திங்கள், 4 பிப்ரவரி, 2013

மூக்குத்தூள் - தொடரும் அன்றைய விளம்பரங்கள்....



நவம்பர் மாதத்தில் என்னுடைய வலைப்பூவில் விளம்பரங்கள்அன்றும் இன்றும் என்ற தலைப்பில் 1949 – ஆம் வருடம் வெளிவந்த சில விளம்பரங்களை உங்களுடன் பகிர்ந்திருந்தேன்.  அதற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக, அன்றைய விளம்பரங்கள் தொடர்கிறது.



மூக்குத்தூள், அதாவது மூக்குப்பொடிக்குக் கூட விளம்பரங்கள் வந்திருக்கின்றன.  என்.சி. பட்டணம் பொடி பற்றிய விளம்பரங்கள் எனது சிறுவயதில் பார்த்த போது அது எப்படி இருக்கும்?, மூக்கினுள் அதைப் போட்டால் என்ன ஆகும்?என்ற எண்ணம் தோன்றினாலும், ஏனோ பயன்படுத்த தைரியம் வரவில்லை! ஸ்ரீ அம்பாள் ஆபீசர் மூக்குத்தூள் என்ற விளம்பரம் பார்க்கையில் எனது பழைய ஆசை நினைவுக்கு வந்தது!



வினைப்பயன்களின் வேதனை குறைக.  நோவு, தலைவலி, ஜலதோஷம் மற்றும் ஜுரத்திலிருந்து அபாயமின்றியும், துரிதமாயும், நிச்சயமாயும் நிவாரணம் அளிக்கும் அனாசின்”. மாத்திரைகளுக்குக் கூட விளம்பரம்!




இந்த கணினி வந்தாலும் வந்தது, நம்மில் பலருக்கு பேனா பிடித்து எழுதுவதே மறந்து விட்டது.  அந்த நாட்களில் பேனா பிடித்து எழுதி, அதுவும் மேலும் கீழும் கொட்டிக் கொண்டு அதற்கு மசியை ஊற்றி, அதன் கட்டையை பிடித்து அழுத்தி, நிப்நடுவில் ப்ளேட் விட்டு கீறி, என பல விஷயங்கள் செய்திருக்கிறோம். ஜெம் & கம்பெனி பேனா ரிப்பேர் செய்து தரப்படும் விளம்பரத்தினையும் என்றும் ப்ளேடோ பேனா விளம்பரத்தினையும் பார்க்கும் போது, மறந்து போன நமது கையெழுத்து நினைவில் வந்து சோகத்துடன் பார்க்கிறது!



வாகனங்கள் பெருகிவிட்ட இந்த நாட்களில் கார்களுக்கான பல விளம்பரங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அன்றைய நாட்களில் சைக்கிள் வைத்திருந்தாலே பெரிய விஷயம். அப்படி சைக்கிள் வைத்திருப்பவர்கள் அவ்வப்போது மாற்றுவது அதன் டயர், ட்யூப் மற்றும் ரிம். இந்த ரிம்மிற்குக் கூட விளம்பரங்கள் வந்தன எனப் பார்க்கும் போது ஆச்சரியம் மனதில்.



இப்போதும் ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள வண்ணத்திரைகளில் நிலையத்தின் பராமரிப்புக்கு விளம்பரங்கள் செய்கிறார்கள். அந்தக் காலத்தில் புத்தகங்களில் விளம்பரங்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். எவ்வளவு விளம்பரம் செய்தாலும் மக்கள் திருந்தப் போவதில்லை – அவர்களாக திருந்தினால் தான் உண்டு!.  தக்ஷிண ரெயில்வே அளித்திருக்கும் இந்த விளம்பரத்தினைப் பாருங்கள்.



இப்போதெல்லாம் செய்யப்படும் அறைகலன்களில் பல ஃபெவிகால் கொண்டு ஒட்டப்படுகின்றன. சில இடங்களில் மட்டுமே ஸ்க்ரூ பயன்படுத்துகிறார்கள். டவர் ப்ராண்ட் ஸ்க்ரூவிற்குக் கொடுத்திருக்கும் இந்த விளம்பரத்தினைப் பாருங்கள். என்ன ஒரு கற்பனை!



விஸ்வாமித்திரரின் தவத்தினைக் கலைக்க தேவர்கள் மேனகையை அனுப்பி வைத்தார்களாம். ஆனால் மேனகை அதற்கு இசைந்தது எதனால்? விஸ்வாமித்திரரின் பட்டின் மென்மையான நரை முடியும், அலை அலையாய் தவழ்ந்து படிந்து நின்ற தாடியும்அவளை மயக்கியதாலாம்! ஆனால் இப்போதைய மங்கைகளுக்கு நரை முடியும் தாடியும் பிடிக்காது, கருகருவென கேசம் வேண்டுமென விரும்புவார்கள். அதனால் பயன்படுத்துவீர் லோமா என விளம்பரம் செய்திருக்கிறார்கள்!

என்ன நண்பர்களே விளம்பரங்களை ரசித்தீர்களா? இந்த விளம்பரங்கள் அனைத்தும் 1957-ஆம் வருட சுதேசமித்திரன் தீபாவளி மலரில் வெளிவந்தவை. உங்களுக்குப் பிடித்திருந்தால் இன்னும் சில நாட்கள் கழித்து விளம்பரங்கள் பொக்கிஷப் பகிர்வில் தொடரும்....

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

52 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அன்பு...

      நீக்கு
  2. அந்த நாள் விளம்பரங்களின் நயம் அழகு.

    டைம் மெஷினில் போன திருப்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டைம் மெஷினில் போவதில் எனக்கும் மகிழ்ச்சி.... இன்னும் பழைய புத்தகங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.... பார்க்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  3. விளம்பரங்களை நான் மிக ரசித்தேன். நான் ரசித்த விளம்பரங்களை முன்பு பகிர்ந்ததுண்டு. இப்போது தொடராமல் இருக்கிறேன். இதைக் கண்டதும் எனக்கும் தொடர ஆசை வருகிறது நண்பா! தொடர்ந்து பகிருங்கள்! விடாமல் ரசிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க ஐடியா தான் கணேஷ்.... தொடருங்க!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. எங்களூர்ப்பக்கம் பொம்மை வைத்து மூக்குபொடி விளம்பரமெல்லாம் பண்ணியிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... எங்கள் ஊரிலும் என்.சி. பட்டணம் பொடி ஒரு வேனில் கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறேன்.....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விமலன்....

      நீக்கு
  6. விளம்பரப்படங்களும் அதற்கு உங்களது விளக்கமும் மிக அருமை. சுவாரசியமான இந்த பதிவுகளை தொடர்ந்து வெளியிடுங்க.பார்த்து,படித்து மகிழ்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி.

      அவ்வப்போது விளம்பரங்கள் தொடரும்!

      நீக்கு
  7. பொக்கிஷங்கள் எல்லாம் அருமை.
    நானும் முன்பு மோதிர விளம்பரத்தை பகிர்ந்து கொண்டேன்.
    இன்னும் பழைய வாசனை திரவியங்கள், விள்மபரங்கள், பட்டணம் பொடி விளம்பரங்கள் எல்லாம் பார்த்து ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கும்.
    பொருடகாட்சியில் டி.ஏ.எஸ் ரத்தினம் பட்டணம் பொடிக்கு ஒரு குண்டு ஆள் உரலில் பொடி இடிப்பது போல் விள்மபரம் வைப்பார்கள். கொஞ்சம் பொடி போட்டு பெரிதாக தும்முவது போல் சினிமா படத்தில் வரும் இவர் எப்படி தும்மல் வராமல் இடிப்பார் என்று நினைத்துக் கொள்வேன்.
    இது மாதிரி பழைய பொக்கிஷங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இவர் எப்படி தும்மல் வராமல் இடிப்பார் //

      அவருக்குப் பழகிடுச்சு போல! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸாதிகா.

      நீக்கு
  9. அடடா அழிகிய பொக்கிஷங்களே இவைகள் தொடர்ந்து பாதுகாத்திட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  10. நீங்கள் சொல்வது போல் பொக்கிஷங்கள் தான் இவையெல்லாம்.
    Leco கரிக்கு நாடகப் பாணியில் ஒரு விளம்பரம் வருமே. அது படிப்பதற்கு கதை போன்றே சுவாரஸ்யமாக இருக்கும். அது கிடைத்தால் போடுங்களேன்.

    இந்த பொக்கிஷங்களினால் எல்லோருக்கும் flash back கொடுக்கிறீர்கள்.

    நன்றி பகிர்விற்கு,
    ராஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லீகோ கரி விளம்பரம் கிடைத்தால் நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களே.

      நீக்கு
  11. என்.சி. பட்டணம் பொடி பற்றிய விளம்பரங்கள் எனது சிறுவயதில் பார்த்த போது

    திருவரங்கத்தில் இதற்கான பெரிய பெரிய விளம்பரங்கள் நடமாடும் வேனில் நின்று விநியோகம் செய்வதை வேடிக்கை பார்த்திருக்கிறேன் ...

    அந்த பொடி இடிக்கும் மிகப்பெரிய விளம்பர ஆள் என்னையும்
    ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!.

      நீக்கு
  12. அந்த நாட்களில் பேனா பிடித்து எழுதி, அதுவும் மேலும் கீழும் கொட்டிக் கொண்டு அதற்கு மசியை ஊற்றி, அதன் கட்டையை பிடித்து அழுத்தி, ’நிப்’ நடுவில் ப்ளேட் விட்டு கீறி, என பல விஷயங்கள் செய்திருக்கிறோம். ”/

    கொஞ்சபாடா படுத்தியிருக்கிறோம் பேனாவை ..!

    என்னிடம் பேனா கலெக்‌ஷன் ஒரு பெட்டி நிறைய இருந்தது ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் நிறைய பேனாக்கள் சேர்த்திருக்கிறேன். இப்போது எங்கே என நினைவில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  13. சுவாரஸ்ய விளம்பரங்கள். போட்டு வந்த இங்க் தீர்ந்து, பக்கத்து இருக்கைத் தோழனிடம் இரண்டு சொட்டு இங்க் கடன் வாங்கி எழுதிய நாட்கள் நினைவுக்கு வருகின்றன. தக்ஷிண ரயில்வே யும், அனாசினும் இன்றும் இருக்கின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      அனாசின் இன்றைய விளம்பரங்கள் புத்தகங்களில் பார்த்த நினைவில்லை!

      நீக்கு
  14. சூப்பர் கலெக்‌ஷன் அப்பு!

    எங்கள் ஆசிரியர் ஒருவர் பெயர் பீரங்கி மூக்கன்(ர்). அவர் மூக்குப் பொடி போடும் போது அப்படியே பீரங்கிக்கு வெடிமருந்து அடைப்பது போல இருக்கும். நல்ல அருமையான ஆசிரியர். ஆனாலும் பெயர் வைத்ததை தவிர்க்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பீரங்கி மூக்கன். நாங்கள் மூக்கன் என ஒரு ஆசிரியருக்குப் பெயர் வைத்தது நினைவில் இன்றும்! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதர்சன்.

      நீக்கு
  16. பழையவையானாலும் ரசிக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  17. இப்படியெல்லாம் விளம்பரம் வந்தனவா...?
    ஆச்சர்யமாக இருக்கிறது! (நம்ம வீட்டில் பாடபுத்தகத்தைத் தவிர
    வேறு எந்தப் புத்தகத்தையும் படிக்க கூடாது.)
    இதனால் நிறைய உலக விசயங்கள் தெரியாமல்
    வெறும் பாட புத்தகப் புழுவாக வளர்ந்திருக்கிறாய் என்று
    இங்கு நிறைய திட்டு வாங்கியது உண்டு.

    பகிர்விற்கு மிகவும் நன்றி நாகராஜ் ஜி.
    த.ம. 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா.

      நீக்கு
  18. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
    நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.

      நீக்கு
  19. பழசெல்லாம் ஞாபகம் வருது.... எத்தனை எத்தனை வித விளம்பரங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்..

      நீக்கு
  20. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  21. அனைத்தும் ரசனையான விளம்பரங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  22. பார்த்தேன் ! பிரமித்தேன் ! ரசித்தேன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

      நீக்கு
  23. விளம்பரம் வருகிறது என்று சொல்லவில்லை. அனாசின் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது என்று சொல்ல வந்தேன்! :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  24. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி nicenana.

      நீக்கு
  25. தங்களின் அனுமதியுடன் ப்ரயாணிகள் ஒழுக்க விதிகளை ப்ரதி எடுத்துகொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓகே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி nicenana....

      நீக்கு
  26. பழையஸ்ரல் விளம்பரபோஸ்ரர்கள் சூப்பர் ..”லோமா” விளம்பரம்தான் மிகப்பிடித்திருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்/ரசிப்பிற்கும் மிக்க நன்றி கிருத்திகன் யோகராஜா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....