எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, January 4, 2015

முதுமை – இனிப்பா கசப்பா? – சில படங்கள்ஞாயிற்றுக் கிழமைகளில் எனது பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்கள் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  ஒரு சில மாதங்களாக அதில் ஏதோ விதத்தில் தடை வந்து விட்டது. இந்த வாரத்திலிருந்தாவது தொடங்கலாம் என்று எண்ணம்.  இந்த ஞாயிறில் சமீபத்தில் நான் எடுத்த சில புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

“நாளைய பாரதம்என்ற தலைப்பில் வருங்கால சந்ததியினரான குழந்தைகளை நான் புகைப்படம் பிடித்து பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  இன்று முதல் முறையாக நான் படம் பிடித்த பெரியவர்களின் படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.  சமீபத்தில் நான்கு நாள் பயணமாக ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஊனா, காங்க்ரா, பாலம்பூர் போன்ற மாநிலங்களுகுச் சென்றிருந்தபோது அந்த இடங்களில் பார்த்த சில பெரியவர்களின் புகைப்படங்கள் தான் அவை. 

படங்களைப் பார்க்கலாமா?


எத்தனை வருஷமா வெல்லம் வாங்கறேன்...  எனக்குத் தெரியாதா?  கிலோ ஐம்பது ரூபாய்க்கு கொடு என்று பஞ்சாபி மொழியில் மிரட்டிய மூதாட்டி....
 


 வேர்க்கடலை, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்றவற்றை விற்கும் வியாபாரி..... யாராவது வாங்க வரமாட்டார்களா என்ற ஏக்கத்துடன் காத்திருந்த பெரியவர்!


  
ஒரு வேளை நமக்குத் தான் அதிகமா குளிருதோ என்று யோசனையுடன் அமர்ந்திருப்பாரோ இந்த பெரியவர்.....”இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை” என்று சொல்லும் மூதாட்டி...குடும்பத்தினருக்காக காத்திருக்கும் பெரியவர்....  “எப்போ வருவாரோ எந்தன் கலி தீர?” என்ற பாட்டு ஏனோ நினைவுக்கு வருகிறது....தள்ளாத வயதிலும் உழைக்கும் பெரியவர் - “பைஜ்நாத் கோவில் வெளியே பிரசாதம் விற்பவர்....என்னை யாரும் ஏமாத்த முடியாதுலே... இது ஐம்பது ரூபா நோட்டு தான் என்று சொல்கிறாரோ? சாலையோரத்தில் உணவகம் வைத்திருக்கும் பெரியவர். 


 நிலத்தில் விளைந்த கரும்புகளை வெல்லமாக்கும் பெரியவர்......  கண்களில் என்னவொரு சக்தி!

சில பெரியவர்களைப் பார்க்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருந்தாலும், சில பெரியவர்களைப் பார்க்கும்போது சந்தோஷமாகவும் இருந்தது. முதுமை இனிப்பாகவோ கசப்பாகவோ இருப்பது அவரவர் கையில் தான் என்று தோன்றுகிறது.  உங்கள் கருத்து என்ன என்பதையும், படங்களை ரசித்தீர்களா என்பதையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.42 comments:

 1. காலம் ஓடிக் கொண்டிருக்கின்றது..
  இதில் சந்தோஷம் என்ன.. சஞ்சலம் என்ன!..
  சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்.

  ReplyDelete
  Replies
  1. ஓடுகிற வரை ஓடட்டும் காலம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 2. //முதுமை இனிப்பாகவோ கசப்பாகவோ இருப்பது அவரவர் கையில் தான் என்று தோன்றுகிறது. //

  உண்மை.
  முதியவர்கள் படங்கள் எல்லாம் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 3. கசப்பும் இனிமையும் இளமையிலும் உண்டும் முதுமையிலும் உண்டு
  படங்கள் முதுமை சொல்லும் பாடங்கள் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 4. பேசும் விழிகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

   Delete
 5. கையில் காசு இருந்தால் முதுமையிலும் இன்பம்தான்.

  ReplyDelete
  Replies
  1. சரியாச் சொன்னீங்க ஐயா..... கையில் காசும் இருந்து, நோய் நொடிகள் இல்லாதிருந்தால் “எல்லாம் இன்பமயம் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 6. முதியவர்களின் படங்கள் எல்லாம் மிக அருமை. படங்களிருந்து முதுமை கசப்பா இனிப்பா என்று கூற முடியாது. ஆனால் கசப்பான அனுபவங்களை நன்கு செரிக்கத் தெரிந்தவர்களாகத் தெரிகின்றனர் ஒவ்வொருவரின் பின்னணியிலும் ஒரு கதை இருக்கும் . முதுமை தண்டனை என்றும் வரம் என்றும் இருவிதமாக நான் எழுதிப் பகிர்ந்திருக்கிறேன் படித்திருக்கிறீர்களா?வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவின் சுட்டி கொடுங்களேன் ப்ளீஸ். படித்த நினைவில்லை.....

   நீங்கள் சொல்வது போல ஒவ்வொருவரிடமும் பல கதைகள் இருக்கக் கூடும்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா....

   Delete
 7. கடைசிப் பட பெரியவரின் கண்களின் கூர்மை வசீகரிக்கிறது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Bandhu ஜி!

   Delete

 8. படங்களும் அருமை. அதற்கு தாங்கள் தந்த விளக்கங்களும் அருமை. முதுமையிலும் உழைக்கும் இவர்களை பாராட்டுவதா அல்லது இவர்கள் உழைக்க வேண்டிய சூழ்நிலையை கண்டு வருந்துவதா எனத் தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 9. அதான் நீங்களே அழகாகச் சொல்லிவிட்டீர்களே... ’முதுமை இனிப்பாகவோ கசப்பாகவோ இருப்பது அவரவர் கையில் தான்’ என்று!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 11. கரிவேப்பிலை போலிப்படலப் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுபவர்கள் நிலைதான் பாவம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. இளமை மட்டும் அழகல்ல
  முதுமையும் பேரழகே
  மிகக் குறிப்பாக உழைப்பின்
  மகத்துவம் அறிந்த முதுமை

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஐயா.

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   Delete
 13. என்னை பொறுத்தவரை நீண்ட வயதென்பது தண்டனை தான். படங்கள் மனம் கனக்கசெய்கிறது:(

  ReplyDelete
  Replies
  1. அடடா உங்களை கஷ்டப்படுத்திவிட்டதா படங்கள்.... அடுத்த புகைப்படங்கள் பகிர்வில் குழந்தைகளின் படங்களை வெளியிடுகிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 14. முதுமைக்கு ஒரு தாலாட்டு இந்த பதிவு. நன்றி.
  த.ம.5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 15. அருமை அருமை
  காமிரா கவிஞருக்கு வாழ்த்துக்ள்
  தம 6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 16. முதுமை இனிப்புதான் நண்பரே காரணம் அவர்களுக்குதானே எல்லா அனுபவமும் முழுமையாக கிடைத்தது. அருமையான புகைப்படங்கள் நல்லதொரு கேள்விக்கணையோடு வாழ்த்துகள் நண்பரே எனது பதிவு எ.எ.எ.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.....

   சில நாட்களாகவே பதிவுகளை படிக்க இயலாத சூழல். விரைவில் உங்கள் பதிவினையும் படிக்கிறேன் நண்பரே....

   Delete
 17. உழைக்கும் பெரியவருக்கு என்றுமே சந்தோசம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 18. படங்கள் அருமை நாகராஜ் ஜி்
  இருந்தாலும்.....இந்தப் படங்களுடன் நம் கலைஞர் போன்றவர்களையும் இணைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்....

   Delete
 19. படங்களும் விளக்கங்களும் அருமை.
  பிள்ளைகள் பெற்றோர்களை குழந்தைகளைப் போல் பார்த்துக்கொண்டால், முதுமை சுகம் தான் இல்லையேல் சுமை தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 20. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் மேடம்...

   Delete
 21. ஒவ்வொருவர் முகத்திலும் எத்தனை அனுபவ ரேகைகள்! அனைவரையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....