எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, January 30, 2015

ஃப்ரூட் சாலட் – 123 – எல்லா இரவுகளும் விடியும் – கண்ணீர் - பரதம்


இந்த வார செய்தி:

எல்லா இரவுகளும் விடியும்!

தற்கொலைகளைத் தடுத்து நிறுத்தியதால், 'டிசைன் பார் சேஞ்ச்' என்ற சர்வதேச அமைப்பின் விருது பெற்ற ஆங்கில ஆசிரியர் ஆனந்த்:

"திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள காளாச்சேரி மேற்கு கிராமத்தில் உள்ள பள்ளிக்கு, நான் ஆசிரியராக வந்தபோது, இந்த ஊர் குறித்து எந்த விஷயமும் தெரியாது. ரேங்க் கார்டில் கையெழுத்து போட, அப்பா, அம்மாவை அழைத்து வரச் சொன்ன போது, பல பிள்ளைகள் கண் கலங்கி அழுதனர்.

யாரைக் கேட்டாலும், அப்பா இல்லை அல்லது அம்மா இல்லை என, கூறினர்; அப்பா, அம்மா இருவரும் இல்லாதவர்களும் இருந்தனர். இதுகுறித்து விசாரித்தபோது, அனைவரும் தற்கொலை செய்து இறந்தது தெரிந்தது.

இனிமேல் இது தொடரக் கூடாதுன்னு முடிவு செய்து, அதற்கான முயற்சிகளில் இறங்கினேன்.ஆண்டு விழாவே கொண்டாடாமல் இருந்த இந்தப் பள்ளியில், 2013 ஜனவரியில், ஒட்டுமொத்தக் கிராமத்தையும் ஒன்று திரட்டி, உருக்கமான குடும்ப டிராமாவை, ஆண்டு விழாவில் அரங்கேற்றினோம்.

அப்பா - அம்மாவை இழந்த பையன், படிக்க வழி இல்லாமல் தெருத் தெருவாகப் பிச்சை எடுத்துப் பிழைப்பது தான் கதை. நாடகம் பார்த்த கிராம மக்கள் கதி கலங்கிப் போயினர். ஒரு அம்மா, நாடகம் நடந்து கொண்டு இருக்கும் போதே கதறி அழ ஆரம்பித்து விட்டார்; மூன்று குழந்தைகளின் தாயான அவர், தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டவர்.

மக்களின் மனமாற்றத்துக் கான துவக்கம், அந்த நாடகத்தில் இருந்தே ஆரம்பித்தது. ஊரில் இருந்த, 'டைமண்ட் பாய்ஸ்' இளைஞர் நற்பணி இயக்கத்திடம் பேசி, அவர்கள் மூலமாக என் மாணவர்களை, தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு கொண்டவர்களாக மாற்றினோம். மாணவர்களுக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் வேஷம் போட்டு, 'எந்த மதமும் தற்கொலையை நியாயப்படுத்தலை'ன்னு எடுத்து கூறினோம்.

அத்துடன், மக்களின் மனம், பிரச்னைகள் பக்கம் திரும்பாமல் இருக்க, பிளாஸ்டிக் ஒயர்களால் பூ ஜாடிகள் செய்யக் கற்று கொடுத்தோம். 'நாம நல்ல பூ ஜாடி பண்றோம்' என்ற பெருமிதமும், அதற்கு கிடைக்கும் வருமானமும் அவர்களை மாற்றியது. இந்த உலகத்தில் எல்லாருக்கும் பிரச்னை இருக்கு. அதுக்கு, அன்பு தான் மருந்து; ஒருத்தருக்கொருத்தர் அன்பா, ஆதரவா, அக்கறையா இருக்கணும்ன்னு கற்றுக் கொடுத்தோம்.

ஊருக்குள் சிரித்த முகங்கள் தெரிய ஆரம்பித்தன.

மாணவர்கள் மூலமாக சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதற்கான விருது இது. என் சிறு வயதில், என் அப்பா, அம்மா இறந்து விட்டனர். ஆதரிக்க பெற்றோர் இல்லாமல், தனியாக ஒரு குழந்தை வளர்ந்து ஆளாவது எவ்வளவு சவாலான விஷயம்ன்னு தெரியும். இப்போது, இந்த ஊர் மாறி இருக்கிறது. எல்லா இரவும் விடியும் என்பது, எங்கள் நம்பிக்கை; அதற்கு இந்த கிராம மக்களும் கியாரண்டி.

-    சொல்கிறார்கள் பகுதி, தினமலர்.

எத்தனை நல்ல விஷயம்நமது உயிரை மாய்த்துக் கொள்ள நமக்கு உரிமை இல்லை என்பதை புரிந்து கொண்டால் நிச்சயம் தற்கொலை முடிவுக்கு வர மாட்டார்கள். அவர்களை நல்வழிப்படுத்தும் இந்த ஆசிரியருக்கு இந்த வாரப் பூங்கொத்து.

இந்த வார முகப்புத்தக இற்றை:இந்த வார குறுஞ்செய்தி:

கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்…. ஏனென்றால் கண்கள் உலகத்தைக் காட்டும்….  கண்ணீர் உள்ளத்தைக் காட்டும்!

ரசித்த பாடல்:

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பார்க்கிறேஎனும் பாடல் இந்த வார ரசித்த பாடலாக. பாடல் இடம் பெற்ற படம்ராமன் அப்துல்லா. நடிகர்கள்விக்னேஷ், ஈஸ்வரி ராவ்இசைஇளையராஜா. பாடகர்கள்அருண்மொழி, பவதாரிணி. பாடல் வரிகள்வாலி. படம் வெளி வந்த வருடம் – 1997.ராஜா காது கழுதை காது:

திருவரங்கம் இரயில் நிலையம்சென்னை செல்லும் நோக்கத்தோடு பல்லவனுக்காக காத்திருந்தேன். நடைமேடை முழுவதும் சலசலப்புபெரும்பாலான பயணிகள் திருவரங்கத்திலிருந்து தான் இந்த இரயிலில் பயணிக்கிறார்களோ என்று ஒரு சம்சயம்

எதிரிலிருந்து ஒரு மூத்த கணவன்மனைவிமனைவி கணவனை நோக்கி சொன்னது:  ”ஊருக்குப் போகணும் ஊருக்குப் போகணும்னு சொல்லி அப்பப்ப இப்படி கிளம்பிட வேண்டியதுஆனா ஒரு வேலையும் செய்யறது கிடையாது. எல்லாத்தையும் நானே செய்ய வேண்டியிருக்குஇனிமே ஊருக்குப் போகணும்னு சொல்லிப் பாருங்க. அப்ப தெரியும் சேதி!

அதற்கு கணவனின் பதில்:  “சரி சரி….  எல்லாம் வீட்டில பேசிக்கலாம்!”

இந்த வார புகைப்படம்:

சென்ற வாரத்தில் ஓர் நாள் மகளின் பள்ளியில் ஆண்டு விழாஅப்போது சில கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்திருந்தார்கள்அங்கே பரதம் ஆடிய ஒரு பெண்ணின் புகைப்படம் இங்கே இந்த வார புகைப்படமாக!  [ஏற்கனவே முகப்புத்தகத்தில் பகிர்ந்து இருந்தாலும் இங்கே மீண்டும்முகப்புத்தகத்தில் என்னைத் தொடராத வலையுலக நட்புகளுக்காக!]படித்ததில் பிடித்தது:

இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் ஒரு முறை கிராமங்களை சுற்றிப் பார்க்க குதிரையில் கிளம்பிச் சென்றார்.அப்போது வயலில் ஒரே ஒரு பெண் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார்.

மன்னர் அவரிடம்,''மற்றவர்கள் எல்லாம் எங்கே?''என்று கேட்க, விசாரிப்பது மன்னர் என்பதை அறியாத அந்த பெண், ''அவர்கள் எல்லாம் மன்னரைப் பார்க்கப் போயிருக்கிறார்கள்,'' என்று சொன்னார்.

''அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் போகவில்லை?'' என்று மன்னர் கேட்டார்.

அதற்கு அந்தப்பெண், ''மன்னரைப் பார்ப்பதற்காக ஒருநாள் கூலியை இழக்கும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை. எனக்கு ஐந்து குழந்தைகள். அவர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. அதனால்தான் போகவில்லை,'' என்றார்.

மன்னர் அவரது கையில் சில நூறு பவுண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு, ''உங்களது நண்பர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் எல்லாம் மன்னரைப் பார்க்க சென்றீர்கள். ஆனால் மன்னரோ என்னைப் பார்க்க வந்தார் என்று..'' என கூறிவிட்டு சென்றார்.

எதையும் தேடி செல்லாதே தகுதி இருந்தால் எல்லாம் உன்னை தேடி வரும் !!!!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து….


52 comments:

 1. இவ்வார ப்ரூட் சாலட் அனைத்தையும் ருசித்தேன். இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் தொடர்பான பதிவினை மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 2. ஆசிரியர் ஆனந்த்! க்ரேட்!
  தற்கொலை முடிவு என்பது ஒரு சோகம்தான்:(

  ReplyDelete
 3. ஆனந்த் போன்ற பலர் நமக்கு இன்னும் தேவை....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

  ReplyDelete
 4. ஆசிரியரை வாழ்த்துவோம்....
  எதையும் தேடிப் போக வேண்டாம் என்ற கருத்தோடு சொன்ன மன்னர் கதை அருமை.
  அந்தக் குழந்தையின் போட்டோ முகநூலில் பார்த்தேன்.
  அனைத்தும் அருமை அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 5. அருமை.. அனைத்தும் அருமை..
  காலைப் பொழுதில் மனம் நிறைவான பதிவு..
  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 6. இந்த அருமையான நல்லாசிரியருக்கு நானும் ஒரு பூங்கொத்தைப் ப‌ரிசளிக்கிறேன்! குறுஞ்செய்தியும் அருமை! நடனமாடும் சிறுமி அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 7. தங்களின் ப்ரூட் சாலட் அனைத்தும் அருமையாக இருந்தது. ருசித்தேன். இல்ல இல்ல ரசித்தேன். தொடர்ந்து சாலட் செய்யுங்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலசந்திரன் ஜி!

   Delete
 8. ராஜா காது கேக்காது :)

  நடனப் புகைப்படம் அட்டகாசம்

  ரொம்ப நல்ல மன்னர் :)

  தற்கொலைகளைத் தடுத்த ஆசிரியர் வாழ்க :) ஒரு பொழுதுபோக்குக் கலை எந்த வயதிலும் அவசியம்தான். ப்லாக் எழுத ஆரம்பித்து நான் வெறுமையிலிருந்து விடுபெற்றேன். :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ தேனம்மை லக்ஷ்மணன்.

   Delete

 9. இந்த வார பழக்கலவையில் ஆசிரியர் ஆனந்த் அவர்களின் சேவை பற்றிய தகவலையும், பரத (பறந்த) நாட்டிய ஆடிய குழந்தையின் புகைப்படத்தையும் பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 10. ஆசிரியர் ஆனந்தின் பணி மிகப் பெரிது... அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 11. Padiththadhil pidiththadhu yenakkum migavum pidiththadhu

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 12. படித்ததில் பிடித்ததின் சாராம்சம் நன்று. தற்கொலைகளெல்லாம் திட்டமிட்டு செய்யப்படுவதில்லை என்றே நினைக்றேன். எல்லாமே ஒரு க்ஷண நேர முடிவுதான்.விழிப்புணர்வு கொண்டு வந்த ஆனந்துக்கு ஒரு பூச்செண்டு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 13. சர்வதேச விருது சரியானவருக்கே வழங்கப் பட்டுள்ளது ! ஆசிரியர் ஆனந்த்துக்கு வாழ்த்துக்கள் !
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 14. படித்ததில் பிடித்தது அழகான கருத்து ஃப்ரூட் சாலடின் செர்ரி.

  தற்கொலை என்பது ஃப்ராக்ஷன் ஆஃப் அ செசண்ட் க்குள் மூளையில் ஏற்படும் ஒரு மாற்றத்தினால் நிகழும் ஒன்று. ஒரு எமோஷனல் முடிவு. னீங்கள் சொல்லியிருப்பது போல் நம் உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமை நமக்கு இல்லை. ஆனந்த் ஆங்கில ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! இவரது விழிப்புணர்வு மாணவ சமுதாயத்திலும் பரவினால் நன்றாக இருக்கும். தற்கொலைகளை முறியடிக்கும்....

  முதப்புத்தக இற்றை அருமை....

  குறுஞ்செய்தி அருமை! ஒருவேளை அந்தக் கண்ணீர் பொய் கண்ணீர்/ நீலிக் கண்ணீர் எனபார்களே அப்படின்னா........ சும்மா , சும்மாதான்.....

  ஹப்பா அந்தக் குட்டிப் பெண் எப்படி இப்படித் துள்ளி நடனம் ஆடுகிறாள்! அருமை! நீங்கள் மிகவும் அருமையாகப் படம் பிடித்துள்ளீர்கள்! அம்மா 8 அடி !!!!?

  ReplyDelete
  Replies
  1. நீலிக்கண்ணீராக இருந்தால்.... :) நல்ல கேள்வி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 15. அட்டகாசமான போட்டோ அண்ணா!!! பாடல் என் பேவரிட்:) கதையும், இற்றையும் சூப்பர்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 16. சமூகத்தின் மனநிலையை மாற்றிய ஆசிரியர் ஆனந்த் வாழ்க!
  கடைசியில் சொல்லியிருக்கும் கதை ரொம்பவும் பிடித்திருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 17. ஃப்ரூட் சாலட் ருசிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ சாந்தி மாரியப்பன்.

   Delete
 18. அழகான பாடல் என் வீட்டு ஜன்னல் எட்டி பகிர்வு அருமை அண்ணாச்சி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   Delete
 19. ஆசிரியர் ஆனந்த அவர்களைப் பாராட்டுவோம்
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 20. ஆனந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  புகைப்படம் அருமை...

  படித்ததில் பிடித்தது உண்மை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 21. ப்ரூட் சாலட் அருமையான கலவை நண்பரே...
  தமிழ் மணம் சிகரத்தை 8ம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 22. இணைத்துக்கொண்டேன் முன்னூற்றி முப்பத்தி 8

  ReplyDelete
  Replies
  1. முன்னூற்றி முப்பத்தி 8-ஆம் தொடர்பவராக இணைத்துக் கொண்டமைக்கு நன்றி கில்லர்ஜி!

   Delete
 23. ஆசிரியர் ஆனந்த் அவர்களின் சாதனை வியக்கவைக்கிறது. நாமுண்டு நம் வேலையுண்டு என்று சுயநலமாக சிந்திக்காமல் ஒரு ஊரின் ஒட்டுமொத்த மனநிலையையே மாற்றுவதென்பது பெரும் சாதனை. அதை சத்தமில்லாமல் சாதித்த அவருக்கு இனிய பாராட்டுகள். பரதமாடும் பெண்ணை அந்தரத்தில் அப்படியே படம்பிடித்த அழகுக்குப் பாராட்டுகள் வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் ஆனந்த் செய்தது நிச்சயம் ஒரு சாதனை தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 24. படித்தேன், அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 25. கடைசியில் சொல்லியிருக்கும் கதை ரொம்பவும் பிடித்திருந்தது.!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி V. Mayley ஜி!

   Delete
 26. படித்ததில் பிடித்தது மிகவும் பிடித்தது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 27. இந்த உலகத்தில் எல்லாருக்கும் பிரச்னை இருக்கு. அதுக்கு, அன்பு தான் மருந்து; ஒருத்தருக்கொருத்தர் அன்பா, ஆதரவா, அக்கறையா இருக்கணும்ன்னு கற்றுக் கொடுத்தோம்.//
  அருமையான சேவை. அன்பான மலர்கொத்து

  எதையும் தேடி செல்லாதே தகுதி இருந்தால் எல்லாம் உன்னை தேடி வரும் .//
  அருமை.
  அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....