திங்கள், 5 மார்ச், 2012

ஒன்றிலிருந்து பன்னிரெண்டு வரை [தொடர் பதிவு]


[பட உதவி - கூகிள்]


மீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொ.ப] என்ற பதிவின் மூலம் தனது பள்ளிப் பருவத்தினை சுவைபட எழுதிய நண்பர் கணேஷ் [மின்னல்வரிகள் வலைப்பூவின் உரிமையாளர்] இந்த தொடர் பதிவினைத் தொடரும்படி என்னையும் அழைத்துள்ளார்.  நினைவிலிருக்கும் பள்ளி நினைவுகளை, பிறப்பிடமான நெய்வேலி நகர நினைவுகளை, நான் அவ்வப்போது எனது வலைப்பக்கத்தில் ”மனச் சுரங்கத்திலிருந்து…” என்ற பகிர்வுகளில் எழுதி வருகிறேன்.  இப்போது ஒவ்வொரு வகுப்பாய் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள அழைத்திருக்கிறார்.  So here goes… ’என் பள்ளி நினைவுகள்’. 

[நாந்தேன்...] 

ஒன்றிலிருந்து ஐந்து வரை: 

1977-ஆம் வருடம் - எனக்கு அப்ப 6 வயது.  அப்பாவும் அம்மாவும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நடத்தும் துவக்கப்பள்ளியில் என்னை முதலாம் வகுப்பில் சேர்த்து விட்டார்கள் – அதே பள்ளியில் எனது அக்காவும் படித்ததால்! முதல் வகுப்பில் எனக்கு வகுப்பு ஆசிரியர் திருமதி நாமகிரி.  அவர்களுக்கு குழந்தைகள் இல்லாத குறையே தெரியாமல் எங்களையே குழந்தைகளாகப் பாவித்தவர்.  பாதி நாட்கள் எனது வகுப்பில் இருந்து அழுதபடியே ஓடி அக்காவின் வகுப்புக்குச் சென்றுவிடுவேன்.  அவளும் ஒவ்வொருமுறையும் எனது வகுப்பில் அலுக்காமல் கொண்டு வந்து விடுவாள்.  இப்படி ஓடிப்போவது குறைந்தது ஒரு மாதமாவது நடந்திருக்கும் என அக்கா சொல்வாள்! 
[பட உதவி - கூகிள்]

பிறகு ஒரு பிடிப்பு வந்து என் வகுப்பிலேயே அமர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.  ஒவ்வொரு நாளும் காலையில் அம்மா கொடுக்கும் மதிய உணவினை [சாம்பார் சாதம், தயிர் சாதம் என்று தினமும் ஏதாவது ஒன்று] ஒரு அலுமினிய தூக்கிலும், பாடப் புத்தகங்களை ஒரு அலுமினிய பெட்டியிலும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ”என்.எல்.சி. துவக்கப்பள்ளி, வட்டம்-18” செல்வேன்.  முதல் ஐந்து வகுப்புகளில் ரொம்ப சமத்து நான்….[அதற்குப் பிறகு தான் வால் முளைத்ததோ!]  எந்த விஷமமும் செய்ய மாட்டேன் என அம்மா இப்போதும் கூட சொல்வார்கள்…  ரொம்ப பொறுமைசாலி எனச் சொல்லி, அதுவும் இரண்டாம் வகுப்பு படித்தபோது பள்ளி ஆண்டு விழாவில் “கல் பொறுக்கிப் போடும்” ஒரு விளையாட்டில் பொறுமையாக பொறுக்கியும் மூன்றாம் பரிசாக, ஆரஞ்சு வண்ணத்தில் ஒரு பிளாஸ்டிக் கிண்ணம் [அதை பிச்சைக்காரன் கிண்ணம் என மற்றவர்கள் சொன்னது வேறு விஷயம்] பரிசாகக் கிடைத்ததை  அடிக்கடிச் சொல்வார்கள்.  [பல வருடம் அந்தக் கிண்ணத்தை  அம்மா வைத்திருந்தார்கள்…]

இந்த ஐந்து வருடங்களில் நான் மறக்க முடியாத ஆசிரியர்கள் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள்.  வகுப்பு ஆசிரியராக இருந்த திருமதி எஸ்தர், ராஜேஸ்வரி, மூக்கன் [அவர் பெயர் இதுவல்ல, இது பட்டப் பெயர்!] என பலர் எனது அடித்தளத்தினை பலமாகப் போட்டவர்கள்.  நான்காவது படிக்கும்போதே சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட அனுபவத்தினை ”நானும் சைக்கிளும்” என்ற பகிர்வில் எழுதி இருக்கிறேன்.  நான் படித்த இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையே இருந்ததால் வேறு பள்ளிக்கு மாற வேண்டிய சூழ்நிலை.

ஆறிலிருந்து எட்டு வரை: 

நெய்வேலி நகரின் வட்டம் – 12-இல் இருக்கும் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். ஆனால் அந்த பள்ளியில் ஒரு வருடம் தான் படித்தேன்.  நான் முதலில் படித்த பள்ளியையே நடுநிலைப் பள்ளியாக ஆக்கிவிட்டதால் அங்கேயே ஏழாவதும் எட்டாவதும் படித்தேன்.  ஆறாவது படிக்கும்போது செய்த குறும்புத்தனங்கள் இன்றும் மனதில் பசுமையாக!

ரொம்பவும் பயந்த சுபாவமுடைய ஒரு ஆசிரியையை பயமுறுத்த ஒரு ஓணானை அடித்து அதை டீச்சர் மேஜையில் வைத்தது, விஷமம் செய்ததற்காக  எங்கள் எல்லோரையும் அடித்ததால் எல்லா மாணவர்களும் சேர்ந்து பப்பிள் கம் சாப்பிட்டு அதை அவர் அமரும் நாற்காலியில் ஒட்டி வைத்தது [அன்று பார்த்து அவர் பட்டுப் புடவை அணிந்து வர, அதில் ஒட்டி அந்தப் புடவை வீணானது என, எங்களுக்கு ஒரு மாதம் வரை பாடம் எடுக்க வில்லை] என்று பல குறும்புத்தனங்கள் [இப்போது நினைத்தால் வெட்கம்!]

ஏழாவது படிக்கும்போது முதலும் கடைசியுமாக பிட் அடித்த அனுபவத்தினை ”ரகசியம்… பரம ரகசியம்” என்ற பகிர்வில் ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன் என்பதால் அதை இங்கே மீண்டும் எழுதாது விடுகிறேன். 

எட்டாவது படிக்கும் போது இத்தனை நாள் இருபாலர்களும் படிக்கும் பள்ளியில் படித்து விட்டு அடுத்தது ஆண்கள் மட்டுமே படிக்கும் வட்டம்-10-இல் இருக்கும் என்.எல்.சி. மேல்நிலைப் பள்ளிக்கு ஒன்பதாவது போகப் போகிறோம் என ஒரு கலக்கம்… :)

[பட உதவி:  என் நண்பன் C. குமார்]

ஒன்பதிலிருந்து பன்னிரெண்டு வரை:

எட்டாம் வகுப்பு வரை படித்த நண்பர்கள் இப்போது வேறு வகுப்புகளுக்கு  சென்றுவிட, புதிய நண்பர்கள், புதிய சூழல் என ரொம்பவே பயமுறுத்தியது.  ஆனால் வீட்டிலிருந்து வெகு அருகிலேயே பள்ளி, அதுவும் ஷிஃப்ட் முறை [காலை எட்டு மணி முதல் மதியம் 12.40 வரை தான்] என்பதால் சற்றே நிம்மதி [நிறைய விளையாடலாமே!] பள்ளிக்குள்ளே ஹேண்ட் கிரிக்கெட் விளையாடி, கையை சிவப்பாக்கியது இன்று நினைத்தாலும் வலிக்கிறது!].  ஆங்கில இலக்கணம் சுலபமாகக் கற்றுக்கொடுத்த திரு. பி.ஒய். சுந்தரராஜன் அவர்கள் பற்றி நான் எழுதிய பதிவு ”அறுபத்தி ஆறு தொண்ணூத்தி ஒன்பது” படித்துப் பாருங்களேன்!

பத்தாம் வகுப்பில் விழுந்து விழுந்து படித்தேன்! [அட கீழே இல்லைங்க!] முக்கியமான வகுப்பல்லவா அதனால் முழுமூச்சில் படித்தேன்.  ஆனாலும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை.  அதனால் மனமுடைந்தது நான் மட்டுமல்ல – என் பெற்றோர்களும் தான்.  இருப்பினும் பதினொன்றாம் வகுப்பில் முதல் க்ரூப்பே கிடைத்தது. 

பத்தாம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வியில் படித்த என்னை பதினொன்றாம் வகுப்பில் ஆங்கில வழி கல்வியில் சேர்த்து விட்டார்கள்.  முதல் சில மாதங்களில் தட்டுத் தடுமாறினேன்.  அதனால் ட்யூஷன் சேர்ந்து படித்தேன்.  காலை முதல் மாலை வரை பள்ளிக்கும் ட்யூஷனுக்கும் அலைந்தது இன்னும் நினைவில் நிற்கிறது.  பனிரெண்டாவது வகுப்பில் நன்கு படித்து[!] எதிர்பார்த்த மதிப்பெண்கள் வாங்க முடியாததால் நெய்வேலி ஜவஹர் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை அறிவியல் [கணிதம்] படித்தது தனிக்கதை.  அது இங்கே அவசியம் இல்லை!  [பள்ளி பற்றி தான் எழுத வேண்டும் என்பதால்! :)]

மின்னல் வரிகள் கணேஷ் அவர்கள் என்மேல் வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன் என நினைக்கிறேன்!  இது தொடர் பதிவு என்பதால் – தொடர நினைக்கும் நண்பர்கள் தொடரலாம்! 

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.

60 கருத்துகள்:

  1. மனச் சுரங்கத்திலிருந்து எடுத்துக் கொடுத்தவைகள்
    அத்தனையும் வைரங்களாய் ஜொலித்தன
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. @ கோவை நேரம்: உங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. @ ரமணி: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்....

    பதிலளிநீக்கு
  4. @ ரமணி: தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நிலக்கரிச் சுரங்க நகரத்திலிருது வெட்டி எடுத்த மனச்சுரங்க வைரத்துணுக்குகள் அருமையாய் மின்னி மிளிர்கின்றன...

    பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  6. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. @ துளசி கோபால்: ரசித்தமைக்கு நன்றி டீச்சர்....

    பதிலளிநீக்கு
  8. @ முத்துலெட்சுமி: அடடா என்ன ஒரு நேர்மை.... :))

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி....

    பதிலளிநீக்கு
  9. சுவாரஸ்யம்:)!

    //பத்தாம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வியில் படித்த என்னை பதினொன்றாம்வகுப்பில் ஆங்கில வழி கல்வியில் சேர்த்து விட்டார்கள். முதல் சில மாதங்களில் தட்டுத்தடுமாறினேன்.//

    ‘ஆங்கில இலக்கியம்’ படிக்க ஆசைப்பட்டு நானும் பதினொன்றில் ஆங்கில வழிக்கு மாறினேன். ஆனால் அறிவியல் பாடங்களில் ஓரிரு மாதங்கள் தடுமாற்றம் இருக்கவே செய்தது:)!

    பதிலளிநீக்கு
  10. Interesting. Unless you specifically invite someone to write (even then, only 50% will write) people will not continue Thodar pathivu. This is my feeling. (May be wrong also)

    Your photo is very cute

    பதிலளிநீக்கு
  11. வெகு அழகான மலரும் நினைவுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. சுவையான இடுகை. Nostalgic.

    பதிலளிநீக்கு
  13. என் பதிவை வெளியிட்டு விட்டு இங்கு வந்து பார்த்தால் இங்கும் அதே !
    பள்ளி நாட்களை நினைத்துப் பார்ப்பதே சுகம்தானே!சுவைபட எழுதியிருக்கீங்க.
    த.ம.4

    பதிலளிநீக்கு
  14. ஒவ்வொரு வரின் பள்ளி அனுபவங்கள் படிக்கும்போதும் ரொம்ப பொறாமையா இருக்கு.

    பதிலளிநீக்கு
  15. சுவையான அசைபோடல் வெங்கட். ஜவஹர் கல்லூரி வாழ்க்கையையும் வேறொரு பதிவில் எழுதுங்க. நதிமூலத்தைக் கொஞ்சம் சாம்பிள் பாப்போம்.

    பதிலளிநீக்கு
  16. மிக அழகாக அனுபவங்களை பின்னோக்கிப் பார்த்திருக்கிறீர்கள். நீங்க இப்பவும் வால்தானான்னு மேடத்துக்கிட்டதான் கேக்கணும்... எனக்கெல்லாம் பேச்சுப் போட்டில பேர் குடுத்துட்டு, ஆடியன்ஸைப் பாத்து மிரண்டு போயி, ‘பே... பே...’ன்னு உளறி ஓடி வந்த அனுபவம்தான் உண்டு. நீங்க ஒரு ஆரஞ்சு கப்பாவது வாங்கியிருக்கீங்களே... என் அழைப்பை ஏற்றத் தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  17. @ ராமலக்ஷ்மி: //நானும் பதினொன்றில் ஆங்கில வழிக்கு மாறினேன்.// நிறைய பேருக்கு இந்த அனுபவம் இருக்கிறது போல... மாறிய சில மாதங்களுக்கு நிச்சயம் தடுமாற்றம் தான்... சுதாரிப்பதற்குள் நிறைய பாடங்கள் சென்று படுத்தி விட்டது.

    தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  18. @ மோகன்குமார்: தொடர்பதிவு எழுத யாரையாவது அழைத்திருக்கலாம் தான். சில பேருக்குப் பிடிப்பதில்லை. அதனால் தான் Open Invitation கொடுத்து விட்டேன்.

    நீங்கள் எழுதுங்களேன் மோகன். உங்களை நான் இப்போது அழைத்து விட்டேன். உங்களது அனுபவங்களையும் தெரிந்து கொள்ள எனக்கு ஆசை வந்து விட்டது இப்போது!

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

    பதிலளிநீக்கு
  19. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  20. @ ஹேம்கண் [கணேஷ்]: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே... உங்கள் பக்கமும் வந்து நீங்கள் கொடுத்த சுட்டியிலிருந்து உங்கள் நினைவுகளைப் படித்தேன்..

    பதிலளிநீக்கு
  21. @ சென்னை பித்தன்: ஓ நீங்களும் உங்கள் பள்ளி நினைவுகள் பற்றி எழுதியாச்சா? இப்போதே வந்து படிக்கிறேன்.

    தங்களது கருத்துரைக்கும், பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  22. @ லக்ஷ்மி: //ஒவ்வொரு வரின் பள்ளி அனுபவங்கள் படிக்கும்போதும் ரொம்ப பொறாமையா இருக்கு.// எங்களுக்கு பள்ளி அனுபவங்கள். உங்களுக்கோ வாழ்க்கை நிறைய அனுபவத்திலேயே பாடங்கள் சொல்லித் தந்திருக்கிறது, இல்லையாமா!

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  23. @ சுந்தர்ஜி: //ஜவஹர் கல்லூரி வாழ்க்கையையும் வேறொரு பதிவில் எழுதுங்க. நதிமூலத்தைக் கொஞ்சம் சாம்பிள் பாப்போம்.//

    கல்லூரி பற்றியும் ஓரிரு பதிவுகள் எழுதி இருக்கிறேன் முன்பு...

    மூன்று வருடங்கள் என்றாலும், கல்லூரி வாழ்க்கையில் நிறைய இனிய அனுபவங்கள் தானே எல்லோருக்கும்.

    எழுதாத சிலவற்றை பிறிதொரு நாள் எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  24. @ கணேஷ்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ஆரஞ்சுக் கிண்ணம் ஆரம்பம்தான். பிறகு நிறைய பேச்சுப் போட்டிகள், செய்யுள் ஒப்பித்தல், எனக் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறேன். அவற்றையெல்லாம் சொல்லவேண்டாம் என விட்டு விட்டேன்....

    என் பள்ளி நினைவுகளை திரும்பிப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு தந்த உங்களுக்குத் தான் நன்றி சொல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு
  25. மலரும் அனுபவப் பகிர்வு.எல்லோர் நினைவுகளும் பின்னோக்கி செல்ல வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  26. பள்ளி அனுபவங்கள் உண்மையான ஆத்ம அனுபவங்கள்...படிக்கும் அனைவரையும் அவரவர்களது பள்ளி நாட்களுக்கு அழைத்துச் செல்கிறது....

    பதிலளிநீக்கு
  27. அன்பு நண்பருக்கு உங்களின் பள்ளி அனுபவம் மிகவும் அருமை.
    தொடரட்டும் உங்கள் அனுபவங்கள்,

    விஜயராகவன்

    பதிலளிநீக்கு
  28. உங்கள் பள்ளி நினைவுகள் அருகிலேயே இருக்கின்றன.(வயதில் சொல்கிறேன்) :)
    பசுமை நிறைந்த நினைவுகள். நெய்வேலி வெயில் பேர் பெற்றதாச்சே. .அதிலும் நன்றாகப் படித்து அம்மா அப்பாவைத் திருப்தி செய்திருக்கிறீர்கள்.நல்ல நினைவுகள் வெங்கட்.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. @ ஆசியா உமர்: தங்களது வருகைக்கு நன்றி சகோ... நீங்களும் உங்கள் பள்ளி வாழ்க்கையைப் பற்றி எழுதுங்களேன்.....

    பதிலளிநீக்கு
  30. @ பத்மநாபன்: //பள்ளி அனுபவங்கள் உண்மையான ஆத்ம அனுபவங்கள்...படிக்கும் அனைவரையும் அவரவர்களது பள்ளி நாட்களுக்கு அழைத்துச் செல்கிறது....//

    இனிய அனுபவங்கள் தான் பத்துஜி! தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  31. @ விஜயராகவன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  32. @ பழனி கந்தசாமி: மிக்க நன்றி ஐயா....

    பதிலளிநீக்கு
  33. @ வல்லி சிம்ஹன்: நெய்வேலியில் சூடு கொஞ்சம் அதிகம் தானம்மா... ஆனால் நிறைய மரங்கள் இருந்ததால் அவ்வளவாகத் தெரியாது....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
  34. உங்க பள்ளிக்கூடத்துலே அப்போ சரோஜினி டீச்சர் இருந்தாங்களா?

    பதிலளிநீக்கு
  35. @ துளசி கோபால்: ஆமா டீச்சர். எனக்கு வகுப்பு எடுத்ததில்லை. ஆனால் என் அக்காவிற்கு க்ளாஸ் டீச்சர்....

    தங்களது இரண்டாவது வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  36. ஆஹா...... அவுங்க நம்ம குடும்ப நண்பர்:-) இப்ப சென்னையில் வாசம்.

    அப்போ அவுங்க பிள்ளைகளில் யாராவது (மூணு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்ணும்) உங்க வகுப்பில் இருந்துருக்க ச்சான்ஸ் உண்டு:-)

    பதிலளிநீக்கு
  37. ஆமா வெங்கட் நீங்க சொல்வது சரிதான் வாழ்க்கை எனக்கு நிறையஅனுபவ பாடங்களை கத்துக்கொடுத்திருக்குதான். அதனாலதான் நானும் உங்க எல்லாருடனும் என் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிகிரது இதுவும் ஒரு பாடம்தான்.

    பதிலளிநீக்கு
  38. ஏ! அந்த போட்டோல யாரு! நான் நம்ம ஜேம்ஸ்பாண்ட் "சி.ஐ.டி. சங்கர்"-ன்னுல்லா நெனச்சேன்!

    பதிலளிநீக்கு
  39. சுவாரசியமான நினைவுகள் வெங்கட்.நினைவு வைத்து சிறப்பாக எழுதியிருக்கீங்க.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  40. @ துளசி கோபால்: ஓ... என் அக்காவிற்கு அல்லது அம்மாவிற்கு நினைவிருக்கும். நீங்கள் அனுப்பிய புகைப்படத்தினை அக்காவிற்கு அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  41. @ லக்ஷ்மி: // வாழ்க்கை எனக்கு நிறையஅனுபவ பாடங்களை கத்துக்கொடுத்திருக்குதான். அதனாலதான் நானும் உங்க எல்லாருடனும் என் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிகிரது இதுவும் ஒரு பாடம்தான்.//

    உண்மை அம்மா. உங்கள் அனுபவப் பாடங்களை நீங்கள் பகிர்வதால் எங்களுக்கும் ஒரு படிப்பினை கிடைக்கிறது. தொடருங்கள் அம்மா...

    பதிலளிநீக்கு
  42. நல்லாருக்கு பள்ளிக்கூடம் போனது!

    பதிலளிநீக்கு
  43. @ ஈஸ்வரன்: அட சி.ஐ.டி. ஷங்கர் எங்கே இங்க வந்தார்? :)))

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி.....

    பதிலளிநீக்கு
  44. @ ஸாதிகா: எனது வலைப்பக்கத்தினையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ....

    அங்கேயும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  45. @ ராம்வி: நினைவில் இருந்தவற்றை பகிர்ந்தேன். இன்னும் சிலவற்றை எழுதி இருக்கலாம் என இப்போது தோன்றுகிறது. பிறிதொரு சமயம் “மனச்சுரங்கத்திலிருந்து...’ பகுதியில் எழுதுகிறேன்.

    உங்களது தொடர்ந்த வருகைக்கும் இனிய கருத்துகளுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

    பதிலளிநீக்கு
  46. @ அன்புடன் அருணா: தங்களது வருகைக்கும் பகிர்வினை ரசித்து கருத்துரை வழங்கியதற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  47. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆச்சி.

    பதிலளிநீக்கு
  48. மறக்கமுடியாத நாட்கள் அவை!

    பகிர்வு மிகவும் அருமை

    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  49. @ சேஷாத்ரி. ஈ.எஸ்.: உண்மை நண்பரே... மறக்க முடியாத நாட்கள் தான் அவை..

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  50. நெய்வேலியில் பல நண்பர்கள்! :)))) நல்லா இருக்கு நினைவலைகள்.

    //பத்தாம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வியில் படித்த என்னை பதினொன்றாம் வகுப்பில் ஆங்கில வழி கல்வியில் சேர்த்து விட்டார்கள். முதல் சில மாதங்களில் தட்டுத் தடுமாறினேன்.//

    பல பாடங்களை ஆங்கிலத்திலே படிச்சிருந்தும் எனக்கு இன்னி வரை எல்லா மொழியும் தகராறுதான். அதனால் என்ன? நீங்க பிக் அப் பண்ணிட்டீங்க இல்லை! வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  51. @ கீதா சாம்பசிவம்: பதிவினை ரசித்தமைக்கு ரொம்ப நன்றிம்மா....

    பதிலளிநீக்கு
  52. @ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....