எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, January 15, 2015

வண்ண மயமாய் போகி கோலங்கள்


பல வருடங்களுக்குப் பிறகு பொங்கல் சமயத்தில் தமிழகத்தில் இருக்கிறேன்தில்லியில் பொங்கல் அன்று விடுமுறை இல்லை. அதனால் பொங்கல் அன்று பெரும்பாலும் அலுவலகத்தில் தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் இருப்பதால் பொங்கல் இம்முறை சிறப்பானது என்று நினைக்கிறேன்

திருவரங்கத்தில் பொதுவாகவே கோலங்கள் நிறைய போடுவார்கள்இந்த சமயத்தில் இங்கே இருப்பதால் நேற்று காலை திருவரங்க வீதிகளில் கேமராவுடனும் மகளுடனும் ஒரு வீதி உலா வந்தேன்! பல வீடுகளில் அருமையான கோலங்கள்வண்ண வண்ணக் கோலங்கள் போட்டு இருக்க அவற்றை புகைப்படங்கள் எடுத்து வந்தேன்கிட்டத்தட்ட 75 புகைப்படங்கள்அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த சில புகைப்படங்கள் மட்டும் இன்றைய பதிவில்.

கோலம்-1:


கோலம்-2:


கோலம்-3:


கோலம்-4:


கோலம்-5:


கோலம்-6:


கோலம்-7:


கோலம்-8:


கோலம்-9:


கோலம்-10:


கோலம்-11:


கோலம்-12:


கோலம்-13:


கோலம்-14:


கோலம்-15:


கோலம்-16:


கோலம்-17:


கோலம்-18:


கோலம்-19:


கோலம்-20:இந்தப் புகைப்படங்கள் எடுக்கும்போது கோலம் போடுபவர்கள் அனைவருக்கும் சந்தேகம் – “எந்த டி.வி. இருந்து வந்திருக்கீங்கஇல்ல பேப்பரா?”  நாளைக்கு வருமா? இல்லை இன்னிக்கே வருமா?”  என்று கேள்வி மேல் கேள்வி! டோராவை கோலத்தில் போட்டுக் கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணிசார் நல்லா இருக்கா?” என்று என்னை சாராக்க, ஒரு சிறுமி, “அண்ணே, நான் போட்ட கோலத்தையும் எடுங்கண்ணே!” என்று என்னை அண்ணனாக்கினாள்!

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான உரையாடல் – Embossed Painting போல கோலம் போட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்மணி, இதை முடிக்க இன்னும் ஒரு அரை மணி நேரம் ஆகும்அதுக்கு அப்புறம் வாங்ககொஞ்சம் சீக்கிரமா வந்தா நல்லது! ரோடுல சுத்தற மாடு, கரெக்டா இங்கே வந்து தான் அசிங்கம் பண்ணிட்டு போகுது! இதுக்குன்னு நாள் பூரா உட்கார்ந்து பார்க்க முடியலப்பா!” என்று தனது கவலையைச் சொன்னார்அவர்களுக்கு இப்படி ஒரு கவலை பாவம்!

கொள்ளிடம் போகும் வழியில் ஒரு வீட்டு வாசலில் இருந்த கோலத்தினை புகைப்படம் எடுத்தபோதுஏய்! அந்த அண்ணன் நீ போட்ட கோலத்தை படம் பிடிக்குறாரு பாரு!” என்று சொல்ல, அந்தப் பெண், “அண்ணே நீங்க எடுத்த ஃபோட்டோவ காமிங்கண்ணே!” என்று நேயர் விருப்பம்அவருக்கும் காமிராவில் காண்பிக்க, “ஏய் சூப்பரா இருக்குண்ணே!” என்று சொல்ல, ”நீங்க வரைந்ததாச்சே, அழகா இல்லாம?” என்று அவரையும் மகிழ்ச்சிப் படுத்தினோம்அவரே, ”அண்ணே, இந்த சந்துக்குள்ள நிறைய கலர் கோலங்கள் போட்டு இருக்குண்ணே!” என்று வழி காட்டினார்அங்கும் சில படங்கள் எடுத்தேன்.

இன்னும் சில இடங்களில் வீட்டுப் பெண்மணிகள் கோலம் போட, ஆண்கள் கலர் பொடிகளால் காலி இடங்களை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர், “பொங்கலுக்கும் வாங்க தம்பி, நிறைய கோலங்கள் ஃபோட்டோ புடிக்கலாம்என்று அழைப்பு விடுத்திருக்கிறார்அதனால் இன்றும் காலையில் ஒரு வீதி உலா உண்டு! இன்று எடுக்கும் புகைப்படங்கள் வரும் ஞாயிறில் வெளியிடுகிறேன். சரியா!

இப்பதிவினை படிக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். பொங்கலைப் போலவே மகிழ்ச்சியும் குதூகலமும் உங்கள் வாழ்வில் பொங்கிட மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

நட்புடன்

வெங்கட்….
திருவரங்கத்திலிருந்து…..


பதிவுலக நட்புக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்……

நட்புடன்

வெங்கட்.
ஆதி வெங்கட்

ரோஷ்ணி வெங்கட்

66 comments:

 1. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
  கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
  தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
  பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
  எனது மனம் நிறைந்த
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 2. Beautiful kolams! Ungal anaivarukkum iniya Pongal vaazthukal!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மஹி..

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 3. கண்கொள்ளாக் கட்சி.
  பாண்டிச்சேரியில் எங்கள் தெருவில் என் கோலத்திற்கு மௌஸ் அதிகம்.
  உங்களின் படங்களைப் பார்த்ததும் எனக்கு அந்த ஞாபகங்கள் வந்து விட்டது.
  நன்றி நாகராஜ் ஜி.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 4. கோலங்களுக்கு நெம்பர் கொடுத்திருந்தால் கமென்ட் போட ஏதுவாக இருந்திருக்கும், அனைத்து கோலங்களும் பெண்களின் ஆர்வத்தையும் உழைப்பையிம் காட்டுகின்றன. ஆனாலும் கீழிருந்து நான்காவது கோலம் (ஜமக்காளம்) அற்புதம். எவ்வளவு நேரம் செலவழித்துப் போட்டார்களோ? என் வருத்தம் என்னவென்றால் இவையெல்லாம் இரண்டொரு நாளில் அழிந்து போகுமே என்பதுதான்.

  தொழில் நுட்ப வளர்ச்சியையும் பாராட்டியே ஆகவேண்டும். ஸ்ரீரங்கத்துக் கோலத்தை நான் என் வீட்டில் உட்கார்ந்து கொண்டு பார்க்க முடிகிறது பாருங்கள். என் இளம் வயதில் இப்படி நடக்கும் என்று கனாக்கூட கண்டதில்லை.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் யோசனை நல்ல யோசனை. கோலங்களுக்கு இப்போது நம்பர் கொடுத்து விட்டேன்! நன்றி.

   //இரண்டொரு நாளில் அழிந்து போகும்!// சில மணி நேரங்களிலேயே அழிந்து விடுகின்றன - அதாவது அழித்து விடுகிறார்கள் - அதன் மேலே வாகனங்கள் ஓட்டியும், ஆடு, மாடு போன்ற மிருகங்கள் நடந்து சென்றும்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி கந்தசாமி ஐயா..

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
  2. என் யோசனையை ஏற்று நெம்பர் கொடுத்ததற்கு நன்றி, நாகராஜ். 17ம் நெம்பர் கோலத்தைப் போட்டவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் பரிசு கொடுக்கவேண்டும். மிகுந்த பொறுமையும் கற்பனையும் தேவையாக இருந்திருக்கும். நான் ஒரு மகாராஜாவாக இருந்திருக்கும் பட்சத்தில் ஆயிரம் பொற்காசுகள் கொடுக்கச்சொல்லி இருப்பேன்.

   Delete
  3. அந்த வயதான பெண்மணிக்கு ரொம்பவும் பொறுமை. ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இதற்காக மெனக்கெடுகிறார்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா..

   Delete
 5. கோலங்கள் எல்லாம் அழகு தான்!..
  அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ..

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 6. கோலங்கள் அனைத்தும் கொள்ளை அழகு. அதை தாங்கள் புகைப்பட கருவியில் மிக அழகாக படம் பிடித்து பகிர்ந்தமைக்கு நன்றி!

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 7. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆறுமுகம் அய்யாசாமி அவர்களே.

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 8. ஆகா...! ஆகா...!

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 9. காலம் கடந்தும் நிற்கும் கோலங்கள்! கண்கொள்ளாக் காட்சி!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 10. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  உங்களைப்போலவே நானும் எத்தனையோ வருடங்களுக்குப்பிறகு தமிழ்நாட்டில் தஞ்சையில் பொங்கல் கொண்டாடுகிறேன்.
  கோலங்கள் அனைத்தும் மிக அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 11. மூன்றுக்கு ம் , பதினேழுக்கும் கடுமையாய் போட்டி இருக்கும் போலிருக்கே :)
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 12. தங்கள் நிழல் படங்கள் எல்லாம்
  லால்குடி ஜெயராமன் இசையோடு கூட
  இங்கே.
  www.subbuthatha.blogspot.com
  பொங்கல் நல வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்.

  சுப்பு தாத்தா.
  மீனாட்சி பாட்டி.

  ReplyDelete
  Replies
  1. அருமையான இசை சேர்த்து அழகிய காணொளியாக தங்கள் பக்கத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சுப்பு தாத்தா.

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 13. இனிய பொங்கல் வாழ்த்துகள் வெங்கட்,அதி,ரோஷனி குட்டி. எத்தனை அழகு ஒவ்வொரு கோலமும் . கண்ணில ஒத்திக்கிற மாதிரி இருந்தது. எவ்வளவு சிரமப் பட்டுப் போட்டார்களோ. புகைப் படங்களும் அற்புதமாக வந்திருக்கின்றன. மிக நன்றி மா. இனிய பொங்கல் நாள் நல்வாழ்த்துகள். தொலைபேச முயன்றேன். கிடைக்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 14. அருமை அருமை! கோலம் 17 அசத்தல்! அருமை! - இருவரும்..

  கல்லூரி நினைவுகள் ! அப்போது எல்லாம் கோலம் 17போல கார்பெட் வரைந்து பரிசுகள் பெற்றதுண்டு....- கீதா

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி மற்றும் கீதா ஜி!.

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete

 15. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
  த.ம.6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா..

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 16. கோலங்கள் அனைத்தும் கொள்ளை அழகு. பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 17. கோலங்கள் எல்லாமும் சூப்பரா இருக்கு. ஆதிலும் டோரா கோலம் சுப்பரோ சூப்பர். உங்க வீட்டுக் கோலத்தை கோடிட்டிருக்கலாமே.

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 18. அழகு அழகு காலை கதிரவன்
  விழித்ததும் பிரமித்து நின்றான்
  அத்தனை அழகில் சொக்கி


  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் அண்ணே ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குமார்.

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 19. எல்லாக் கோலங்களும் அருமை. அதிலும் 17,18 மற்றும் 19 மிக அருமை. என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குமார்

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 20. அழகிய கண்கவர் கோலங்கள். இன்னமும் இப்படி ரசித்து, கோலம் போடுகிறார்களே, பாராட்ட வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 21. கோலங்கள் அருமை. இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மணிமாறன்.

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 22. உண்மையிலேயே கோலம் போட்டவர்களை பாராட்ட வேண்டும்! அழகிய கோலங்கள்! பகிர்வுக்கு நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 23. Yella kolangalum romba azhagu. Innum niraya kolangal irundhalum parththunde irukkalam. Expecting more kolams.
  Happy Ponga to you n all.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 24. வண்ணமயமான கோலங்கள். தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிப்ரியன் கலிங்கநகர்.

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 25. அனைத்தும் அழகு. கம்பளக் கோலம் வித்தியாசமாகத் தனித்துத் தெரிவதால் மேலும் கவருகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 26. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் :) !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 27. ஒவ்வொரு கோலமும் அழகுப் பொங்கல் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 28. தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டமா
  மிக்க மகிழ்ச்சி ஐயா
  பொங்கல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 29. Replies
  1. தமிழ் மணம் எட்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 30. பொருமையாக அழகாக கோலம் போட்டு அசத்திவிட்டார்கள். அதை எங்களுக்கு படைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள். தம. +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

   Delete
 31. வணக்கம் சகோதரரே!

  நேற்று முழுவதும் நேரம் சரியாகவிருந்ததினால், இன்றுதான் தங்கள் பதிவைக் கண்டேன்.

  அத்தனையும் அற்புதமான கண்ணுக்கு விருந்தான கோலங்கள். எதை சிலாகிப்பது? எதை சிறப்பிப்பது என்று தெரியவில்லை.! அந்தளவிற்கு அத்தனையும் அழகோவியங்கள்..

  பொறுமையுடன் அனைவரும் போட்ட அழகான கோலங்களை, அதே அளவு பொறுமையுடன் படம் பிடித்து எங்களின் கண்ணுக்கு விருந்தாக்கிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 32. 17ம் நம்பர் கோலம் (பட்டுப்பாய் போன்றது) மிக மிக அருமை. என்ன ஒரு ரசனை? கோலத்தைப் போட்டவர்களிடம் வாய்விட்டுப் பாராட்டினால் எவ்வளவு அகமகிழ்ந்துபோவார்கள்? எத்தனை எத்தனை Unrecognized talents among ladies (assuming it was done by a lady).

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைதமிழன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....