எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, March 12, 2012

என்னைக் கண்டுபிடிங்களேன்….

Liu Bolin – சீனாவில் 1973 - ஆம் வருடம் பிறந்த இவர் The Invisible Man என்று அழைக்கப்படுகிறார்.  ஏன் எனக் கேட்பவர்களுக்கு, கீழே இருக்கும் புகைப்படங்களைப் பாருங்களேன்.  “Hiding in the City” என்று இவர் செய்த விஷயங்கள் மிக மிக அருமை.  நான் ரசித்த புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

[என்ன, அவரைக் கண்டு பிடிச்சீங்களா?][வாழ்க்கையில் படிக்கட்டு ரொம்ப முக்கியம்!]

[பார்த்துங்க.....  தண்ணி வந்துடப் போகுது....]

[காலு காட்டிக் கொடுத்துடுச்சோ....]

[இயற்கையோடு இயற்கையாக.....]

[பார்த்து, அவரைக் கண்டுபிடிக்கறேன்னு, தண்ணில விழுந்துடாதீங்க...]

[இது தான் சீனப் பெருஞ்சுவரா?]

[ஆஹா....  அருமை]

[பூவோடு பூவாய்...]

[இந்தப் படத்திலே எங்க இருக்காருன்னு பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....]


மீண்டும் சந்திப்போம்…

வெங்கட்
புது தில்லி.

50 comments:

 1. @ எல்.கே: உடனடி வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் நன்றி கார்த்திக்.

  ReplyDelete
 2. நல்ல நல்ல படங்கள்.

  கடைசியில் கண்டு பிடிக்கலாம்னு பார்த்தா கண்ணை வலிக்குதே!

  சரி அவர் எங்கே இருந்தால் நமக்கென்ன என்று விட்டுவிட்டேன்.

  நல்ல பதிவு. நன்றி.

  ReplyDelete
 3. @ வை. கோபாலகிருஷ்ணன்: அடடா கண் வலி வந்து விட்டதா....

  தங்களது வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 4. அருமை அருமை
  பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. @ ரமணி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும், பதிவினை ரசித்து வாக்களித்தமைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 6. படங்கள் அருமை. இந்த டெக்னிக் எப்படி செய்றார், ஏன் செய்றார்னும் எழுதியிருக்கலாம்.

  ReplyDelete
 7. எல்லாப் படங்களிலும் அவரது ஷூதான் அவரைக் காட்டிக் கொடுத்தது. கடைசிப் படத்திலும் அதைவைத்தே கண்டுபிடிச்சுட்டேன்!! முன்பக்க டயர் அருகில் நிற்கிறார்!!

  ReplyDelete
 8. @ சிவா: உங்களது முதல் வருகைக்கு நன்றி.

  சரியாகச் சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 9. @ ஹுசைனைம்மா: அட... ஆமாம் சொல்லி இருக்கலாம் இல்ல... :) அப்டேட் பண்ணிடறேன்....


  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 10. படவுகள் அருமை!

  என்னால் கண்டுபிடிக்க இயல வில்லை!

  வயதின் கோளாறு!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 11. வித்தியாசமான படங்கள்.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 12. படங்கள் யாவும் அருமையா கண்ணில் நிற்கிறதே....!!!

  ReplyDelete
 13. மூக்குக் கண்ணாடியை கழற்றி வைத்துப் பார்த்து கண்டுபிடித்து விட்டேன். எங்கேன்னு அப்புறம் சொல்றேன்.

  (இந்த சீனாக்காரர் போட்டோலதான் invisible. இப்போ நிறைய சீனாக்காரர்கள் invisible - ஆக நம்ம அண்டைநாடுகளை அணுகுகிறார்களாமே!)

  ReplyDelete
 14. கடைசிப் படத்தில் டயர் பக்கத்தில் இருக்கார் சரியா வெங்கட்.
  ஆச்சர்யமான பதிவு. மிக மிக நன்றிமா.
  எப்படிச் செய்தார்னும் சொல்லுங்க.

  ReplyDelete
 15. அவருக்கு இன்விசிபில் மேன் என்பது பொருத்தமாதான் இருக்கு.

  ReplyDelete
 16. nfront of the tiers --அறிவுள்ளவர்கள் கணகளுக்குமட்டும் தெரியுமோ அவர் கால்கள்!!

  ReplyDelete
 17. அவர் டயர்ல இருக்கறதை என்னோட ‘ஞான’க்கண் காட்டுக் குடுத்துடுச்சு வெங்கட். அருமையான படங்கள். எங்கப்பா புடிச்சிங்க. அருமை.

  ReplyDelete
 18. படங்கள் நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 19. //இந்தப் படத்திலே எங்க இருக்காருன்னு பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்...//

  tractor wheel

  ReplyDelete
 20. படங்களில் மறைந்திருக்கும் உங்கள் ஆர்வத்தையும் கண்டு பிடிக்க முடிகிறது!

  ReplyDelete
 21. நல்ல பகிர்வு.டயர்ல இருக்கார்!

  ReplyDelete
 22. விந்தையோ என
  வியக்க வைக்குது நண்பரே...

  அற்புதமான விஷயத்தை
  பகிர்ந்தமைக்கு நன்றிகள்...

  ReplyDelete
 23. முன் டயருக்கு முன்னால . இருக்காரு..

  ReplyDelete
 24. புது விதமான Hide & Seek.

  ReplyDelete
 25. சக்கரத்தோடு நிக்கிறார்.

  இது நிஜம்மா,இது எப்படி சாத்தியம்.

  ReplyDelete
 26. முன் டயருக்கு அடியில் ரெண்டு ஷூ தெரியுதுங்க:-)))))

  அருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 27. புதுமையான படங்கள்.பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 28. Yarupaa athu? Seekkiram sollunga. Summaa teknikkukkaga seythathaa? Nija aal illaiyaa?

  ReplyDelete
 29. வெங்கட், நல்லா படங்காட்ரயே!

  பத்து,
  //மூக்குக் கண்ணாடியை கழற்றி வைத்துப் பார்த்து கண்டுபிடித்து விட்டேன். எங்கேன்னு அப்புறம் சொல்றேன்.//
  படத்தில் அவரைக் கண்டுபிடித்து விட்டீர்கள் சரி! மூக்குக் கண்ணாடியைக் கண்டுபிடித்தீர்களா இல்லையா? அதையாவது சொல்லுங்க

  ReplyDelete
 30. பிளக் பக்கம் வந்தமா, பதிவு போட்ட்மா, மொய் வச்சோமான்னு இல்லாம பொறுப்பில்லாம கண்ணாமூச்சி விளையாடுறவனை பத்தி நமக்கென்ன கவலை. விடுங்க சகோ.

  ReplyDelete
 31. கடைசி படத்தில் முன் பக்க சக்கரங்களுக்கு முன் தான் இருக்கிறார். ஹுசைனம்மா சொன்னது போல, கால்கள் தான் காட்டிக் கொடுத்திருக்கிறது. சீனாவின் பீஜிங் நகரத்தில் அமைந்து வந்த Suo Jin Cun என்ற ஆர்டிஸ்ட் கிராமத்தினை அரசு முடக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்படி ”இன்விசிபிள் மேன்” சீரிஸ் ஆரம்பித்தார்.

  படங்களைப் பார்த்து கருத்து தெரிவித்த கீழ்க்கண்ட அனைவருக்கும் நன்றி....

  @ புலவர் சா இராமாநுசம்
  @ மாதேவி
  @ MANO நாஞ்சில் மனோ
  @ ஈஸ்வரன்
  @ வல்லி சிம்ஹன்
  @ லக்ஷ்மி
  @ ராஜராஜேஸ்வரி
  @ கணேஷ்
  @ புதுகைத் தென்றல்
  @ கோவி. கண்ணன்
  @ கே.பி. ஜனா
  @ சென்னை பித்தன்
  @ மகேந்திரன்
  @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்
  @ Sunnyside [சூர்யா]
  @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்
  @ துளசி கோபால்
  @ ராமலக்ஷ்மி
  @ ஸாதிகா
  @ மோகன்குமார்
  @ வேங்கட ஸ்ரீனிவாசன்
  @ ராஜி
  @ பழனி. கந்தசாமி

  ReplyDelete
 32. முன் சக்கர அருகில்...

  ReplyDelete
 33. @ ரெவெரி: சரி... வருகைக்கு மிக்க நன்றி ரெவெரி.

  ReplyDelete
 34. கண்டு பிடிச்சவங்களுக்கு நன்றி மட்டும்தானா! த்ரிஷா கூட டின்னர் கிடையாதா!

  ReplyDelete
 35. படங்களைப் பார்த்தபிறகு ஆர்வத்தால் ஆராயப் புகுந்தேன். இன்னும் பல படங்கள் கிடைத்தன. ஆனால் பெரும்பாலானவற்றில் அவருடைய ஒரே படம்தான் சூபர்-இம்போஸ் செய்யப்பட்டுள்ளதை கவனித்தீர்களா... எதிர்ப்புக்காட்டும் முறை புதிதாக இருக்கிறது என்றாலும் இது போட்டோஷாப் எஃபக்ட் ஆக இருக்கிறதே என்ற குறையும் தோன்றுகிறது. அல்லது அப்படியே திருப்பிப்போட்டு மாற்றியும் சொல்லலாம் - இது போட்டோஷாப் எஃபக்ட் ஆக இருக்கிறது என்றாலும் எதிர்ப்புக்காட்டும் முறை புதிதாக இருக்கிறது.
  எப்படியோ, புதிய தகவல் ஒன்றை அறியச்செய்ததற்கு நன்றி.

  ReplyDelete
 36. புதுமையான படங்கள்.பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 37. @ ஈஸ்வரன்: //கண்டு பிடிச்சவங்களுக்கு நன்றி மட்டும்தானா! த்ரிஷா கூட டின்னர் கிடையாதா!// சுசீந்திரத்தில் கேட்டுட்டு சொல்றேன்.... :)

  தங்களது இரண்டாவது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 38. @ ஷாஜஹான்: நிறைய படங்கள் இருந்தன. சிலவற்றை மட்டுமே பகிர்ந்தேன்.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 39. @ ரிஷபன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 40. அன்பின் வெங்கட் நாகராஜ் - அருமையான படங்கள் - ந்ண்பர்கள் பலர் கண்டு பிடித்து விட்டனர். நானும் தேடித் தேடிக் கண்டுபிடித்து - மறுமொழிக்கு வந்தால் பலரும் கண்டு படித்து எழுதி விட்டனர். நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 41. @ சீனா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனா ஐயா.... நிறைய படங்களில் கால் தான் காட்டிக் கொடுத்தது....

  ReplyDelete
 42. அருமையான படங்கள். தாமதமாய் வந்ததனால் பலனும் கிடைத்தது. :))))

  ReplyDelete
 43. @ கீதா சாம்பசிவம்: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 44. அருமை
  எல்லாவற்றிலும் தெரிந்தது ஹாட் லிங்க் அலா பண்ணல்லிங்க நீங்க ஹெல்ப் பண்றீங்களா
  நன்றி

  ReplyDelete
 45. @ Alkan: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....