எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, April 8, 2014

கடவுளே காப்பாத்து.....



சாலைக் காட்சிகள் பகுதி 11

கடைசியாக சாலைக் காட்சிகள் எழுதியது மார்ச் ஒன்றாம் தேதி [குச்சி தாத்தாவும் பட்டை கோவிந்தனும்]. பல சமயங்களில் இந்தப் பகுதியில் பதிவுகள் எழுதும்படியான விஷயங்கள் நடந்தாலும் ஏனோ எழுதவில்லை. கடந்த இரண்டு நாட்களில் பார்த்த சில காட்சிகள் மனதை கொஞ்சம் அதிகமாகவே கலவரப் படுத்தியதால் இன்றைய பகிர்வாக அந்த சாலைக் காட்சிகள்.

 

காட்சி-1: ஒருவழிப் பாதை ஒன்றின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தேன். சாலை முழுவதும் வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. சாலையின் முடிவில் ஒரு ரவுண்டானா [இது தமிழா? எனக்கு வந்த சந்தேகம் வேறொருவருக்கும் வந்திருக்கிறது! இணையத்தில் தேடினால் சுற்றுச்சந்தி என்று வருகிறது! இதற்கான சரியான தமிழ் வார்த்தையை பின்னூட்டத்தில் யாராவது சொல்லுங்களேன்!].

 

அப்போது எதிர் புறத்திலிருந்து அந்த ஒரு வழிப் பாதையில் நிறைய இளைஞர்கள் ஒரு கட்சியின் கொடியை தங்களது வாகனங்களில் கட்டிக் கொண்டு தங்களது வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி அலறியபடியே வந்தார்கள். எதிர்பாராது வந்த வாகனங்களின் மீது மோதி [இந்த வார்த்தையில் அரசியல் ஏதுமில்லை! :)] விடாமல் இருக்க சரியான பாதையில் வந்த வாகன ஓட்டிகள் அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருந்தது. ஒரு சில நிமிடம் தாமதம் செய்திருந்தாலும் வண்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாக இடித்துக் கொண்டிருக்கக் கூடும்.

 

இதில் கொடுமை என்னவென்றால் அந்த இடத்தில் இருந்த போக்குவரத்து காவல் அதிகாரிகளும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் சமயம், யாரையும் எதிர்த்துக் கொள்ள முடியாதுஎன்று கண்டுகொள்ளாது இருந்து விட்டார்கள். தேர்தல் முடியும் வரை தில்லி சாலைகளில் இந்த அரசியல்வாதிகளின் அடிப்பொடிகள் அடிக்கும் லூட்டிகளும் குறையப் போவதில்லை! கடவுளே இவர்களிடமிருந்து பொதுமக்களைக் காப்பாத்து!

 

காட்சி-2: லக்ஷ்மிநாராயண் மந்திர் எனப்படும் பிர்லா மந்திர் இருக்கும் மந்திர் மார்க். எல்லா சமயங்களிலும் வாகனங்கள் வந்த வண்ணமே இருக்கும். சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்த வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்க, மற்ற வாகனங்கள் அவற்றைக் கடந்தபடி சென்று கொண்டிருக்கும். பல வாகன ஓட்டிகள் அந்த லக்ஷ்மி நாராயண் கோவில் எதிரில் தங்களது வாகனங்களை நிறுத்தி கோவில் உள்ளே இருக்கும் கடவுளுக்கு ஒரு கும்பிடு போட்டு தங்களது வேண்டுதல்களைச் சொல்லிச் செல்வார்கள்.

 

நேற்று காலை நான் அக்கோவிலின் எதிரே நின்று கொண்டிருந்தேன். சாலையில் ஒரு மகிழ்வுந்து சீரான வேகத்தில் வந்து கொண்டிருந்தது. ஓட்டுனர் இருக்கையில் மூதாட்டி - கோவில் அருகே வந்ததும் Steering Wheel-ல் [தமிழில் இதற்கு உந்துகல இயக்காழி என்று இணைய அகராதி சொல்கிறது! கடவுளே காப்பாத்து!] இருந்து இரண்டு கைகளை எடுத்து கைகூப்பி, கண்களை மூடிக்கொண்டு கடவுளை வேண்டிக் கொள்கிறார். ஒரு சில நொடிகள் என்றாலும், அதற்குள் சாலையில் இருக்கும் மேடு பள்ளங்களினால் வாகனம் விபத்துக்குள்ளாகலாம் என்பதை இந்த ஆண்டவன் இவர்களுக்குப் புரிய வைக்கக் கூடாதா? இந்த மாதிரி வாகன ஓட்டுனர்களிடமிருந்து சாலையில் நடமாடும் மற்ற மனிதர்களை, கடவுளே காப்பாத்து!

 

காட்சி-3: குதிரை வண்டி இப்போதும் தில்லியில் இருக்கிறது. ரேக்ளா ரேஸில் ஓடும் வண்டிகளைப் போல பெரிய பெரிய சக்கரங்களுடன் ஒற்றைக் குதிரை வண்டியில் பூட்டி அதில் ராஜா மாதிரி செல்வார்கள் சிலர். அப்படி அடிக்கடி சில வண்டிகளை இங்கே பார்க்க முடிகிறது. நேற்று காலை இப்படி ஒரு குதிரை வண்டி ஒன்று கண்டேன். குதிரையில் நான்கு கால்களிலும் முட்டிப் பகுதியில் Sponge [நுரைபஞ்சு] சுற்றி இருந்தது.

எதற்கு எனப் புரியவில்லையே என யோசித்தபோது ஒவ்வொரு கால்களுக்கு இடையிலும் இருந்த இரும்புச் சங்கிலி புலப்பட்டது. முன்னங்காலுக்கும் பின்னங்காலுக்கும் இடையில் ஒரு சங்கிலி. வலது, இடது என இரண்டு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு இருப்பதால் அந்த குதிரையால் வேகமாக ஓட முடியாது. அந்த சங்கிலியின் நீளத்தை விட அதிகமாக அடி எடுத்து வைக்க முடியாது. அப்படிக் கட்டி விட்டு அதன் ஓட்டத்தை தடை செய்து பிறகு எதற்கு குதிரை வண்டியில் பூட்டி ஓட்டினார் எனப் புரிந்து கொள்ள முடியவில்லை. குதிரைக்கு பேசும் சக்தி இருந்தால் நிச்சயம் அந்த வண்டி ஓட்டியை கன்னா பின்னாவென்று திட்டி இருக்கும்! இந்தக் கொடுமைக்கார மனிதரிடமிருந்து இந்த விலங்கினை கடவுளே காப்பாத்து!

கடைசியா, படிக்கும் உங்கள் சார்பாக, நானே வேண்டிக் கொள்கிறேன்:

தினம் தினம் ஒரு பதிவு போட்டு படிக்கும் அனைவரையும் கஷ்டப் படுத்தும் தில்லி பதிவரான வெங்கட் நாகராஜிடம் இருந்து கடவுளே எங்களைக் காப்பாத்து!

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

54 comments:

 1. கடவுளே முதலில் குதிரையை விலங்கிடமிருந்து காப்பாற்று...

  ReplyDelete
  Replies
  1. குதிரையை விலங்கிடமிருந்து காப்பாற்று... நல்ல யோசனை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. குதிரை விஷயம்தான் மனசுக்குப் பேஜாரா இருக்கு. அம்ரித்ஸரில் ஒரு குதிரை வண்டியில் இருக்கும் குதிரைக்குக் காந்தாரி போல கண்கட்டுப்போட்டு ஓட்டிக்கிட்டுப் போறான் ஒருத்தன்(என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு அந்தக் கொடும்பாவிக்கு?) தீச்சொல் அனுப்பினேன்.

  ReplyDelete
  Replies
  1. தீச்சொல் அனுப்பினேன்.... அதே அதே... பார்த்த உடனே தெரிவு செய்த சில வார்த்தைகளை சொல்லி திட்டினேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 3. கடவுள் என்றைக்குக் காப்பாற்றப் போகிறார்

  ReplyDelete
  Replies
  1. நல்ல கேள்வி. பதில் தான் தெரியவில்லை கரந்தை ஜெயக்குமார் ஐயா.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 4. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 5. முதலில் காப்பாற்றப்பட வேண்டியது பாவப்பட்ட குதிரைதான்.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் கண் முன்னே வந்து உறுத்துகிற காட்சி அது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 6. நீங்கள் தந்துள்ள Roundtana வுக்கு சுற்று சந்திப்பு என்றும்
  Steering wheel க்கு சக்கரத் திருப்பி/ சக்கரத் திருப்பான் என்றும் சொல்லலாம். தின ம் தினம் பதிவிட்டாலும், புதிய தகவல்களைத் தரும் தங்கள் பதிவு எங்களை துன்புறுத்துகிறது என சொல்லமாட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   சக்கரத் திருப்பான்/திருப்பி - எளிமையான வார்த்தையாக இருக்கிறது. உந்துகல இயக்காழி என்று படித்தபோது நாக்கு தடுமாறியது! :)

   Delete
 7. இது எ ன்ன கொடுமை! அதுவும் தலைநகரிலா!!!!!?

  ReplyDelete
  Replies
  1. கொடுமை தான் புலவர் ஐயா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 8. அந்தக் குதிரையை நினைத்துப் பதறாமல் இருக்க முடியவில்லை. கடவுளே காப்பாற்று!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 9. தினம் தினம் ஒரு பதிவு போட்டு படிக்கும் அனைவரையும் பரவசப் படுத்தும்
  தில்லி பதிவரான வெங்கட் நாகராஜ் வாழ்க..

  ”கடவுளே எல்லோரையும் காப்பாத்து!”

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 10. இவங்க தொல்லையில் இருந்து கடவுளையே யாராவது காப்பாற்றினால் தான் உண்டு !
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. கடவுளைக் காப்பாற்ற வேண்டும்! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 11. அந்த குதிரை என்ன பாவம் செய்ததோ??/

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 12. ரெண்டு கைய விட்டுட்டு கார் ஓட்டினாங்களா..
  இனிமே கோவில் பக்கம் நடந்து போறவங்கள கவனமா போக சொல்லணும் ...
  நீங்க ஒரு மணி நேரதுக்கு ஒரு பதிவு போட்ட கூட நாங்க படிக்க ரெடி சார்.......

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ் பிரபு.

   உங்கள் அன்பிற்கு நன்றி..... :)

   Delete
 13. இத்தனையும் தலைநகரிலா!.. - அதனால் தானே.. தலைநகர்!..
  இரும்புக் கம்பியால் குத்தி - சிதைத்தவன்
  இன்னும் சிதைக்குப் போகாமல் தானே இருக்கின்றான் !?..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 14. ரவுண்டானா = வளைதிருப்பம் என்று சொல்லலாமா!

  குதிரைக்குச் செய்யும் கொடுமை. ஒரு பு.ப எடுத்து மனேகா காந்திக்கு அனுப்பலாமே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

   வளை திருப்பம் - இது கூட நன்றாக இருக்கிறது.

   என் கையில் காமெரா இல்லை ஸ்ரீராம். எனது அலைபேசியிலும் அவ்வசதி கிடையாது!

   Delete
 15. Nall Padhivugalai thandhu Manadhirku magizhchchi tharum Kittu virku Kadavul Menmelum Nangu Arul purindrhu Kappatra vendugirom.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete

 16. வணக்கம்!

  சாலையில் பார்த்த நிகழ்வுகளைத் தந்ததமிழ்ச்
  சோலையில் பூத்த சுடா்!

  தமிழ்மணம் 7

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களே....

   Delete
 17. இது போன்ற மனிதர்களிடமிருந்து கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்! நல்லதலைப்பு! நல்ல பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 18. கடவுளே, காப்பாத்து, காப்பாத்து! என்ன கொடுமை இதெல்லாம். :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 19. கடவுளே காப்பாத்து(??!!!) என்ற இந்தப் பதிவு நல்லதொரு பகிர்வு! அந்த இறுதி வரிகளைத் தவிர! தினமும் பதிவு போடவேண்டும் நண்பர் வெங்கட் நாகராஜ்! எனவே கடவுளே அவரைக் காப்பாத்து என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!

  உண்மையாக நம் தெருக்களில், ரோடுகளில் ஓடும் வாகனங்களிலிருந்து மக்களை அந்தக் கடவுள் காப்பாற்றுவாராக!!! விபத்துகள் மட்டுமல்ல, நடக்கும் மக்களையுமே இடித்து வீழ்த்துகின்றனவே! அன்னியன் போன்ற ஒரு ஆள் வந்தால் இந்த சாலை விதி மீறல்களுக்கு என்ன தண்டனை கொடுப்பார் என்ற எண்ணமும் கூடவே வந்தது!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 20. வட்டச் சாலை என்று ரவுண்டானாவைச் சொன்னால் எளிமையாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஸ்டியரிங்கிலிருந்து கையை எடூத்துவிட்டுக் கும்பிட்டது விவேக் செய்த ஏதோ ஒரு காமெடியை நினைவுபடுத்தியது. குதிரை.... எனக்குப் பிடித்த விலங்கு. விலங்கை விலங்கால் படுத்தும் விலங்குகளை என் செய்வது?

  ReplyDelete
  Replies
  1. விலங்கை விலங்கால் படுத்தும் விலங்குகள்.....

   வார்த்தை விளையாட்டு பிடித்தது கணேஷ். அந்த ஆளுக்கும் இப்படி சங்கலி கட்டி நடக்க விட ஆசை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

   Delete
 21. கடவுளிடம் காப்பாற்றக் கோரும்படியான காட்சிகள் தினசரி வாழ்க்கையில் அநேகம் என்றாலும் குதிரையின் நிலைமை மனதை அதிர வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 22. நுரைப் பஞ்சுக்கு மேல்தானே இரும்புச் சங்கிலி.? அந்த அளவாவது ஈரகுணம் ......?

  ReplyDelete
  Replies
  1. இரும்புச் சங்கிலி கட்டப்பட்ட இடம் தவிர ஒவ்வொரு முறை காலை முன்னே வைக்கும்போதும் அந்த சங்கிலி இழுத்துக் கஷ்டப் பட வைக்கும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 23. குதிரையை நினைத்து மனம் கவலைப்படுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.

   Delete
 24. ஏதோ பாவம். கடவுள் அவர்களை அப்படிப் படைத்துவிட்டார்.....

  குதிரைக்குப் பேசும் சக்தி இருந்தால்.... பேச வேண்டாம். அந்த ஆளை உதைத்தாலே போதும்.
  பகிர்வு அருமை நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்....

   Delete
 25. எங்க ஊர்ல இந்த ரவுண்டானாவிற்கு சரக்கிள் (Circle) என்பார்கள். இரண்டு சாலைகள் கூடுமிடமெல்லாம் சரக்கிள் தான்!
  வண்டி ஓட்டும்போது இப்படி கையை தூக்கி கும்பிடுவது எல்லா ஊரிலும் நடக்கிறது.
  பாவம் குதிரை. அடுத்த ஜன்மத்தில் நீ குதிரையாகப் பிறந்து நான் உன்னை இப்படி நடத்த வேண்டும் என்று சபித்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

   Delete
 26. ரா.ஈ. பத்மநாபன்April 9, 2014 at 5:44 PM

  ’சுற்றுச் சந்தி’ - நல்லாத்தானே இருக்கு. (மலையாளத்தில் படிக்காத பட்சத்தில்).

  அதிவிரைவு வண்டிகளுக்கு வேகக்கட்டுப்பாடு என்று அரசு சொன்னதை குதிரைக்காரன் ஒருவேளை கடைபிடிக்கிறானோ. மனசாட்சி இல்லாதவன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 27. Good observations Venkat Sir.

  Happy to know that you read my blog and to see the reference to my blogpost here in your writings.

  http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2012/08/bridge.html

  Please excuse for commenting in English. Mobile Net is slow to use transliteration.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி iK Way.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....