புதன், 10 ஆகஸ்ட், 2011

மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. [பகுதி – 1]



சிபாய்… [CHIBAI] பதிவில் நான் இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பயிற்சி பற்றி எழுதி இருந்தேன்.  அந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக சென்ற 30-ஆம் தேதி அதிகாலை புது தில்லியில் இருந்து கிளம்பி குவாலியர், ஷிவ்புரி, ஓர்ச்சா மற்றும் ஜான்சி ஆகிய இடங்களுக்கு பயணம் செய்தோம்.  அந்தப் பயணத்தில் நாங்கள் சென்ற இடங்கள், அலுவலகங்கள் பற்றிய சில குறிப்புகள் ஆகியவற்றை இப்பகிர்விலும் வரப்போகும் இடுகைகளிலும் எழுத இருக்கிறேன்



காலை 06.15 மணிக்கு புது தில்லி ரயில் நிலையத்திலிருந்து போபால் செல்லும் ஷதாப்தி விரைவு வண்டியில் எங்களுக்கான பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.  வீட்டிலிருந்து 05.30 மணிக்குக் கிளம்பி ரயில் நிலையம் சென்றடைந்தேன்பயிற்சியில் பயிலும் மாணவர்கள் தவிர [அட மாணவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் என்னதொரு ஆனந்தம்….], பயிற்சியாளர், அவருடைய மனைவி மற்றும் மத்தியப்பிரதேச சுற்றுலாத் துறையில் பணிபுரியும் திரு ரோஹித் பட்நாகர் என மொத்தம் 14 பேர்கள் கொண்ட குழுவாய் பயணத்தினை இனிதே தொடங்கினோம்

ஷதாப்தி கிளம்பியவுடன் ஒவ்வொரு பயணிக்கும் ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்துக் கொண்டு வந்தார் ஒரு .ஆர்.சி.டி.சி. சிப்பந்தி.  பின்னாலேயே இன்னுமொரு சிப்பந்தி செய்தித்தாள்கள் கொடுத்துக் கொண்டு வந்தார்.  எனக்கு முன்னால் அமர்ந்திருந்த ஒரு பெரியவர், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வகைக்கு இரண்டு, மூன்று என ஐந்தாறு பேப்பர்கள் கேட்க, சிப்பந்தி ஒரு பேப்பர்தான் தருவேன் எனச் சொல்ல, அவர் அடம் பிடிக்க, கடைசியில் ஜெயித்தது பெரியவர் தான்.

நான் இருந்த பெட்டியில் நான்கு நண்பர்கள்.  அதில் இருவருக்கு பக்கத்துப் பக்கத்து இருக்கைகள்.  மற்ற இருவருக்கு தனித் தனி இடத்தில் இருந்தது.  சிறு வயது ராகேஷ் ரோஷன் போன்ற ஒருவரிடம் இடம் மாறி உட்காரச் சொல்ல, எங்களைப் பார்த்து முறைத்தார்எங்கே  அவர் ஹிரித்திக் ரோஷனை வைத்து எடுத்தப் படத்தினைப் பார்க்க வைத்து விடுவாரோ என்று  மனதில் பயம்  தோன்ற விட்டு விட்டோம்

நடுநடுவே காபி, தேனீர், பிஸ்கெட், பிறகு, உப்புமா, உப்பில்லாத சட்னி, சாம்பார், பிரவுன் பிரெட் என்றெல்லாம் சாப்பிடக் கொடுத்தார்கள்.  ”பச்சை நிறமே பச்சை நிறமேஎன்று மனதினுள் பாடியபடி வெளியே வேடிக்கை பார்த்தபடியே  08.00 மணிக்கு மதுரா வந்தோம்.  ஜன்னல் வழியே கிருஷ்ணர் தெரிகிறாரா என்று பார்த்தேன்.  அவரைக் காணவில்லை.  கோபியர்களுடன்மார்னிங் வாக்சென்று விட்டார் போல

சிறிது நேர பயணத்திற்குப் பின்னரேராஜா கி மண்டிரயில் நிலையத்தினைக் கடந்தது எங்கள் ரயில்.  அடுத்தது ஆக்ரா தான்.  ஏற்கனவே நமக்கு ஆக்ரா என்றால் கொஞ்சம் உதறல்.  அதான் முன்னரே உங்களிடம்மும்தாஜ் வந்துவிட்டால்என்ற பதிவில் சொல்லியிருக்கிறேனே. நல்ல வேளைநான் ஆக்ராவில் இறங்கப் போவதில்லை

எல்லா வட இந்திய நகரங்களைப் போலவே இங்கும் சிமெண்ட் பூசப்படாத வெளிச்சுவர்களை கொண்ட வீடுகள்.  அவ்வீடுகளைப் பார்த்தபடி கிடக்கும் நீண்ட தண்டவாளங்கள்.  நேற்று பெய்த மழையோ? ஆங்காங்கே தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது.  அது சரி…. கொசுக்களும் பிறக்க வேண்டுமே

ஆக்ராவிற்குப் பிறகு 09.15 மணி அளவில் முரேனா நகரைச் சென்றடைந்தோம்ஆங்கிலத்தில் ஏனோ இதை Morena என எழுதி இருக்கிறார்கள்.  அன்று அவர்கள் எப்படி எழுதினார்களோ அதையே இன்னமும் தொடர்கிறோம்

எங்களுக்கு உணவு வழங்கிய சிப்பந்தி ஒரு தட்டில் சோம்பு, கல்கண்டு போன்றவை வைத்துடிப்ஸ்வாங்கிக்கொள்ள ஒவ்வொரு இருக்கையாக வந்து கொண்டு இருந்தார்.  பேப்பர் அங்கிள் முகத்தினைத் திருப்பிக்கொண்டு பேப்பர் படிக்க ஆரம்பித்து விட்டார்

ரயில் வழக்கம்போலவே தாமதமாகச் சென்று கொண்டு இருக்கிறது.  09.30க்கு சேர வேண்டிய வண்டி 09.50க்கு சென்றடைந்தது.  எங்களது மொத்த பயணமும் மத்தியபிரதேச சுற்றுலா நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் பிரச்சனை இல்லை.  குவாலியர் ரயில் நிலையத்தின் வெளியே மூன்று இனோவா கார்கள் எங்களுக்காகக் காத்திருந்தது


இரயில் நிலையத்தில் இருந்து நாங்கள் சென்ற இடத்தினைப் பற்றி அடுத்த பகிர்வில் தொடர்கிறேன்

பயண அலுப்பினைப் போக்கக் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்நீங்களும் காத்திருங்கள் சரியா….

அடுத்த பகிர்வில் சந்திக்கும் வரை….. 

நட்புடன்

வெங்கட்.


32 கருத்துகள்:

  1. ஜன்னல் வழியே கிருஷ்ணர் தெரிகிறாரா என்று பார்த்தேன். அவரைக் காணவில்லை. கோபியர்களுடன் “மார்னிங் வாக்” சென்று விட்டார் போல. //

    சிறப்பான பயணப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரும் உங்களக்கு ஒரு பூங்கொத்து.... :)

    பதிலளிநீக்கு
  3. வெங்கட், ஆவலைத் தூண்டும் நடை. மீதி பயண அனுபவங்களையும் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. பயணக்கட்டுரை ஜோராக பயணிக்கிறது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. # C. குமார்: நிறைய இடங்களுக்குச் சென்று வந்தோம் இந்த பயணத்தில்.... ஒவ்வொன்றாய் பகிர்கிறேன் நண்பா... தொடர்ந்து வந்து கருத்தினைச் சொல்லவும்..

    உனது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றிடா...

    பதிலளிநீக்கு
  6. @ முத்துலெட்சுமி: சுத்தமா உப்பே இல்லீங்க.... கூட பயணித்த நண்பர் சட்னி சரியில்லை என்று சொல்ல, சுவைத்துப் பார்த்தால் சுத்தமா உப்பே இல்லீங்க...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. # வை. கோபாலகிருஷ்ணன்: பயணத்தொடரும் நன்றாக பயணிக்கிறது என்கிற உங்கள் கருத்து என்னை இன்புறச் செய்தது. தொடர்ந்து எழுதுகிறேன்.... நீங்களும் வந்து என்னை ஊக்குவித்தால் நல்லது...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. பயணத் தொடருக்கு வாழ்த்துக்கள். இருபது நிமிடமெல்லாம் இந்திய ரயில்வேயில் தாமதமா?

    பதிலளிநீக்கு
  9. @ கலாநேசன்: உண்மை தான் நண்பரே.... 20 நிமிடம் எல்லாம் தாமதே இல்லை... எனினும் இந்தியாவின் முக்கிய ரயில்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஷதாப்தி கூட நேரத்தினைக் கடைபிடிப்பதில்லை என்பதால் சொன்னேன்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. //எல்லா வட இந்திய நகரங்களைப் போலவே இங்கும் சிமெண்ட் பூசப்படாத வெளிச்சுவர்களை கொண்ட வீடுகள். //
    எனக்கு இது இங்கு வந்த நாள் முதல் மனத்தை நெருடும் விஷயம்..
    அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை எவரேனும் சொல்ல முடிந்தால் நல்லது.
    வெங்கட்..சுவாரசியமாகச் செய்திகளை அடுக்கிச் சொல்லும் கலையில் தேர்ந்து வருகிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. # எம்.ஏ. சுசீலா: உங்களது பாராட்டுக்கு நன்றிம்மா..

    இங்கே நமது ஊரைப் போல ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் இடைவெளி விட்டு கட்டுவதில்லை. ஒட்டியே கட்டுகிறார்கள். அப்படிக் கட்டும்போது சிமெண்ட் பூசினால் என்ன பூசாவிட்டால் என்ன என விட்டு விடுகிறார்கள். முன்னும் பின்னும் மட்டும் பூசி நல்ல வண்ணங்கள் தீட்டுகிறார்கள். சிலர் அதையும் செய்வதில்லை....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....

    பதிலளிநீக்கு
  12. சதாப்தியில் எங்களுக்கும் டெல்லியிலிருந்து குவாலியர் வரை ஒரு உற்சாக பயணத்தை கொடுத்தீர்கள்... இனி உற்சாக....அட ....உற்சாகமா ஒய்வு எடுத்து வாங்கன்னு சொன்னேன் விரைவில்...

    பதிலளிநீக்கு
  13. நல்ல பகிர்வு. எனக்கு நார்த் அவ்ளோ பரிச்சயம் இல்ல... உங்க பதிவு மூலமா தெரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன். நன்றிங்க

    பதிலளிநீக்கு
  14. இந்த ஷதாப்திகளில் தின்னக் கொடுத்தே கொன்னுடறாங்க:(

    மதுராவில் மட்டும் இறங்கி இருந்தால்...... அழுதுருப்பீங்க.... அவ்ளோ அழுக்கு. பாவம் க்ருஷ்ணர்:(

    அந்தக் காலத்தில் துபாஷி எப்படிச் சொன்னாரோ அதேபோல்தான் இன்னும் எழுதறாங்க.

    எ கா: ஆஸ்திரேலியா (யாரோட ஆஸ்தி?)

    அமிர்தசரஸ் ( சரசம் யாரோடோ?)

    பதிவு ஆரம்பம் அருமை. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  15. உங்களுடனேயே ஷதாப்தியில் பயணித்த உணர்வைக் கொடுத்தீர்கள். மத்தியபிரதேசத்தை சுற்றிப் பார்க்கத் தயாராகி விட்டோம்.

    (ஜாலியாக டூர் அடிச்சுட்டு வந்தவருக்கே அவ்வளவு அலுப்புன்னா படிப்பவருக்கும் அலுப்பு இருக்காதா? அம்ம்ம்மா! அம்மம்ம்மா!)

    பதிலளிநீக்கு
  16. நல்ல துவக்கம்
    நாங்களும் உங்களுடன் வரத் தயாராய் இருக்கிறோம்
    நோகாமல் தேன் குடிக்க கசக்குமா என்ன?
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. ஒய்வு எடுத்துக் கொண்டு தொடருங்கள் காத்து இருக்கிறோம்.

    பயணக் கட்டுரை நல்லா இருக்கிறது வெங்கட்.

    பதிலளிநீக்கு
  18. பயணக்கட்டுரை நல்ல ஆரம்பத்துடன் இருக்கு. ஓய்வு எடுத்து வாங்க

    பதிலளிநீக்கு
  19. //உப்பில்லாத சட்னி//

    உனக்கு “கொழுப்பு” அதிகம் என்று எங்களுக்குத் தெரிந்தது போல், BP அதிகம் என்று அவருக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ? !!!!!!

    பதிலளிநீக்கு
  20. @ பத்மநாபன்: உற்சாக.... அட உற்சாகமா ஓய்வு எடுத்தாச்சுன்னு தான் நானும் சொல்ல வந்தேன்... அடுத்த பகுதி விரைவில்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  21. # அப்பாவி தங்கமணி: ஓ...நார்த் பக்கம் அவ்வளவா வந்ததில்லையோ... சரி இப்போதைக்கு மத்தியப் பிரதேசம் அழைத்துச் செல்கிறேன்... தொடர்ந்து வரலாம் தைரியமாய்... :)

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. @ துளசி கோபால்: //இந்த ஷதாப்திகளில் தின்னக் கொடுத்தே கொன்னுடறாங்க....// நல்லா சொன்னீங்க போங்க.... தேநீர் கொடுத்து விட்டு காலி ட்ரே எடுத்துச் சென்ற பின்னோடு காலை உணவு கொண்டு வந்தாங்க.... அதில் பார்த்தால் ஒரு குளிரவைத்த மாம்பழ ஜூஸ் [டெட்ரா பாக்கில்]....

    ஒவ்வொரு பகுதியாய் வெளியிட வேண்டும்.... தொடர்ந்து வந்து படித்து கருத்தினை எழுதுங்கள்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. # ஈஸ்வரன்: வாங்க அண்ணாச்சி.... படித்த உங்களுக்கும் ஓய்வு வேணுமா... சரி ஓய்வு எடுத்துட்டு அடுத்த பகுதிக்கு சரியான நேரத்துக்கு வந்துடுங்க சரியா....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  24. @ ரமணி: “நோகாமல் தேன் குடிக்கக் கசக்குமா என்ன?” ..... உங்களது வார்த்தைகள் என்னை மகிழ்விக்கின்றன....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. # கோமதி அரசு: நிச்சயம் அம்மா.... அடுத்த பகுதி நாளை வெளியிடலாம் என நினைத்திருக்கிறேன்....

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  26. @ புதுகைத் தென்றல்: வாங்க சகோ.. இப்ப நல்லா ஓய்வு எடுத்தாச்சு....

    பயணக்கட்டுரை நன்றாக இருக்கிறது எனச் சொன்ன உங்களுக்கு நன்றி...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. # வேங்கட ஸ்ரீனிவாசன்: அட உனக்குத் தெரிந்த விஷயமான என் கொழுப்பு பற்றி எல்லாருக்கும் தம்பட்டம் அடித்து விட்டாயா... :)))) கொழுப்பு தான் நம்ம எல்லோர் கூடவும் பிறந்த விஷயமாச்சே....:)

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றிடா....

    பதிலளிநீக்கு
  28. என் வலைப் பக்கத்திற்கு தொடர்பு கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: :) இதற்கெல்லாம் நன்றி சொல்லத் தேவையில்லை சீனு....

    பதிலளிநீக்கு
  30. # மாதேவி: தொடர்வதற்கு மிக்க நன்றி சகோ. இது போன்ற தொடர்வுகள் என்னை பலப்படுத்த உதவும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....