எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, January 8, 2015

ஃப்ரூட் சாலட்–121: மரம் வளர்ப்போம் – வாழ்க்கை – குடியும் குறட்டையும்இந்த வார செய்தி:

மரக்கன்றுகளை பராமரிக்க உதவ வேண்டும்!தள்ளாத வயதிலும், தன்னந்தனியாக, 5,000த்திற்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து, பராமரித்து வரும் கருப்பையா:

"விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்திற்கு அருகிலுள்ள, நக்கநேரி கிராமத்தை சேர்ந்தவன் நான். விறகுக் கடையில், பல ஆண்டுகளாக வேலை செய்து, என் ஒரே மகனைப் படிக்க வைத்து ஆசிரியராக்கினேன்.

அவன் ஆசிரியரானதும், என்னை வீட்டில் ஓய்வெடுக்கும்படி கூறினான்; என் மனைவியும் வற்புறுத்தினாள்.மகன் அனுப்பும் பணத்தில் சாப்பிட்டு, 25 நாட்கள் ஓய்வெடுத்தேன். அதற்கு மேல், என்னால் சும்மா இருக்க முடியவில்லை.

அன்னை தெரசாவின் பொதுச் சேவை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்; நாமும் அப்படி ஏதாவது செய்யலாம் என, சிந்தித்தபோது, மரம் வளர்க்கும் யோசனை வந்தது. என் 65வது வயதில், 2002ல், முதன் முதலாக, மகன் அனுப்பும் பணத்தில் மிச்சம் செய்து, 500 ரூபாய்க்கு மரக்கன்றுகளை வாங்கி, ஊரின் பொது இடங்களில் நட்டு வளர்க்க ஆரம்பித்தேன்.

இந்த நாட்டு நலப்பணிக்கு, வீட்டுக்குள்ளும், ஊருக்குள்ளும் எழும்பிய ஏச்சுகளையும், எதிர்ப்புகளையும் மன தில் வைக்கவில்லை.அன்றிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு மாதமும், 300 ரூபாய் ஒதுக்கி, மரக்கன்றுகள் வாங்குவதற்கும், நட்ட மரங்களைப் பராமரிப்பதற்கும் செலவிடுகிறேன். ராஜபாளையம் வட்டாரத்தில் மட்டுமின்றி, சில வெளியூர்களுக்கும் சென்று மரக்கன்றுகளை நடுகிறேன்.

இதுவரை, 5,000 மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறேன்.அது மட்டுமின்றி, என் சொந்தச் செலவிலும், நன்கொடையாகவும் வாங்கிய, 2,500 கன்றுகளை, பொதுமக்களுக்கும் இலவசமாக அளித்துள்ளேன். ஆல், அரசு, மருதம், வாகை, புங்கை, நவ்வா, வேம்பு, பூசனம், பூவரசு போன்ற, நம் மண்ணின் பாரம்பரிய வித்துகளையே நடுகிறேன். வறட்சியான பஞ்ச காலத்தில், தண்ணீரை விலைக்கு வாங்கி, கன்றுகளுக்கு ஊற்றி வளர்க்கிறேன்.

சில நேரங்களில் தனி நபர்களும் பண உதவி செய்வது, ஊக்கமாக இருக்கிறது.கடந்த, 2009ல், என்னுடைய பணியைக் கண்டு, தமிழக வனத்துறை, ஒரு தள்ளுவண்டியை கொடுத்தது; அது, என் பணிக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஆனால், அந்த வண்டியும், தற்போது பழுதடைந்து கிடக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன், என் மனைவி இறந்து விட்டார். தற்போது, தனியாக வாழ்ந்து வரும் எனக்கு, அரசு உதவி செய்தால், இப்பணியை இன்னும் ஊக்கத்தோடு, பல மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த முடியும்.

- தினமலர் - 'சொல்கிறார்கள்' பகுதியிலிருந்து.....

இந்த வார முகப்புத்தக இற்றை:

சைக்கிள் ஓட்ட கஷ்டமா இருக்கேன்னு, பைக்க வாங்கி, பைக்கை விட கார் சௌகரியமா இருக்குமேன்னு கார வாங்கி அதனால தொப்பையை வாங்கி இப்ப அதைக் குறைக்க ஜிம்முக்குப் போனா.....

அங்க ஓடாத சைக்கிள ஓட்டச் சொல்றாங்களே!.....

வாழ்க்கை ஒரு வட்டம்னு சரியாத்தான் சொல்லி இருக்காங்க!

இந்த வார குறுஞ்செய்தி:


When people walk away from you, let them go.  Your destiny is never tied to anyone, who leaves you, and it doesn’t mean they are bad people. It just means that their part in your story is over.

இந்த வார சாலைக்காட்சி:

தில்லியில் நிலவும் கடும் குளிர் [பகலில் 10 டிகிரி இரவில் 2 டிகிரி] காரணமோ என்னமோ தெரியவில்லை குடித்துவிட்டு வருபவர்களை சாலையில் நிறைய பார்க்க முடிகிறது. இன்றைக்கு அலுவலகத்தில் இருந்து நடந்து வந்து கொண்டிருந்தேன்.  தன்னிலை தெரியாது குடித்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தார் ஒருவர்.  பயங்கர தடுமாற்றம் – சில சமயங்களில் நடப்பதாக நினைத்து ஓடினார். ஒரு சிறிய கல்லில் தடுக்கிக்கொள்ள தலைகுப்புற விழுந்து வாயில் அடி – ரத்தம் கொட்ட ஆரம்பித்தது – முழங்கால்களிலும் நல்ல அடி! அவரை ஒருவர் எழுப்பிவிட முயல, குடிமகன் ஏனோ எழுப்பிவிட்டவர் தான் அவர் விழுந்து விடக் காரணம் என்பது போல, உறவுகளை வம்புக்கு இழுத்தார்!! உனக்குப் போய் உதவி செய்தேனே என்று நொந்து கொண்டு, குடிமகனைப் பிடித்திருந்த கைகளை விட, மீண்டும் கீழே விழுந்தவர் விழுந்தவர் தான்! இரவில் குளிர் அதிகமானதும் தானே எழுந்து வீடு சென்று சேருவார் என்று நகர்ந்தார் அந்த மனிதர்.


இந்த வார காணொளி:

தில்லி வந்த புதிது.  நண்பர்களோடு தங்கியிருந்தேன்.  அதில் ஒருவருக்கு மற்றவர்கள் தூங்குவது பிடிக்காது! தூங்குபவர்களை எழுப்பி, ரொம்ப காரியமாக “தூங்கறியா?, முழிச்சிட்டு இருக்கியோன்னு நினைச்சேன்!என்று சொல்வார் – கொலை செய்யும் அளவிற்கு கோபம் வரும்! இங்கே அந்த வேலை தான் நடக்கிறது – ஆனால் கொலை நடக்கவில்லை! பாருங்களேன்!இந்த வாரத்தில் ரசித்த விளம்பரம்:

குறட்டை விடுபவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ, அவர்களால் மற்றவர்களுக்கு உண்டாகும் பிரச்சனைகள்...... இங்கே இந்தப் பெண்ணைப் பாருங்கள் அவரது கணவரின் குறட்டைக்காக என்ன செய்கிறார் என்று!படித்ததில் பிடித்தது:

ஒரு அயல் நாட்டில் ஒரு ரஷ்யன், ஒரு சீனன், ஒரு தமிழன் மூவரும் மது அருந்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்!

அவர்களுக்கு 50 சவுக்கடிகள் தண்டனையாக அளிக்க உத்தரவிடப்பட்டது! ஆனால் அதற்கு முன் அவர்கள் வேண்டிய 'இரண்டு' விருப்பங்களைச் சொன்னால் அவை செய்யப்படும் என சொல்லப்பட்டது!

முதலில் ரஷ்யன்!!

"எனக்கு கொடுத்த 50 சவுக்கடிகளை பாதியாக்க் குறைத்து 25 ஆக கொடுங்கள்!" என்றான்! அவனது முதலாம் விருப்பம் ஒப்புக்கொள்ளப்பட்டது!  இரண்டாவது என்ன? என்று கேட்டனர்! "என் முதுகில் பெரிய தலையணை ஒன்றை கட்டுங்கள்!" என்றான்! அவ்வாறே செய்யப்பட்டது.  பத்து சவுக்கடியில் தலையணை கிழிந்து அவன் பலமான காயத்துக்கு ஆளானான்!

அடுத்து சீனன்!

"எனக்கும் 50 சவுக்கடியில் பாதியாக குறைத்து 25 அடி கொடுங்கள்" என்றான்! ஒப்புக்கொள்ளப்பட்டது!! இரண்டாவது "என் முதுகில் இரண்டு தலையணைகளை கட்டுங்கள்!" என்றான்! அவ்வாறே செய்யப்பட்டது! 15 சவுக்கடிகளில் தலையணைகள் கிழிந்து அவன் முதுகு பிளந்தது!!

அடுத்து தமிழனின் முறை!

அமைதியாக சொன்னான். "எனக்கு 50 சவுக்கடியை 75 ஆக உயர்த்துங்கள்!" என்றான். அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தனர்! ஒப்புக்கொள்ளப்பட்டது. இரண்டாவது என்ன? என்று கேட்கப்பட்டது!! சொன்னான்....

"எனக்கு தண்டனை கொடுத்த நீதிபதியை என் முதுகில் தூக்கி கட்டுங்கள் என்றான்!!!


மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

40 comments:

 1. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. Nalla sevai manappanmai indha vayadhilum. HATS OFF . Kurattai ad. Yenakkum pidiththa vondru.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 3. கருப்பையா போற்றப்ட வேண்டியவர்
  போற்றுவோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 4. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 5. இந்த வார பழக்கலவையும் அருமை. இரண்டு காணொளிகளையும் இரசித்தேன்! பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 6. அனைத்தும் அருமை...

  தமிழனின் முறை ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. எப்போதும்போல இப்போதும் சிறப்பான தகவல்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணாதாசன்.

   Delete
 8. ஃப்ரூட் சாலட் அருமை. அதுவும் அந்த தமிழனின் செயல் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 9. வணக்கம் சகோதரரே!

  எப்போதும் போல் இந்த வார ஃப்ரூட் சால்ட் நன்றாக சுவையுடன் இருந்தது.

  இத்தனை வயதிலும் தளராது இயற்கையை நேசிப்பவரை நாம் போற்றி வணங்குவோம்.

  முகப் புத்தக இற்றை வாழ்க்கை ஒரு சுழற்சிதான் என்பதை நிரூபித்தது.

  சாலைக் காட்சி பாவமாகத்தான் இருந்தது .தன் உதவிக்கு வந்தவரை புரிந்து கொள்ள இயலாத சுய நினைவு இல்லாதவரை என்ன செயவது? கடவுள்தான் காக்க வேண்டும்.!

  காணொளி அருமை.! "உறக்கத்தின் வசம் இருப்பவர்களை எழுப்பினால் யாருக்குத்தான் கோபம் வராது.? " என்று நியாயம் கேட்டது பூனையின் கண்கள்..

  தமிழனின் புத்திசாலித்தனம் ரசிக்கும்படியாக இருந்தது..

  அனைத்தும் அருமை! பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 11. புரூட் சாலட் அருமை...
  குறட்டை விளம்பரம் கலக்கல்..
  நகைச்சுவை முன்பே வாசித்திருந்தாலும் தமிழனின் சமயோகிதம் அருமை...
  மொத்தத்தில் சூப்பர் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 12. மரம் நடும் பெரியவரின் செயல் பாராட்டுக்குரியது! அனைத்தும் சிறப்பு! ஜோக் வேறுவடிவில் படித்து ரசித்து இருக்கிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 13. ஃப்ரூட் சாலட் நல்ல சுவை. கருப்பையா வாழ்க! நாம் எல்லோருமே சில தருணங்களிலாவது கருப்பையாவாக மாறினால் நன்றாக இருக்கும் தான்....

  முகப்புத்தக இற்றை யதார்த்தம் உரைக்கும் உண்மை.

  குறுஞ்செய்தி மிகவும் மிகவும் அருமை!!! ஆனால் பின்பற்றுவது என்பது மிக மிகக் கடினம்..

  காணொளி, விளம்பரம் மிகவும் ரசித்தோம். தமிழர்...ஹஹஹஹஹஹ்ஹ்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 15. Sir, you write with an easy aplomb!keep rocking!vishwanath

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஸ்வா. தங்களது முதல் வருகை மகிழ்ச்சி அளித்தது....

   Delete
 16. அருமை...புறாவும் , பூனையும் சூப்பர்... குறட்டை பாவம்.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 17. எல்லமே அருமை நண்பரே.... வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 18. பெரியவர் கருப்பையாவின் பணி போற்றத்தக்கது. இன்றைய பதிவில் மனதினை அதிகம் தொட்டது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 19. Replies
  1. தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி மது.

   Delete
 20. சோபா விற்கிற விளம்பரமா அது... ஹ ஹ

  ReplyDelete
  Replies
  1. உபயோகித்த பொருட்களான விளம்பரம் அது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....