எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, January 2, 2015

ஃப்ரூட் சாலட்–120: சுத்தம் நம் கையில் – ஆதார் – தில்லியில் வடிவேலுஇந்த வார செய்தி:


காரைக்குடி: கடந்த 50 ஆண்டுகளாக "ஊழியம்' என்ற பெயரில், ஆண்டுக்கு நான்கு முறை ஊரை சுத்தம் செய்தும், வரத்துக் கால்வாய், கண்மாய் தூர் வாரி வருகின்றனர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கொரட்டி ஊர்மக்கள்.

சாக்கடை ஓடுகிறது, ரோடு சரியில்லை, குப்பை அள்ள வருவதில்லை, புதர்களை அகற்றுவதில்லை என புகார்கள், இன்றைய நவீன அவசர உலகில் வாழும் மக்களின் பிரதான புகார் வாக்கு மூலம். வீட்டின் முன்பு ரோட்டில் பள்ளம் கிடந்தால் அதில் தினமும் நடந்து செல்லும் நாம் ஒருநாளாவது, நம்மால் முடிந்த அளவு அதை மூட நினைப்பதில்லை. இதற்கு விதிவிலக்காக செயல்பட்டு வருகின்றனர் காரைக்குடி அருகே உள்ள கொரட்டி ஊர் மக்கள்.தட்டட்டி ஊராட்சிக்குட் பட்டது கொரட்டி. 200 குடும்பத்தில் 350 புள்ளிகள் உள்ளனர். ஒரு குடும்பத்தில் ஒருவர் திருமணம் முடித்தால் அவர் ஒரு புள்ளியாக கணக்கில் கொள்ளப்படுகிறார். பல்வேறு சமூகத்தினர் வாழ்ந்தாலும், கடந்த 50 ஆண்டுகளாக ஊர் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். செயலாளர், பொருளாளர் பதவிக்கு, ஒவ்வொரு ஆண்டும், ஒவ் வொரு சமூகத்தை சார்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த ஊர் மக்கள் ஆண்டுக்கு நான்கு முறை "ஊழியம்' என்ற பெயரில் ஊர் சுத்தத்தில் ஈடுபடுகின்றனர். பொங்கல், தீபாவளி, இந்த ஊரின் சிந்தாமணி அம்மன் கோயில் விழா, மழைக்காலம் முடிகின்ற காலங்களில் இந்த பணியை மேற்கொள்கின்றனர்.ஒரு புள்ளிக்கு ஒருவர் கண்டிப்பாக இப்பணியில் ஈடுபட வேண்டும், என்ற கட்டுப்பாடு உண்டு. குண்டும் குழியுமாக கிடக்கும் ரோட்டை சீரமைப்பது, குடிதண்ணீர் ஊரணியை சுற்றியுள்ள புதர்களை அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.

முழுக்கட்டுரையும் இங்கே!

இந்த வார முகப்புத்தக இற்றை:

இதயம் எத்தனை முறை காயப்பட்டாலும் மனதுக்குப் பிடித்தவரை மறக்காது – காரணம், இதயத்துக்கு நடிக்கத் தெரியாது, துடிக்க மட்டுமே தெரியும்!

இந்த வார குறுஞ்செய்தி:

நான் ரொம்ப அழகு என்று கர்வமா உங்களுக்கு? ஒரே ஒரு முறை உங்கள் ஆதார் அட்டையைப் பாருங்கள் – உண்மை தெரிந்து விடும்!

இந்த வார சாலைக்காட்சி:

சென்ற ஆண்டின் கடைசி சில மணி நேரங்கள் பாக்கி இருக்கையில் இரவு உணவு முடித்து சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தேன். எதிரே இரண்டு குடிமகன்கள் சாலையை அளந்து பார்த்தபடியும், நடப்பதற்கு உரிம்ம் வாங்க எட்டு போட்டபடியும் வந்து கொண்டிருந்தார்கள். 

இரண்டு பேருமே அப்படி ஒரு பரவச நிலையில் இருந்தார்கள்.  “உனக்கு நான் துணை, எனக்கு நீ துணைஎன்று பேசிக் கொண்டு ஒருவரை மற்றொருவர் பிடித்து கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். 

ஒரு நிலைக்கு மேல் அவர்களால் நடக்கக்கூட முடியவில்லை.  அங்கேயே நின்று கொண்டு ஒருவரை ஒருவர் பிடித்தபடி நின்று கொண்டிருக்க, அந்த நேரத்தில் தான் நான் அவர்களை கடந்தேன். எஷ்க்யூஷ் மீ!என்று ஒரு குரல் கேட்க, குழப்பத்துடன் அவர்களை நோக்கினேன்! இரண்டு பேரும் கோரஸாக “எங்களை அந்த முக்கு வரைக்கும் ட்ராப் பண்ண முடியுமாஎன்று கேட்க, மயில்சாமி வடிவேலு ஜோடி தான் நினைவுக்கு வந்தது! அவருக்காவது ஒரு மயில்சாமி – இந்த வடிவேலுவுக்கு இரண்டு மயில்சாமிகள்!

இன்னும் கொஞ்ச நேரத்தில இந்த வழியா தில்ல் போலீஸோட இனோவா கார் வரும் – அதுலேயே உங்களைக் கொண்டு விடுவாங்க! என்று சொல்லி விட்டு நகர்ந்தேன்! எனக்குப் பின்னால் ”நாங்களே நடந்து போயிடுவோம், நீ எதுக்கு எங்களுக்கு என்று சொல்லியபடியே நடப்பது தெரிந்தது. பிறகு “தொப் தொப்என்று சத்தம் – சாலையில் இருவரும் மல்லாக்க கிடந்தார்கள்! தெளிந்தபின் எழுந்து போவார்கள் என நானும் நகர்ந்தேன்.

இந்த வார காணொளி:

முயற்சி திருவினையாக்கும் என்று மற்ற புலிக்கு சொல்கிறதோ இப்புலி! பாருங்களேன்....
இந்த வார புகைப்படம்:

கிறிஸ்துமஸ் தொடர்ந்த நான்கு நாட்களில் ஹிமாச்சல பிரதேசத்தில் இருக்கும் ஊனா, காங்க்ரா மாநிலங்களுக்கு ஒரு பயணம் சென்றேன்.  அங்கே எடுத்த ஒரு படம் உங்கள் ரசனைக்கு!படித்ததில் பிடித்தது:

என்னை மணலில் வைத்து  
உன்னைக் கடலில் வைத்துக்  
கடமை முடித்துக்
காணாமல் போனான் கடவுள்!
 
வருவதும் போவதுமாய் நீ!

துறையில் படகைக் கட்டி
துடுப்பை நதியில் வீசி  
கடமை முடித்துக்  
காணாமல் போனான்  
கடவுள்!!
 
நதியின் போக்கில்  
துடுப்பின் ஓட்டம் !

சிப்பியில் என்னை வைத்து  
முத்துக்குள் உன்னை வைத்து  
கடமை முடித்துக்  
காணாமல் போனான்  
கடவுள் !

ஏதோ ஒரு கிரீடத்தில் நீ !

உன்னைச் சூரியனாக்கி  
என்னை மலராக்கி  
கடமை முடித்துக்  
காணாமல் போனான்  
கடவுள் !


உன்னுடைய திசை தேடித்  
திரும்பும் என் முகம் !

குளிர் நிலவின் ஒளி நெசவில்    
இளம் மனதின் உணர்விழைகள்  
அறுந்தும் சேர்ந்தும்  
அழுகை ஜரிகையாகிறது !

ஸ்வரங்களின் உச்சத்தைத் தொட  
ஏங்கிய இந்த மௌனராகம்  
மறக்கப்படவே  
மீட்டப்படுகிறது !!!

"ஸ்ரீ"

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

52 comments:

 1. புத்தாண்டின் முதல் ஃபுருட் சாலட்டை ருசித்தேன் :)
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 2. புத்தாண்டின் முதல் விருந்து. அருமை!..
  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 3. ப்ரூட் சாலட் சுவையோ சுவை ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 4. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 5. வாழ்த்தி பேசும் சொற்களெல்லாம் வந்து உங்களை சேரட்டும் என்று இந்த புத்தாண்டு தினத்தில் வாழ்த்துகிறேன். இந்த புத்தாண்டு தினத்தில் நீங்கள் ஆசைபட்டவைகள் விரும்பியவைகள் நம்பியவைகள் அனைத்தும் உங்களை வந்து சேரவும் பிரார்த்திக்கிறேன்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   Delete
 6. இந்திய 'குடி'மகன் உதவி கேட்டும் செய்யாததால் அனைத்து குடிமகன்களும் உங்கள் இல்லம் நோக்கி போரடா வருகிறார்களாம்

  ReplyDelete
  Replies
  1. போராட்டத் தலைவர் மதுரைத் தமிழனா?

   Delete
  2. ஆஹா போராட்டமா! சரி பார்த்துருவோம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
  3. அட தலைவர் மதுரைத் தமிழனா..... அப்படின்னா கொஞ்சம் கஷ்டம் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 7. இந்த ஆண்டின் முதல் பழக்கலவை மிக அருமை. அதிலும் அந்த குறுஞ்செய்தியைத்தான் மிகவும் இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. கொரட்டி மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 9. புத்தாண்டின் முதல் ஃப்ரூட் சாலட் அந்தக் குடிமகன் களைப் போல ஹஹஹ..எங்களையும் மயக்கியது...மனதைக் கொள்ளை கொள்ளும் மயக்கும் அந்த இமயமலையின் பனி போர்த்திய படத்தைப் போட்டு.....இற்றையைத் தந்து...புலி குதிக்கும் காணொளியைத் தந்து...ஆஹா..

  குறுஞ்செய்தி ஹஹாஹ்

  தங்களுக்குப் படித்ததில் பிடித்தது எங்களுக்கும் மிகவும் பிடித்தது.....

  சுவையான ஃப்ரூட் சாலட்!

  தங்களின் அனுமதியுடன் அந்த புலி காணொளியை முகனூலில் பகிர்ந்து கொள்ள.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 10. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 11. இந்தக் கிராம மக்களைப் போல ஒவ்வொரு ஊரிலும் செய்தால் மோதிஜியின் 'தூய்மை இந்தியா' நிறைவேறிவிடுமே.
  புலியின் ஜம்ப் சூப்பர்! கவிதையின் வரிகள் மனதைத் தொட்டன. இமாலயத்தின் ஒரு பகுதியா உங்கள் புகைப்படம்? பரவசம்!
  வருடத்தின் முதல் ப்ரூட் சாலட் ருசி அபாரம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 12. கொரட்டி ஊர் மக்கள் பாராட்டுக்குரியவர்கள், அவர்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்.
  கவிதை, காணொளி எல்லாம் மிக அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 13. ப்ரூட் சாலட் அருமை. வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன்....

   Delete
 14. நகரத்தார் கோவில்களுக்கு ( 9 கோவில்கள்) ஒரு முறை போயிருந்தபோது ஒரு கோவிலில் இந்த புள்ளி கணக்கைக் கண்டேன். ஒரு புள்ளிக்கு இத்தனை ரூ. என்று வசூலிக்கிறார்கள். எங்கும் பணம் இல்லாமல் வேலை நடக்காதே. படித்ததில் பிடித்ததில் ஒரு சோக இழை ஓடுவதுபோல் தெரிகிறது. ஃப்ரூட் சலாட் அருமை. ஃபோட்டொ பற்றிசொல்ல மாட்டேன். சொன்னால் சர்க்கரை இனிக்கிறது என்று சொல்வதுபோல் இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. மேலதிகத் தகவல்களுக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 15. கொரட்டி மக்களைப் பாராட்டுவோம்... எங்கள் ஊரிலும் திருமணமாகிவிட்டால் குடி வரிதான்...
  மயில்சாமி வடிவேலு கதை அருமை...
  கவிதை நன்றாக இருந்தது...
  புலி... வாவ்... கலக்கலான ப்ரூட் சாலட் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 16. வெள்ளிக் கிழமை ஸ்பெசல் பழக்கலவை இனிக்கிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 17. அனைத்தும் அருமை நாகராஜ் ஜி.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  த.ம.5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 18. உன்னுடைய திசை தேடித்
  திரும்பும் என் முகம் !

  அருமையான கவிதை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 19. ப்ரூட் ஸாலட் ஜோர்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 20. ஆண்டின் தொடகத்தில் கிடைத்தது அருமையான ப்ரூட் ஸாலட் ஜோர்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 21. அனைத்தும் அருமையான விடயங்கள் நண்பரே,,,, இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எனது புதிய பதிவு எ.எ.எ.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 22. இந்த வார ப்ரூட் சாலட்டினை வழக்கம் போல சுவைத்தேன்.
  த.ம.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 23. சுவையாக இருந்தது ஃப்ரூட்சாலட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 24. ஆகா அருமையான சுவை இந்த சாலட்..
  குறிப்பாக்க தாவும் புலி.. வாவ்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 25. Replies
  1. தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி மது.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....