எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, April 17, 2018

கதம்பம் – முந்திரிப் பழம் – பர்ஸ் – அச்சம் தவிர் - நடிகர் மாதவன்


முந்திரிப் பழம்கடைத்தெருப் பக்கம் செல்லும் வேலை இருந்தது. அங்கே ஒருவர் கூறு கட்டி வைத்து விற்றுக் கொண்டிருந்தார். பத்து ரூபாய் கூறு.
 
நான் இதுவரை சுவைத்ததேயில்லை. வாங்கிய பழங்களில் ஒன்றை வீட்டுக்கு வந்தவுடன் சுவைத்தேன். சாறு மிகுந்ததாகவும், சுவைத்தால் சவ்வு போலவும் இருந்தது. உங்களுக்கும் பிடிக்குமா?

பர்ஸ்!உள்ளுக்குள்ளே இருக்கோ இல்லையோ, வெளியேவாது இருக்கட்டுமே! :) என்ன ஒரு ஐடியா!

தில்லி நினைவுகள்:

கடைத்தெருவில் வேகமாய் நடந்து கொண்டிருந்த போது, புவனா!! செளக்கியமா!! என்று ஒரு குரல்.

குரல் வந்த பக்கம் திரும்பிப் பார்த்தால், அவர் என்னுடனேயே சேர்ந்தும் வருகிறார். நின்று முகத்தைப் பார்த்து சில நொடி யோசனைக்குப் பின்.

”ஓ! நீங்களா!! பார்த்து ஆறு வருடம் இருக்குமா! வீட்டில் எல்லோரும் செளக்கியமா?? டெல்லி எப்படி இருக்கு??” என்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

என் கணவரின் அலுவலக நண்பர், எங்கள் பகுதிக்குப் பக்கத்துப் பகுதியில் இருந்தார். பின்பு அரசுக் குடியிருப்பில் ஒரே பகுதியில்.

முன்பு என் ப்ரொஃபைல் போட்டோவாக என் மகளின் ஓவியம் இருந்தது. அதை வரைந்தது இந்த நண்பரின் மகள் தான். பத்தே நிமிடத்தில் வரைந்து விட்டாள். இப்போது மருத்துவம் படிக்கிறாளாம். நண்பரின் மனைவி புல்லட் ஓட்டுவார்.

இப்படியாக டெல்லி நினைவுகளை அசைபோட்ட படியே வீடு வந்து சேர்ந்தேன்.

அச்சம் தவிர்!

மகளின் பள்ளியில் சென்ற வாரத்தில் ஒருநாள் சூரியன் எஃப்.எம்மிலிருந்து வந்து எல்லா வகுப்புகளுக்கும் ஒரு கூட்டம் நடத்தியதாக தெரிவித்தாள்.

சென்ற வருடமும் இப்படி நடத்தினார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைக்கு எதிரான ஒரு சமுதாய விழிப்புணர்வு கூட்டம் அது.. தவறான தொடுதல் குறித்த தெளிவும் அப்போது அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஒரு கார்டூன் குறும்படம் மூலம் விளக்கியுள்ளனர்.

சென்ற வருடத்தைப் போல் இந்த வருடமும் பள்ளிக்கு வந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்த வருடம் ஆண் குழந்தைகளுக்கும் சேர்த்து விளக்கம்.

பொதுவாக இந்த நிகழ்ச்சியின் மூலம் என்னத் தெரிந்து கொண்டார்கள் என்ற கேள்விக்கு, மகள் கையைத் தூக்கி,

"அம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் செய்யும் எந்த செயலும் சரியானதல்ல" என்று சொல்லி பாராட்டுப் பெற்றாளாம்.

நிஜ ஹீரோ இருக்கும்போது….:

இன்று பள்ளியிலிருந்து வந்த மகள், தன் தோழிகளுடன் பேசிய விஷயங்களைச் சொல்லிக் கொண்டே வந்தாள். அதில் அவரவர்கள் சந்தித்த நடிகர் நடிகயரைப் பற்றி சொன்னார்களாம். அதில் மகள் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு ஷூட்டிங்கில் நயந்தாராவைப் பார்த்ததைப் பற்றிச் சொன்னாளாம்.

அடுத்து என்னிடம் கேட்டாள், நான் திருமணமான அடுத்த நாள் அப்பாவுடன் வெளியே சென்ற போது, "ரன்" பட ஷூட்டிங் ஸ்ரீரங்கத்தில் நடந்தது. அதில் மாதவனை கிராஸ் பண்ணிப் போனேன் என்றேன்.

ஏம்மா! ஒரு ஆட்டோகிராஃப் வாங்கத் தோணலையா?? நின்னு ஷூட்டிங் பார்க்கலையா?? என்று வரிசையாக கேட்டாள். என்ன சொல்லியிருப்பேன்னு நினைக்கறீங்க???

"அப்பா பக்கத்துல இருக்கும் போது மாதவன்லாம் பெரிசா படலை..:))) என்றேன்" என்ன சரி தானே...:)))

அதுக்கு ஏன் முறைக்கிறா!!!!!

இந்த வருட வடாம் கச்சேரி!இந்த வருடம் போட்ட வத்தல்/ வடாம்கள்!!!
எடுத்துக்கோங்க ப்ரெண்ட்ஸ்!!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்

58 comments:

 1. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கீதா ஜி..

   Delete
 2. அட! கொல்லாம்பழம்!! (முந்திரிப்பழம் தான்..அடியில் முந்திரி இருக்கும் அழகாக இருக்கும்..) நாகர்கோவிலில் கொல்லாம்பழம் நிறைய நிறைய உண்டு. நாகர்கோவிலில் நான் படித்த கல்லூரியில் முந்திரித்தோப்பே கொல்லாமபழ மரம் காடாக இருக்கும் அங்குதான் நாங்கள் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவது...ட்ராமாவுக்கு ரிகர்சல் பார்ப்பது என்று...நண்பர் துளசியின் ஒரு தோட்டத்தில் கொல்லாம்பழ தோட்டமாக இருக்கும். நிறைய அப்படியே விழும் அதைப் பொறுக்கித் தின்றதுண்டு. சில சமயம் அதன் திரவம் வாயில் பட்டால் தொண்டையில் அறுப்பது போல சிறியதாக இருக்கும் ஆனால் பொதுவாக நல்ல ஜூஸியாக மெத்து மெத்தென்று இருக்கும்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா ஜி..ஜூஸியாகத் தான் இருந்தது..

   Delete
 3. அச்சம் தவிர்: மகளின் பதில் செம!!! வாழ்த்துகள்! சமர்த்துக் குட்டி. குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள் பாராட்டுகளைச் சொல்லிடுங்க!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் எங்களுக்கும் பெருமையாக இருந்தது..உங்கள் வாழ்த்துகளையும் அவளே வாசித்து தெரிந்து கொண்டாள்..

   Delete
 4. குட்மார்னிங் வெங்கட்.

  தஞ்சையில் இருந்தபோது முந்திரிப்பழங்கள் எங்களுக்கு தண்ணிபட்டபாடு!!! சுற்றிலும் முந்திரிக்காடுகளுக்கு நடுவில்தான் குடியிருந்தோம். இப்போதும் அப்படித்தான் தண்ணி பட்ட பாடு.. (அப்போ தண்ணீருக்குள் கஷ்டமில்லை. இப்போ?!!) அதைச் சாப்பிட்டால் தொண்டை எப்படிக் கட்டிக்கொள்ளுமோ, அப்படி இரண்டு நாட்களாய் எனக்கு மு.ப சாப்பிடாமலேயே கட்டிக்கொண்டிருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. தொண்டை கர கரவென்று தான் இருந்தது..:) நன்றி சார்..

   Delete
 5. "அப்பா பக்கத்துல இருக்கும் போது மாதவன்லாம் பெரிசா படலை..:))) என்றேன்" என்ன சரி தானே...:)))//

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா !! வெங்கட்ஜி எங்க இருக்கீங்க!! என்ன ரிமார்க் அப்பா ஆதி செம போங்க...!!! உங்க பொண்ணு முறைச்சது நினைத்தும் சிரித்தேன்.....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வெங்கட்ஜி அப்படியே ஃப்ளாட் ஆகியிருப்பார்...ஹா ஹா ஹா ஹா

   கீதா

   Delete
  2. ஒரு ரியாக்‌ஷனையும் காணோமே...:)))

   Delete
  3. வெங்கட் ஜி அப்படியே ஃப்ளாட் ஆகியிருப்பார் - ஹாஹாஹா... நல்ல கற்பனை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 6. வடாம் கச்சேரி களை கட்டியிருக்கே சூப்பர்!!

  கீதா

  ReplyDelete
 7. மொய்க்கவரில் ரூபாய் நோட்டின் படம் அச்சடித்துக் கொடுஒன்பது போல பர்ஸிலும் இப்படித் தருகிறார்களா!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார்..பத்து ரூபாய்..

   Delete
 8. சூரியன் எஃப் எம்மின் சேவையைப் பாராட்டலாம். நல்லதொரு செயல். ஆன் குழந்தைகளை சிறுவயதிலிருந்தே பெண்களை மதிக்கக் கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்..கட்டாயமாக பழக்கப்படுத்தினால் வன்மங்கள் தோன்றாது..

   Delete
 9. மணிரத்னம் வெங்கட்டைப் பார்க்காமல் விட்டு விட்டாரே... பார்த்திருந்தால் மாதவனுக்கு சான்ஸ் கொடுத்திருப்பாரா...!

  ReplyDelete
  Replies
  1. சான்ஸ் கொடுத்திருக்கவே மாட்டார்..:))

   Delete
 10. முந்திரிப் பழம் தொண்டையை ஏதோ செய்யும் என்பதாலே தின்பதில் ஆர்வம் இருந்ததில்லை. இப்போ ஆதி எழுதி இருப்பதைப் பார்த்தால் ஆசை வருது. முகநூலிலும் படித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நானும் இவர் நெய்வேலிக் கதைகளில் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் முதன்முதலாக அன்று தான் சாப்பிட்டேன் மாமி..நல்ல ஜூஸி.. ப்ரிட்ஜில் வைத்திருந்ததில் முழுவதும் மணம்..

   Delete
 11. தெ.ஆ மாவட்ட முந்திரிக் காடுகளில் கூடை நிறையப் பழம் இலவசமாகக் கொண்டு செல்ல பழம் விற்கும் பாட்டிகளை அனுமதிப்பார்கள் அந்த நாட்களில். முந். கொட்டையைப் பிரித்து கீழே போட்டுச் செல்ல வேண்டும். ஒரு ஆறு பைசாவுக்கு 3 | 4 பழம் கிடைக்கும். அதன் காறலை மீறிய இனிப்பு விசேஷம்.இபபோது மு.ப பிராந்தி லாபம் தருகிறது!! கர்மம்.

  பெண்களுக்கு நடக்கும் அக்கிரமம் களைய என்ன யார் முயன்றாலும் வாழ்த்த வேண்டும்.

  இன்றைய மாதவன் நான் வியக்கும் அறிவுஜீவி. See him in T.E.D talk.

  ReplyDelete
  Replies
  1. கருத்துகளுக்கு மிக்க நன்றி சார்..

   Delete
 12. தங்களது மகளின் பதில் (கருத்து) ஸூப்பர் வாழ்த்துகள் சகோ

  ReplyDelete
 13. வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. இத் திரட்டியில் உங்கள் இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், அத் திரட்டி வளர்ச்சியுற உங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்.

  நன்றி..
  தமிழ்US

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி. இணைக்க முயல்கிறேன்.

   Delete
 14. கதம்பம் அருமை.

  எங்கள் தோட்டம் ஒன்றில் கொல்லாம்பழ மரங்கள் உண்டு. பழங்கள் நிறைய கிடைக்கும்.

  வற்றல் வடாம் அழகாக இருக்கு.

  அச்சம் தவிர் ப்ரோக்ராமில் உங்கள் மகளின் பதிலை ரசித்தேன்.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. கருத்துரைக்கு நன்றி சார்..

   Delete
 15. சிறுவயதில் முந்திரிப்பழம் தின்னதுண்டு ஒரு வித துவர்ப்பு சுவை இருக்கும் தமிழில் நாம் திராட்சை என்பதை மலையாளத்தில் முந்திரி என்பார்கள்

  ReplyDelete
  Replies
  1. புதிய தகவல்.. நன்றி சார்..

   Delete
  2. திராட்சைப்பழம் என்பது கிரேப்ஸ் பழத்தினை தானே.. முந்திரியம் பழம் என்பது இதே பதிவில் இருக்கும் பழம் தானே.. முந்திரியில் தான் பாயசங்கள் அல்வாக்களுக்கு சேர்த்தும் கஜூ என்ப்ப்படும் முந்திரியம் விதை கிடைக்கும். திராட்சை என்பதும், முந்திரி வற்றல் அல்லது பிளம்ஸ் என்பது வெவ்வேறு அல்லவா..?

   Delete
  3. திராட்சை - க்ரேப்ஸ் தான்.... ஃப்ளம்ஸ் வேறு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா ஜி!

   Delete
 16. //தமிழில் நாம் திராட்சை என்பதை மலையாளத்தில் முந்திரி என்பார்கள்.// திராக்ஷை என்பதை நாங்க கிஸ்மிஸ் (காய்ந்த திராக்ஷை) பழத்துக்குத் தான் சொல்வோம். மற்றப்படி திராக்ஷைக் கொடியில் பழுக்கும் திராக்ஷைப் பழங்களைக் கொடி முந்திரிப் பழம் என்றே பல்லாண்டுகள் சொல்லிக் கொண்டிருந்தேன். பின்னால் அங்கே இங்கே மாறினதில் பச்சை திராக்ஷை, கறுப்புத் திராக்ஷை, காய்ந்த திராக்ஷை எனச் சொல்லப் பழகி விட்டது!

  ReplyDelete
  Replies
  1. தகவல்களுக்கு நன்றி மாமி..

   Delete
  2. திராட்சைப்பழம் என்பது கிரேப்ஸ் எனும் பழம் தானே... முந்திரிகை வற்றம் என்பது கிஸ்மிஸ் காயந்த திராட்சை வற்றல் என சொல்வதுண்டு.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. உலர் திராட்சை - கிஸ்மிஸ்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
  5. ஹாஹா... இணையத்தில் இல்லாதது எது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 17. பர்ஸ். அதிகம் ரசித்தேன். பெரும்பாலான மொய் கவர்கள் இப்போது இவ்வாறு கிடைக்கின்றன.

  ReplyDelete
 18. சொன்னாலும் சொல்லலைன்னாலும் நீங்க மாதவன் சாயல்தான். என்ன மாதவன் உங்களைவிட குள்ளமா இருப்பார்ன்னு நினைக்குறேன்.

  எனக்கும் முந்திரிப்பழம் பிடிக்காது. ஆனா முந்திரி பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. நாத்தனாரே உங்க அண்ணனை கலாய்க்கலை...:)) நிஜமாத் தான் சொன்னேன்..:))

   Delete
 19. முகநூலில் படித்தேன் அனைத்தையும்.

  //"அம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் செய்யும் எந்த செயலும் சரியானதல்ல" என்று சொல்லி பாராட்டுப் பெற்றாளாம்.//
  நல்ல பதில் ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 20. நானும் முக நூலில் படித்தேன் ஆதி. மனம் நிறை பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 21. முந்திரிப் பழம் இப்போதான் ரெண்டு நாள் முன்னால், திருவள்ளூர் இரயில் நிலையத்தில் பார்த்தேன். வாங்க மறந்துவிட்டது. இதுவரை சாப்பிட்டதில்லை ஆனால் வாசனை ஆளைத் தூக்கும்.

  வெறும் வடாம் பொரித்த படங்களையே போடுறீங்களே. எதுக்குத் தொட்டுண்டீங்க என்று தெரியலை. ஒருவேளை தில்லியை வெறுப்பேத்துறீங்களோ? ஹா ஹா ஹா. (அதுக்காகத்தான் மாதவன் கதையை இழுத்துட்டீங்களோ?)

  ReplyDelete
  Replies
  1. தில்லியை வெறுப்பேத்துறீங்களோ? ஹாஹா... நல்ல கேள்வி! பதில் நீங்களே சொல்லிட்டீங்க போல! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 22. வணக்கம் சகோதரி

  கதம்பம் அருமை. முந்திரி பழம் பார்த்திருக்கிறேன் இதுவரை சாப்பிட்டதில்லை. அந்த மாதிரி பர்ஸ்கள் இங்கு கடைகளில் உள்ளது.மிகவும் அழகாக இருக்கிறதல்லவா.. ரசித்ததோடு சரி.. வாங்கவில்லை. பள்ளியில் தங்கள் பெண் சாதுரியமாக பேசி பாராட்டு பெற்றதற்கு வாழ்த்துக்கள். வற்றல் வடாம் பார்க்க மிகவும் அழகாக இருந்தன அதை எங்களுக்கும் பகிர்ந்தளித்தமைக்கு மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 23. முந்திரியம் பழம் சும்மா வெட்டி சாப்பிடக்கூடாது.கழுவி சின்னதுண்டங்களாக வெட்டி உப்பும், புளியும் சேர்த்த நீரில் ஊற வைத்து எடுது சாப்பிட வேண்டும். முந்திரியும் கஜுவும் எங்கள் பக்கம் விசேசம். முந்திரியம் பழ கசறு ஆடைகளில் ஒட்டினால் இலகுவில் போகாது. அதை உண்ணும் விதத்திலுண்டால் மிகச்சுவையான் பழம். படத்ஹ்ல் இருப்பது போல் நன்கு கனிந்த பழம் எனில் உப்புப்புளி நீரில் ஊறி சாப்பிட சூப்பராக இருக்கும். எனக்கு மிகவும் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. நாங்கள் அப்படியே சாப்பிட்டு இருக்கிறோம் சிறு வயதில். சாப்பிட்ட உடன் தண்ணீர் அருந்தக் கூடாது அவ்வளவு தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 24. படத்திலிருக்கும் பழத்தின் கீழ் பக்கம் தான் முந்திரியம் கொட்டை தொங்கும் அதை உடைத்து விதை எடுப்பார்கள். உடைக்கும் போது பால் போன்ற திரவம் கண்களில் உடலில் படக்கூடாது. முந்திரியம் கொட்டையினை அப்படியே விறகடுப்பில் நெருப்புத்துண்டங்களுக்கிடையில் இட்டு பொசுக்க்கி உடைத்து சாப்பிடுவது அருமையான் சுவை. விதைகளை சற்று வறுத்து சும்மாவே சாப்பிடலாம். பழங்கள் உப்பும், புளிப்புமான் நீரில் ஊறினால் தொண்டை நம நமக்காது. இந்த பழம் துவர்ப்பு சுவை கொண்டது.


  https://www.google.ch/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwj3wq3xmsLaAhWH6xQKHf82C7oQ_AUICigB&biw=1680&bih=919

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 25. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....