எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, January 20, 2015

புத்தகக் கண்காட்சி – சில அனுபவங்கள்


புத்தக உலகத்திற்குள் நுழைய ஏதுவாய் ஒரு நுழைவாயில்


சென்ற சனிக்கிழமை ஒரு திருமண வைபவத்தில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தேன். ஞாயிறு திருமணம் முடிந்தபிறகு மாலை வரை நேரம் இருந்ததால் சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தகக் காட்சிக்கும் சென்று வர எண்ணம் இருந்தது.  எண்ணப்படியே காலை பத்தே கால் மணிக்கு வாத்யாருடன் புத்தகத் திருவிழா நடக்கும் நந்தனத்திற்கு ஆட்டோவில் பயணித்தோம். பத்தடிக்கு ஒரு வரவேற்பு வளைவு வைத்து பலர் தங்களது விளம்பரங்களை வைத்திருக்க, ”புத்தகம் வாங்கு முன்னர் சாப்பிடுங்கப்பா” என நிறைய உணவுக் கடைகள் இருந்தன! 


வாத்யாரின் “மறுபடியும் கணேஷ்” புத்தகத்தோடு வாத்யார் கணேஷ்.  ஒரு சின்ன டவுட்டு: இவர் விளம்பரம் தருவது இவர் கையில் இருக்கும் அலைபேசிக்கா?

பத்தரை மணிக்கு ஸ்டால் உரிமையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள், பத்து ஐம்பதுக்கு நுழைவுச் சீட்டு வழங்கப்படும், பதினோறு மணிக்கு தான் பார்வையாளர்களுக்கு அனுமதி என்று தொடர்ந்து ஒலிபரப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது, உணவுப் பிரியர்களுக்கு வசதியாகப் போயிற்று. அக்கடைகளில் ஈக்களைப் போல மனிதர்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது.  திரையரங்கத்தின் வெளியே காத்திருப்பது போல, மக்கள் புத்தகங்கள் வாங்கவும் காத்திருப்பது மகிழ்ச்சி தந்தது.  சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் மூழ்கிப் போன நமது ஊரில் வாசிப்பு இன்னமும் இருக்கிறது என்று தெரியும்போது, வாசகர்களாகிய நமக்கும் ஒரு புத்துணர்வு வருகிறது.


புத்தகக் காட்சியில் நாளைய வாசகி!

ஞாயிற்றுக் கிழமை என்பதால் இரண்டு இடங்களில் நுழைவுச் சீட்டு வழங்குவதாக அறிவித்தார்கள் – இன்னும் இரண்டு இடங்களிலும் கொடுத்திருக்கலாம் – அத்தனை பெரிய வரிசை! ஒவ்வொரு வீதிக்கும் “சேரன் வீதி, சோழன் வீதி, கரிகால் பெருவளத்தான் வீதி” என அழகாய் பெயர் வைத்திருக்கிறார்கள். ஒரு வீதி வழியே உள்ளே நுழைந்து 600க்கும் மேல் இருக்கும் பல Stall-களை நோக்கி பயணித்தோம். விகடன் நிறுவனத்தினர் வழங்கிய பட்டியல், நமக்குத் தேவையான பதிப்பகத்தினர் இருக்கும் இடத்திற்குச் செல்ல வசதியாக இருந்தது.


அரங்கத்தினுள் ஒரு வீதி...

ஒவ்வொரு இடத்திலும் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களைப் பார்க்கும்போது மலைப்பாக இருந்தது. எந்தப் புத்தகத்தினை வாங்குவது என்ற குழப்பமும் உண்டாயிற்று.  வாங்க வேண்டும் என நினைத்திருந்த புத்தகங்களின் பட்டியலை எடுத்துச் செல்லாத காரணத்தினால் ஏற்பட்ட குழப்பம்.  சில புத்தகங்களைப் பார்க்கும்போது வாங்க வேண்டும் எனத் தோன்றினாலும் அவற்றின் விலை யோசிக்க வைத்தது. உதாரணத்திற்கு விகடன் பதிப்பகத்தில் வெளி வந்திருக்கும்” இறையருள் ஓவியர் அமரர் சில்பி அவர்களின் படைப்பில் உருவான ”தென்னாட்டுச் செல்வங்கள்” பார்த்தவுடன் வாங்கத் தோன்றினாலும் விலை கொஞ்சம் பயமுறுத்தியது.  896 பக்கங்கள் கொண்ட இரு பாகங்களுக்கு விலை 650/-.  சில்பி அவர்களின் ஓவியங்களை விலை மதிப்பிடுவது தவறு என்றாலும் சொல்லத் தான் வேண்டியிருக்கிறது!


சந்தியா பதிப்பகத்தில் துளசி டீச்சரின் ”அக்கா” புத்தகத்திற்கு வைத்திருந்த விளம்பரம்

இன்னும் ஒரு விஷயமும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது.  ஒரே புத்தகத்தினை வெவ்வேறு பதிப்பகத்தினர் வெளியிடுகிறார்கள் – உதாரணத்திற்கு கல்கி, சுஜாதா, ஜெயகாந்தன் போன்றவர்களின் படைப்புகள்.  ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விலை.  இது அதிகமாகவே குழப்பம் தருகிறது.  ஒரே மாதிரி Hard Bound செய்யப்பட்ட ஜெயகாந்தனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்” தொகுப்பு ஒரு பதிப்பகத்தில் 350/- ரூபாய்க்கு விற்க, ஒரு பதிப்பகத்தில் 200/- ரூபாய் மட்டும்.  நேரம் இருப்பின் வாங்க வேண்டிய புத்தகங்களை பட்டியலிட்டு, ஒவ்வொரு பதிப்பகத்திலும் சென்று விலையைப் பார்த்த பிறகு வாங்குவது உங்கள் சாமர்த்தியம்.


கதாநாயகன் சீனு

மகளும், மனைவியும் தங்களுக்கான புத்தகங்களை வாங்கிக் கொண்டார்கள். எனக்கென ஒரு சில புத்தகங்களை வாங்கிக் கொண்டேன்.  சில மணி நேரங்கள் மட்டுமே எங்களிடம் இருந்ததால் அனைத்து பதிப்பகங்களின் கடைகளுக்கும் செல்ல இயலவில்லை. புத்தகக் காட்சியில் சில பதிவர்களையும் சந்திக்க எண்ணியிருந்தேன். கோவை ஆவியின் குறும்படத்தின் கதாநாயகன் “திடங்கொண்டு போராடு” சீனு, ஸ்கூல் பையன் கார்த்திக் சரவணன், ரஞ்சனி நாராயணன் என மூன்று நான்கு பேர்களை அங்கே சந்திக்க எண்ணியிருந்தாலும், சீனுவை மட்டுமே சந்திக்க முடிந்தது.  

இரண்டு மணி நேர அவகாசத்தில் சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் திருமண மண்டபத்திற்கு வந்து மதிய உணவினை முடித்துக் கொண்டு ரயில் நிலையம் செல்ல வேண்டும்.  புத்தகக் காட்சியில் பபாசி ஏற்பாடு செய்திருக்கும் “நம்ம ஆட்டோ” புத்தக வாசகர்களுக்கு நல்லதொரு விஷயம்.  நம்ம ஆட்டோவில் ஒரு ஆட்டோவினை அமர்த்திக்கொண்டு மண்டபத்திற்கு வந்து சேர்ந்தோம்.  ஆட்டோ ஓட்டுனர் தனது பணியினைப் பற்றியும் நிறுவனத்தினைப் பற்றியும், சக ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாது காசு அதிகமாக வாங்குவது பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தார்.  கூடவே எங்களது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் “நம்ம ஆட்டோ”வினை பரிந்துரைக்கும்படி வேண்டுகோளும் விடுத்தார்.

மதிய உணவினை முடித்து [அதில் இருந்த இளநீர் பாயசத்தின் சுவை இன்னமும் நாக்கில்!] இரயில் நிலையம் வந்து அங்கிருந்து திருச்சி வந்து சேர்ந்தோம்.  மீண்டும் அடுத்த வாரமும் ஒரு சென்னைப் பயணம் காத்திருக்கிறது! இப்பயணத்திலும் கிடைத்த அனுபவங்கள் பின்னர் பதிவாக வரும்.  வாங்கிய புத்தகங்களை வாசித்து அதில் கிடைத்த வாசிப்பனுபவமும் வரும் நாட்களில் இங்கே பதிவாக வெளியிடலாம்!

மீண்டும் வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து….


66 comments:

 1. இறைவனை போல எங்கும் இருக்கிறீர் அய்யா நீங்கள் . எங்கெங்கு நோக்கினும் வெங்கட்தான் ஒரு நாள் சென்னையில் இன்னொரு நாள் திருச்சியில் டில்லியில் கேரளாவில் இப்படி பல இடங்ககளை சொல்லாம்

  ReplyDelete
  Replies
  1. இன்னும் USA மட்டும் தான் பாக்கி. நீங்கள் பாஸ்போர்ட்டும், விசாவும் நீங்கள் அனுப்பினால் அங்கேயும் வந்து விட உத்தேசம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
  2. நான் அனுப்பின ஆஸ்திரேலியா விசா என்னாச்சு???

   Delete
  3. இன்னும் வழியில் இருக்கிறதாம் விசா! :) வந்தவுடன் ஆஸ்திரேலியா வந்து விட வேண்டியது தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 2. சில மணி நேரம் பு.கண்காட்சியில் செலவழித்ததை ரசனையாகப் பகிர்ந்துட்டீங்க.அடுத்து சென்னை விசிட் பத்தி மட்டுமில்லாம.. இங்க வாங்கின புத்தகங்களோட நூல் விமர்சனமும் தொடரும்னு சொல்லுங்க... ரைட்டு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ். நேரம் கிடைத்தால் வாசிப்பனுபவமும் பகிர வேண்டும்! :)

   Delete
 3. பிரமிப்பாக இருக்கின்றது சகோதரரே!..

  என்போன்று அங்கே வரமுடியாததவர்களுக்கு
  உங்கள் பதிவும் படங்களும் வரப்பிரசாதம்!

  மிக அருமை! நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 4. புத்தகக் கண்காட்சியில்
  இருப்பதைப் போன்ற உணர்வு
  படங்களுடன் தங்கள் பதிவைப் படிக்க வந்தது
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

   Delete
 5. Replies
  1. தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. மிகச் சரி
  சீனு கதா நாயகன் போலத்தான்
  உங்கள் வாக்கு பலிக்கட்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 7. சென்னை புத்தகக்கண்காட்சிக்குச் சென்ற தங்களின் அனுபவப் பகிர்வு எங்களையும் உடன் அழைத்துச்சென்றது. திரு பாலகணேஷ், திரு சீனு உள்ளிட்ட வலையுலக நண்பர்களுடனான சந்திப்பினைத் தாங்கள் பகிர்ந்த விதம் நன்று. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 8. புத்தகக் கண்காட்சியின் நேரடி வர்ணனை - அருமை!..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 9. நல்ல பகிர்வு. மதிப்புரைகளுக்காகக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 10. புத்தகக் கண்காட்சி...ஆசையாய், ஆவலாய் இருக்கிறது....போகமுடியாத தொலைவில்...பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

   Delete
 11. அழகான படங்களுடன் கூடிய பதிவு. அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 12. கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து புத்தகக் காட்சி. சரி. அந்த இளநீர் பாயாச ரெசிபி? :))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   இளநீர் பாயச ரெசிபி - ருசிச்சு சாப்பிடுவதில் இருந்த கவனம் - அதைக் கேட்பதில் இல்லை :) மூன்று கப் பாயசம் உள்ளே சென்றதில், அதன் சுவையில் ஆழ்ந்து விட்டேன்!

   Delete
 13. ரெண்டே மணி நேரத்தில் எங்களை புத்தகக் காட்சி சுற்றுலா அழைத்து சென்று வந்து விட்டீர்கள் அழகாக....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 14. //ஒரே புத்தகத்தினை வெவ்வேறு பதிப்பகத்தினர் வெளியிடுகிறார்கள் – உதாரணத்திற்கு கல்கி, சுஜாதா, ஜெயகாந்தன் போன்றவர்களின் படைப்புகள். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விலை.//

  உண்மைதான்! விகடன் பதிப்பகம் வெளியீடு 'பொன்னியின் செல்வன்' (அனைத்து பாகங்களும்) ரூபாய் - 1350/- சமீபம். அதே சமயம், எனது அக்கா மகன் வேறு பதிப்பகத்தின் 'பொன்னியின் செல்வனை"(ஒரே புத்தகம்) ரூ. 260/- க்கு வாங்கி வந்தார். (தரமும் மணமும் வேறு விஷயம்)

  ReplyDelete
  Replies
  1. ஒரே தரத்தில் இருக்கும் புத்தகங்களிலும் இப்படி அதிகமான வித்தியாசம் இருந்தது அண்ணாச்சி.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 15. நேரம் இருப்பின் வாங்க வேண்டிய புத்தகங்களை பட்டியலிட்டு, ஒவ்வொரு பதிப்பகத்திலும் சென்று விலையைப் பார்த்த பிறகு வாங்குவது உங்கள் சாமர்த்தியம்.// அதுதானே இடிக்குது

  ReplyDelete
  Replies
  1. போட்டு வைத்த லிஸ் எங்கே வைத்தேன் என்று ஒரு பிட் வைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

   Delete
 16. சுவாரஸ்யமாக பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்! இந்த முறை சென்னை வந்தா எங்க ஊருக்கும் வாங்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   அடுத்த முறை வரும்போது சொல்கிறேன். வரும் வாரத்தில் ஞாயிறு மற்றும் திங்கள் அன்று வர யோசனை உண்டு.

   Delete
 17. ஆஹா! நீங்கள் வருவது தெரிந்திருந்தால், கண்டிப்பாக அன்று வந்திருப்பேனே. நான் மூன்று முறை கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். கவிஞர் முத்துநிலவன் வருவது தெரிந்திருந்ததால் அன்றும். மூன்று உறை போயும் சில மணினேரங்களே செலவிட முடிந்தது.....நீங்கள் சொல்லியிருப்பது போல் புத்த்கங்கள் ஒரே புத்தகம் வெவ்வெறு பதிப்பகங்களில் வெவ்வேறு விலை. ஒரே போல் இருந்தாலும்.....ஏன் அப்படி என்று தெரியவில்லை. யார் இதை கவனித்து ஒரே விலை நிர்ணயிப்பார்கள்? அருமையான விவரணம். உங்களைப் பார்க்க முடியவில்லையே என்ற குறைதான்...-கீதா

  ReplyDelete
  Replies
  1. முகப்புத்தகத்தில் சென்னை வரும் விஷயத்தினையும், புத்தகக் காட்சிக்கு வரும் விஷயமும் பகிர்ந்து கொண்டிருந்தேன். நீங்கள் முகப்புத்தகத்தில் நட்பு வட்டத்தில் இல்லை எனத் தோன்றுகிறது......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
  2. நான் முகப்புத்தகத்தில் இல்லை. துளசிதான் இருக்கின்றார். அவர் பார்த்திருந்தால் சொல்லியிருப்பார். அவரும் வெகு குறைவாகவே முகப்புத்தகம் பார்க்கின்றார். அதனால் தான் மிஸ் ஆகியிருக்கின்றது.

   Delete
  3. அடுத்த முறை சென்னை வந்தால், உங்களுக்கும் தெரிவிக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 18. புத்தகக்காட்சி அனுபவங்கள் ரசித்தேன்.

  நீங்கள் எடுத்துள்ள புகைப்படங்கள் தெளிவு!

  விலையைப் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் இரண்டு பக்கமும் என் கருத்தோடு ஒத்துப் போகிறது. சமஸ் எழுதிய அகம் புறம் அந்தப்புரம் வாங்க நினைத்தேன். (ஓடி) வந்து விட்டேன். 1000 ரூபாய்க்கு ஒரு ரூபாய்க் கம்மி!

  நம்ம ஆட்டோ பற்றி எனக்கு ஒரு மிகக் கசப்பான அனுபவம் உண்டு. நீங்கள் கொடுத்த பணத்துக்கு ரசீது கொடுத்தார்களோ?

  ReplyDelete
  Replies
  1. சமஸ் எழுதிய ”யாருடைய எலிகள் நாம்?” கட்டுரைத் தொகுப்பின் விலை 300/-!

   நம்ம ஆட்டோ, சில சமயங்களில் கசப்பான அனுபவங்களும் அமைந்து விடுகிறது. எனக்கு ரசீது கொடுத்தார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 19. இளனீர் பாயாசம் கேரளாவில் மிகவும் பிரபலம். செய்வது மிக மிக எளிது. அடுப்பே தேவையில்லை. ஜஸ்ட் மிக்சிங் தான்....யார் வேண்டுமானாலும் செய்யலாம். இளனீர் வழுவல் தண்ணீருடன் நன்றாக ஒரு அடி அடித்து, இல்லை சிறு சிறு துண்டுகளாகக் ஸ்மாஷ் செய்து, பால், மில்க் மெய்டு, கலந்து முந்திரி, உலர் திராட்சை கலக்க (ஏலக்காய் போடுவார்கள் நான் தவிர்ப்பதுண்டு ஒரிஜினல் ஃப்ளேவர் வேண்டும் என்பதால்....) பாயாசம் ரெடி. நான் வீட்டில், மில்க் மெய்டிற்கு பதில், பாலை நன்றாகக் குறுக்கி சர்க்கரை சேர்த்து ஆறியதும் மேற்சொன்ன படி செய்வேன். மிக மிக டேஸ்டியாக இருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!. ரெசிப்பி கொடுத்தது நிச்சயம் பயன்படும்.

   Delete
 20. ரிசிப்பி கொடுத்தது கீதா....

  ReplyDelete
  Replies
  1. ரெசிப்பி தந்த கீதா ஜி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

   Delete
 21. விரைவில் புத்தக விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறோம்..

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது எழுதுவேன் சாந்தி மாரியப்பன் சகோ.

   Delete
 22. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 23. புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு சில நண்பர்களைச் சந்தித்த சந்தோஷம் பதிவில்...
  நல்லதொரு கல்யாண ட்ரிப் அண்ணா....
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 24. வணக்கம்
  ஐயா.
  நாங்கள் வரா விட்டாலும்நிகழ்வை நேரில் பார;த்தது போல ஒரு உணர்வு.. பகிர்வுக்கு நன்றி. பகிர்வுக்கு நன்றி த.ம9
  என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 25. வர்ணனை அழகு...

  மிகத் துல்லியமான படங்கள்....!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 26. சீனுவின் படத்தை பார்க்கும்போது திரைபடத்தில் கதாநாயக வாய்ப்பு உறுதி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 27. அருமை! இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டீங்க:-)

  புத்தகங்களின் விமரிசனத்துக்கு வெயிட்டீஸ்:-)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   வாசிப்பனுப்வங்கள் ஒவ்வொன்றாக வெளி வரலாம்! :)

   Delete
  2. புத்தகக் கண்காட்சியும் வந்தாச்சா. ரோஷனி என்ன புத்தகங்கள் வாங்கினார். எல்லாம் பட்டியலோடு அடுத்தபதிவில் எதிர்பார்க்கிறேன். துளசியின் அக்கா வைப் பார்க்க ஆனந்தம்

   Delete
  3. பட்டியல் மிகச் சிறியது தான்.... :) ரோஷ்ணியும் சிறுவர்களுக்கான சில புத்தங்களை வாங்கி இருக்கிறார்..

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 28. ஆகா புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்து விட்டீர்கள்
  அடுத்த ஆண்டாவது செல்ல வேண்டும்
  படங்கள் அருமை
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 29. Replies
  1. தமிழ் மணம் பதினொன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 30. நானும் உங்களை மிஸ் பண்ணிட்டேன்!

  ReplyDelete
  Replies
  1. நேரப் பற்றாக்குறை. இல்லை எனில் சந்தித்து இருக்கலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....