நம்ம ஊர் திருவிழா காலங்களில் கோவில்களிலும் மற்றும் அரசு பொருட்காட்சி நடக்கும்போதும் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். அதனை நாம் எல்லோருமே கண்டு களித்திருக்கிறோம். இப்போதெல்லாம் இந்த கலை மெதுவாய் நலிந்து வருகிறது என்பதை நினைக்கும் போது மனதில் ஒரு சோகப்பந்து வந்து அழுத்துகிறது.
வட மாநிலமான ராஜஸ்தானிலும் இந்த பொம்மலாட்டம் மிகப்பிரபலமானது. இங்கே இது ”கத்புத்லி” என்ற பெயரில் வழங்கப்படுகிறது. ஜெய்பூர், ஜோத்பூர் போன்ற ராஜஸ்தான் நகரங்களில் எங்கு சென்றாலும், அங்குள்ள சுற்றுலாத் தலங்களில் இந்த பொம்மலாட்ட கலைஞர்களுக்கும் இடம் கொடுத்து அவர்கள் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இக்கலை. ராஜஸ்தானிய மொழியில் கத்புத்லி என்பதன் அர்த்தம் – கத் – மரம், புத்லி – பொம்மை - ”மர பொம்மை”. ராஜஸ்தானின் பழம்பெரும் கலைகளில் “கூமர்” [Ghoomar] என்ற நடனமும், ”கத்புத்லி” என்றழைக்கப்படும் பொம்மலாட்டமும் மிகவும் பிரபலம். ”கூமர்” நடனத்தினைப் பற்றி பிறிதொரு பதிவில் எழுதுகிறேன். இந்த பொம்மலாட்டத்தின் மூலம், பல்வேறு சமுதாய பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு நாடகங்களும் நடத்துகின்றனர்.
இந்த கலைஞர்கள் தற்போதைய காலத்திற்கு ஏற்ப அவர்களது பாடல்களையும், கதாபாத்திரங்களையும் மாற்றி தமது பொம்மைகளை ஆட வைக்கின்றனர். பாம்பாட்டி, இந்திய மைக்கேல் ஜாக்சன், உலக அழகி ஐஸ்வர்யா ராய், என்று பொம்மைகளுக்குப் பெயரிட்டு அவற்றை ஆட்டி வைக்கின்றனர்.
ஆட்டுவிப்பவரைத் தவிர இரண்டு மூன்று இசைக்கலைஞர்களும் இவர்களது குழுவில் இருக்கின்றனர். ராஜஸ்தானிய வாய்ப்பாட்டும், ”டோலக்”கில் தாளத்தோடும் இவர்கள் காண்பிக்கும் “கத்புத்லி” அருமையாக இருக்கும்.
பகிர்வுக்கு நன்றி.அருமை.
பதிலளிநீக்கு@@ ஆசியா உமர்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
பதிலளிநீக்குகத்புத்லி நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குநாமெல்லாருமே அவன் நூல் கட்டி ஆடும் பொம்மைகள் தானே.. ;-)
புதிய செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குஆஹா! எங்கள் ஊர் திருவிழாவின்போதும் இது போன்ற பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு! ராமாயணம், மகாபாரதமெல்லாம் நான் பொம்மலாட்டத்தில் தான் அறிந்தேன். சூப்பர் பதிவு! காணொளி மிகச் சிறப்பு!
பதிலளிநீக்கு//நாமெல்லாருமே அவன் நூல் கட்டி ஆடும் பொம்மைகள் தானே.. ;-)//
பதிலளிநீக்குஅதுதானே, ”ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதார்” என்ற சிவாஜி பாடல் நினைவுக்கு வருகிறது.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
நல்ல பகிர்வு. சிறுவயதில் பனிவிழும் இரவில் “பாவைக் கூத்து” பார்த்து மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது. தொலைக்காட்சிப் பெட்டியில் நாம் தொலைத்த அரிய கலைகளில் ஒன்று இந்த “பாவைக் கூத்து”.
பதிலளிநீக்குஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது. 4பேரு நடுவுலே நூலு ஒருத்தன் கையிலேன்னு யேசுதாஸ் பாடின பாட்டு ஞாபகத்துக்கு வருது. ஹைதையில் இருக்கும் தோலா ரி தனி - ராஜஸ்தான் ரிசார்ட்டில் கட்புத்லி பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு. நன்றி
பதிலளிநீக்குபெயருக்கான அர்த்தம் இன்று தெரிந்துகொண்டேன்.. நன்றி
பதிலளிநீக்கு@@ மோகன்குமார்: மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@@ சேட்டைக்காரன்: மிக்க நன்றி சேட்டை. நம் ஊரின் பல கலைகள் அழிந்து வருவதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
@@ ஈஸ்வரன் [பத்மநாபன்]: நன்றி அண்ணாச்சி.
@@ புதுகைத்தென்றல்: மிக்க நன்றி சகோ. ராஜஸ்தானின் பாரம்பரியமான இக்கலையை அவர்கள் பாதுகாத்து வருகின்றனர். அக்கலைஞர்களுக்கு கலையை நடத்த இடமும் தருகின்றனர்.
@@ உயிரோடை: மிக்க நன்றி லாவண்யா.
@@ முத்துலெட்சுமி: மிக்க நன்றி.
Super... Thank you for this post. very nice.
பதிலளிநீக்கு@@ Chitra: Hi, Thanks a lot for reading and commenting on my blog post.
பதிலளிநீக்குகத்புத்லி கலக்கல்...நீங்கள் பெற்ற இன்பத்தை வலையகமும் பெறச்செய்து விட்டீர்கள்...
பதிலளிநீக்குநல்லாயிருக்குங்க... சின்ன வயசுல பார்த்த பொம்மலாட்டம் நினைவில் நிழலாடியது.
பதிலளிநீக்குநல்ல பதிவு. நம்ம ஊரு பொம்மலாட்டம் இன்னும் இருக்குங்களா?
பதிலளிநீக்குஏனோ சிம்லா ஸ்பெசல் பாடு நினைவிற்கு வந்தது... அந்த மக்களை நாம் பாராட்ட வேண்டும்
பதிலளிநீக்கு@@ பத்மநாபன்: உங்க தொடர் ஆதர்விற்கு மிக்க நன்றி சார்.
பதிலளிநீக்கு@@ நிலாமகள்: நன்றி சகோ.
@@ கலாநேசன்: நம் ஊர் பொம்மலாட்டம் ஒரு சில இடங்களில் கஷ்டப்பட்டு தன் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது.
@@ LK: எந்த சிம்லா ஸ்பெஷல் பாட்டு[?] நினைவுக்கு வந்தது கார்த்திக் :) நன்றி.
சின்ன வயதில் பள்ளியில்,கோவில் திருவிழாக்காளில் பார்த்தது பொம்மலாட்டம்.
பதிலளிநீக்குபொதிகை டி.வியில் மக்களுக்கு சுகாதாரத்தை எடுத்துச் சொல்ல இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சியைத்தான் பயன்படுத்துவார்கள்.
கத்புத்லியின் காணொளி நல்லா இருக்கு.
நன்றி வெங்கட்நாகராஜ்.
@@ கோமதி அரசு: மிக்க நன்றிம்மா. பொதிகை டி.வியில் தான் இது மாதிரி நிகழ்ச்சிகள் வருகின்றன. மற்ற எல்லா ஊடகங்களில் சினிமா தான் பிரதானம். :(
பதிலளிநீக்குதமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதியத் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
பதிலளிநீக்குஇவன்
http://tamilblogs.corank.com/
கத் புத்லி அடடா! கைகள் ஆட்டுவிக்கின்றன என்பதை நினைக்கவே முடியவில்லை! அற்புதம்! ...(காக்கும் கரங்கள் படத்தில் நாகேஷ் ஆடும் பொம்மலாட்டப் பாடலும் நினைவுக்கு வந்தது!
பதிலளிநீக்கு@@ கே.பி. ஜனா: மிக்க நன்றி சார். இரண்டு மூன்று முறை இந்த கத்புத்லி பார்த்து இருக்கிறேன். அற்புதமான நடனங்கள். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
பதிலளிநீக்குசும்மா பதிவு மட்டும் போட்டிருந்தால் இந்த பீலிங் கிடைச்சிருக்குமோ என்னவோ.. கூடவே வீடியோவும் இணைத்ததில் செம எபக்ட். நல்ல பதிவு.
பதிலளிநீக்கு@@ ரிஷபன்: மிக்க நன்றி சார். இந்த காணொளி நான் ஏப்ரல் 2009-ல் ஜெய்பூர் சென்ற போது நான் எடுத்தது.
பதிலளிநீக்குஇதே போல எத்தனை விஷயங்களை தொலைக்காட்சியின் விலையில் இழந்துகொண்டிருக்கிறோம் வெங்கட்?
பதிலளிநீக்குவீடியோக்களில் தான் கத்புத்லி கிடைப்பாள் இனி.
@@ சுந்தர்ஜி: உண்மைதான். ஏற்கனவே நிறைய இழந்து விட்டோம். இன்னமும்….
பதிலளிநீக்குகத்புத்ளியின் காணொளி அருமை. அதிலும் அந்த பாம்பாட்டியும் பாம்பும் அபாரம். நம்மூரில் இந்தக் கலையெல்லாம் அழிந்துவிட்டது.
பதிலளிநீக்கு@@ சிவகுமாரன்: உங்களது முதல் வருகை? வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
பதிலளிநீக்குகத்புத்லி... பேரே கடாமுடான்னு இருக்கே! சின்ன வயசுல அரிச்சந்திரன் பொம்மலாட்டம் பாத்திருக்கேன். உங்க பதிவு நல்லாருக்குங்ணா!
பதிலளிநீக்கு@@ கிருபாநந்தினி: வரவுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குகத்புத்லி.. பொம்மலாட்டம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு@@ மாதேவி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ....
பதிலளிநீக்குஇதே போன்ற ஒன்று ட்ராஃப்டில் தூங்குகிறது!
பதிலளிநீக்கு@ அன்புடன் அருணா: ஓ.... அப்படியா? நீங்களும் பகிருங்களேன்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.