எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, December 20, 2010

மனச் சுரங்கத்திலிருந்து - Excuse Me, Time Please?நெய்வேலி நகரில் என் வீட்டின் வாசலிலேயே ஒரு பேருந்து நிறுத்தம். அந்த வழியாக நகர பேருந்தின் 3-ம் நம்பர் மட்டுமே வந்து போகும்.  அதனால் பெரும்பாலான நேரங்களில் காலியாகவே இருக்கும்.  சிறுவயதில் எதிரே இருக்கும் திடலில் நாங்கள் எல்லோரும் விளையாடி விட்டு வந்து இளைப்பாற வசதியாய் அதிலே பத்து பேர் அமரக்கூடிய சிமெண்ட் பலகைகளும் உண்டு

வீட்டிலிருந்து இரண்டாவது கட்டிடம் என்.எல்.சி பெண்கள் உயர்நிலை பள்ளிஆகையால் பள்ளி துவங்கும் சமயத்திலும், முடியும் சமயத்திலும் அங்கே எங்களுக்கு அங்கே இடம் கிடைக்காது.  பேருந்து நிறுத்தத்தில் நிறைய ரோமியோக்கள் சிகரெட் புகைத்துக்கொண்டும் பள்ளியில் படிக்கும் இளம் பெண்களைக் கவர வித்தைகள் காமித்துக் கொண்டும் காத்திருப்பர்.  அவர்களதுஆள்வந்தவுடன், சைக்கிளில் தொடர்ந்து போய் வீடு வரை விட்டு வருவதில் அப்படி ஒரு ஆனந்தம் அந்த ரோமியோக்களுக்கு!.

மற்ற நேரத்தில், எங்களுக்கு இடம் கிடைத்து அங்கு உட்கார்ந்து இருக்கும்போதும், அரட்டைக் கச்சேரி நடத்திக்கொண்டு இருக்கும்போதும், ஒரு வயதானவர் எங்களைக் கடந்து போவார்.  வெள்ளை வேட்டி, முழுக்கைச் சட்டை என சுத்தமாய் இருப்பார்அவர்  தினமும் எங்களைப் பார்த்தாலும் ஒரு புன்னகை கூட அவரது முகத்தில் பூக்காது.  சரி ரொம்ப அமைதியான ஆசாமி போல என்று எண்ணிக்கொண்டு எங்கள் விளையாட்டைத் தொடருவோம்

எங்கள் வீதியின் அருகில் இருக்கும் மற்றொரு வீதியில் தான் அவரது வீடு.  அவருக்கு அமைதியாய் பள்ளி சென்று வீட்டுக்குத் திரும்பி விடும் அழகானஎங்களை விட மேல் வகுப்பினில் படித்துக்கொண்டு இருந்த மூன்று பெண்கள்

எதிரே தென்படும் பெண்களைப் பார்த்தால் மட்டுமே அவரது முகத்தில் ஒரு அலாதி ப்ரியம் வந்து விடும்.  ஒரு மந்தகாசமான புன்னகையை அள்ளி வீசி, “Excuse Me, Time Please” என்று கேட்பார்.  அவர்கள் சொல்லும் மணி கேட்டு “Thank You!” என்று சொல்லி மேலே நடப்பார்.  அதிலே அவருக்கு ஒரு சந்தோஷம்.  நான் அவரைப் பார்த்த பல வருடங்களில் ஒரு முறைகூட அவர் எந்த ஆணிடமும் மணி கேட்டு பார்த்ததில்லைஅடுத்த பத்து அடியில் வேறு ஒரு பெண்மணி வந்தால் மீண்டும் “Excuse Me, Time Please” தான்.  வேறு எந்தப்  பேச்சும் கிடையாது

சரி, அவரிடம் கைக்கடிகாரம் இருந்திருக்காது அதனால் கேட்டிருப்பார் என்று நீங்களோ நானோ நினைத்தால் அது மாபெரும் இமாலயத் தவறு. அவர்  கையில் கட்டியிருக்கும் கைக்கடிகாரம் நம்மைப் பார்த்து பல்லிளிக்கும்!18 comments:

 1. பெண் மணிகளிடம் மணி கேட்கும் பெரியவர்...! நல்ல நகைச்சுவைப் பதிவு!

  ReplyDelete
 2. நெறய பேர் இருக்காங்க இந்த மாதிரி

  ReplyDelete
 3. @@ கே.பி.ஜனா: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

  @@ எல்.கே: நிஜம் தான் கார்த்திக். இது போன்ற மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நன்றி.

  ReplyDelete
 4. //அவருக்கு அமைதியாய் பள்ளி சென்று வீட்டுக்குத் திரும்பி விடும் அழகான(underline)அழகான - எங்களை விட மேல் வகுப்பினில் படித்துக் கொண்டு இருந்த மூன்று பெண்கள்//

  பெண்களைத் தொடர்ந்த ப்ரம்மராட்சஷரை நீங்கள் ஏன் தொடர்ந்தீர்கள் என்பதன் மர்மம் தெரிந்தது.

  ReplyDelete
 5. காலம் பெண் போன்றது என்று யாராவது அவருக்கு தவறுதலாக சொல்லிக்கொடுத்தார்களோ?
  நல்ல நடையில் அருமையான பதிவு. ;-)

  ReplyDelete
 6. @@ ஈஸ்வரன் [பத்மநாபன்]: அண்ணாச்சி அவர் பிரம்மராக்ஷசரும் அல்லர் நான் அவரைத் தொடர்ந்தவனும் அல்ல.... :) வரவிற்கும் கருத்திற்கும் நன்றி.

  @@ RVS: ”காலம் பெண் போன்றது” ரசித்தேன் உங்கள் வார்த்தை விளையாட்டை. மிக்க நன்றி.

  ReplyDelete
 7. நெறய பேர் இருக்காங்க இந்த மாதிரி

  ReplyDelete
 8. இப்படியும் ஆட்கள் இருக்கவே செய்கின்றனர்

  ReplyDelete
 9. இப்படியொரு வித்தியாச மனிதரா!

  ReplyDelete
 10. @@ கோணப்பழம்: உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

  @@ உயிரோடை: மிக்க நன்றி.

  @@ விக்னேஷ்வரி: மிக்க நன்றி.

  ReplyDelete
 11. வினோதமான மனிதர்தான்

  ReplyDelete
 12. @@ ராஜி: உங்களது முதல் வருகை? வருகைக்கும், கருத்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 13. மனிதர்கள் தான் எத்தனை விதம்??

  ReplyDelete
 14. @@ அமுதா கிருஷ்ணா: மனிதர்களிலும் பலப்பல விதம். உண்மை. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 15. வித்தியாசமான சுவாரஸ்யமான பதிவு!
  ஒரு விதமான பாதிப்பில்தான் அவர் இதுமாதிரி செய்கிறாரோ என்னவோ?

  ReplyDelete
 16. நேரம் இப்பொழுதுதான் கிடைத்தது. உடனே வந்து விட்டேன்... சரிங்க அந்த பெரியவர் நேரம் கேட்டு கேட்டு அவருடைய நேரம் சரியில்லாம போயிடலையே.....

  ReplyDelete
 17. @@ மனோ சாமிநாதன்: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. நீங்கள் சொன்னது போலவும் இருக்கலாம்.

  @@ பத்மநாபன்: நன்றி சார். எனக்குத் தெரிந்தவரை அவர் நேரம் சரியாய்தான் இருந்தது.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....