திங்கள், 11 பிப்ரவரி, 2013

சூரஜ்குண்ட் மேளா போகலாம் வாங்க! – முதல் பகுதி



 ேளா அழைப்பிழ்: ப உதவி: கூகுள்
தில்லியிலிருந்து ஆக்ரா செல்லும் போது தில்லியைத் தாண்டினால் ஃபரிதாபாத் வருவது உங்களில் பலருக்குத் தெரியும். அதுபோலவே தெற்கு தில்லியிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு கிராமம் சூரஜ்குண்ட்.  இங்கே ஒவ்வொரு வருடத்தின் ஃபிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் பதினைந்தாம் தேதி வரை மேளா நடைபெறும். இந்த வருடம் இருபத்தி ஏழாவது சூரஜ்குண்ட் க்ராஃப்ட்ஸ் மேளா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் SAARC நாடுகளிலிருந்தும் நுண்தொழில் கலைஞர்கள் வந்து தங்களது கைவினைப் பொருட்கள், கைத்தறி, நறுமணம் கமழும் பொருட்கள், உணவு வகைகள் என அனைத்தையும் கிராமிய சூழலில் கடை விரிப்பார்கள். இந்த மேளா நடக்குமிடத்தில் நிறைய கருவேல மரங்கள், மரங்களுக்கு நடுவே மண்ணாலான மேடைகள் அமைக்கப்பட்டு, கோரைப் புல்லால் தயாரிக்கப்பட்ட மேற்கூரை என கிராமத்துக்குச் சென்ற ஒரு உணர்வு கிடைக்கும்.

தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்து வந்திருக்கும் கலைஞர்கள் தங்களது இசை, நடனம் என நாட்டுப்புற நிகழ்ச்சிகளை நடத்தி வரும் காட்சியாளர்களை மகிழ்விப்பார்கள். அது தவிர தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் பள்ளி/கல்லூரி மாணவ/மாணவிகளும் கலைநகழ்ச்சிகள் நடத்துவார்கள்.

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தினை மேளாவின் கருப்பொருளாகக் கொண்டு மேளா நடக்கும். இந்த வருடத்தின் மேளாவின் மையக்கரு தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகம். சென்ற வியாழனன்று [07.02.2013] நானும் சில நண்பர்களும் சூரஜ்குண்ட் நுண்தொழில் மேளாவிற்குச் சென்றிருந்தோம்.

ங்கான் ுழைவுச்சீட்டு வங்கும். 
ஆளுக்கஅம்பு ரூபாய் என் கக்கில் அனுப்பிடங்க. நான் ான் உங்கை கூட்டிட்டு போறேனே...

தில்லியின் பல பகுதிகளிலிருந்தும் ஹரியானாவின் போக்குவரத்து நிறுவனம் பேருந்துகளை இயக்குவதால், சுலபமாக மேளா நடக்கும் சூரஜ்குண்ட் செல்ல முடியும். வீட்டின் அருகில் இருக்கும் சிவாஜி ஸ்டேடியம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும் ஒரு பேருந்தில் [பயணக் கட்டணம் ரூபாய் 21] பயணித்து மேளாவினை அடைந்தோம். பேருந்து தவிர மெட்ரோ மூலமும் தனியார் வாகனங்கள் மூலமும் இவ்விடத்திற்குச் செல்லலாம். மேளா நுழைவுக்கட்டணமாக ரூபாய் ஐம்பது வசூலிக்கப் படுகிறது. இணையம் மூலமாகவும் நுழைவுச் சீட்டு பெற முடியும்.

ஈ Gate ண்ட பேரு எந்தா அறியோ? கோட்டையம்பலம்  Gate.... 
கோட்டையம்பலம் கேட்னு சொல்ல வராது இங்கத்திகாரங்களுக்கு. 
அதுனால கேரளா கேட்



பின்னாடி நீலச் சட்டை போட்டவரு ராட்டை சுத்தல...  
அவர் போக்கில நடந்து போறாரு!

இந்த மேளா நடக்கும் திடலுக்கு உள்ளே நுழைய ஷேகாவதி, கேரளா நுழைவாயில், தந்தேஷ்வரி, TRC நுழைவாயில் என மொத்தம் நான்கு வழிகள். நாங்கள் கேரளா நுழைவாயில் வழியே உள்ளே சென்றோம். கேரள நுழைவாயில் பக்கத்திலேயே ஒரு பெரிய நூல் நூற்கும் இராட்டையும் இருக்கிறது.

 ’நான் ரெடி.. நீங்க ரெடியா?’ கேட்கும் ஒட்டகம்

நுழைவாயிலில் இரண்டு ஒட்டகங்கள், மற்றும் குதிரை ஒன்றும் காத்திருக்கிறது. ஒட்டக சவாரி செய்ய ஆசையாக இருந்தால் நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுமில்லை – அங்கே சென்றால் போதும். சாதாரணமாக இது போன்ற இடங்களில் நம்மை ஒரு பெரிய மேடை மேலே ஏற்றி, அதன் அருகே நின்று கொண்டிருக்கும் ஒட்டகத்தின் மேல் அமர்த்துவார்கள். ராஜஸ்தானில் கீழே அமர்ந்திருக்கும் ஒட்டகத்தின் மேல் உங்களை அமர்த்தி ஒட்டகத்தினை மேலே எழுந்திருக்க வைப்பார்கள். அப்போது நீங்கள் கூச்சல் போடுவது நிச்சயம்! அவ்வளவு பெரிய ஒட்டகம் எழுந்திருக்கும்போது மேலும் கீழும் போனா எப்படி இருக்கும்!

 கிராமிய சூழலில் கடைகள்.

 ிளக்கு அலங்காரங்கள்

உள்ளே நுழைந்ததும் ஒரு கிராமத்தினுள் சென்ற அனுபவம் உங்களுக்குக் கிடைக்கும். பலவிதமான பீங்கான் பொருட்கள், மரப் பொருட்கள், துணிகள், நுண்ணிய வேலைப்பாடு செய்யப்பட்ட பொருட்கள், விதவிதமான ஆடைகளில் பலதரப்பட்ட மக்கள் என காணும் பக்கமெல்லாம் காட்சிகள் உங்களைச் சுண்டி இழுக்கும்.

  ிிான பொம்மைகள், பூ ஜாடிகள்.

இந்த மேளாவில் நான் கண்ட காட்சிகள், பார்த்த பொருட்கள், வாங்கிய பொருட்கள், உண்ட உணவு என்பது போன்ற விவரங்கள் அடுத்த பதிவுகளில் தொடரும்.....  சீக்கிரமே போட்டுடறேன் கவலைப்படாதீங்க!

இம்மேளா பற்றிய அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

38 கருத்துகள்:

  1. படங்களுடன் அருமையான தகவல்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  2. சூரஜ்குண்ட் மேளா மிகவும் அருமை.
    உங்களுடன் நாங்களும் வந்து பார்த்து விட்டோம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. கண்களைக் கவரும் அருமையான படங்களுடன் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  4. ஒருமுறை சென்று இருக்கிறேன்.
    சூழல் நீங்கள் சொன்னது போல ரம்மியமாக இருக்கும்.
    ஆலு டிக்கி முதன் முதலில் இங்கே தான் அவர் எனக்கு
    அறிமுகம் செய்தார். அருமையான பதிவு.
    அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன் ......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ. நீங்க தில்லில இருந்தீங்களா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

      நீக்கு
    2. ஆம் VN சார் ! தில்லிக்குப் பக்கத்தில் !
      வசந்த காலத்தின் முதல் சில வருடங்கள் !

      நீக்கு
  5. படங்களும் அதன் தகவல்களும் ரொம்ப நல்லா இருக்கிறது......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி........

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலர்.

      நீக்கு
  6. படங்களும் தகவலும் மிக சிறப்பு.தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

      நீக்கு
  7. கடைகளும், விளக்கு அலங்காரமும், பொம்மைகளும் மனதையும் கண்ணையும் ஈர்க்குது. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. மேளா விஜயம் நன்றாக இருந்தது.

    (சூரஜ்குந்த் - சூரியன் ஒய்வெடுக்க குந்திச் சென்ற இடமா?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னா ஒரு டவுட்டு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் (ஈஸ்வரன்) அண்ணாச்சி.

      நீக்கு
  11. படங்களும் பகிர்வும் அருமை. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  12. படங்கள் ஒவ்வொன்றும் கதை பேசுகின்றன. நீங்கள் விவரிக்கும் அனுபவமும் ரசம்! தொடர்கிறேன் நண்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  13. மேளா சிறப்பா இருக்கும் போலிருக்கே!
    பகிர்வுக்கு நன்றி
    த.ம.7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.

      நீக்கு
  14. ரசித்தேன்...தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  15. நுழைவுச் சீட்டுக்கு ஐம்பதுரூபா அனுப்பி விடுகின்றோம். :)))) பூச்சாடி வாங்கித் தருவீர்கள் தானே :))))

    கிராமத்து சூழல். நன்றாக இருக்கின்றது. படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூ ஜாடி தானே வாங்கிக் கொடுத்தால் போயிற்று!

      அடுத்த பகுதி பார்த்து வேறு எதும் வாங்கிக் கொடுக்க கேட்கப் போறீங்க!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி!

      நீக்கு
  16. நல்ல அனுபவம்.அழகாக சொல்லியுள்ளீர்கள்.படங்களும் அருமை.தொடர்ந்து படிப்பேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு
  17. ;)))) மிகவும் அழகோ அழகு .... படங்களும் விளக்கங்களும்.

    பதிலளிநீக்கு
  18. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....