எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, October 29, 2014

பாத்ரூம் பாடகரும் எனது காலையும்நன்றி: இணையம்.....தற்போதைய அடுக்குமாடிக் கட்டிடங்கள் பலவற்றிலும் ஒரு வீட்டிற்கும் அடுத்த வீட்டிற்கும் இடையே பெரும்பாலும் ஒற்றைக் கல் வைத்த சுவர் தான்.  நம் வீட்டில் பெருமூச்சு விட்டால் கூட அடுத்த வீட்டில் கேட்குமோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு. இப்படி இருக்கையில் உங்கள் வீட்டின் பக்கத்து வீட்டில் தன்னை ஒரு பாடகராக நினைத்துக் கொண்ட ஒருவர் இருந்து விட்டால்.....  உங்கள் நிலை என்னாவது?  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

எனக்கு அந்த நிலை தான் இப்போது.  சமீபத்தில் எனது அடுத்த வீட்டிற்கு ஒரு மனிதர் குடிவந்திருக்கிறார்.  அவர் பெயரோ, ஊரோ, எங்கு வேலை செய்கிறார் என்பது போன்ற எந்த விவரங்களும் எனக்குத் தெரியாது. அவரது வீட்டில் எத்தனை நபர்கள் என்பதும் தெரியாது. ஒரு சில முறை அலுவலகம் செல்லும்போது வாய் நிறைய [G]குட்[kha]கா போட்டுக்கொண்டு அன்னாந்து பார்த்தபடி என்னிடம் ‘ழீக்கே?என்பார் – அதாவது டீக் ஹேஎன்று கேட்கிறாராம்!  எங்கே அவரது வாயில் பொங்கி வழியும் பான் பராக் கங்கா ஜலம் போல என் மேல் தெளித்து விடுமோ என்ற பயத்தினால் கொஞ்சம் தள்ளியே நானும் டீக் ஹூன் என்பேன்!

 நன்றி: இணையம்.....

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் [காலை ஆறு மணி தான் எனக்கு அதிகாலை என்பதை புரிந்து கொள்க!] எழுந்திருப்பதற்கு அலைபேசியில் அலாரம் வைத்துக்கொள்வேன்.  ஆனாலும் இவர் பக்கத்து வீட்டிற்கு வந்தபிறகு அப்படி அலாரம் வைத்துக்கொள்ள அவசியமே இல்லாது போய்விட்டது! தில்லியில் வீடுகளில் சேவல் வளர்ப்பதில்லை – சேவல் கூவும் குரலும் கேட்பதில்லை - சேவல் கூட சில நாட்களில் தூங்கி எட்டு மணிக்கு கூவலாம் – ஆனால் இவர் நாள் தவறாது ஐந்தரை மணிக்கு எழுந்து விடுகிறார். 

அவர் எழுந்துவிட்டுப் போகட்டும் – அதில் எனக்கு என்ன ஆட்சேபணை இருக்கப் போகிறது.  ஆனால் எழுந்ததிலிருந்து பாட ஆரம்பித்து விடுகிறார் – அதுவும் ஒரு கட்டைக் குரல் – கரகரப்ப்ரியா ராகமே இவரிடம் இருந்து தான் தோன்றியிருக்குமோ என்று ஒரு சம்சயம் எனக்கு வந்துவிட்டது!  புரியாத ஒரு மொழி – ஹிந்தி போன்று தெரியவில்லை!  திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தினமும் சுப்ரபாதம் பாடித் தான் திருப்பள்ளி எழுச்சி.  இங்கே இந்த வெங்கடராமனுக்கும் திருப்பள்ளி எழுச்சி பக்கத்து வீட்டு பாடகர் பாடும் பாட்டுகள் தான் என்று சொன்னால் மிகையாகாது! 

தீபாவளிக்கு இரண்டொரு நாட்கள் முன்னர் அதிகாலையில் பாடிக்கொண்டிருக்கிறார் – ஹோலி ஆயி ரே ஆயி ஆயி ஹோலி ஆயிஎன்று. “அடேய், இப்பதான் தீபாவளியே வந்திருக்கு! ஹோலி வர இன்னும் நான்கு மாசம் ஆகும்அப்படின்னு எனது வீட்டிலிருந்து குரல் கொடுக்கலாமா என நினைத்துக் கொண்டிருந்தேன்.  என்னடா இது காலங்கார்த்தால “ஆய் ஆய்னு அசிங்கமா பேசிக்கிட்டு இருக்கான் என்று ஒரு சிலர் எண்ணக்கூடும்! இது ஹிந்தி ஆயி!

திங்கள் முதல் வெள்ளி வரை இப்படி எழுப்பி விட்டால் பரவாயில்லை.  விடுமுறை நாட்களிலும் இவர் அதிகாலையில் எழுந்து விடுகிறார் – அதுவும் மற்ற நாட்களை விட இன்னும் கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து விடுகிறார்.  “டேய் கொஞ்சம் மனுஷன தூங்க விடுடா! என்று கத்தலாம் போலத் தோன்றும்!  இல்லைன்னா நானும் சத்தமா எங்க வீட்டு பாத்ரூம்ல ஒரு டண்டணக்கா தமிழ் பாட்டு பாடலாமான்னு தோணும்! ஃபாஸ்ட் பீட் தமிழ் பாட்டு – பொருத்தமான பாட்டு ஒண்ணு சொல்லுங்களேன்!

தோ இன்னிக்குக் கூட பாருங்களேன் – வெளியூருக்குப் போறார் போல ஐந்து மணிக்கே எழுந்து விட்டார்! எனக்கு எப்படித் தெரியும்னு கேட்கறீங்களா! அதான் பாட ஆரம்பிச்சிட்டாரே! வழக்கத்தை விட இன்னும் உச்சஸ்தாயியில் ஏதோ ஒரு பாடலை பாடிக்கொண்டிருக்கிறார்! வெளியே போகும் போது அவர் வாயில் போட்டுக்கொள்ளும் [G]குட்[kha]காவினை காலங்கார்த்தால எழுந்த உடனே போட்டுக்கொண்டால் உடம்புக்கு ரொம்ப நல்லது என்று அவரிடம் ஐடியா சொல்ல இருக்கிறேன் – ஆனால் அதிலும் கொஞ்சம் பயம் இருக்கிறது – இப்பவே உச்சஸ்தாயியில் பாடும் பாட்டு எங்கே நாய் ஊளையிடுவது போல் ஆகிவிடுமோ என்ற பயம் தான்!

பாட்டு பாடறது ரொம்ப புடிக்குமோ? காலங்கார்த்தால பாடறீங்களேஅப்படின்னு நக்கலா ஒரு நாள் கேட்டேன்.  பயபுள்ள ரொம்பவும் சந்தோஷமாகி உங்களுக்குப் பிடிச்சுருக்கா?  நாளைக்கு என்ன பாட்டு பாடட்டும்னு என்னிடம் நேயர் விருப்பம் கேட்க நான் ஆளைவிடுடா சாமின்னு விட்டேன் ஜூட்!

 நன்றி: இணையம்.....

இந்தப் பதிவுக்கு பொருத்தமா படம் ஏதாவது இருக்குமான்னு கூகிளாண்டவரிடம் கேட்க, அங்கே இருந்த ஒரு தளம் கண்களை ஈர்த்தது! Twyford Bathrooms என்ற நிறுவனத்தினர் Twyfords Bathroom Singer of the year 2014 அப்படின்னு ஒரு போட்டி வைச்சுருக்காங்களாம்! பேசாம இந்த பக்கத்து வீட்டு ஆளை அங்கே அனுப்பிடலாம்னு ஒரு யோசனையும் வந்தது! ஆனா பாருங்க! என்னோட துரதிர்ஷ்டம் – அதுக்கு கடைசி தேதி அக்டோபர் 22!

இனிமே காதில் கொஞ்சம் பஞ்சு வைத்துக் கொண்டு தூங்கப் போகலாம்னு இருக்கேன்! அதனால ஒரு கிலோ பஞ்சு பார்சல் ப்ளீஸ்!

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 comments:

 1. ஹா...ஹா...ஹா...

  ஸோரி கேட்டேளா.... உங்க கஷ்டத்தைக் கேட்டு நான் சிரிச்சுட்டன்!

  ReplyDelete
  Replies
  1. சாரில்லா சாரே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

   Delete
  2. ஹாஹாஹா... முடில.. :)

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை லக்ஷ்மணன்.

   Delete
  4. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன்.

   Delete
 2. பாடி வதைக்கும் பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றிய பதிவு சிரிக்க வைத்தது! பாவம் நண்பரே நீங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 3. தங்கள் பதிவைப் படித்தபோது ‘வெள்ளிவிழா’ திரைப்படத்தில் வாணிஸ்ரீ ஜெமினி கணேசன் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையிலிருந்து ‘நான் சத்தம் போட்டுத் தான் பாடுவேன்.’ என்று பாடிய பாடல் தான் நினைவுக்கு வருகிறது. தங்களின் நகைச்சுவை உணர்வை இரசித்தேன்.வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 4. ஆஹா....நேயர் விருப்பம் கேட்கும் பாத்ரூம் பாடகரா?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 5. Replies
  1. அதே தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 6. ஹாஹஹ்ஹ்ஹ் செம பதிவு வெங்கட் ஜி! "தீபாவளிதான் வந்திருக்கு....ஹோலி வர இன்னும் 4 மாசம்.....ஹஹ்ஹஹாஹ்ஹ... நாளைக்கு என்ன பாட்டு பாடணும்...ஹஹஹ சூப்பர் சே உங்க நேயர் விருப்பமா....மௌன மொழிப் பாடல்னு ஒண்ணு இருக்கு அதுக்கு மொழியே வேண்டாம்னு அதப் பாடுங்கனு சொல்லியிருக்கலாமே!....ஹ்ஹஹஹ்

  ரொம்பவே சிரிச்சுட்டோம்! மிகவும் அருமையான பதிவு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 7. நீங்களும் பாட ஆரம்பிச்சுடுங்க... ஒன்று அவர் கடுப்பாகலாம்... அல்லது உங்களுக்கும் பாடுவதன் திருப்தி கிடைக்கும்.... பதிவினை ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. நல்ல ஐடியா. நாளைக்கு சோதனை முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 8. ஓர் ஐடியா

  நீங்களும் பாத்ரூமில் பாட ஆரம்பியுங்கள்.

  மனிதர் நிறுத்த வாய்ப்பு உண்டு:)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சமுத்ரா.

   Delete
 9. நகைச்சுவை மிக இயல்பாய் ரசிக்க வைத்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 10. நீங்க தனியா இருந்து என்ஜாய் பண்ணக்கூடாதுன்னு உங்களுக்கு ரொம்ப வேண்டியவங்க நினைச்சிருப்பாங்க போல, அனுபவியுங்கள் சார். அனுபவியுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 11. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரத்னவேல் நடராஜன் ஐயா.

   Delete
 12. ரா.ஈ. பத்மநாபன்October 29, 2014 at 6:10 PM

  அட! வீட்டுப் பக்கத்திலேயே புது ஃப்ம் சேனலா! வெரிகுட்! வெரி குட்! சொல்லவே இல்ல.

  (அனுபவி ராஜ்ஜா அனுபவி...)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 13. இந்த மாதிரி இம்சைகளை கடந்துதான் வர வேண்டியிருக்கிறது! சுவாரஸ்யமாக ரஸிக்கும்படி பகிர்ந்தமை சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 14. துன்பம் வரும் போது சிரித்து சமாளிக்க வேண்டியது தான். நீங்கள் சிரிக்கிறீர்களோ இல்லையோ எங்களைச் சிரிக்க வைத்ததற்கு உங்களைப் பாராட்டியேயாக வேண்டும். நன்றி வெங்கட்ஜி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 15. ஆஹா... அண்ணா....
  அதிகாலைத் தூக்கத்தில் தொல்லை என்றால் கோபம் கோபமாக வருமே....

  அதிகாலையில் தாங்கள் ஒரு குத்துப்பாட்டை கணிப்பொறியில் தட்டிவிடுங்கள். அப்புறம் குட்கா குப்புறப் படுத்துக்கும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 16. வணக்கம் சகோதரரே.!

  நல்ல நகைச்சுவை பதிவு.! ஆனால் சொந்த அனுபவத்தில், நொந்த மனதிலிருந்து எழுந்தது.! எங்களுக்கு ஒரு நாள் சிரிப்பை வரவழைத்த உங்களுக்கு தீராத தலைவலி.! என்ன செய்வது.?
  எதற்கும் ஒரு தீர்வு உண்டு.! அது கிடைக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்.! பகிர்ந்தமைக்கு நன்றி.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 17. இலவசமாய் தினம் கச்சேரி கேட்கும் வாய்ப்பு:)!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 18. பெரிய ஹோட்டல்களில் இருப்பது போல அடுக்குமாடி குடியிருப்புகளிலும் ஒற்றைக்கல் தடுப்புச்சுவர் என்பது ஆபத்தான சமாச்சாரம்தான்.

  குட்காவாலாவிற்கு பள்ளியெழுச்சிப் பாடல் நல்ல தமாஷ்தான்.

  த.ம./6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ சார்.

   Delete
 19. ஹா ஹா... உங்க கஷ்டம் எங்களுக்கு காமெடியா இருக்கு... மன்னிக்க சார்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை.

   Delete
 20. கூகுள் ஆண்டவரிடமே இந்த தொல்லைக்கும் முடிவு கேளுங்கள் ,நல்ல வழி காட்டக்கூடும் ;)
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 21. பஞ்சு வாங்கியாச்சு, அனுப்புவதற்குண்டான சார்ஜை மட்டும் ஏத்துக்குறதா வாக்குறுதி குடுத்தீங்கன்னா இப்பவே அனுப்பிடலாம்.

  பதிவு ரசிக்கும்படி இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....