வெள்ளி, 9 மார்ச், 2012

மனிதக் கடத்தல்…

[பட உதவி:  கூகிள்]

ஒரு மாதப் பயிற்சியின் ஒரு பகுதியாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த அனைவரையும் ஐந்து குழுக்களாகப் பிரித்து ஏதோவொரு விஷயத்தில் ஒரு கட்டுரையும், Power Point Presentation-ம் [இதைத் தமிழில் எப்படி எழுதுவது என்று யாராவது சொல்லுங்களேன்!]தயாரித்து பயிற்சியாளர்களுக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் எனச் சொல்லியிருந்தனர். 

நான்காவது வாரத்தில் முதல் நாள் தேர்வு. அதன் பிறகு பயிற்சியின் கடைசி நாள் காலை இந்த Presentation செய்ய வேண்டும்.  ஒவ்வொரு குழுவிலும் ஏழு நபர்கள்.  என் குழு தேர்ந்தெடுத்த விஷயம் Human Trafficking.  இந்த விஷயத்தில் கட்டுரை தயாரிப்பதற்காக கூகிளில் தேடும்போது பல அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் கிடைத்தன.  அதை வைத்து ஒரு கட்டுரையும், Power Point Presentation-ம் தயாரித்து சமர்ப்பித்தோம். 

[பட உதவி:  கூகிள்]


அப்படி தேடும்போது ஒரு காணொளி கூகிளில் கிடைத்தது.  அதைப் பார்த்தால் Human Trafficking என்பதன் விளக்கமும் அதன் கொடுமையும் நமக்குப் புரியும்.

ராதா – 12 வயது – ஐந்தாவதாகப் பிறந்த மகள் – தந்தை தற்கொலை செய்து கொண்டுவிட, ஊரில் பக்கத்து வீட்டில் இருக்கும் நபரின் சிபாரிசில் மும்பையிலிருந்து வந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டாள். அப்படி கல்யாணம் செய்து வந்த ராதாவினை சில நாட்களிலேயே மும்பையின் சிகப்பு விளக்குப் பகுதியில் விற்று விட்டான் அந்தக் கண()வன் .  இது போல், ஜோதி, டினா, ராகுல், ராஜீவ், அன்னமோள், பீனா என்று காணொளியில் ஒவ்வொரு கதையாகச் சொல்லிக் கொண்டு வருவதைப் பார்க்கும் போது நெஞ்சு பதைக்கிறது.தினம் தினம் எத்தனை எத்தனை ராதாக்களும், ஜோதிகளும், ராகுல்-ராஜீவ் போன்ற சிறுவர்களும் இப்படிக் கடத்தப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் என்பதை நினைக்கும்போது மனதில் கீறல் ஏற்படுவது போல ஒரு உணர்வு.   அரசாங்கமும் மனிதர்களும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்  இன்னும்  நிறையவே இருக்கின்றன   என்று தோன்றுகிறது. 

இந்த தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்து நண்பர்களுக்கும் இது போன்றவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.  நிச்சயம் ஏதாவது செய்வோம் என்ற முடிவுடன்தான் பயிற்சியை முடித்தோம்.

மீண்டும் சந்திப்போம்.

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.


61 கருத்துகள்:

 1. மனதில் கீறல் ஏற்படுவது போல ஒரு உணர்வு. அரசாங்கமும் மனிதர்களும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இன்னும் நிறையவே இருக்கின்றன

  விழிப்புணர்வுப் பகிர்வுகள்..

  பதிலளிநீக்கு
 2. @ இராஜராஜேஸ்வரி: தங்களது உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 3. முடிவை செயற்படுத்த வேண்டுகிறேன் நண்பரே..

  பதிலளிநீக்கு
 4. @ Irfan Zarook: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. நிச்சயம் செய்வேன்...

  பதிலளிநீக்கு
 5. பிஞ்சுகள் வாழ்க்கையை இப்படிச் செய்யும் அயோக்கியன்களை என்ன செய்தால் தேவலை?
  நல்ல முடிவு எடுத்து இருக்கீங்க. வெற்றி பெற ஆண்டவனை வேண்டி மனமார உங்கள் செயலை வாழ்த்துகின்றேன்.

  பதிலளிநீக்கு
 6. @ துளசி கோபால்: அயோக்கியர்கள் தான். சமீபத்தில் கூட ஒரு பெரிய கும்பலை தில்லியில் பிடித்தார்கள். இந்தக் கடத்தல் கும்பலில் ஆண்கள் - பெண்கள் என அனைவரும் இருந்துக் கொண்டு கடத்திய பெண்கள்-குழந்தைகள் அனேகர்... சட்டம் சற்றே கடினமாக வேண்டும் என நினைக்கிறேன்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 7. அந்த மனித மிருகங்களை என்ன செய்தால் தகும்.அந்தக் குழந்தைகள் என்ன ஆகும் என்று நினைத்தாலே பதறுகிறது.
  தகவல் பயங்கரமாக இருந்தாலும் நீங்கள் செய்யப் போகும் மாற்றத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. @ வல்லி சிம்ஹன்: தனிமனிதரால் செய்யக்கூடிய விஷயம் இல்லை இது. ஒவ்வொருவரும் அக்கம்பக்கத்தில் இது போன்ற விஷயங்கள் நடக்க விடாமல் செய்ய வேண்டும். நிறைய குழுக்கள் இது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு இருக்கின்றன. அக்கம்பக்கத்தில் இது போன்ற விஷயங்கள் நடப்பதாகத் தெரிந்தால் உடனே இந்த குழுக்களுக்குத் தெரிவித்தாலே இதைத் தடுக்க முடியும். சிறுதுளி பெருவெள்ளம் என்று சொல்வது போல, எல்லோருடைய பங்கும் இருந்தால் நிச்சயம் தடுக்க முடியும் என நம்புகிறேன்...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 9. இது மிகப்பெரிய நெட்வொர்க். டேக்கன் என்ற ஆங்கில படம் பாருங்கள். அற்புதமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 10. இன்று நம் நாட்டை உலுக்கி கொண்டிருக்கும் பிரச்சினை இது. மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம், இதில் மிகப் பெரிய மனிதர்களும் பின்னணியில் இருப்பது, தனி மனித ஒழுக்கம் சீர் குலைந்து போனதும் தான்.

  பதிலளிநீக்கு
 11. மனதைப் பிசைகின்ற சம்பவங்கள். ஆனாலும் தனிப்பட்ட முறையில் என்ன செய்ய முடியும் என்ற இயலாமை. சிக்கலான பிரச்சினை?

  பதிலளிநீக்கு
 12. "A trafficked person is not a criminal but a victim of a serious crime!"

  நல்ல குடும்ப அமைப்பு உருவாகும் போது, குழந்தைகள் வீட்டை விட்டு ஓடி வரும் நிலை மாறுகிறது. நல்ல தந்தையும் தாயும் நல்ல சமுதாயத்தின் அச்சாணிகள்.

  பதிலளிநீக்கு
 13. இப்படிக் கடத்தறவங்க தங்களோட வீட்லயும் குழந்தைங்க பெண்கள் இருக்காங்கன்னு நினைச்சுப் பார்க்க மாட்டாங்களா!! அவங்க முகம் ஞாபகம் வந்தாலே மத்தவங்களுக்குக் கெடுதல் செய்ய மனசு வராது.

  பதிலளிநீக்கு
 14. இந்த உலகத்துல ஒவ்வொரு மூலையிலும் நமக்கு தெரியாம எத்தனையோ விஷயங்கள் நடந்துண்டுதான் இருக்கு தெரியவரும்போதுதான் மனசே பதறிப்போகுது

  பதிலளிநீக்கு
 15. நல்ல செயல் செய்துள்ளீர்கள். உண்மைதான், இந்தக் கொடுமையைத் தடுக்க சுற்றியிருப்பவர் பங்கும் மிக அவசியம்.

  பதிலளிநீக்கு
 16. கடுமையான சட்டம் வர வேண்டும்.

  கொலைக்குற்றத்தை விட வன்மையான

  கொடுமை இந்த குழந்தைக் கடத்தல்...

  பதிலளிநீக்கு
 17. ரொம்ப முக்கியமான பதிவு இது. நம் பக்கத்திலிருக்கும் கன்னாட் ப்ளேசைசுற்றி நடந்தால் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு பிச்சைக்காரனும் இது மாதிரி கடத்திக் கொண்டு வரப்பட்டு கைகால் உடைக்கப்பட்டு பிச்சைஎடுக்க வைக்கப்பட்டரர்கள் தாம். இதை ஒழிக்க மிகப்பெரிய இயக்கம் தேவைப்படும். ஏழாம் உலகம் (நாவல்), நான் கடவுள், slumdog millionaire காட்டிய உலகங்கள் இன்னும் குறுரத்துடன் நம்மைச் சுற்றியும் சிந்திக்கிடக்கின்றன . (எந்த காரனத்துக்காகவேன்றாலும்) human trafficking இருக்கும் வரை இந்த நாடு முன்னேறாது. இதை கண்டு கொள்ளாத அரசு/அரசியல்வாதி தன்னைத் தவிர எதையும் கண்டு கொள்ளப்போவதில்லை.

  பதிலளிநீக்கு
 18. that comment was sent by me venkat. I have forgotten to put my name there. Moreover, in delhi, 60% of the crimes are being done by the persons, who were arrested earlier for such crimes and are on bail now. selvakumar

  பதிலளிநீக்கு
 19. அன்பு நண்பருக்கு

  நீங்கள் நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறிர்கள், வாழ்த்துக்கள். ஆனல் உங்களுக்கு மிக பெரிய back up or help வேண்டும். இல்லை எனில் மிகவும் கடினமான விஷயம் இது. Any how all the best.
  விஜயராகவன்

  பதிலளிநீக்கு
 20. படிப்பதற்கே நெஞ்சம் பதறுகிறது நண்பரே
  வாழ்வியலின் கொடூரம் எப்போதுமே நம் கற்பனைக்கு
  அப்பாற்பட்டே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 21. நல்ல முடிவுதான்.இது போன்ற கொடுமைகள் ஒழிய ஒரு தொடக்கமாக இருக்கும்,நன்று.

  பதிலளிநீக்கு
 22. அந்தப் புகைப்படத்திலுள்ள‌ சிறுமியின் முகத்தில் தென்படும் வெறுமையும் தனிமையும் ம‌னதை என்னவோ செய்கிற‌து!!

  ந‌ம் நாட்டின் மிகக் கொடுமையான‌ பிர‌ச்சினை இது தான். மோச‌மான‌ அர‌சிய‌லும் மோச‌மான‌ அர‌சிய‌ல்வாதிக‌ளும் இருக்கிற‌‌ வ‌ரையில் எந்த‌‌ ந‌ல்ல‌ செய‌ல்க‌ளுக்கும் ஒத்துழைப்பும் ப‌க்க‌ ப‌ல‌மும் கிடைக்குமா என்று தெரிய‌வில்லை!

  இருந்தாலும் உங்கள் நல்ல எண்ண‌ங்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 23. @ செந்தழல் ரவி: உண்மை ரவி. இது பெரிய நெர்வொர்க். இதை ஒழிக்க அரசும், என்.ஜி.ஓ.க்கள், பொதுமக்கள் என எல்லோரும் சேர்ந்து செயல்பட்டால் தான் ஏதாவது வழி பிறக்கும்.....

  பதிலளிநீக்கு
 24. @ சரஸ்வதி ரங்கநாதன்: //இன்று நம் நாட்டை உலுக்கி கொண்டிருக்கும் பிரச்சினை இது. மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம், இதில் மிகப் பெரிய மனிதர்களும் பின்னணியில் இருப்பது, தனி மனித ஒழுக்கம் சீர் குலைந்து போனதும் தான்.// உண்மை.

  தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 25. @ பழனி. கந்தசாமி: //ஆனாலும் தனிப்பட்ட முறையில் என்ன செய்ய முடியும் என்ற இயலாமை. சிக்கலான பிரச்சினை?// மிகவும் சிக்கலான பிரச்சனை தான். வெளியே தெரியாத பிரச்சனையும் கூட...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா..

  பதிலளிநீக்கு
 26. @ ஈஸ்வரன்: //"A trafficked person is not a criminal but a victim of a serious crime!" // உண்மை அண்ணாச்சி....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி.

  பதிலளிநீக்கு
 27. @ அமைதிச்சாரல்: //இப்படிக் கடத்தறவங்க தங்களோட வீட்லயும் குழந்தைங்க பெண்கள் இருக்காங்கன்னு நினைச்சுப் பார்க்க மாட்டாங்களா!! அவங்க முகம் ஞாபகம் வந்தாலே மத்தவங்களுக்குக் கெடுதல் செய்ய மனசு வராது.//

  ஆனாலும் நினைத்துப் பார்க்கவில்லையே... அதான் கொடுமை.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

  பதிலளிநீக்கு
 28. @ லக்ஷ்மி: //இந்த உலகத்துல ஒவ்வொரு மூலையிலும் நமக்கு தெரியாம எத்தனையோ விஷயங்கள் நடந்துண்டுதான் இருக்கு தெரியவரும்போதுதான் மனசே பதறிப்போகுது// ஆமாம்மா... கஷ்டமா தான் இருக்கு....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...

  பதிலளிநீக்கு
 29. @ ராமலக்ஷ்மி: //இந்தக் கொடுமையைத் தடுக்க சுற்றியிருப்பவர் பங்கும் மிக அவசியம்.// உண்மை....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 30. இப்படியும்....
  மனம் சங்கடப்படுத்திப்போகும் பதிவு
  காணொளி பார்க்கவே மனம் தாங்கவில்லை
  என்ன சொல்வதென்று தெரியவில்லை

  பதிலளிநீக்கு
 31. @ மகேந்திரன்: //கடுமையான சட்டம் வர வேண்டும்.// ஆமாம் நண்பரே... சட்டமும் வர வேண்டும் அதை சரியாக செயல்படுத்தவும் வேண்டும்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 32. @ K.s.s. Rajh: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 33. @ செல்வகுமார்: நீங்கள் சொன்னது போல, மனிதக் கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களே அதைச் செய்வது தான் சோகம்.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி செல்வகுமார்.

  பதிலளிநீக்கு
 34. @ விஜயராகவன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. ஆமாம் கொஞ்சம் அல்ல மிகவும் கடினமான விஷயம் தான் இது. ஏதோ என்னால் முடிந்ததைச் செய்ய நினைக்கிறேன். பார்க்கலாம்....

  பதிலளிநீக்கு
 35. @ A. R. ராஜகோபாலன்: //வாழ்வியலின் கொடூரம் எப்போதுமே நம் கற்பனைக்கு அப்பாற்பட்டே இருக்கிறது// நிதர்சனமான உண்மை நண்பரே..


  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 36. @ தனசேகரன்: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு
 37. @ சென்னை பித்தன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....

  பதிலளிநீக்கு
 38. @ மனோ சாமிநாதன்: //அந்தப் புகைப்படத்திலுள்ள‌ சிறுமியின் முகத்தில் தென்படும் வெறுமையும் தனிமையும் ம‌னதை என்னவோ செய்கிற‌து!!// ஆமாம்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 39. @ ரமணி: ஆமாம் கஷ்டம் தான் மிஞ்சியது அந்த காணொளியைப் பார்த்தபிறகு....

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும், தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 40. //இப்படிக் கடத்தப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் என்பதை நினைக்கும்போது மனதில் கீறல் ஏற்படுவது போல ஒரு உணர்வு. அரசாங்கமும் மனிதர்களும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இன்னும் நிறையவே இருக்கின்றன என்று தோன்றுகிறது.//

  விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு.

  பதிலளிநீக்கு
 41. பதைப்பூட்டும் விஷயத்தை பகிர்ந்த , அக்கறையான பதிவு
  நன்றி

  பதிலளிநீக்கு
 42. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 43. @ சிவகுமாரன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.....

  பதிலளிநீக்கு
 44. @ துரைடேனியல்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 45. நல்ல முடிவு! விரைந்து செயல்பட வாழ்த்துக்கள்!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 46. @ புலவர் சா இராமாநுசம்: தங்களது தொடர் வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே...

  பதிலளிநீக்கு
 47. நல்லது,பாதுகாப்புடன் செயல்படுத்துங்கள்,இந்த மாதிரி சேவைகளில் ஈடுபடுபவர்களை முதலில் கடத்திவிடுவார்கள்.

  பதிலளிநீக்கு
 48. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: //,இந்த மாதிரி சேவைகளில் ஈடுபடுபவர்களை முதலில் கடத்திவிடுவார்கள்.// ஆஹா.... :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆச்சி.

  பதிலளிநீக்கு
 49. இந்த உலகத்துல ஒவ்வொரு மூலையிலும் நமக்கு தெரியாம எத்தனையோ விஷயங்கள் நடந்துண்டுதான் இருக்கு தெரியவரும்போதுதான் மனசே பதறிப்போகுது

  லக்ஷ்மி மேடம் சொல்றது 100/100 உண்மை.

  பதிலளிநீக்கு
 50. நாம் என்ன இந்தியாவில் இருக்கிறோமா இல்லை ஏதாவது ருவாண்டா..உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாட்டில் இருக்கிறோமா என்கிற சந்தேகம் எழுந்தது என்னுள்!

  பதிலளிநீக்கு
 51. மனதை மிகவும் பாதிக்கிறது. இப்படி அநியாயமாய் வாழ்க்கையைத் தொலைத்தவர்களை யாரும் கண்டுகொள்வதே இல்லை. தங்கள் மனத்தில் உண்டான நெகிழ்ச்சியும் எழுச்சியும் அனைவரையும் சென்றடைய எங்களோடு பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 52. @ ரிஷபன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

  சில விஷயங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே மேல் எனத் தோன்றுவது நியாயமே....

  பதிலளிநீக்கு
 53. @ ‘ஆரண்ய நிவாஸ்’ ஆர். ராமமூர்த்தி: நியாயமான சந்தேகம்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 54. @ கீதமஞ்சரி: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் முதற்கண் நன்றி.

  //அநியாயமாய் வாழ்க்கையைத் தொலைத்தவர்களை யாரும் கண்டுகொள்வதே இல்லை//

  உண்மை...

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....