பார்க்க வேண்டிய இடம்: வர்த்தகக் கண்காட்சி: எல்லா வருடமும் நவம்பர் மாதம் 14 முதல் 27 தேதி வரை தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள மக்களுக்கு ஒரு மிகப்பெரிய வர்த்தக கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். தில்லியில் உச்ச நீதி மன்றத்திற்கு அருகில் உள்ள பெரிய வளாகத்தில் நடக்கும் இந்தக் கண்காட்சி முதல் நான்கு நாட்களுக்கு வர்த்தக, வியாபார மக்களுக்காகவும், அதன் பிறகு 10 நாட்கள் பொது மக்களுக்காகவும் திறந்திருக்கும். இந்தக் கண்காட்சியில், இந்தியாவின் எல்லா மாநிலங்களும், வெளிநாடுகளும் பங்கு பெறுகின்றன. இந்த வளாகத்தில் எல்லா மாநிலங்களுக்கான நிரந்தர கட்டிடங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் ஒரு முக்கிய கருத்தினை மையமாக வைத்து ஒவ்வொரு மாநிலத்தவரும் தத்தமது கண்காட்சியை அமைக்கின்றனர். இந்த நாட்களில் இங்கு சென்றால் ஒவ்வொரு மாநிலத்தில் கிடைக்கும் உணவு வகைகளும் இங்கே பிரத்யேகமாய் அமைக்கப்பட்டிருக்கும் உணவகங்களில் கிடைக்கும்.
இன்னும் வரும்…
இந்த வருடம் தமிழகத்தின் அரங்கம் எதிர்பார்த்த அளவுக்கு அமைக்கப்படவில்லை என்பதில் வருத்தம் தான். உள்ளே கடைகளில் கூட ஒரு சிலரே தமிழகத்திலிருந்து வந்திருந்தனர். பலர் தில்லியின் கடைக்காரர்களே. விருது நகரிலிருந்து வந்திருந்த ஒரு மூதாட்டி, தில்லி வாழ் தமிழர்களைப் பற்றி “முகத்தைப் பார்க்கும் போதே தமிழ்னு தெரியுது, ஆனாலும் ஹிந்தியில் தான் விலை கேட்கிறாங்க, நாங்க தட்டுத்தடுமாறி பதில் சொல்லி புரிய வைக்கக் கஷ்டப்பட்ட பிறகே எங்களுடன் தமிழில் பேசுகின்றனர்” என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்.
எல்லா வருடம் போலவே இந்த வருடமும் கேரள அரசாங்கத்தின் கண்காட்சி அரங்கம் மிக அருமையாய் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு நீர்நிலையின் மேல் படகு அசைந்து செல்வது போல செய்திருந்தது அருமை.
நவம்பர் மாதத்தில் தில்லி வந்தால் 14-27 தேதிகளில் நடக்கும் இந்த வர்த்தகக் கண்காட்சியை நீங்கள் கண்டுகளிக்கலாம். இதற்கு நுழைவுக் கட்டணம் – பெரியவர்களுக்கு ரூபாய் 40 மற்றும் 5 முதல் 12 வயது வரையான சிறுவர்களுக்கு ரூபாய் 20. நுழைவுச் சீட்டுகள் எல்லா தில்லி மெட்ரோ நிலையத்திலும் கிடைக்கும். அரங்கத்தின் வெளியே நுழைவுச் சீட்டு விற்பனை இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த ஆண்டின் வர்த்தகக் கண்காட்சியில் எடுத்த சில புகைப்படங்களைக் காண இங்கே செல்லவும்.
சாப்பிட வாங்க: குளிர் காலம் வந்தவுடன் தில்லியில் நிறைய காய்கறிகள் கிடைக்கும். காஜர் [Gajar] என்று ஹிந்தியில் அழைக்கப்படும் கேரட் மிகவும் மலிவாகக் கிடைக்கும் இந்த நாட்களில் எல்லா இனிப்பு கடைகளிலும் காஜர் ஹல்வா கிடைக்கும். முந்திரிப்பருப்பு, திராட்சை தாராளமாய்ப் போட்டு, சுடச்சுட ஒரு தொன்னை காஜர் ஹல்வா சாப்பிடலாமா. அதிக விலை ஒன்றும் இல்லை கிலோ ரூபாய் 200 தான். கீழே உங்களுக்காகவே ஒரு கப்பில் காஜர் ஹல்வா வைத்திருக்கிறேன் எடுத்துக்கோங்க, இது எடுக்க எடுக்கக் குறையாமல் வரும் அட்சயப்பாத்திரம் – இதைப் படிக்கும் எல்லோரும் எடுத்தாலும் கூடக் குறையாதுன்னா பார்த்துக்கோங்க!
ஹிந்தி பாடம்: சென்ற சில பகுதிகளில் சில காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் ஹிந்தி வார்த்தைகளைப் பார்த்தோம். வரும் பகுதிகளில் தினசரி சமையலில் பயன்படும் பொருட்களின் பெயர்களைப் பார்க்கலாம். இந்த பகுதியில் பருப்புகளின் பெயர்கள் – துவரம் பருப்பு – அரர்/துவர் தால் [Arhar/Thuvar Dhal]; கடலைப்பருப்பு – சன்னா தால் [Channa Dhal]; உளுத்தம் பருப்பு – உரத் தால் [Urad Dhal]; பயத்தம் பருப்பு – மூங்க் துலி [Moong Dhuli]; காராமணி – லோபியா [Lobiya]; பச்சைப் பயிறு – மூங்க் தால் [Moong Dhal]; வெள்ளை/கருப்பு கொண்டைக் கடலை – சஃபேத்/காலா சன்னா [Safed/kaala Channa].
தமிழக அரசுக்கு இதில் அக்கரை எடுக்க எங்கு நேரம் உள்ளது ? கேரட் எவ்வளவு இப்ப ? இங்க கில் ஐம்பது ரூபாய்
பதிலளிநீக்குஉபயோகமான பகிர்வு
பதிலளிநீக்குஇந்த சீசன்ல வர்ற காரட்தான் ஹல்வாவுக்கு நல்லாருக்கும். அப்படியே ஒரு அழகான குங்குமக்கலர்ல காரட்ஸ் :-))
பதிலளிநீக்குநல்ல பகிர்வு. கொத்தவரங்காய்க்கு ஹிந்தியில் என்ன பெயர்?
பதிலளிநீக்குகம்பு, கேழ்வரகு, சோளம் இவற்றுக்கும் பெயர் தெரிந்து கொள்ள ஆசை?
நல்லா அல்வா குடுத்தீங்க.. அட குடுத்தத்தான் சொன்னேன்..:)
பதிலளிநீக்குதமிழ் கடையில் வாங்க போகமுடியலன்னா ,தால் எல்லாம் முன்ன கையில் எடுத்துப்ப்போய் தான் காட்டுவது.. பின்ன பக்கத்துல இருக்கிற கடையில் கடைக்காரரே தமிழ் கத்துக்கிட்டார்..:)
காஜர் ஹல்வா மிக ரசித்தேன்...
பதிலளிநீக்குபடங்களுடன் கூடவே வரும் நாதஸ்வர இசையும் அபாரம். நாங்கள் அங்கு வந்து பொருட்காட்சியை பார்த்துவிட்டு திரும்பிய மாதிரி இருக்கு.
பதிலளிநீக்கு"வெங்கட் நாகராஜ் நீவே பேகனே பாரோ, எங்களை கண்காட்சிக்கு அழைத்து செல்ல , என்று பாடத் தோன்றுதய்யா !! எங்களுக்கு டிக்கெட் வாங்க , பஸ்சுக்கு செலவழிக்க, டில்லிக்கு வந்து போகும் செலவு , பல நாட்கள் விடுப்பு ,உடல் களைப்பு என்று எதுவுமில்லாமல் , காஜர் அல்வாவை செய்து வாயில் ஊடிவிட்டர்போல ஒரு மன நிறைவு தங்கள் குறும்படத்தை பார்த்ததிலே எங்களுக்கு ஏற்பட்டது என்றால் மிகையாகாது. எமது வீட்டின் கணினியின் முன்னே அமர்ந்தவாறு தில்லியின் பொருட்காட்சியை கண்டு களித்து ரசிக்க வைத்தமைக்கு ப்ளாக் நண்பர் வட்டத்தின் சார்பில் எமது பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்த்து கொள்கிறேன். தமிழன் எங்கு சென்றாலும் அந்தந்த மொழி மற்றும் கலாச்சாரத்தில் மூழ்கி , நமது பாரம்பரியத்தை விட்டு விலகி இருப்பது, காலம் செய்த கோலமா அல்லது கடவுள் செய்த குற்றமா, சிந்திப்பீர் எங்கணும் பரவியிருக்கும் தமிழன்பர்களே!!
பதிலளிநீக்குமந்தவெளி நடராஜன்.
நாதஸ்வர இசையும் அல்வாவும் திகட்டவில்லை..
பதிலளிநீக்குபதிவு வழக்கம் போலவே தகவல் களஞ்சியம். தேடித்தேடி எங்களுக்காக விவரங்கள் தரும் உங்களுக்கு பாராட்டுகள்
செலவில்லாமல் தலைநகரை சுற்றிக்காட்டுவதற்கு நன்றி..அதுவும் பொருட்காட்சி காட்சிகளையும் எடுத்து போட்டது சிறப்பு...
பதிலளிநீக்குகாஜர் அல்வா நானும் ஒரு விள்ளல் எடுத்து போட்டுக்கொண்டேன்..
பொருட் பெயர்கள் என்னை மாதிரி இந்தி நுழையவே நுழையாத ஆசாமிகளுக்கு பயனளிக்கும்.
@@ LK: நன்றி கார்த்திக். கேரட் கிலோ 20 ரூபாய்க்கு விற்கிறது இப்போது தில்லியில். இன்னும் குறையலாம் :)
பதிலளிநீக்கு@@ உயிரோடை: மிக்க நன்றி.
@@ அமைதிச்சாரல்: மிக்க நன்றி. இந்த கேரட்டில் ஹல்வா செய்தால் தான் சுவையாக இருக்கும். நம் ஊரில் கிடைக்கும் கேரட் அவ்வளவு சுவை இருப்பதில்லை.
@@ முத்துலெட்சுமி: அல்வா நல்லாத் தானே இருந்தது :) உங்க புண்யத்திலே ஒரு ஹிந்திக்காரர் தமிழ் கற்றுக்கொண்டாரே, நல்ல விஷயம்தானே….
@@ கே.பி.ஜனா: மிக்க நன்றி சார்.
@@ ரேகா ராகவன்: மிக்க நன்றி சார். நாதஸ்வர இசையுடன் புகைப்படங்கள் நன்றாக இருந்தது அல்லவா!
## வி.கே. நடராஜன்: மிக்க நன்றி சார்.
@@ ரிஷபன்: மிக்க நன்றி ரிஷபன் சார்.
@@ பத்மநாபன்: மிக்க நன்றி சார். இந்த பதிவு உங்களுக்கு உதவியாய் இருக்கும் எனச் சொன்னது மகிழ்ச்சியைத் தந்தது.
ட்ரேட் பேஃர்ல தொலையாம உங்க கூடயே சேர்ந்து கரையேறிட்டேன்.. அற்புதம்...
பதிலளிநீக்குஅல்வா கொடுக்காம நீங்களே எடுத்துக்கோங்கன்னு சொன்னீங்க பாருங்க.. அடாடா... நீங்க தலைநகரத் தங்கம் சார்!
ஹிந்தி பாடம் இன்னும் சொல்லிக்கொடுங்க.. நன்றி... ;-)
15 வருடங்களுக்கு முன்பு தில்லி
பதிலளிநீக்குசென்றேன். தலைநகரத்திற்கான தகுதி இல்லாத ஊர் போல அப்போது எனக்கு தோன்றியது. உங்கள் பதிவு இப்போது வரத் தூண்டுகிறது
இந்த வருடம் trade fair போக முடியலைங்க. நல்ல பதிவு. அப்புறம் அல்வாவுக்கு நன்றி.
பதிலளிநீக்குபடித்து முடித்தவுடன் ஒரு திருப்தி!
பதிலளிநீக்குஅன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
https://twitter.com/sridar57#
@@ RVS: கரையேறியாச்சா, சந்தோஷம். சுவையான கருத்திற்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@@ சிவகுமாரன்: கருத்திற்கு நன்றி திரு சிவகுமாரன். நிறைய பேருக்கு தில்லி பிடிப்பதில்லை.
@@ கலாநேசன்: ஓ போகவில்லையா. நானும் இரண்டு வருடம் கழித்து இப்போதுதான் சென்றேன். அல்வா நல்லா இருந்ததா? :)
@@ ஆர்.ஆர்.ஆர்.: திருப்தி! மிக்க நன்றி.
வர்த்தகக் கண்காட்சியைப் பார்த்ததுபோல இருந்தது. பகிர்வுக்கு நன்றி.ஹிந்தி வகுப்புக்கும் நன்றி.
பதிலளிநீக்கு@@ ஜிஜி: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
பதிலளிநீக்குபகிர்வு அருமை.
பதிலளிநீக்குஉங்களுக்கு விருது வழங்கியிருக்கிறேன்,பெற்றுகொள்ளவும்.
http://asiyaomar.blogspot.com/2010/12/blog-post_3051.html
வர்த்தகக் கண்காட்சியை நல்லா சுத்திப் பார்த்து விட்டோம்.
பதிலளிநீக்குகளைப்பு போக ஆதி செய்த காஜர் ஹல்வா எடுத்துக்கொண்டோம்.
எல்லோரும் எடுத்தாலும் குறையாத அட்சயப்பாத்திரத்தில் இனிப்பு வழங்கியதற்கு நன்றி வெங்கட்.
போட்டோக்களும்,பின்னனி இசையும் அருமை.
@@ Asiya Omar: வருகைக்கு நன்றி. விருது வழங்கியதற்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்கு## கோமதி அரசு: மிக்க நன்றி அம்மா. உங்கள் கருத்துக் கண்டு மகிழ்ந்தேன்....