலியாரை நோக்கி தமதுடமை
  அம்மா... பெரிதென்று அகமகிழ்க, தம்மின்
  கற்றாரை நோக்கிக் கருத்தழிக - கற்றதெல்லாம்
  எற்றே இவர்க்கு நாம் என்று!”

  என்ற பாடலை இவருக்கு சொல்லுங்களேன்.

  இருப்பதை வைத்து மகிழ்ச்சியாய் இல்லாதவர்கள் தானும் மகிழ்ச்சியாய் இருக்கமாட்டார்கள். பிறரையும் மகிழ்ச்சியாக இருக்க விடமாட்டார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   மிக நல்ல பாடலை இங்கே தந்தமைக்கு நன்றி.

   Delete
 4. திருப்தி இல்லாத மனம் நரகம்... முடிந்தயளவு நாம் ஒதுங்கிக் கொள்வது நல்லது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தன்பாலன்.

   Delete
 5. எல்லா இடத்திலும் இதுமாதிரி இருக்கிறார்கள். அழுமூஞ்சி கேரக்டர் பற்றி ஒரு நல்ல அலசல்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 6. துஷ்டர்கள் மட்டுமல்ல.. இது போன்ற ஆசாமிகளிடமிருந்தும் தள்ளி இருப்பதே நல்லது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்து ஜி!

   Delete
 7. பல நேரங்களில், இவரது எதிர்மறை எண்ணங்களால் -
  மற்றவர்க்கும் எதிர்மறை எண்ணங்கள் மனதில் வரும்படி நடந்து கொள்வார்.

  எல்லா இடத்திலும் இந்த மாதிரி ஆட்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
  ஒன்றும் செய்ய இயலாத பட்சத்தில் - ஒதுங்கிக் கொள்வதே நல்லது...

  ReplyDelete
  Replies
  1. ஒதுங்கியே தான் இருக்கிறேன். இருந்தாலும் பல சமயங்களில் படுத்துகிறார்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 8. அவரைவிட்டு நாலடி அல்ல எட்டடி தள்ளி நிற்பதே சிறந்தது :-))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 9. ஒதுங்க வேண்டியது தான். ரொம்பத் தொந்திரவா இருந்தால் ஒரு கத்து கத்திட்டு ஒதுங்கிடலாம். :)))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 10. சுதா த்வாரகாநாதன் புது தில்லிApril 22, 2014 at 10:13 AM

  Depression cases. Better to ignore such type of persons. உங்களுடைய அத்தனை புத்திசாலித்தனத்தையும் உபயோகித்து தப்பித்து மற்றும் ஒதுங்கிக் கொள்ளவும். இந்த மாதிரி மனிதர்களின் புலம்பல்களை கேட்டால் நாமும் அவரைப் போல ஆகி புலம்ப ஆரம்பித்து விடுவோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   Delete
 11. ரா.ஈ. பத்மநாபன்April 22, 2014 at 10:33 AM

  ரொம்பவே பாதிக்கப்பட்ட மாதிரி தெரியுதே. முள்ளை முள்ளால் எடுப்பது மாதிரி திருப்பி அவருகிட்டேயே பயங்கரமாக புலம்பிப் பாருங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 12. இப்படி ஒரு நண்பரைத் தினமும் சமாளிப்பது என்பது நடவாத காரியம்
  மெல்ல ஒதுங்கிக் கொள்வதே சாலச் சிறந்தது :)) வாழ்த்துக்கள் சகோதரா
  த .ம .4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 13. Indha madhiri atkalin parvail padadhavaru iruppade nalladhu.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 14. இவரால் நான் பாதிக்கப் பட மாட்டேன் என்று நீங்கள் பாஸிட்டிவ் எண்ணங்களுடன் இருங்கள். ஒன்றும் ஆகாது. எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார். அவரிடம் நான் 'எப்படி இருக்கீங்க' என்று மட்டும் கேட்கவே மாட்டேன்! கேட்காவிட்டாலும் அவர் எப்போதுமே தன் உடல்நிலை பற்றி ஒரு பாட்டம் அழுதுவிட்டுத்தான் செல்வார்!

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அவரிடம் இருந்து தப்பிக்க முயல்கிறேன்! ஆனாலும் எதிர் இருக்கையிலேயே அவர் அமர்ந்திருக்கிறார்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 15. இப்படித்தான் பலர் திரிகின்றனர்! எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி படாத அவர்களை விட்டு நாம் தான் ஒதுங்கிப் போக வேண்டும்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 16. கொஞ்ச கஷ்டம் தான்...
  ஒரு காதில வாங்கி மறு காதில விடவேண்டியது........

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ் பிரபு.

   Delete
 17. சில இடங்களில் சில மனிதர்கள். நாகேஷ் நடித்த படம் ஒன்றில் எதையும் கவலையுடனே நோக்குவார். சிறு விளக்குத் தீ வீட்டை எரித்துவிடுதல்போல . எதையும் எதிர்மறையாவே சிந்திப்பார்கள். அவருக்கும் கேடு சுற்றி இருப்பவருக்கும் தொல்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 18. புலம்புவதை தான் முழு நேர வேலையாக வைத்திருக்க்ரியார் போல.

  இந்த காலத்துலேயும் ஆண் குழந்தை, பெண் குழந்தை பேதம். கொடுமைடா சாமி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   கொடுமை தான்....

   Delete
 19. இந்த மாதிரி கேரக்டர்கள் நாம் என்ன தான் விளக்கி புரிய வைத்து அதிலிருந்து அவர்களை மீட்க நாம் நினைத்தாலும் அவர்களும் புலம்பலிலிருந்து வெளி வர வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரவணன்.

   Delete
 20. என்ன செய்வது... இப்படியும் இருக்கிறார்களே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.

   Delete
 21. எதிர்மறை எண்ணம் கொண்டோர் நமக்கும் அந்த எண்ணங்களை நமக்கும் பற்ற வைத்து விடுவார்கள் என்பதே மிகப் பெரிய ஆபத்து. அவர்களிடமிருந்து விலகி நிற்றலே நம்மைக் காத்துக் கொள்ளும் வழி. ஆனால் எங்களின் மன நல மையத்தின் முதல் வாடிக்கையாளரே எதிர்மறையாளர். வார்த்தைக்கு வார்த்தை எதிர்மறையாகவே பேசிக்கொண்டிருந்தார் எங்கள் குரலை உயர்த்தி நாங்கள் சொல்வதைக் கேளுங்கள் என்றவுடன் தான் அடங்கினார். ஆனால் அதன் பின்னான என் மன நிலையை மாற்ற வெகு நேரம் ஆனது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 22. I dont care என்று போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்!
  நேற்றும் இன்றும் ஏழாவது வோட் போட எனக்கு வாய்ப்பு தந்தமைக்கு நன்றி !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   ஏழாம் வாக்கிற்கும் நன்றி! :)

   Delete
 23. எதற்கெடுத்தாலும் கவலைப்படுபவருக்காக நாம் கவலைப்படுவதா?

  ஒரு ரெண்டு நாளைக்கு(மட்டும்) அவரை முந்திக்கொண்டு நீங்க புலம்பிடுங்க.

  ReplyDelete
  Replies
  1. இது நல்ல ஐடியாவா இருக்கு.... ஆனாலும் ஏனோ நமக்கு புலம்பல் பிடிப்பதில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 24. இதுக்குப் பெயர் புலம்பல் இல்லை. பொறாமை.
  இந்த மாதிரி அழுமூஞ்சியையா அன்றாடம் பார்க்கிறீர்கள்?
  பாவம் தான் நீங்கள்.

  இவர்களின் எதிரில் அவர்களைக் கண்டும் காணாமல் மேலும் மேலும் முன்னேறி காட்ட வேண்டும். அவர்களை அலட்சியப் படுத்த வேண்டும். தானாக நம்மைவிட்டு நகர்ந்து விடுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 25. அவர் எதிரில் வந்தவுடன் பிடியுங்கள் ஓட்டம்!
  எனக்கும் இந்த மாதிரி ஒரு உறவினர். அவருக்கும் மூன்று பெண்கள். அவரா இவர் என்று எண்ண வைத்துவிட்டது இந்தப் பதிவு. ஆனால் அவர் சென்னையில் இருக்கிறார்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete
 26. அழுமூஞ்சி புலம்பல்கிராக்கி என பலரை தினமும் கடந்துதான் போகவேண்டி இருக்கிறது பதிவில் நீங்க இயல்பாக சொன்ன விதம் சிறப்பு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷைலஜா ஜி!

   Delete
 27. இன்றைக்கு எந்த எதிர்மறை எண்ணத்தோடு நம்மை தொந்தரவு செய்ய வருவாரோ என்று ஒவ்வொரு நாளும் பயப்பட வேண்டியிருக்கிறது! //

  இப்படி பட்டவர்கள் தானும் வருந்தி, மற்றவர்களையும் துன்ப படுத்துவார்கள்.
  ஒரே வழி இன்று நண்பர் நல்ல பேச்சுகளை பேசுவார், நம்மை தொந்திரவு செய்ய மாட்டார் என்று நல்ல அலைகளை நம்மைச்சுற்றி பரவ விட்டுக் கொள்ள வேண்டும். காலப் போக்கில் அவர் நல்லதே பேசுவார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 28. முகநூலில் சுட்டியைப் பார்த்துட்டு மறுபடி வந்தேன். இப்படியான மனிதர்களோடு வாழ்பவர்களை நினைத்து வருத்தமாக வருகிறது. நாம் பாதிப்படையவில்லை என்பதைக் காட்டிக் கொண்டாலும் அவங்க அதையும் ஓர் குற்றமாகச் சொல்வார்கள். "உனக்கென்ன, எதைப் பத்தியும் கவலை இல்லை! நான் தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டி இருக்கு!" என்பார்கள்.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....