புதன், 29 டிசம்பர், 2010

நடையா இது நடையா?,

அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா
அன்ன நடை, சின்ன இடை எல்லாம் மறந்தாரா

என்று ஒரு பாடல்பணக்காரக் குடும்பம்படத்தில் சரோஜா தேவி பாடுவது போல வரும்.  இந்த மாதிரி பல படங்களில் ஒரு பெண்ணின் நடையை அன்னத்தின் நடையோடும், வீரமான ஒரு ஆண்மகனின் நடையை, “சிங்கம்போல நடந்து வரான் பாருஎன சிங்கத்தின் நடையோடும் ஒப்பிட்டு பல கவிஞர்கள் பாடல்கள் எழுதி உள்ளனர்

ஆனா இந்த ஃபேஷன் உலகம் என்னடான்னா நவநாகரிக யுவதிகளையும், இளைஞர்களையும் பின்னணியில் இசை ஒலிக்க, வெட்டி வெட்டி ஒரு நடையை நடப்பதற்குபூனை நடைன்னு பேர் வச்சிருக்காங்க.  அது ஏன்னு தெரியலைதெரிஞ்சவங்க சொல்லுங்க

இந்த பூனை நடை மோகம், இப்போது பள்ளிக்கூடங்களையும்  விட்டு வைக்கவில்லைஇந்த வருடம் என் மகள் படிக்கும் பள்ளியில் டிசம்பர் 12, ஞாயிறு அன்றுவைப்ரேஷன்ஸ் 2010” என்ற நிகழ்ச்சி நடத்தினார்கள்.  அதில்  இந்த பூனை நடையும் இருந்தது.  எல்.கே.ஜி முதல் பன்னிராண்டாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளிக் குழந்தைகள் மேடையில் பூனை நடை நடக்கிறார்கள்.  பங்கு பெற விரும்பும் குழந்தைகளிடமிருந்து கட்டணமாய் ரூபாய் 50 பள்ளியிலிருந்து வசூலிக்கிறார்கள். இதைத் தவிர, உடை வாடகை மற்றும் அலங்காரச் செலவும் குழந்தைகளுடையது

பூனை நடை நடக்க வைப்பதாய்ச் சொல்லி பள்ளி நிர்வாகம் காசு சம்பாதிக்கும் வசூல் ராஜாக்களாக இருக்கிறது. தில்லியில் உள்ள பெரும்பாலான பள்ளி நிர்வாகிகள், வருடத்திற்கு இது போல இரண்டு மூன்று விழாவினை ஏற்பாடு செய்து, அதற்கான ரசீது புத்தகத்தினை ஒவ்வொரு குழந்தையிடமும் கொடுத்து விடுகிறார்கள். ஒரு புத்தகத்தில் உள்ள மொத்த ரசீதுகளின் மதிப்பு ரூபாய் 100.  படிக்கும் அத்தனை குழந்தைகளிடமும் கொடுத்து வசூலிக்கச் சொல்கிறார்கள்.  நம் குழந்தையை  எங்கே இதைக் கொண்டு போய் வசூலிக்க வைக்கிறது? அதனால், நாமே 100 ரூபாய் கொடுத்து அனுப்பிட  வேண்டியது தான்.  இது போன்ற விழாக்கள் மூலம் பள்ளி நிர்வாகம் சம்பாதிக்கும் பணம் கணக்கிலே வரப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனமான உண்மை


தேசப்பிதா மகாத்மா காந்தி நிறைய பேருக்கு ரோல் மாடல்.  ஆனால் அவரைக்கூட ஒரு கற்பனாவாதி விட்டு வைக்கவில்லை, “FALL WINTER COLLECTION” மற்றும் “FALL SUMMER COLLECTION’-க்கு மாடலாக்கி விட்டார். கீழே பாருங்க அவரை.
22 கருத்துகள்:

 1. பள்ளிகள் என்றாலே கொள்ளை அடிக்கும் இடம் என்றாகி விட்டது

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு...

  படிச்சவங்கஎல்லாம் கண்டிப்பா ஓட்டு போடுங்க..

  Wish You Happy New Year
  நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
  http://sakthistudycentre.blogspot.com
  என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...

  பதிலளிநீக்கு
 3. குழந்தைகளை வசூல் செய்யச்சொல்லுவது கொடுமை. இங்கியும் சிலகுழந்தைகள் இதுமாதிரி புத்தகங்களுடன் வீடுவீடாக போறதுண்டு.

  அந்த கற்பனாவாதி யாருப்பா :-)))))

  பதிலளிநீக்கு
 4. @@ LK: உண்மைதான் கார்த்திக். நன்றாகவே கொள்ளை அடிக்கிறார்கள்.

  @@ கருண்குமார்: தங்கள் வருகைக்கு நன்றி.

  @@ அமைதிச்சாரல்: கொடுமையான விஷயம். குழந்தைகளை இப்படி வசூல் செய்ய அனுப்புவதில் எனக்கு உடன்பாடில்லை....

  அந்த கற்பனாவாதி யார் என்று தெரியாது... எனக்கு மின்னஞ்சலில் வந்தது இந்தப் படம்.

  பதிலளிநீக்கு
 5. காந்தி சூப்பரா இருக்கார் :)
  கொள்ளைக்காரங்கங்க ஸ்கூல்காரங்க..நாம ஒன்னும் சொல்லிக்கமுடியல..:(

  பதிலளிநீக்கு
 6. "வைப்ரேஷன்ஸ் 2010” பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல. பெற்றோரின் பர்ஸிலிருந்து பைசா உதிருதில்ல.

  பூனை அதனுடைய மூடைப் பொறுத்து விதவிதமாக நடக்கும். எப்படி நடந்தாலும் தரை அதிராமல் நடக்கும். அப்பதானே எலி பிடிக்க முடியும்.

  பதிலளிநீக்கு
 7. @@ முத்துலெட்சுமி: இந்நாள் காந்தி? :) பள்ளி நிர்வாகம் எல்லா வகைகளிலும் நம்மைச் சுரண்டுகிறது.... வருத்தமான விஷயம்தான்... :(

  பதிலளிநீக்கு
 8. @@ ஈஸ்வரன்: உங்க comment பார்த்து இந்த ப்ளாக்-ஏ அதிருது.... :))))

  பதிலளிநீக்கு
 9. தேசபிதாவை இப்படியா செய்வது!

  பூனை நடை வசூல்!
  சிரிப்பும் வேதனையும் ஏற்படுகிறது.

  பதிலளிநீக்கு
 10. பூனை நடை பள்ளியில்.
  கலாச்சார சீரழிவின் தொடக்கம்

  பதிலளிநீக்கு
 11. ம்ம்.. பள்ளிகளில் நடக்கும் கொள்ளை.. நேரடியாய் நம்மிடம் கேட்காமல் மறைமுகமாய் இப்படி..
  பூனை நடை தெரியாதா.. எங்கள் அலுவலகத்தில் எப்பவும் லேட்டாய் வரும் ஒருவர் அப்படித்தான் வருகிறார்.. அவர் இருக்கைக்கு!

  பதிலளிநீக்கு
 12. பள்ளிக்கூடங்கள் இப்போது தொழில் நிறுவனங்கள் ஆகிவிட்டது.. பள்ளி, கல்லூரி என்று எல்லாவற்றிலும் போட்டி, பொறாமை. உன்னைவிட நான் பெரியவன் என்று காண்பிப்பதற்கு இதுபோன்றவை சாதனங்களாக பயன்படுகிறது. இதைப் பற்றி சற்று விரிவாக எழுத எனக்கும் எண்ணம் உள்ளது. நல்ல பகிர்வு. ஒரு பெரிய மாரல் என்னவென்றால்... நாமாக எதையும் செய்து சூடு பட்டுக் கொள்ளாமல், காசை கொடுத்தால் கல்யாண காண்ட்ராக்ட் மாதிரி எல்லாவற்றையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள்... ;-)
  காந்தியை இந்த மாதிரியெல்லாம் பண்ணக் கூடாதுங்க.. ;-(
  காந்தியை வைத்து நான் எழுதிய பதிவு இங்கே..
  http://mannairvs.blogspot.com/2010/08/blog-post_15.html

  நல்ல பகிர்வு.. நன்றி ;-)

  பதிலளிநீக்கு
 13. பூனை நடை பள்ளிக் குழந்தைகளுக்கு அதுவும், எல்.கே.ஜி குழந்தைகளுக்கெல்லாம் தேவையா?
  பள்ளிகள் எல்லாம் பணம் பறிக்கும் கூடங்களாகி விட்டன.

  பதிலளிநீக்கு
 14. ## கோமதி அரசு: வருகைக்கும் கருத்திற்கும் நன்றிம்மா.

  @@ சிவகுமாரன்: மிக்க நன்றி. கவிதையில் கலக்குறீங்களே....

  ## சண்முககுமார்: உங்கள் முதல் வருகைக்கு நன்றி. நண்பரே. உங்கள் பக்கம் வந்து பார்க்கிறேன்....

  @@ ரிஷபன்: எனது எல்லா பகிர்வுகளுக்கும் உங்களது கருத்து வந்தபின் தான் அந்த இடுகையே சிறக்கிறது. மிக்க நன்றி. பூனை நடை - விளக்கம் அருமை :)

  ## ஆர்.வி.எஸ்: விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி. நீங்கள் சொன்ன பதிவு பார்க்கிறேன்...

  @@ ஜிஜி: மிக்க நன்றி ஜிஜி.

  பதிலளிநீக்கு
 15. பள்ளிகள் கொள்ளை அடிப்பதோடு பூனை நடை போன்ற வக்ரமான போட்டிகள் நடத்துவது கொடுமை..

  நாசூக்காக சுட்டி காட்டியுள்ளீர்கள் ..

  நியாயமாக சொன்னால் கேட்க மாட்டார்கள்..

  பதிலளிநீக்கு
 16. பகிர்வு அருமை.இந்த 10 ரூ நோட்டு பார்த்து சிரிப்பதா? வருத்தப்படுவதா?திறமையை பாராட்டுவதா?

  பதிலளிநீக்கு
 17. @@ Asiya Omar: மிக்க நன்றி சகோ. பத்து ரூபாய் நோட் என்னையும் வருந்த வைத்தது.....

  பதிலளிநீக்கு
 18. Please remove the photo. Do u know that this photo is an offense and can be prosecuted for that?

  பதிலளிநீக்கு
 19. @ Geekiest.net: This photo is not mine and is already in circulation through mail. Anyway, I have removed it from my blog.. :)

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....