எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, March 2, 2012

புத்தகக் கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்
தில்லியில் ஃபிப்ரவரி 25-ஆம் தேதி [சனிக்கிழமை] உலகப் புத்தகக் கண்காட்சி துவங்கியது.  ஞாயிறு அன்றே போக முடிவு செய்து, தில்லி வலைப்பூ நண்பர்களும் அன்றே வரமுடிந்தால் ஒரு பதிவர் சந்திப்பும் வைத்துக் கொள்ளலாம் என மின்னஞ்சல் தூது விடுத்தேன்…

உடனே பதில் வந்தது நண்பர் செந்தழல் ரவியிடமிருந்து [ஆனால் ஏனோ ஞாயிறன்று அவர் வரவில்லை]. பின்னர்  முத்துலெட்சுமி, லாவண்யா, கலாநேசன், ஆச்சி என்று ஒவ்வொருவராய் சரி எனச் சொல்ல, தமிழ்ப் பதிப்பகங்கள் இருக்கும் 10-ம் எண் அரங்கில் சந்திக்கலாம் என முடிவு செய்தோம். 

காலையிலேயே எழுந்து தயாராகி, துணைவியுடனும், மகள் ரோஷ்ணியுடனும் ஆட்டோவில் பயணித்து நுழைவாயில் எண்-7 ஐ அடைந்தோம்.  அங்கு சென்று நுழைவுச் சீட்டு [பெரியவர்களுக்கு ரூபாய் 20, குழந்தைகளுக்கு 10 ரூபாய்] வாங்கக் கேட்டபோது   சீட்டுகள் நுழைவாயில் 1 மற்றும் 2-இலும் மெட்ரோ அருகிலும் தான் கிடைக்கும் எனச் சொல்ல, பொடி நடையாக இரண்டாம் எண் நுழைவாயிலுக்கு 1 கிலோமீட்டர் நடந்தோம். 

இதை எல்லா நுழைவாயில்களிலும் கிடைக்கும்படி செய்தால் நன்றாக இருக்கும்.  வயதானவர்கள், குழந்தைகள் என அனைவரும் மற்ற இடங்களில் வந்து கேட்டுவிட்டு ஏமாற்றத்துடன் நடந்தனர்.  இரண்டாம் எண் நுழைவாயிலில் இருந்து உள்ளே செல்லவும் நீண்ட தொலைவு நடக்கவேண்டும் [பாட்டரி வண்டிகள் இருந்தாலும் போதிய அளவு இல்லாதது ஒரு குறை தான்].

நான் சென்று சேர்வதற்கு முன்னரே முத்துலெட்சுமி வந்து என்னை அலைபேசியில் அழைத்தார்.  அங்கு சென்றபிறகு தில்லி-ஹரியானா எல்லையில் இருக்கும் பதிவர் ஆச்சி தனது கணவர் மற்றும் பெண்ணுடன் வந்திருந்தார்.  கலாநேசன் [சரவணன்] வந்து சேர்ந்து கொள்ள அனைவருமாகச் சேர்ந்து காலச்சுவடு, பாரதி, நியூ செஞ்சுரி, கிழக்கு, சாந்தா, சந்தியா, சக்தி பதிப்பகங்கள் மற்றும் இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட் ஸ்டால்களை முற்றுகை இட்டோம்.

பதிவர்கள் சேர்ந்தாலே பேச்சு இல்லாமலா இருக்கும்?  புத்தகங்கள், பதிவுலகம், ரசனைகள் என பல்துறை விஷயங்களை அளவளாவியபடியே புத்தகங்களை பார்வையிட்டோம் அவரவர்களுக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கியபடியே. 

பதிவர் ஆச்சிக்கு சில வேலைகள் இருந்ததால் அவர் கிளம்பிவிட, மற்றவர்கள் தொடர்ந்தோம்.  இன்னுமொரு தில்லி பதிவர் திரு ஷாஜஹான் அவர்களையும் இங்கே சந்தித்து பேசிக்கொண்டு இருந்தபோதே மற்றுமொரு தில்லி பதிவர் லாவண்யாவும் வந்துசேர தொடர்ந்தது புத்தகத் தேடலும், பதிவர் சந்திப்பும். 

லாவண்யா அவர்களுடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பான “இரவைப் பருகும் பறவை” காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வெளிவந்து இருக்கிறது [விலை ரூபாய் 70/-].  

என் மகள் சோர்ந்து போய்விட, விரைவில் திரும்பவேண்டியதாயிற்று.  ஆனால் அதற்குள் சில புத்தகங்கள் வாங்கினோம் [இன்று வாங்கியதில் பல அம்மணியின் தெரிவுகள்.  நான் இன்னும் ஒருமுறை செல்ல வேண்டும்].

இன்று வாங்கிய புத்தகங்கள்:

கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன் [அவரின் கரிசல் காட்டு கடிதங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்].
காட்டில் ஒரு மான் – அம்பை [வீட்டின் மூலையில் ஒரு சமையலறை படித்து ரசித்த ஒரு படைப்பு].
பிரசாதம் – சுந்தர ராமசாமி [ஒரு புளியமரத்தின் கதை படித்து அசந்து போயிருக்கிறேன்].
விந்தை மனிதர் ஜி.டி. நாயுடு – ஆ. துரைக்கண்ணு [என்ற அம்மணியோட ஊர்க்காரர்ங்கோ!]
ஒரு வண்ணத்துப் பூச்சியின் கோபம் – பசுமைக்குமார்.
ரமாவும் உமாவும் – திலீப்குமார்
ஒற்றனின் காதலி – கண்ணன் கிருஷ்ணன்
ஃபிஜித்தீவு [கரும்புத் தோட்டத்திலே] – துளசி கோபால் [அட நம்ம டீச்சர் தாங்க!]
இளைஞர்களுக்கான சூப்பர் ஒருவரிப் பொன்மொழிகள் – சி. லிங்கசாமி
பாரதியார் கவிதைகள் – என்னிடம் இருந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தினை படிப்பதற்காய் எடுத்துக்கொண்டு சென்று திருப்பித்தராத அந்த நண்பரை என்ன செய்யலாம்?

கிழக்கு பதிப்பகத்தில் புத்தகங்கள் விற்பனைக்கில்லையாம்.  ஆர்டர் கொடுத்தால் அனுப்பி வைப்பார்களாம்.  அங்கே தான் வாத்தியாரின் நிறைய நாவல்கள் இருந்தது.  ஏக்கத்துடன் பார்த்து விட்டு வந்துவிட்டேன்.  அடுத்த முறை செல்லும்போது ஆர்டர் கொடுத்துவிட்டு வரவேண்டும்.

மணி மூன்றுக்கு மேல் ஆகிவிட மாலை தில்லி தமிழ் சங்கத்தில் எஸ் ரா அவர்களின் “கதை வழி நடந்தேன்” உரையாடல் இருந்ததால் கிளம்பினோம். 

அன்றைய பொழுது புத்தகத்தேடல்களுடனும், பதிவர் சந்திப்புடனும் இனிதே கழிந்தது.  இனி என்ன, வாங்கிய புத்தகங்களை ஒவ்வொன்றாய் படிக்க ஆரம்பிக்க வேண்டும். நான் படிக்க ஆரம்பிக்கிறேன்...  நீங்களும் படிங்க – தொடர்ந்து எனது வலைப்பூவினையும்!

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

64 comments:

 1. அருமை...பதிவர் சந்திப்பு இந்திய தலை நகரில்...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. @ கோவை நேரம்: தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி சகோ...

  ReplyDelete
 3. புத்தகத்தேடல்களுடனும், பதிவர் சந்திப்புடனும் இனிதே கழிந்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. சந்திப்பு மிகமகிழ்ச்சியாக இருந்தது.மற்றவர்களும் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்..

  ReplyDelete
 5. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 6. @ முத்துலெட்சுமி: ஆமாம் முத்துலெட்சுமி. மற்ற தில்லி பதிவர்களும் வர சௌகரியம் இருந்தால் வந்திருப்பார்கள். இன்னும் நன்றாக இருந்திருக்கும்...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 7. பதிவர் சந்திப்புதான் ஹைலைட்ஸ்!!!!

  அதென்னமோ ஒரு கெமிஸ்ட்ரி பதிவர்களுக்குள் இருக்குதுங்க. சந்திச்சால்...... மகிழ்ச்சியும் பேச்சும் கலகலகலகல.....:-))))

  ஃபிஜித்தீவு படிச்சதும் ஒரு விமரிசனம் எழுதுங்க. குட்டு வாங்கிக்கத் தலைக்கு எண்ணெய் தடவி வச்சுக்கறேன்:-)

  ReplyDelete
 8. @ துளசி கோபால்: குட்டு எல்லாம் நிச்சயம் இருக்காது! உங்கள் எழுத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது டீச்சர்....

  விரைவில் படித்து விடுகிறேன்....

  பதிவர் சந்திப்பு நடந்தாலே ஒரு சந்தோஷம்தானே....

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டீச்சர்....

  ReplyDelete
 9. அடேங்கப்பா ! உங்க வீட்டிலேயே மூணு பதிவர் இருக்காங்களே ! உங்க குடும்பம் போனாலே பதிவர் சந்திப்பு களை கட்டிடும்.

  குட்டி பதிவர் கூட்டி போனால், நிறைய சுத்த முடியாது என்பது உண்மை தான்

  புக்கெல்லாம் நல்லா தேர்வு பண்ணிருக்கீங்க.

  சுஜாதா புக் பற்றி சொன்னது தெரியாதா? " உங்கள் நண்பர்களுக்கு புக் இரவல் தராதீர்கள். திரும்ப தர மாட்டார்கள். என்னிடம் உள்ளதெல்லாம் நான் அப்படி வாங்கிய புத்தகங்களே " - சுஜாதா !

  வாத்தியார் என்னா நக்கலா சொல்லிருக்கார் பாருங்க !

  ReplyDelete
 10. @ மோகன் குமார்: //அடேங்கப்பா ! உங்க வீட்டிலேயே மூணு பதிவர் இருக்காங்களே ! உங்க குடும்பம் போனாலே பதிவர் சந்திப்பு களை கட்டிடும். // ம்ம்ம்... :)

  வாத்தியார் சொன்னது நினைவில் இருக்கிறது.... ஆனாலும்.... சில சமயம் நானே கொடுப்பேன். திருப்பிக் கொடுத்துவிடுவார்கள் என நம்புவர்களுக்கு....

  பாரதியார் புத்தகம் அவராகவே எடுத்துப் போனது... அதான் திருப்பி [த]வரலை...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்....

  ReplyDelete
 11. சந்தோஷம்தரும் பதிவர் சந்திப்பு படிக்கும் எங்களுக்கே சந்தோஷமா இருக்குன்னா உங்களுக்கெல்லாம் எப்படி இருந்திருக்கும் போனசாக நல்லபுக்ஸ் வேர சூப்பர்.

  ReplyDelete
 12. @ லக்ஷ்மி: ஆமாம்மா.... ரொம்ப சந்தோஷமா இருந்தது இந்த சந்திப்பும் புத்தக வேட்டையும்....

  உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....

  ReplyDelete
 13. நல்ல தேன் குடிப்பதென்றால் சும்மாவா! மரமேறி தேனியிடம் கொட்டு வாங்கித்தான் ஆகணும். பிரகதிமைதான்காரங்க நீங்க சும்மா வருகிறீர்களா, இல்லை, சின்ஸியரா வருகிறீர்களா என்று நடக்க வுட்டுத் தான் சோதிப்பாங்க.

  //பாரதியார் புத்தகம் அவராகவே எடுத்துப் போனது... அதான் திருப்பி [த]வரலை...//

  இனிமேல் புதுப் புத்தகம் வாங்கும் போது அதன் மேல் “இந்தப் புத்தகம் வெங்கட் வீட்டில் இருந்து சுட்டது” என்று எழுதி வைத்து விடுங்கள்.

  ReplyDelete
 14. @ ஈஸ்வரன்: // “இந்தப் புத்தகம் வெங்கட் வீட்டில் இருந்து சுட்டது” என்று எழுதி வைத்து விடுங்கள்.// அட நல்ல யோசனையா இருக்கு அண்ணாச்சி....

  உங்க கிட்ட என் புத்தகம் ஒண்ணும் இல்லையே! :) சும்மா ஒரு டவுட்டு தான்!

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....

  ReplyDelete
 15. ரோஷ்ணிக்கு என்ன புத்தகம் வாங்கி கொடுத்தீர்கள்?
  சின்ன பதிவருக்கு பிடித்த புத்தகம் கிடைத்ததா?
  கோபல்ல கிராமம் விகடனில் வந்ததை பைண்ட் செய்து வைத்து இருக்கிறேன். மறுபடியும் படிக்க வேண்டும்.
  துளசி கோபால் புத்தகம் வாங்கியது அறிந்து மகிழ்ச்சி.

  பதிவர் சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி.

  ReplyDelete
 16. வெங்கட், வாத்தியாரின் புத்தகங்கள் என்னென்ன வேண்டும் என்பதை ஒரு லிஸ்ட் எடுத்து என் போன்ற சென்னைப் பதிவர்களிடம் கேடடால் வாங்கி அனுப்பி விட் மாட்டோமா..? இதுககுப் போயி வருந்தறீங்க. அப்புறம்... துளசி டீச்சர் எழுதின புத்தகம் எந்தப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது? எனன் விலை? தெரிவியுங்கள். மகிழ்வாய் நடந்த பதிவு நண்பர்கள் சந்திப்புககு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. குடும்பத்தோடு புத்தகக் கண்காட்சியில் கலப்பது என்ன ஒரு சந்தோஷம்? நெய்வேலியில் அப்படித்தான் நான் குடும்பத்தோடு அட்டெண்டென்ஸ் கொடுத்துவிடுவேன். சென்னை ரொம்ப அலுப்பாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
 18. நல்ல பதிவு.பதிவர் சந்திப்பிற்கு சரியான இடம் புத்தககண்காட்சிதான்.

  குழந்தைகளை கூட்டிக்கொண்டு சென்றால் சீக்கிரமாகத்தான் திரும்ப நேரிடம்.எனக்கு இந்த அனுபவங்கள் நிறைய உண்டு.குழந்தைகள் வளர்ந்தவுடன் செல்லலாம் என்றால் நமக்கு வயதாகிவிடுகிறது. முடிவதில்லை.

  ReplyDelete
 19. செய்திகள் கேட்க மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 20. ஒரே கல்லில் இரண்டு மாம்பழம்
  அடித்து அதையும் ஒரு அழகான
  பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. @ கோமதி அரசு: ரோஷ்ணிக்கு இன்னும் புக் வாங்கவில்லை... நாளைக்கு மீண்டும் செல்கிறேன் தனியாக.... அப்போது தான் ஒரு ரவுண்ட் வந்து புத்தகங்கள் வாங்க வேண்டும்..

  உங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா...

  ReplyDelete
 22. @ கணேஷ்: //வாத்தியாரின் புத்தகங்கள் என்னென்ன வேண்டும் என்பதை ஒரு லிஸ்ட் எடுத்து என் போன்ற சென்னைப் பதிவர்களிடம் கேடடால் வாங்கி அனுப்பி விட் மாட்டோமா..? // உங்கள் அன்புக்கு மிக்க நன்றி நண்பரே....

  //துளசி டீச்சர் எழுதின புத்தகம் எந்தப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது? எனன் விலை? // துளசி டீச்சர் புத்தகம் “சந்தியா பதிப்பகம்” [அஷோக் நகர், சென்னை] வெளியிட்டு இருக்கிறது. விலை 120.

  தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரை அளித்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 23. @ சுந்தர்ஜி: குடும்பத்துடன் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது மிகவும் சந்தோஷமான ஒன்று....

  நெய்வேலியில் நான் இருந்தவரை [1991] புத்தகக் கண்காட்சிகள் நடந்ததில்லை என்பதில் எனக்கு வருத்தம்... :)

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி!

  ReplyDelete
 24. @ ராம்வி: //குழந்தைகள் வளர்ந்தவுடன் செல்லலாம் என்றால் நமக்கு வயதாகிவிடுகிறது. முடிவதில்லை.// உண்மை ரமா ரவி....

  ஆனால் குழந்தைகள் உடன் செல்லும் போது அவர்களும் நன்றாக சந்தோஷப்பட முடிகிறது... எவ்வளவு நேரம் அவர்கள் இருக்கிறார்களோ அதுவரை இருந்துவிட்டு வந்து விடவேண்டியது தான்.... இன்னுமொரு முறை செல்ல நினைத்திருக்கிறேன் நாளை.... பார்க்கலாம்.

  தங்களது தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி ரமா ரவி..

  ReplyDelete
 25. உலக புத்தக கண்காட்சி + பதிவர் சந்திப்பு நல்ல வர்ணனை... க்குட்டிப் பதிவருக்கு இப்பவே புத்தக உலா..வாழ்த்துகள்...

  வாத்தியார் புத்தகத்துக்கு சென்னை வந்தால் அள்ளலாம்.. ஒவ்வோரு முறையும் ஹிக்கீம் பாதம்ஸ் ல் பார்க்கிறேன்...வாத்தியார் புத்தகத்திற்கான பிரத்யேக அலமாரியில் புதிது புதிதாக வந்துகொண்டே இருக்கிறது.. சென்ற முறை வாங்காமல் விட்டது... எஸ் ரா அவர்கள் வாத்தியார் எழுத்துகளை தொகுத்த ஒரு புத்தகம்.. ’’என்றும் சுஜாதா’’ பதிப்பு காலியாவதற்கு முன் அடுத்த தடவை வாங்கவேண்டும்..

  ReplyDelete
 26. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது தொடர் வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரை இட்டதற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சார்....

  ReplyDelete
 27. @ ரமணி: //ஒரே கல்லில் இரண்டு மாம்பழம் // ஆமாம் சார்.. இரண்டுமே சுவையான பழங்கள்... :)

  தங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும், தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 28. @ பத்மநாபன்: ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும், நானும் நிறைய புத்தகங்கள் வாங்குவது வழக்கம்....

  எஸ். ரா. தொகுத்த “என்றும் சுஜாதா” நானும் இன்னும் படிக்கவில்லை.... வாங்கிவிடுகிறேன்...

  தங்களது வருகைக்கும் சுவையான தகவலுக்கும் மிக்க நன்றி பத்துஜி!

  ReplyDelete
 29. ஒவ்வொண்ணா வாசிச்சப்புறம் விமர்சனம் எழுதுங்க.

  ReplyDelete
 30. கணேஷ்,

  இவ்வளவு ஆர்வமாக் கேட்கும் உங்களை விடறதா இல்லை.

  http://thulasidhalam.blogspot.com/2010/01/blog-post_23.html


  http://thulasidhalam.blogspot.com/2010/06/blog-post_12.html


  http://thulasidhalam.blogspot.com/2011/01/blog-post_06.html

  அப்போ போட்ட சுய தம்பட்டங்களின் சுட்டிகள் இவை. மூணும் சந்தியா பதிப்பகம். 80, 200, 120ன்னு விலை போட்டுருக்காங்க.

  வெங்கட்...மன்னிக்கணும். உங்க பதிவில் விளம்பரம் போட்டுட்டேன். மாப்ஸ் கேட்டோ:-))))

  ReplyDelete
 31. உலக கண்காட்சியில் தமிழ் புத்தகம் மட்டும் தான் வாங்கினீர்களா வெங்கட்...அத்தனை தமிழ் பற்றா?

  ReplyDelete
 32. சுட்ட‌து சுடாத‌து எல்லாவ‌ற்றையும் ந‌ம்பிதானே ஆண்டுதோறும் ப‌ல‌ இட‌ங்க‌ளில் புத்த‌க‌க் க‌ண்காட்சி ந‌ட‌த்த‌ப்ப‌டுவ‌து...! கிவ் அண்ட் டேக் பாலிசியில் புத்த‌க‌ங்க‌ளைப் ப‌கிர்ந்து கொள்வ‌து வாசிப்பை நேசிப்ப‌வ‌ர்க‌ளிடையே த‌விர்க்க‌ முடியாத‌தொரு ப‌ழ‌க்க‌ம். சொல்லாம‌ல் எடுப்ப‌து திருட்டு... 'ப‌டிச்சுட்டு த‌ர்றேன்' என‌ சொல்லிச் செல்வ‌து 'புர‌ட்டு'! ஹ‌ ஹ‌ ஹா...!
  சென்னை புத்த‌க‌க் க‌ண்காட்சிக்கு அடுத்த‌ இட‌த்திலிருக்கும் நெய்வேலி புத்த‌க‌க் க‌ண்காட்சிக்கு (ஜீன்_ஜீலை) ஒரு ந‌டை வாங்க‌ளேன் ச‌கோ...

  ReplyDelete
 33. @ அமைதிச்சாரல்: //ஒவ்வொண்ணா வாசிச்சப்புறம் விமர்சனம் எழுதுங்க.//

  எழுதிடுவோம்... - ஆளுக்குப் பாதியாய் [இரண்டு பதிவர் வீட்டிலேயே இருப்பதால் சமத்துவம்!]

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்....

  ReplyDelete
 34. @ துளசி கோபால்: //வெங்கட்...மன்னிக்கணும். உங்க பதிவில் விளம்பரம் போட்டுட்டேன். மாப்ஸ் கேட்டோ:-))))// அடடா இதுக்கு எதுக்கு மன்னிப்பு...

  எனக்கும் விஷயங்கள் கிடைக்குதே... :)) சந்தியா பதிப்பக ஸ்டாலில் கேட்டேன் - மற்ற இரண்டு புத்தகங்கள் கொண்டு வரலையாம்! சென்னை போனா வாங்கணும்....

  இரண்டாம் வருகைக்கு நன்றி டீச்சர்....

  ReplyDelete
 35. @ ரெவெரி: //அத்தனை தமிழ் பற்றா?// முதல் நாளில் வெறும் தமிழ் பதிப்பகங்களுடைய ஸ்டால்களுக்கு மட்டுமே செல்ல முடிந்தது.. இன்று மீண்டும் செல்கிறேன்.. அப்போது வாங்க வேண்டும் மற்ற மொழிப் புத்தகங்கள்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரெவெரி.

  ReplyDelete
 36. @ நிலாமகள்: //சென்னை புத்த‌க‌க் க‌ண்காட்சிக்கு அடுத்த‌ இட‌த்திலிருக்கும் நெய்வேலி புத்த‌க‌க் க‌ண்காட்சிக்கு (ஜீன்_ஜீலை) ஒரு ந‌டை வாங்க‌ளேன் ச‌கோ...//

  நான் நெய்வேலியில் இருந்த [1991] வரை புத்தகக் கண்காட்சி நடந்ததில்லை... ஒவ்வொரு முறை நடக்கும்போதும் இங்கே இருந்து ஏக்கப் பார்வை பார்ப்பதோடு சரி....

  இந்த முறை நடக்கும் விஷயம் தெரிந்தவுடன் சொல்லுங்களேன்... சற்று முன்பே தெரிந்தால், வர முயற்சிக்கிறேன்.

  தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 37. கலந்து கட்டி புத்தகங்கள் தேர்வு.. எல்லா ரசனையிலும்.

  ReplyDelete
 38. @ ரிஷபன்: //கலந்து கட்டி புத்தகங்கள் தேர்வு.. எல்லா ரசனையிலும்.// ஆமாம்.... :))

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 39. துளசி கோபால் said...

  அப்போ போட்ட சுய தம்பட்டங்களின் சுட்டிகள் இவை. மூணும் சந்தியா பதிப்பகம். 80, 200, 120ன்னு விலை போட்டுருக்காங்க.

  -குறிச்சுக்கிட்டேன் டீச்சர். நனறி. சுயதம்பட்டம்னு நீங்க அடக்கமா சொல்லிக்கிறதை நாங்க அனுபவப் பகிர்வுன்னு கொண்டாடுவோம். அவசியம் வாங்கிப் படிச்சுட்டு (எவ்ளவ் நாள்லன்னு மட்டும் கேட்டுராதீங்க) தொடர்பு கொள்றேன்... நன்றி.

  ReplyDelete
 40. @ கணேஷ்: தங்களது இரண்டாவது வருகைக்கு நன்றி நண்பரே....


  //சுயதம்பட்டம்னு நீங்க அடக்கமா சொல்லிக்கிறதை நாங்க அனுபவப் பகிர்வுன்னு கொண்டாடுவோம். // அதே அதே.... :)

  ReplyDelete
 41. எல்லாப் புத்தகங்களுமே அருமை. குறிப்பாக ராஜநாராயணன், சுந்தரராமசாமி இருவருமே எனக்குப் பிடித்தவர்கள். படித்துவிட்டு எழுதுங்கள். காத்திருக்கிறேன். நன்றி.

  ReplyDelete
 42. @ துரைடேனியல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.. சீக்கிரமே படித்து எழுதுகிறேன்...

  தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பரே..

  ReplyDelete
 43. அன்றைக்கு வீடு காலி செய்யும் வேலை வந்து உங்களை எல்லாம் சந்திக்க முடியாம போயிட்டது. மன்னித்துவிடுங்கள் மக்கள்ஸ்/

  ReplyDelete
 44. ரவி,

  இந்தியாவுலேயா இருக்கீங்க? குழந்தை நலமா?

  ReplyDelete
 45. @ செந்தழல் ரவி: ஓ.... நாங்கள் அன்று உங்களை சந்திக்க முடியாததில் வருத்தம் தான். உங்கள் அலைபேசி எண்ணும் என்னிடம் இல்லாததால் உங்களை அழைக்க முடியாமல் போய்விட்டது.

  மீண்டும் விரைவில் சந்திப்போம்... அடுத்த சந்திப்பு பற்றி விரைவில் சொல்கிறேன்...

  ReplyDelete
 46. @ துளசி கோபால்: மீண்டும் வந்ததற்கு ஒரு நன்றி. இப்போது ரவி தில்லியில் தான் தாமசம் கேட்டோ :)))

  ReplyDelete
 47. பதிவர் சந்திப்பு மகிழ்வான செய்தி!
  அனுமதிச் சீட்டுபெற பெற்ற அவதி வருந்தத்
  தக்கதே
  பகிர்வுக்கு நன்றி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 48. @ புலவர் சா இராமாநுசம்: அனுமதிச் சீட்டு பெற வேண்டி அலைந்த முதியவர்கள் தான் பாவம். இந்த சனிக் கிழமை எல்லா வாயில்களிலும் கொடுத்தார்கள்.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே.

  ReplyDelete
 49. அன்று நுழைவுச்சீட்டிற்கு அலையவிட்டதில் பலரும் நொந்து போனார்கள்.எளிமையான சந்திப்பும் உரையாடலும் என்றும் மறக்க முடியாது.14 ஆம் நம்பரில் grolier home education system ல் என் மகளுக்கு புத்தகம் வாங்கினோம்.தமிழ் புத்தகமும் மகளுக்கு மட்டுமே!ஒரே ஒடூ,ஓடுதான் அன்று.எனினும் கற்றது கைமண்ணளவும் இல்லை,கடுகளவும் இல்லைன்னு புத்தக கண்காட்சி உணர்த்துவதை ரெண்டு பேரும் பேசிகிட்டே வந்தோம்.

  ReplyDelete
 50. உங்கள் நேரடி அறிமுகம் கண்காட்சியில்தான் கிடைத்தது. ஏற்கெனவே முத்துலட்சுமி மூலம் தொடர்பு கொண்டிருந்தால் இலவச நுழைவுச்சீட்டுகள் வேண்டுமட்டும் அளித்திருப்பேன். ஏழாம் எண் வாயிலில் ஏன் நுழைவுச்சீட்டுகள் விற்கவில்லை என்று புரியவில்லை. ஒருவேளை பதினொரு மணிக்கு முன்னரே சென்று விட்டீர்களோ... வாங்கிய நூல் பட்டியல் பார்த்தேன். ஜி.டி. நாயுடு புத்தகத்தை இரவல் வாங்க ஆசை (பாரதியார் கவிதைக்கு ஆன கதி நிச்சயம் ஆகாது). கோயமுத்தூர்காரனுங்கோ... அதா ஆசைய சொல்லிப்புட்டேனுங்கோ... ஜனவரியில் கோவை சென்றபோது விஜயாவில் ஜி.டி. நாயுடு பற்றிய சிறிய நூல் ஒன்றை வாங்கி வந்தேன். அவ்வளவு சிறப்பாக இல்லை. ஒருவேளை இதுவும் அதேதானோ என்று சரிபார்க்க வேண்டும். கடைசிநாள் வாங்கிய பட்டியலை இன்று வெளியிடப் போகிறேன். அதுசரி, வாசிப்பை நேசிப்போம்-ங்கறது இந்தப் புத்தகக் கண்காட்சிக்காக நான் காயின் செய்தது. நிலாமகள் அதையே பயன்படுத்தியிருக்கிறார். ஏற்கெனவே இது புழக்கத்தில் இருக்கிறதா என்ன... மற்றிரு பதிவர்களை சந்திக்க இயலாதது வருத்தம்தான். விரைவில் சந்திப்போம்.

  ReplyDelete
 51. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: அன்று உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் சந்தித்ததில் எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி ஆச்சி..

  நாங்களும் அன்று மாலை வந்து விட்டோம் வீட்டிற்கு. பிறகு தமிழ் சங்கத்தில் எஸ். ரா. நிகழ்ச்சிக்கு நானும், முத்துலெட்சுமியும் சென்றோம்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆச்சி.

  ReplyDelete
 52. @ ஷாஜஹான்: தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

  அடுத்த முறை சந்திக்கும் போது ஜி.டி. நாயுடு பற்றிய புத்தகம் தருகிறேன்....

  வாசிப்பை நேசிப்போம் - நானும் முன்பே கேட்டிருக்கிறேன்....

  விரைவில் சந்திக்கலாம். பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்தால் உங்களுக்கும் சொல்கிறேன்.

  ReplyDelete
 53. பதிவர்கள் பலரையும் சந்தித்தமைக்கு வாழ்த்துகள். லாவண்யா எந்த லாவண்யா? லாவண்யா சுந்தரராஜன்? அகநாழிகை??? இப்போ டில்லி வந்துட்டாங்களா?

  ReplyDelete
 54. @ கீதா சாம்பசிவம்: வாழ்த்துகளுக்கு நன்றி.

  ஆமாம், தில்லியில் [குர்காவ்ன்]ல தான் இருக்காங்க. அகநாழிகை லாவண்யா சுந்தரராஜனே தான்....

  ReplyDelete
 55. நான் பதிவெழுதி பல மாதங்கள் ஆனபோதும் உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 56. @ கலாநேசன்: தங்களை சந்தித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி சரவணன்...

  நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து எழுதுங்கள்...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 57. குர்காவ்(ன்)லே தான் என் மைத்துனர், மாமியார் இருக்காங்க. முடிஞ்சப்போ மாமியாரைப் பார்க்க நாங்க அங்கே வருவோம். லாவண்யா கிட்டே ரொம்பக் கேட்டதாச் சொல்லுங்க. (பார்க்கையில் சொன்னால் போதும்.)

  ReplyDelete
 58. @ கீதா சாம்பசிவம்: ஓ.... நிச்சயம் லாவண்யாவிடம் சொல்கிறேன்....

  ReplyDelete
 59. http://sivamgss.blogspot.com/2009/07/blog-post_14.html

  http://sivamgss.blogspot.com/2009/07/blog-post_762.html

  லாவண்யா முன்னர் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் கொடுத்திருந்தேன். அவங்க பார்த்ததாய்த் தெரியலை. நேரம் இருந்தால் பாருங்க. தொந்திரவுக்கு மன்னிக்கவும். :)))))

  ReplyDelete
 60. @ கீதா சாம்பசிவம்: நீங்கள் கொடுத்த சுட்டிகள் மூலம் பதிவுகளைப் படித்தேன்.... நல்லா எழுதி இருக்கீங்க....

  ReplyDelete
 61. மகிழ்ச்சியான சந்திப்பில் கலந்து கொள்ளக் கிடைத்தது.

  ReplyDelete
 62. @ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....