வியாழன், 22 மார்ச், 2012

உலக தண்ணீர் தினம் 2012


 
அகண்ட பாலைவனம்.  பல மணி நேரம் நடந்து வருகிறார் ஒருவர்.  கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல்…  மணல்…  வெறும் மணல்…..  அந்த மணல் தந்த அனல்…. வீசும் காற்றில் கூட ஈரப்பதமில்லை. தொண்டை வறண்டு, வாயில் உமிழ்நீர் வற்றி, நான்கு நாட்களாய் தண்ணீர் கிடைக்காது ஒரு சொட்டு நீருக்காய் தவிக்கிறார் அவர். 

அந்த நேரத்தில் ஒரு மூட்டை நிறைய தங்கம் கிடைத்தால் கூட அவர் மகிழ்ச்சி அடைய மாட்டார்.  மாறாக யாராவது அவருக்கு ஒரு சொட்டு நீர் கொடுத்தால் அதற்கு பதில் அந்தத் தங்க மூட்டையைக் கொடுக்கத் தயாராக இருப்பார். ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையை, அது தந்த நீரைக் காப்பது பற்றிய எண்ணம் இருக்க வேண்டும்.  தண்ணீரை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதோ அல்லது விரயம் செய்வதோ ஒரு குற்ற உணர்ச்சியை அவர்களுக்குத் தர வேண்டும்.  தண்ணீரை தேவையான அளவே உபயோகம் செய்ய வேண்டும் என்ற சுயக்கட்டுப்பாடு இருந்தால் எவ்வளவு ஆனந்தமாக வாழலாம் எனப் புரிய வேண்டும். 

சில வருடங்கள் முன்பு தண்ணீருக்காக ஏற்பட்ட பிரச்சனையில் துப்பாக்கியால் சுட்டு கொலை கூட செய்தார் ஒருவர்.  தண்ணீரை இப்படித் தொடர்ந்து விரயம் செய்தால் பின்னர் தண்ணீர் கிடைக்காது பல கொலைகள்/போர் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

 
இப்படி ஒரு நிலமை வரும் வரையா காத்திருப்பது…  வரும் முன் காப்பதே அறிவுடைமை அல்லவா?  இப்போதே தண்ணீரை விரயம் செய்வதை தவிர்ப்போம். சேமிப்போம்.  நீரின் அருமை புரியாது அதை வீணடிப்பவர்களுக்கு எடுத்துரைப்போம். 

தண்ணீர் சேமிப்பிற்காய் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பாதுகாப்பான ஒரு எதிர்காலத்திற்காய் எடுத்து வைக்கும் அடியாக இருக்கட்டும்.  சிறுதுளி பெருவெள்ளம் என்பதை முழுவதும் உணர்வோம்…. உலக தண்ணீர் தினமான இன்று தண்ணீரை விரயம் செய்ய மாட்டேன் என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுப்போம்.

மீண்டும் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

தொடர்புடைய எனது இடுகைகள்…..

31 கருத்துகள்:

 1. தண்ணீருக்காக கண்ணீர் விடும் காலம் வரும் முன்
  விழித்துக் கொள்வதே அறிவுடைமை என்பதை
  மிக மிக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்
  மனம் கவர்ந்த பதிவு
  தொட்ர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. எதிர்காலத்தில் உலக மக்கள் எதிர்நோக்கியுள்ள மிக பெரிய பிரச்சனை தண்ணீர் பிரச்சனை தான்...

  இதை தற்போதை விழிப்புணர்வு மற்றும் சேமிப்பின் நன்மைகளை இந்த சமூகத்துக்கு எடுத்துரைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்...

  மின்சாரம் இல்லாமலும் இருந்து விடலாம்
  தண்ணீர் இல்லாமல்...

  பதிலளிநீக்கு
 3. தண்ணீர் சிக்கனம் எப்போதும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

  பதிலளிநீக்கு
 4. தண்ணீரின் அருமையை உணர வைக்கும் பதிவு.. இந்த தண்ணீர் நாளில் இருந்து தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிப்போம்..

  நட்புடன்
  கவிதை காதலன்

  பதிலளிநீக்கு
 5. அருமையான ப்கிர்வு.
  //ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையை, அது தந்த நீரைக் காப்பது பற்றிய எண்ணம் இருக்க வேண்டும். தண்ணீரை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதோ அல்லது விரயம் செய்வதோ ஒரு குற்ற உணர்ச்சியை அவர்களுக்குத் தர வேண்டும். தண்ணீரை தேவையான அளவே உபயோகம் செய்ய வேண்டும் என்ற சுயக்கட்டுப்பாடு இருந்தால் எவ்வளவு ஆனந்தமாக வாழலாம் எனப் புரிய வேண்டும். //

  பதிலளிநீக்கு
 6. அலுவலகத்தில் நிறைய இளைஞர்கள் பைப்பை நெடு நேரம் திறந்து வைத்து தண்ணீரை வீணாக்குவார்கள் பார்த்தால் கோபமாய் வரும். பொறுமையாய் சொல்லி விட்டு செல்வேன். பதிவுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 7. தண்ணீரின் அருமை பற்றிய பகிர்வு நன்கிருக்கிறது!!

  பதிலளிநீக்கு
 8. தண்ணீரின் அருமையை உணர வைக்கும் பதிவு.. இந்த தண்ணீர் நாளில் இருந்து தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிப்போம்..

  பதிலளிநீக்கு
 9. எல்லாப் பக்கமும் தண்ணீர்ப் பதிவு. இருங்க... கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு வரேன். தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்பதை அழகாண் உரைத்திருக்கிறீர்கள். அருமை.

  பதிலளிநீக்கு
 10. நல்ல கருத்துக்களை சொல்ல்விட்டீர்கள் வெங்கட்.

  நாம் எல்லோரும் ஒன்று பட்டு தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிப்போம்.

  பதிலளிநீக்கு
 11. முற்றிலும் உண்மை..

  எதையுமே தேவையான அளவிலேயே பயன் படுத்த வேண்டும். வீண் விரயம் செய்தால்... நாமும், நமது சந்ததியும்தான் பின்னர் கஷ்டப் படவேண்டும்.

  பதிலளிநீக்கு
 12. தமிழ்நாட்டில் ஆர்ட்டீஷியன் ஊற்றுக்கள் இருந்த இடம் நெய்வேலி -ன்னு பள்ளிகூடத்தில் சொல்லிக் கொடுத்திருக்காங்க. அந்த ஆர்ட்டீஷியன் ஊற்றிலேயே ஊறிக் குளித்த உங்களிடம் இருந்து இந்த பதிவு வந்ததுதான் சிறப்பு. இப்ப ஆர்ட்டீஷியன் ஊற்றுக்களையே வெறும் ’ஆர்ட்’டாகத்தான் பார்ககணும் போல இருக்கு.

  முன்பெல்லாம் பணத்தை தண்ணீராய் செலவழிக்காதே என்பார்கள். இப்போது, அந்த தண்ணீருக்கு பணத்தை பணம்னு பாக்காம செலவழிக்க வேண்டியிருக்கு.

  பதிலளிநீக்கு
 13. இன்னுமொரு உலகப் போர் வந்தாள் அது தண்ணீருக்காகத் தான் இருக்கும்
  என்பது பண்பாளர்களின் வாக்கு...
  அதை நம்மால் முடிந்த அளவு தள்ளிப் போடுவோம்..
  சிறு துளி சேமித்தாலே போதும்..

  தண்ணீரை சேமிப்போம்.

  பதிலளிநீக்கு
 14. தண்ணீர் சிக்கனம் பற்றிய அருமையான விழிப்புணர்வுப் பதிவு. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 15. //சிறுதுளி பெருவெள்ளம் என்பதை முழுவதும் உணர்வோம்…. உலக தண்ணீர் தினமான இன்று தண்ணீரை விரயம் செய்ய மாட்டேன் என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுப்போம்.//

  அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 16. தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்!
  உண்மை! உண்மை!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 17. நல்ல பகிர்வு, தொடர்ந்து நினைவூட்ட பட வேண்டிய செய்தி. ஏன்னா இந்த மாதிரி விசயங்களை, நாம் மனசுல பதிய வைக்கறதே இல்லை.

  பதிலளிநீக்கு
 18. தண்ணீரின் அருமை பற்றியும் அதைக் கையாளும் விதம் பற்றியும் அருமையாகப் பதிந்து விழிப்புணர்விற்கு வழி வகுத்திருக்கிறீர்கள்.பகிர்விற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 19. நல்ல விழிப்புணர்வூட்டும் பதிவு.
  பகிர்வுக்கு நன்றி சார் .

  பதிலளிநீக்கு
 20. தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்

  நீரின் அருமை கோடையில்

  நிழலின் அருமை வெய்யிலில்

  பதிலளிநீக்கு
 21. தண்ணீரின் அவசியத்தை மிக உணர்வு பூர்வமாக சொல்கிறது பதிவு. கூட கொடுத்துள்ள இணைப்புகளையும் படித்து சேர்த்து வைத்து கொண்டேன்...நன்றிகள்.

  தனி மனிதன் ஒவ்வொருவரும் சிறிது அக்கறை எடுத்து கொண்டால் கூட போதுமானது...

  பதிலளிநீக்கு
 22. தண்ணீரின் அருமையை உணர வைக்கும் பதிவு..வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 23. காலம் கடந்த பின் கண்ணீர் விடுவதே நமக்கு பொழப்பா போச்சு. அருமையான விழிப்புணர்வு பதிவு சார். கடுமையான பணிப்பளு காரணமாக கடந்த இரு வாரங்களாக வலைப்பூக்கள் பக்கம் வரமுடியவில்லை. அதுதான் இந்த தாமத வருகை.

  பதிலளிநீக்கு
 24. தண்ணீர் சிக்கனத்தின் தேவையை அருமையாக வலியுறுத்தியுள்ளீர்கள். நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 25. எந்த தண்ணின்னு சொல்லலையே பாஸ்! (ச்சும்மா... விளையாட்டுக்கு) :-)

  பதிலளிநீக்கு
 26. நீர் நான் இல்லை எனில்
  நீரற்றுப் போய்விடுவீர்!
  நீர் என்னைச் சேமித்தால்
  நீர் என்றும் வளமாவீர்!

  நீரின் அருமை குறித்து நான் எழுதிய வரிகள் நினைவுக்கு வந்தன!
  நன்றி!
  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 27. பகிர்வினைப் படித்து, கருத்துரை இட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 28. அனைவர்க்கும் வேண்டிய பகிர்வு.

  "சிறுதுளி பெருவெள்ளம்". வேண்டும் சிக்கனம்.

  பதிலளிநீக்கு
 29. @ மாதேவி:

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....