புதன், 7 மார்ச், 2012

அடி வாங்கும் கணவர்கள்!


[அடிக்கத் தயாராக இருக்கும் பெண்கள் 
பட உதவி:  கூகிள்]

என்ன தலைப்பு இப்படி இருக்கேன்னு அதிர்ந்துட்டீங்களா?  அதுக்குதானே இந்த தலைப்பே!  இந்த மாதம் எட்டாம் தேதி ஹோலிப் பண்டிகை. ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே உத்திரப் பிரதேசத்தில் உள்ள மதுரா நகரின் அருகில் இருக்கும் “பர்சானா” என்ற இடத்தில் இதற்கான தயாரிப்புகள் ஆரம்பித்து விடும்.  எதுக்குன்னா “லட் மார் ஹோலி” விளையாடத்தான்.  ஹிந்தியில் “லட்” என்றால் பெரிய குச்சி. “மார்” என்றால் அடிப்பது.  பெரிய குச்சிகளால் அடித்து, கலர் பொடி தூவி விளையாடுவது தான் இந்த ”லட் மார் ஹோலி”.

[அப்படி போடு...  - பட உதவி:  கூகிள்]

கிருஷ்ண பகவான் அவருடைய காதலி ராதாவின் கிராமமான பர்சானாவிற்கு வந்து அவரை கிண்டல் செய்ய, பர்சானாவில் உள்ள பெண்கள், அவரைத் துரத்தியடித்தார்களாம்.  அன்றிலிருந்து இன்று வரை கிருஷ்ண பகவானின் ஊரான ”நந்த்காவ்ன்” கிராமத்திலிருந்து ஆண்கள் எல்லாம் பர்சானாவிற்கு வர, அந்த ஊர் பெண்கள் அவர்கள் மீது கலர் பொடி தூவி அடித்து அனுப்புவார்கள். 

[பட உதவி:  கூகிள்] 
முன்பெல்லாம் சாதாரணமாக ஒரு விழாவாக இருந்தது இப்போது நிறைய மாறிவிட்டது.  உத்திரப் பிரதேசம் மட்டுமல்லாது பக்கத்து மாநிலமான ஹரியானாவில் கூட இந்த “லட் மார் ஹோலி” நடக்கிறது.  கிராமங்களில் கல்யாணமான பெண்கள் தனது கணவரைத் துரத்தித் துரத்தி அடிக்கிறார்கள்.  முறைப்பெண்களும் அவரது முறைமாமன்களை துரத்தி அடிக்கிறார்கள் – அவருடன் கல்யாணம் ஆகாவிட்டாலும்! பெண்கள் அடிக்க, ஆண்கள் கேடயம் போன்ற ஒன்றால் தடுப்பார்கள்.  ஆனாலும் அடி விழுந்து விடும்!

என் அலுவலகத்தில் இருந்த நண்பர் ”ஆசாத் சிங்” ஒவ்வொரு லட் மார் ஹோலி முடிந்தபின்னும் அலுவலகம் வரும்போது கை-கால்கள் வீங்கியபடி வருவதைப் பார்த்து “என்ன இப்படி வீங்கியிருக்கே?”ன்னு கேட்டால் சந்தோஷமாய் பதில் சொல்வார் – “என் மனைவியும் மற்ற முறைப்பெண்களும் துரத்தித் துரத்தி அடித்தனர்.  எவ்வளவு நேரம் தான் தடுக்க முடியும்?  சில அடிகள் விழத்தானே செய்யும்!”.  சில கிராமங்களில் முறைப் பெண்கள் மட்டுமல்லாது எல்லாப் பெண்களும் ஊரில் உள்ள ஆண்களை துரத்தி அடிக்கிறார்கள்!

[தண்டாய் - பட உதவி:  கூகிள்]

[பாங்க் பக்கோடா -  பட உதவி:  கூகிள்]
”அடியெல்லாம் வாங்குகிறார்களே, எதுவும் சாப்பிடக் கிடையாதா?” என்றால், ஆண்கள் எல்லோரும் ”தண்டாய்” எனப்படும் ஒரு குளிர்பானத்தினை அருந்துவார்கள்.  “பாங்க்” என்று அழைக்கப்படும் கஞ்சா இலைகளை அரைத்து பால்/லஸ்ஸி கலந்து தயாரிக்கப்படும் இந்த குளிர்பானத்தினை குடித்தவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் – சிரிக்க ஆரம்பித்தால் சிரித்துக் கொண்டே இருப்பார்கள், அழுதால் அழுது கொண்டே இருப்பார்கள்.  ஒரு சிலர் இந்த இலைகளை வைத்து பஜ்ஜி செய்தும் சாப்பிடுவார்கள். 

இந்தப் பதிவினைப் படிக்கும் ஆண்களின் மனதில் நிச்சயம் இப்படி ஒரு எண்ணம் ஓடும்... “நல்லவேளை நம்ம ஊரில் இப்படி ஒரு பண்டிகை இல்லையோ, தப்பித்தோம்!" என்று.  பெண்களுக்கும் ஆற்றாமை இருக்கும் “அட இப்படி ஒரு வாய்ப்பு நமக்கு இல்லையே!”ன்னு.

இங்க இப்படின்னா, நம்ம ஊர்க்காரர் ஒருத்தர், நம்ம ஊர்ல இல்லாத இந்த ஹோலியை எப்படி அனுபவிச்சு இருக்கார் பாருங்க! கலர் கலரா பொடி தூவி, கண்ணாடி மாற்றி, கண்ணாலே நடனமாடி [பின்ன இவரை நடனமாடச் சொன்னா இவரு என்ன பண்ணுவார் பாவம்!], காற்றிலே வட்டம் போட்டு, அசத்தி [!] இருக்கார் பாருங்க!



மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்


வெங்கட்.
புது தில்லி.


டிஸ்கி:  சரியான சமயத்தில் பாட்டினை நினைவூட்டிய ”மன்னை மைனர்” RVS அவர்களுக்கு நன்றி!!!!

57 கருத்துகள்:

  1. அருமையான கலக்கலான கலர்ஃபுல்லான பதிவு.
    பாராட்டுக்கள். ;)

    அடிகளும் ஆனந்தமானவையாக அமைந்துள்ளது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இந்தப் பதிவினைப் படிக்கும் ஆண்களின் மனதில் நிச்சயம் இப்படி ஒரு எண்ணம் ஓடும்... “நல்லவேளை நம்ம ஊரில் இப்படி ஒரு பண்டிகை இல்லையோ, தப்பித்தோம்!" என்று.

    உண்மைதான் நண்பரே! நல்ல பதிவிற்கு நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  3. இப்படி ஒரு பண்டிகை இல்லையேன்னு ஏன் கவலைப்படணும்? நாமே ஆரம்பிச்சால் ஆச்சு இதோ இப்போதிலிருந்தே:-)))))) லாட்(னா) இருக்கே!!!!

    விழாக்கால வாழ்த்து(க்)கள்.

    பதிலளிநீக்கு
  4. ஒருமுறை இதை டீவியில் பார்த்தேன்..எ வ்ளோ குஷி அடிவாங்குவதில் தான்.. அடிகுடுக்கிறவங்களூக்கு இருக்கிறது ஆச்சரியமில்ல..

    பதிலளிநீக்கு
  5. நம்ம பெண்களுக்கு இதைக் கத்துக் குடுத்துட்டா... அவ்ளோதான்! இப்பவே வலிக்காத மாதிரிதானே நடிச்சுட்டிருக்கோம்... அவ்வ்வ்வ்வ! என்ன இருந்தாலும் ஒரு திரைக்கதை மன்னரோட டான்ஸை கிண்டல் பண்ணின உங்களுக்கு தண்டனையா பவர்ஸ்டாரோட லத்திகா டிவிடிய அனுப்பப் போறேன். அட்ரஸ் ப்ளீஸ்...

    பதிலளிநீக்கு
  6. நல்ல வைக்க்ரீங்கப்பா தலைப்பு. ஹோலி வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  7. மும்பையிலும் இந்தஹோலிபண்டிகை வெகு அமர்க்களமாக நடக்கும் வீடுகள் தெருக்கள் எல்லாமே கலர்ஃபுல்லாதான் இருக்கும்.சின்னவங்கலேந்து பெரியவங்கவரை சந்தோஷமா கொண்டாடுவாங்க.

    பதிலளிநீக்கு
  8. நல்லவேளை மன்னார் குடில இந்த பண்டிகை இல்லை. இருந்திருந்தா நம்ப எல்லாருக்கும் தெரிஞ்ச 'ஒரு' மனுஷரை ஊர்ல இருக்கும் எல்லா பெண்களும் துரத்தி துரத்தி அடிச்சுருப்பா!! :)))

    பதிலளிநீக்கு
  9. இது உங்களை எம்புட்டு பாதிச்சிருந்தா இதைப் பத்தி ஒரு பதிவே எழுதி, ‘ஹப்பாடா’ன்னு பெருமூச்சு விட்டிருப்பீங்க!! :-)))))

    அதுலயும் நம்மூர்லயாவது ‘தெளியவச்சு, தெளியவச்சு’ அடிப்பாய்ங்க. இங்க, ‘தெளி(ரி)யக்கூடாது’ன்னு பாஞ்சா கொடுத்து அடி பின்னிடுறாங்கபோல!! பல நாள் ஆசை!! :-)))))

    பதிலளிநீக்கு
  10. ஒருமுறை நண்பரின் வீட்டுக்கு விருந்தாளியாய் சென்ற இன்னொரு நண்பரையும் துரத்தி துரத்தி அடிச்சாங்க. அவரும் அடுத்த நாளு வந்து விருந்தாளியாப் போய் அடி வாங்கி வந்த கதையை 31 பல்லு (ஒரு பல்லு வாங்கின அடியில போச்சு) தெரிய சந்தோஷமாச் சொல்லுதாரு. இந்தக் கதையை நான் எங்க போய்ச் சொல்ல?

    பதிலளிநீக்கு
  11. ’எப்பவாவது அடிவாங்கினா கொண்டாடலாம்.
    எப்பவுமேனா எப்படிப்பா’ என்று அங்கலாய்க்கும் ரங்கமணிகள், மைனஸ் ஓட்டு குத்த திட்டமிடுவதாகக் கேள்வி.

    பதிலளிநீக்கு
  12. கலக்கல்..

    லட் மார் ஹோலி சமயம் பின்னணியில் "அப்படிப் போடு.. போடு" ஒலிக்குமா :-))

    பதிலளிநீக்கு
  13. @வெங்கட் நாகராஜ்
    இது மாதிரி பதிவு போட்டு உள்ளூர் பெண்மணிகளுக்கு ஏன் சார் ஐடியா கொடுக்கிறீங்க. பொல்லாத ஆள் சார் நீங்க.

    @தக்குடு
    ஊர் முனைல நின்னுக்கிட்டு அந்த மன்னார்குடி ஆளை ஏம்பா வம்புக்கு இழுக்கிற. அவர் மாட்னுக்கு சிவனேன்னு இருக்கார்!

    பதிலளிநீக்கு
  14. அடிவாங்கும் ஹோலி பண்டிகை மிகவும் அமர்க்களம்.

    பதிலளிநீக்கு
  15. ஹோலி பண்டிகையில் இப்படியொரு வழக்கம் இருப்பதை இப்போதுதான் அறிகிறேன்:)!

    பதிலளிநீக்கு
  16. இந்த பண்டிகையில நிறைய செமத்தியா அடி வாங்க உங்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. கிராமங்களில் கல்யாணமான பெண்கள் தனது கணவரைத் துரத்தித் துரத்தி அடிக்கிறார்கள்.

    ஹோலி அன்னைக்கு மட்டுமா.. எல்லா நாளுமா..

    பதிலளிநீக்கு
  18. @ வை. கோபாலகிருஷ்ணன்: //அடிகளும் ஆனந்தமானவையாக அமைந்துள்ளது.// அடித்தவர்களுக்குத் தான் ஆனந்தம்... :))

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  19. அருமையான பகிர்வு.ஒரு முறை கோவர்தன்,நந்தகாம்,பர்சானாஎல்லாம் போய் வந்தது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  20. @ சேஷாத்ரி.ஈ.எஸ்.: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  21. @ துளசி கோபால்: ///நாமே ஆரம்பிச்சால் ஆச்சு இதோ இப்போதிலிருந்தே:-)))))) ///

    ஆஹா ஆரம்பிச்சாச்சா? போச்சு....

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டீச்சர்.

    பதிலளிநீக்கு
  22. @ முத்துலெட்சுமி: //எவ்ளோ குஷி அடிவாங்குவதில் தான்.. அடிகுடுக்கிறவங்களூக்கு இருக்கிறது ஆச்சரியமில்ல..//

    இன்று என் ஹரியானா நண்பர் ஒருவர் சொன்னது - “ரொம்ப தாங்கலைன்னா - அம்மா அடிக்காதேன்னு” கத்திடுவாராம்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. @ கணேஷ்: //இப்பவே வலிக்காத மாதிரிதானே நடிச்சுட்டிருக்கோம்... //

    இப்படி வெளிப்படையா சொல்லாதீங்க நண்பரே....

    //பவர்ஸ்டாரோட லத்திகா டிவிடிய அனுப்பப் போறேன். அட்ரஸ் ப்ளீஸ்.//

    நான் வரலை இந்த விளையாட்டுக்கு.... :))

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  24. @ மோகன் குமார்: //நல்ல வைக்க்ரீங்கப்பா தலைப்பு//

    எல்லாம் உங்க கிட்ட கற்றுக்கொள்வது தான் மோகன்.

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மோகன்...

    பதிலளிநீக்கு
  25. @ லக்ஷ்மி: ஆமாம்மா...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....

    பதிலளிநீக்கு
  26. @ இராஜராஜேஸ்வரி: //அடி நிறைந்த பகிர்வு...//

    ஆஹா...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. @ தக்குடு: //நல்லவேளை மன்னார் குடில இந்த பண்டிகை இல்லை. இருந்திருந்தா நம்ப எல்லாருக்கும் தெரிஞ்ச 'ஒரு' மனுஷரை ஊர்ல இருக்கும் எல்லா பெண்களும் துரத்தி துரத்தி அடிச்சுருப்பா!! :)))//

    ஆஹா என்னா ஆசை தக்குடு கோந்தே!

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தக்குடு....

    பதிலளிநீக்கு
  28. @ ஹுசைனம்மா: //இது உங்களை எம்புட்டு பாதிச்சிருந்தா இதைப் பத்தி ஒரு பதிவே எழுதி, ‘ஹப்பாடா’ன்னு பெருமூச்சு விட்டிருப்பீங்க!! :-)))))//

    ஆஹா இப்படி ஒரு ஆசை வேற இருக்கா உங்களுக்கு... :)))

    நம்மூர்ல தெளிய வைச்சு அடிப்பாங்க! சரியாச் சொன்னீங்க போங்க....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா....

    பதிலளிநீக்கு
  29. @ ஈஸ்வரன்: அண்ணாச்சி, ஒரு சின்ன சந்தேகம் - உங்களுக்கு எத்தனை பல்லு?

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி!

    பதிலளிநீக்கு
  30. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: //’எப்பவாவது அடிவாங்கினா கொண்டாடலாம். எப்பவுமேனா எப்படிப்பா’ என்று அங்கலாய்க்கும் ரங்கமணிகள், மைனஸ் ஓட்டு குத்த திட்டமிடுவதாகக் கேள்வி.//

    ஆஹா... நல்ல வேளை இது வரைக்கும் மைனஸ் ஓட்டு வரலை....

    உனது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

    பதிலளிநீக்கு
  31. @ அமைதிச் சாரல்: //லட் மார் ஹோலி சமயம் பின்னணியில் "அப்படிப் போடு.. போடு" ஒலிக்குமா :-))// அட இது கூட நல்ல யோசனைதான்.... சொல்லிடுவோம்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்...

    பதிலளிநீக்கு
  32. @ R.V.S.: //இது மாதிரி பதிவு போட்டு உள்ளூர் பெண்மணிகளுக்கு ஏன் சார் ஐடியா கொடுக்கிறீங்க. பொல்லாத ஆள் சார் நீங்க.//

    இருக்கிறது பற்றாதுன்னு, இது வேறயா? அப்படின்னு யோசிக்கிறீங்களா?

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மைனரே...

    பதிலளிநீக்கு
  33. @ கோமதி அரசு: //அடிவாங்கும் ஹோலி பண்டிகை மிகவும் அமர்க்களம்.//

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
  34. @ ராமலக்ஷ்மி: //ஹோலி பண்டிகையில் இப்படியொரு வழக்கம் இருப்பதை இப்போதுதான் அறிகிறேன்:)!//

    ஓ... இங்கே வடக்கில் தான் இது பிரபலம்...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  35. @ அரசன். சே: //இந்த பண்டிகையில நிறைய செமத்தியா அடி வாங்க உங்களுக்கு வாழ்த்துக்கள்//

    அட என்ன ஒரு ஆசை உங்களுக்கு... எனக்கு வர அடில, பாதிய உங்களுக்குக் கொடுக்க நான் பரிந்துரை செய்கிறேன்... :) சும்மா விளையாட்டுக்குத் தான் நண்பரே.

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அரசன். சே.

    பதிலளிநீக்கு
  36. @ ரிஷபன்: //ஹோலி அன்னைக்கு மட்டுமா.. எல்லா நாளுமா..//

    அட ஒரு நாளைக்கே தாங்கலையாம்... இதுல எல்லா நாளும் இருந்தா அவ்வளவு தான்....

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  37. @ சென்னை பித்தன்: //ஒரு முறை கோவர்தன்,நந்தகாம்,பர்சானாஎல்லாம் போய் வந்தது நினைவுக்கு வருகிறது.// ஓ... நல்ல இடங்கள்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  38. இதுவரை கேள்விப்படாத ஒரு செய்தி நண்பரே..
    புத்தம் புது செய்திகளுடன் வரும் தங்கள் பதிவுகள்
    அருமை அருமை....

    பதிலளிநீக்கு
  39. @ மகேந்திரன்: //இதுவரை கேள்விப்படாத ஒரு செய்தி நண்பரே..// உங்களுக்கு எனது பகிர்வு மூலம் ஒரு புதிய செய்தி கிடைத்தது அறிந்து மகிழ்ச்சி....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  40. ஹோலி வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  41. அப்பாடா, உங்க பதிவிலே ஃபாலோ அப் ஆப்ஷன் இருக்கு. கொஞ்சம் நிம்மதி! :)))

    வட இந்தியாவிலே இருக்கிறச்சே இதைக் கேள்விப் பட்டிருந்தாலும் பார்த்ததில்லை. நாங்க பெரும்பாலும் ராஜஸ்தான், குஜராத்திலேயே இருந்துட்டோம்.

    பதிலளிநீக்கு
  42. மதுரைப் பக்கங்களிலே மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடுவது கிராமக் கோயில் திருவிழாக்களிலே நடக்கும்.

    நீங்க போட்டிருக்கும் பாடல் காட்சி எந்தப் படம்னு தெரியலை. நடிகரும் யாருனு தெரியலை. ஹிஹிஹி.. ஆனால் டான்டியாவையும், ஹோலி விளையாட்டையும் சேர்த்துட்டு இருக்காங்க. :))))) இவ்வளவு கலர் பொடி தூவினால் கண்ணெல்லாம் பாதிக்காதோ! :(((

    பதிலளிநீக்கு
  43. “நல்லவேளை நம்ம ஊரில் இப்படி ஒரு பண்டிகை இல்லையோ, தப்பித்தோம்!" என்று. பெண்களுக்கும் ஆற்றாமை இருக்கும் “அட இப்படி ஒரு வாய்ப்பு நமக்கு இல்லையே!”ன்னு.//
    :-)

    இப்போதான் இராஜ‌ ராஜேஸ்வ‌ரி மேட‌த்தின் வ‌லைப்பூவில் கார‌டையார் நோன்பு ப‌ற்றி ப‌டித்துவிட்டு வ‌ருகிறேன்...! வ‌ட‌க்கிலும் தெற்கிலும் என்ன‌வொரு மாறுபாடு... ஒரேச‌ம‌ய‌த்தில்!

    பதிலளிநீக்கு
  44. @ ரெவெரி: வாழ்த்திய நல்லுள்ளத்திற்கு நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  45. @ கீதா சாம்பசிவம்: //அப்பாடா, உங்க பதிவிலே ஃபாலோ அப் ஆப்ஷன் இருக்கு. கொஞ்சம் நிம்மதி! :)))//

    ஆமாம். இந்த வசதி இப்ப நிறைய பக்கங்களில் இல்லாததால் நம்ம எழுதிய கருத்துக்கு பதில் என்ன வருதுன்னு தெரியல. மீண்டும் சென்று பார்க்கும் அளவுக்கு நேரம் இல்லை... :(

    நீங்க இருந்த ராஜஸ்தான், குஜராத் பகுதிகளில் இந்த மாதிரி இருந்திருக்காது. உ.பி. மற்றும் ஹரியானாவில் தான் இது நிறைய.

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  46. @ கீதா சாம்பசிவம்: //மதுரைப் பக்கங்களிலே மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடுவது கிராமக் கோயில் திருவிழாக்களிலே நடக்கும்.//

    திருச்சி பக்கமும் உண்டு. ஒரு முறை திருப்பராய்த்துறை கோவில் விழாவின் போது மஞ்சள்/குங்குமம் கலந்த தண்ணீர் ஊற்றி விளையாடியிருக்கிறேன்...

    ஓ படம் தெரியலையா... :))

    தங்களது இரண்டாவது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  47. @ நிலாமகள்: தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சகோ....

    பதிலளிநீக்கு
  48. வ‌ண‌க்க‌ம் தோழ‌ர். இன்றைய‌ இனிய‌ அறிமுக‌ம் நீங்க‌ளும், உங்க‌ள் வ‌லைப்பூவும். ல‌ட் மார் ஹோலி ப‌ற்றி சுவார‌ஸ்ய‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளுட‌ன் ப‌திவு பிர‌காசிக்கிற‌து. இணைப்பு ப‌ட‌ங்க‌ள் அச‌த்த‌ல்!

    பதிலளிநீக்கு
  49. @ பாரதிக்குமார்: தங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.

    தொடர்ந்து சந்திப்போம்....

    பதிலளிநீக்கு
  50. நல்ல பகிர்வு,இந்த பாங்கை பாதாம் கீர்னு நினைத்து நான் ஒரு முறை ஒரு கிளாஸ் பூரா குடித்துவிட்டு பட்ட அவஸ்ததையை மறக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  51. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: ஆஹா பாங்க் - பாதாம் கீரா தெரிந்ததா உங்களுக்கு.... நிச்சயம் அவஸ்தை தான்.....

    என் நண்பர் ஒருவர் இப்படி பாங்க் இலைகளை அரைத்து செய்த உருண்டையைச் சாப்பிட்டு நாள் பூரா சீலிங் ஃபேன் தன் மேல் விழுந்துவிடப் போகிறது என்ற பயந்து பயந்து அழுது கொண்டே இருந்தார்..... :)

    தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  52. @ அமைதிச் சாரல்: //லட் மார் ஹோலி சமயம் பின்னணியில் "அப்படிப் போடு.. போடு" ஒலிக்குமா :-))// அட இது கூட நல்ல யோசனைதான்.... சொல்லிடுவோம்....

    ஒலித்ததே நேற்று எங்கள் குடியிருப்பில். (NOIDA)
    அப்படிப் போடு...போடு,அட்றா அட்றா நாக்க முக்க, வொய் திஸ் கொலவெறி டி,
    பின்னி எடுத்து விட்டார்களே.

    பதிலளிநீக்கு
  53. @ சரஸ்வதி ரங்கநாதன்: ஆமாம்... இப்போதெல்லாம் கல்யாணம், பிறந்த நாள் போன்ற எந்த நாளானாலும் இந்தப் பாடல்கள் தான் தில்லியில்.....

    தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  54. அட நம்ம ஊரில் இப்படி ஒரு பண்டிகை இல்லாமல் போய்விட்டதே :)))

    மகிழ்ச்சியான பண்டிகை.

    பதிலளிநீக்கு
  55. @ மாதேவி: ஆஹா... உங்களுக்கும் இப்படி ஒரு ஆதங்கம் இருக்கா!

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  56. adikkarathukku puthusu puthusa oru karanam kandu pidipanga pola irukku

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....