"தம்பி...!
ஓடாதே. நில்லு!" ஜீப்பில் கட்டியிருந்த ஒலிபெருக்கி வழியாக இப்படி கத்தியது
வேறு யாருமில்லை. சாட்சாத் நானேதான். அந்தக் கூத்தச் சொல்லுகேன், ஒண்ணு கேக்கேளா!
கன்னியாகுமரி விவேகானந்தா
கேந்திராவில் நான் சிலகாலம் கேந்திர தொண்டராக பணியாற்றிய பொற்காலத்தைப் பற்றி
ஏற்கனவே எழுதியிருந்ததை படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்! அந்த காலகட்டத்தில் மதுரை அரவிந்த்
கண் மருத்துவமனையுடன் இணைந்து விவேகானந்தா கேந்திரம் நடத்திய பல இலவச கண் மருத்துவ
முகாம்களில் பங்கேற்று பணியாற்றிய அனுபவங்கள் மறக்க முடியாதவை. அப்படி பங்கேற்ற ஒரு முகாமில் நடைபெற்ற ஒரு
அனுபவத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
அப்போது நான்
வள்ளியூர் பிரிவு விவேகானந்தா கேந்திரா கிராம முன்னேற்ற திட்டத்தில் பண்பாட்டு
முகாம் அமைப்பாளராக இருந்தேன். மாதத்திற்கு சராசரியாக நான்கு முகாம்களாவது
இருக்கும். அப்போது முகாம்கள் கிராமங்களில் உள்ள கோவில்களில் அல்லது பொது இடங்களில்தான்
நடக்கும். அங்கேயே தங்கி, தூங்கி, பல வித்தியாசமான கலவைகளால் ஆன அனுபவங்களை
அனுபவித்த காலம் அது. முகாம் இல்லாத நாட்களில் வள்ளியூர் முருகன் கோவில் அருகில்
இருந்த கேந்திர அலுவலகத்திலேயே தங்கியிருப்பேன். அப்போது அலுவலகத்திற்கு வரும்
மற்ற கேந்திரத் தொண்டர்களுடன், அதாவது பாலர்பள்ளி மேற்பார்வையாளர், கண் முகாம்
அமைப்பாளர் போன்றவர்களுடன் சென்று அவர்கள் பணிகளில் சற்று பங்கேற்பது என்று பொழுது
திருப்திகரமாக கழியும்.
இந்தக்
கண்முகாம் அமைப்பாளர்களின் பணி கொஞ்சம் கடினமானது. மாதத்திற்கு சராசரியாக ஒரு
கண்முகாமாவது அவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அரவிந்த் கண் மருத்துவமனையிடம் தேதி
வாங்க வேண்டும். நடத்தும் இடம் தேர்வு செய்து அந்த ஊர்க்காரர்களின் ஒத்துழைப்பு
பெற வேண்டும். பொருளுதவி செய்வோரை தேட வேண்டும். பின் கண்புரையுள்ள ஏழை
எளியோர்க்கு நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களை முகாமிற்கு வரவழைக்க வேண்டும்.
முகாம்களில் மருத்துவர்களால் கண்டறியப்படும் அறுவைசிகிச்சைக்கு உகந்தோரை மதுரை
அரவிந்த் கண் மருத்துவமனை (தற்போது திருநெல்வேலியிலும் அரவிந்த் கண் மருத்துவமனை
வந்து விட்டது) அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை முடிந்து அவரவர் வீடுகளுக்கு
கொண்டு சேர்ப்பது வரை கண் முகாம் அமைப்பாளரின் பொறுப்பு. பயனாளிகளின் உணவு
போக்குவரத்துச் செலவு அனைத்தையும் விவேகானந்தா கேந்திரம் மற்றும் பொருளுதவி
செய்வோர் உதவியால் கண்முகாம் அமைப்பாளர் பார்த்துக் கொள்வார். மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை, லென்ஸ்
முதலான அனைத்து உதவிகளையும் மருத்துவமனை ஏற்றுக்கொள்ளும். இப்போதும் இந்த சீரிய
பணி தொடர்கிறது என்று எண்ணுகிறேன்.
கண்முகாமிற்கு
ஒருநாள் முன்னதாக வள்ளியூரில் இருந்து ஜீப்பை அனுப்பி ஒலிபெருக்கி மூலமாக
கண்முகாம் பற்றிய தகவல்களை ஒலிவிளம்பரம் செய்வதோடு நோட்டீசுகளையும்
வினியோகிக்கப்போம். இப்படித்தான் ஒருமுறை ராதாபுரம் பக்கத்தில் கண்முகாம் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. கண்முகாம் அமைப்பாளர் ஜீப் வேண்டும் என தகவல் அனுப்பி
இருந்தார். அப்போது எனக்கு வேறு முகாம்கள் ஏதும் இல்லை. எனவே கண்முகாம்
முடியும்வரை அந்த அந்த கண்முகாம் அமைப்பாளருக்கு உதவியாக இருக்கலாம் என்று நானும்
ஜீப்பில் ஏறிக்கொண்டேன். வள்ளியூரைச் சேர்ந்த கணேசன் எனற நண்பர்தான் ஓட்டுனர்.
இவர்தான் குற்றாலத்தில் என்னையும் நண்பர் சிவராஜனையும் ஒற்றைத்துண்டுடன் நடக்க விட்டவர். ஆண்டவா! ராதாபுரத்தில் எங்கே ஓட விடப்போகிறாரோ தெரியவில்லையே!
ராதாபுரம் போய்
சேர்ந்து ஜீப்பில் விளம்பரம் செய்ய தயாரானோம்.
ஓட்டுனருடன் நானும் அந்தப் பகுதி கேந்திரத்தொண்டர் மற்றும் கண்முகாம்
அமைப்பாளருமாக நாங்கள் நான்குபேர் புறப்பட்டோம். ஒவ்வொரு கிராமத்திலும் ஜீப் நுழைய
முடிந்த அனைத்து தெருக்களிலும் நுழைந்து ஒலிபெருக்கியில் கண்முகாம் பற்றிய
விபரங்களை எடுத்துரைப்போம். நாங்கள் வீசும் நோட்டீசுகளை வாங்க ஊரில் உள்ள நண்டு
நாழிகைகளெல்லாம் பின்னாலேயே ஓடி வரும். சில வால்பையன்கள் மெதுவாக செல்லும்
ஜீப்பின் பின்புறம் தொற்றிக் கொண்டு வருவார்கள். ஒன்றும் செய்யமுடியாது. ஏதாவது
விபரீதமானால் ஊர்க்காரர்களுக்கு பதில் சொல்லி முடியாது. கணேசன் சொல்லுவார்,
"சார்! எள்ளுதான் எண்ணைக்கு காயுது. இந்த எலிப்புழுக்கைகள் எல்லாம் எதுக்கு
காயுது. கண் சிகிச்சையெல்லாம் வயசானவங்களுக்குதானே! இந்த பொடிசுகளெல்லாம் இந்த
நோட்டீசுகளை வாங்கி என்ன செய்யப் போகுது". நாங்கள் சொல்வோம், அவர்கள்தான்
சரியாக அந்த நோட்டீசுகளை தத்தம் தாத்தா பாட்டிமார்களிடம் கொண்டு சேர்த்து
படித்துக் காட்டும் உண்மை சேவகர்கள் என்போம்.
ராதாபுரம்
சுற்றுவட்டாரப் பகுதி கொஞ்சம் வறண்ட நிலப்பரப்பு கொண்டவை. வெறும் பனைமரங்களும்
கருவேல முள்மரங்களும் பொட்டல்நிலங்களும் நிறைந்த பகுதி. ஒவ்வொரு கிராமங்களும்
சுமார் நான்கு ஐந்து கிலோமீட்டர் இடைவெளியில் அமைந்திருக்கும். அப்படி ஒரு
கிராமத்தைச் சுற்றி முடித்து அடுத்த கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தோம்.
அப்போது மணி பகல் பன்னிரண்டு வாக்கில் இருக்கும். வழியில் ஒரு ஈ காக்கை கண்ணில்
படவில்லை. சாலையின் இரண்டு பக்கமும் வெறும் பொட்டல் வெளி. அப்போது தூரத்தில்
சைக்கிளில் ஒரு பையன், வயது ஒரு பதினான்கு பதினைந்து இருக்கலாம். காக்கி நிக்கரும்
மஞ்சளா வெள்ளையா என்று நிர்ணயிக்க முடியாத நிறத்தில் சட்டையும் அணிந்திருந்தான்.
அனைக்கு பள்ளிக்கூடத்திற்கு அவன் போகவில்லை போலும். அவன் மட்டும் தனியாக
சைக்கிளில் தூரத்தில் எங்களுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தான்.
ஒலிபெருக்கியில்
கத்திக் கத்தி தொண்டை வறண்டிருந்ததால் நாங்கள் ஒருவருக்கொருவர் பேசாமல் அமைதியாக
இருந்தோம். கணேசனுக்கும் வண்டியை ஓட்டி போரடித்தது போலும். அவர் ஜீப்பின்
வேகத்தைக் கூட்டி முன்னால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பையனை ஓவர் டேக்
செய்துகொண்டே அந்த பையனைப் பார்த்து "டேய் தம்பி! நில்லுடா" என்று
கூறிக்கொண்டே சைக்கிளின் முன்னால் சடன் பிரேக் போட்டு ஜீப்பை நிறுத்தினார்.
நாங்கள் என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள் அந்தப் பையன் சைக்கிளை கீழே போட்டுவிட்டு
கண்ணுக்கு இன்னும் தட்டுப்படாத அவன் ஊரைப் பார்த்து தலை தெறிக்க ஓடினான். கணேசனைப்
பார்த்து ஏன் அவனை நிற்கச் சொன்னீர்கள் என்று கேட்க, "ஒண்ணுமில்லை சார்!
பக்கத்தில ஏதாவது கடை கண்ணி இருந்தா ஒரு மோரோ கீரோ, இல்லை ஒரீ சர்பத்தோ கிர்பத்தோ குடிக்கலாமே. அதான்
பக்கத்தில கடை கிடை ஏதாவது இருக்குமா என்று கேக்கலாம்னு கூப்பிட்டேன். இந்தப் பய
சைக்கிளைப் போட்டுக்கிட்டு இப்படி தலை தெறிக்க ஓடுகான். இப்ப என்ன செய்ய?"
என்ன செய்வது
என்ற குழப்பத்தில் நாங்கள் அனைவரும் இருந்தோம். அடுத்ததாக என்ன செய்தோம் என்பதை,
அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதுவரை கொஞ்சம் சஸ்பென்ஸ்!
நட்புடன்
பத்மநாபன்
புது தில்லி
குட்மார்னிங்க் வெங்கட்ஜி.
பதிலளிநீக்குஅட இன்று அண்ணாச்சியின் பதிவா....ஆரம்பமே நாரோயில் வந்திருச்சுல்லா
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
நீக்குகுட்மார்னிங்.
பதிலளிநீக்குபழைய பதிவை வாசித்திருக்கிறேனோ என்று சந்தேகம் வந்தது.. போய்ப்பார்த்தேன். ஆம், வாசித்திருக்கிறேன்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஇலவசக் கண் முகாம்- சீரிய பணி, அர்விந்த் கண் மருத்துவமனை பெயர்பெற்ற மருத்துவமனை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஓ... அந்தப்பையன் என்ன நினைத்தானோ... ஊருக்குள்ளிருந்து ஆட்களைத் திரட்டிக் கொண்டு வந்திருக்கப் போகிறான்...!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஆஹா வள்ளியூர்! நான் 5 ஆம் வகுப்பு 6 ஆம் வகுப்பு அப்பா வழிப்பாட்டி தாத்தா வீட்டில் இருந்து படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குநல்ல அனுபவம் அண்ணாச்சிக்கு! எத்தனை அனுபவங்கள்! விவேகானந்தா கேந்த்ராவில் சேவை செய்வதே பல நல்ல அனுபவங்களைக் கொடுத்திருக்கும்.
அந்தப் பையன் ஒரு வேளை ஏன் ஸ்கூலுக்குப் போகலைனு அப்போ எல்லாம் ஸ்கூஸ் இன்ஸ்பெக்டர் வருவாங்களே அவங்க நினைச்சு ஓடிட்டானோ?
அடுத்த பகுதி அறிய ஆவல்...எப்படிப் பிடிச்சீங்க அந்தப் பையனைனு..
கீதா
அப்போ வள்ளியூரில் சழஸ்வதி பவன் கடை இருந்ததா?
நீக்குசரஸ்வதி பவன் இருந்தது. எதிரே நியூ சரஸ்வதி பவன் என்று ஒன்றும் இருந்ததாக ஞாபகம். சரஸ்வதி பவன் உரிமையாளரின் வீட்டின் எதிரில்தான் எங்கள் அலுவலகம் அப்போது இயங்கி வந்தது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குஎனக்கு வள்ளியூர் என் மனதோடு கலந்த ஊர். பெருமாள் கோயில் தெருவில் தான் இருந்தோம். அருகிலேயே அரசு பள்ளி. அங்குதான் 5 ஆம் வகுப்பு. 6 ஆம் வகுப்பு ஃபாத்திமா பள்ளியில்...முருகன் கோயிலுக்கு அடிக்கடி போவதுண்டு....அங்கு பாறையின் மீது ஏறி விளையாடி, வீட்டிற்கு விருந்தினர் யாரேனும் வந்தால் வீட்டின் பின்புறம் 5 நிமிட நடையில் இருந்த வள்ளி தியெட்டருக்கு அழைத்துச் சென்றது எல்லாம் நினைவுக்கு வந்தது. தண்ணீர் சுமந்தது உட்பட.
பதிலளிநீக்குநாரோயில் வந்த பிறகும் லீவுக்கு ஓரிருமுறை போனதுண்டு அப்புறம் வள்ளியூர் போகவே இல்லை.
கீதா
கீதா
அந்தப் பாறையின் மேல் இருந்து பார்த்தால் வள்ளியூர் ரயில்வே ஸ்டேஷன் தெரியும். தூரத்தில் ரயில் வருவதை அந்த பாறையின் மேல் இருந்து பார்க்க அழகாக இருக்கும்.
நீக்குபதிவு உங்கள் நினைவுகளைத் தூண்டி விட்டது போலும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்கு//அவர்கள்தான் சரியாக அந்த நோட்டீசுகளை தத்தம் தாத்தா பாட்டிமார்களிடம் கொண்டு சேர்த்து படித்துக் காட்டும் உண்மை சேவகர்கள் என்போம்.//
பதிலளிநீக்குஅது உண்மைதான். பேரனை பார்த்துக் கொண்டே இருக்கும் தாத்தா, பாட்டிகள் கையில் என்ன பேப்பரு? என்று கேட்பார்கள் குழந்தைகளைப் பார்த்து, அவர்களிடம் தாங்கள் ஜீப்பின் ஓடிய கதைகளை கண்கள் விரிய சொல்வார்கள், இந்த பெரியவர்களும் அப்புறம் என்று கண்கள் விரிய கேட்பார்கள் , அவர்களிடம் அந்த நோட்டீஸ் போய் சேர்ந்து விடும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குமிக ரசனையான எழுத்து. சமூக அக்கறை.... குக வுக்கு பிடிக்க வந்த ஆளுகள்னு நினைச்சுட்டானோ? இல்லை அம்மை தடுப்பூசியா?
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குஅடுத்தப் பதிவிற்காகக் காத்திருக்கிறேன் ஐயா
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குபாவம் பையன்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஹா ஹா ஹா கடை எங்கே இருக்கு எனக் கேட்பதற்கு ஏதோ கள்ளனைப் பிடிப்பதைப்போலவா சடின் பிரேக் எல்லாம் போட்டு மிரட்டுவது கர்ர்ர்ர்ர்ர் பாவம் அந்த தம்பி:)...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்கள் நண்பர் மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். ஒவ்வொரு வரிகளும் மிகவும் ரசனையாக உள்ளது. அடுத்து என்னவென்று அறியும் ஆவலுக்கும் ஒரு சடன்பிரேக்.. காத்திருக்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குஹாஹாஹா! விஷயம் தெரிந்த பலர் போலீஸ் என்றால் பயப்படும் பொழுது, அந்த கிராமத்து சிறுவன் பயந்ததில் ஆச்சரியம் இல்லை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா
நீக்குவிலாவாரியாக வர்ணிக்கிறீர்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்கு