திங்கள், 22 செப்டம்பர், 2014

நடக்கலாம் வாங்க!



படம்: இணையத்திலிருந்து.....

மாதா வைஷ்ணோ தேவி பயணம்பகுதி 3

முந்தைய பகுதிகள்: பகுதி-1 பகுதி-2

என்ன நண்பர்களே, சென்ற பகுதியில் சொன்னது போல அன்னையைத் தரிசிக்க நமது நடைப் பயணத்தினை துவங்கலாமா?

நடைப்பயணத்தினை துவங்கு முன்னர், சற்றே வயிற்றுக்கும் கொஞ்சம் இய்யலாம் என உணவகத்தினைத் தேடினோம்.  நாங்கள் தங்கியிருந்த இடத்தில் உணவகம் இல்லை. அதனால் வெளியே தான் சாப்பிட வேண்டும். பல உணவகங்கள் இருந்தாலும், ஒரு சிறிய உணவகத்தினைத் தேர்ந்தெடுத்தோம். காரணம் உணவகத்தின் உரிமையாளரே சுடச்சுட தவா ரொட்டிசெய்து கொண்டிருந்தார். பெரும்பாலும் வட இந்தியாவில் “தந்தூரி ரொட்டிவகைகள் தான் அதிகம்.  பெரும்பாலான தென் இந்தியர்களுக்கு இந்த தந்தூரி ரொட்டி பிடிப்பதில்லை! என் நண்பரும் அதற்கு விதிவிலக்கல்ல!



 படம்: இணையத்திலிருந்து.....

தவா ரொட்டி, [dh]தால், [dh]தஹி, ஊறுகாய் என மிகச் சாதாரணமான மெனுவினைத் தேர்ந்தெடுத்து கொஞ்சமாக வயிற்றை நிரப்பினோம். பொதுவாகவே மலையாளிகளுக்கு ஒரு பழக்கம் – சாப்பிட்ட உடன் தேநீர் அருந்துவது! :)  மதிய உணவாக இருந்தாலும் கூட சாப்பிட்ட பின் தேநீர் அருந்துகிறார்கள்!  உணவினை வயிற்றுக்கு அளித்த பிறகு, அன்னையை மனதால் தொழுது எங்கள் நடைப்பயணத்தினை ஆரம்பித்தோம்.

 படம்: இணையத்திலிருந்து.....

கட்ரா நகர பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது கோயிலின் நுழைவாயில்.  இந்த பாதையின் இரு மருங்கிலும் கடைகள், கடைகள், பல விதமான கடைகள் – எந்தக் கடையாக இருந்தாலும் வாயிலில் பல குச்சிகள்/கைத்தடிகள் வைத்திருப்பார்கள். இந்தக் குச்சிகளை வாடகைக்கு வாங்கிக் கொண்டால், செங்குத்தான பாதையில் நடக்கும்போது ஊன்றி நடக்க வசதியாக இருக்கும்.  20 ரூபாய் கொடுத்து ஒரு தடியை வாங்கிக் கொண்டால் பயன்படுத்தி திரும்ப வரும்போது கொடுத்தால் 10 ரூபாய் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்.


 படம்: இணையத்திலிருந்து.....

கைத்தடி அவசியமில்லை என்று நினைத்ததால் நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. எதிரே அன்னையைத் தரிசித்து வருகிறவர்கள் அனைவருமே நடைப்பயணத்தினை துவங்கும் பக்தர்களை உற்சாகப் படுத்தும் விதமாக “ஜெய் மாதா [dh]தி!என முழங்க, தரிசிக்கச் செல்லும் பக்தர்களும் “ஜெய் மாதா [dh]தி!என கோஷிக்கிறார்கள்! நடைப்பயணதினை துவங்கும்போதே இந்த கோவில் உருவான கதை பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கலாம்!

 படம்: இணையத்திலிருந்து.....

எப்போதெல்லாம் அசுர சக்திகளின் பலம் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் இறைவன்/இறைவி தங்களது சக்திகளைப் பயன்படுத்தி அசுர்ர்களை வதம் செய்து விடுவார்கள் என்பதை நமது புராணங்களும் இதிகாசங்களும் நமக்குச் சொல்கின்றன. அப்படி அன்னை பராசக்தி அசுரர்களை அழித்துக் கொண்டிருந்தாள்.  ஒரு சமயத்தில் அவளுடைய மூன்று அவதாரங்களான மஹாகாளி, மஹாலக்ஷ்மி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து தங்களது தெய்வீகச் சக்திகளை ஒருமுகப் படுத்தினார்கள்.  அப்போது அங்கே ஒரு ஒளிப்பிழம்பு வெளிவந்தது. அங்கே 
அப்பிழம்பிலிருந்து ஒரு அழகிய பெண் தோன்றினாள்.

தோன்றியவுடன் அவள் கேட்டாள் ஒரு கேள்வி! கேள்வி கேட்பது பெண்களுக்கே உரிய குணமல்லவா? அன்னையே ஏன் என்னை படைத்தீர்கள்? முப்பெரும் தேவியரும் அதற்கு பதிலளிக்கும் விதமாகச் சொன்னார்கள் – “நீ இப்புவியில் பிறந்து தர்மத்தினை நிலை நாட்ட வேண்டும்என்பது தான் எங்கள் குறிக்கோள். தென் இந்தியாவில் இருக்கும் ரத்னாகர் மற்றும் அவரது மனைவியின் குழந்தையாக அவதரித்து கலைகள் பல கற்று, உன்னதமான நிலை அடைவாய் என்று சொல்லி மறைந்தார்கள். ரத்னாகரின் மனைவி ஒரு தெய்வீகக் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவளுக்கு வைஷ்ணவிஎன்று பெயரிட்டனர்.

 Dharshani Darwaza.....

ஒரு கிலோ மீட்டர் தொலைவினை நடந்தோ, அல்லது ஆட்டோவிலோ பயணிக்கலாம்.  அப்படி பயணித்து நாம் அடையும் இடம் “Darshani Darwaza”  அதாவது தரிசன நுழைவுவாயில்”.  இங்கே முதல் முறையாக சென்ற பகுதியில் பார்த்த Yatra Parchi பாதுகாவலர்களால் சரி பார்க்கப் படும். கூடவே பாதுகாப்பு சோதனைகளும் நடக்கும்.  கோவில் மற்றும் பாதைகளின் பாதுகாப்பு முழுவதுமே Central Reserve Police Force வசம்.  பலத்த சோதனைகள் செய்த பின்னரே அனுமதி அளிக்கிறார்கள். 

 நடக்கலாம் வாங்க..... கால் வலித்தால் கொஞ்சம் உட்காரலாம்!

இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2800 அடி உயரத்தில் இருக்கிறது.  இங்கே நின்று பார்த்தால் அன்னை குடிகொண்டிருக்கும் திரிகூட மலையைக் காண முடியும் என்பதாலும்  இவ்விடத்திற்கு “Darshani Darwazaஎன்ற பெயர். இந்த இடத்திலிருந்து Bhavan” என்று அழைக்கப்படும் அன்னையின் இருப்பிடம் சுமார் 12 கிலோ மீட்டர் தூரம்.  இந்த பன்னிரெண்டு கிலோ மீட்டர் தொலவு தூரத்தினை தாம் நாம் நடந்து கடக்கப் போகிறோம்.  என்ன நீங்களும் தயாரா? வாருங்கள் நடக்கலாம்!

 மேற்கூரையோடு கூடிய நடைபாதை

இப்போது இருக்கும் நடைபாதை, கோவிலின் நிர்வாகத்தினை Shri Mata Vaishno Devi Shrine Board [SMVDSB] [1988-ஆம் வருடம்] எடுத்துக் கொண்ட பிறகு போடப்பட்ட பாதை. அதற்கு முன்பு படிகளும், செங்குத்தான பாதைகளும் நிறைந்த ஒன்று. அதில் நடந்து போவது மிகவும் கடினமான ஒன்று. இப்போதைய பாதை மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டு நடக்க ஏதுவாய் இருக்கிறது. 

 ”Gotcha! எனக்கு உணவளித்தவருக்கு நன்றி” எனச் சொல்லுமோ?
 
வழியெங்கிலும் “சாரே [b]போலோ ஜெய் மாதா [dh]தி! ஜோர் சே [b]போலோ ஜெய் மாதா [dh]தி! [dh]தில் சே [b]போலோ, ப்ரேம் சே [b]போலோ ஜெய் மாதா [dh]தி!போன்ற கோஷங்கள் உங்கள் காதுகளை நிறைப்பதோடு நடப்பதில் இருக்கும் சிரமம் தெரியாமல் இருக்க உதவும்.  ஒருவர் சொல்லச் சொல்ல, நீங்கள் சொல்ல நினைக்காவிடிலும் உங்கள் உதடுகள் இந்த கோஷங்களை உச்சரிக்க ஆரம்பித்து விடும்! 


 மலையை நோக்கியபடி நடைப்பயணம்!

இப்படி ஜெய கோஷங்கள் எழுப்பியபடி நமது நடைப்பயணம் துவங்கி விட்ட்து.  தொடர்ந்து நடப்போம்.....  பன்னிரெண்டு கிலோ மீட்டர் தொலைவு! அடுத்த பகுதியிலும் நடப்போம்!

ஜெய் மாதா [dh]தி!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

33 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  2. பாதையைப் புரிந்து கொள்ள அழகிய படங்கள் பெரிதும் துணை புரிகின்றன. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      இப்பயணத்தில் என்னுடைய புகைப்படக் கருவி எடுத்துச் செல்லவில்லை. நண்பருடையது மட்டும்! அதனால் சில படங்கள் இணையத்திலிருந்து!

      நீக்கு
  3. நடை பயணம் அலுப்பு தெரியாமல் அன்னையை போற்றி துதிக்க ஆரம்பித்து விட்டது வாய்.
    வாழ்த்துக்கள் வெங்கட் ,நவராத்திரி சமயம் வைஷ்ணவ தேவியைப்பற்றி படிக்க பதிவு அளித்தமைக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  4. நேரில் பார்ப்பதுபோல் இருக்கிறது தங்களது வர்ணனை. நானும் உங்களோடு நடந்துகொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  7. பயணக்கட்டுரை அருமை. பயனுள்ள தகவல்கள். பிற்காலத்தில் இந்த தகவல்கள் உதவும்.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகை ரவி.

      நீக்கு
  8. நானும் உங்களுடன் நடக்கத் தயாராகி விட்டேன் நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. ஜெய் மாதா [dh] தி!

      தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Mr.Pads.

      நீக்கு
  10. நண்பரே! தங்களுடன் நாங்களும் நடந்தோம்! படங்களும் அருமையாக இருக்கின்றன! ஸ்பா....கொஞ்சம் இளைப்பாறுகின்றோம் ! தொடர்கின்றோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  11. பக்தி'மான்கள்' தாவி தாவி செல்வதற்கு வசதியாகத்தான் படிகளை அமைத்து இருக்கிறார்களே !))))
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தமிழ்மணம் ஒன்ப்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  15. நானும் உங்களுடன் சேர்ந்து நடக்கிறேன் வெங்கட் சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  16. சுவராஸ்யமான நடை..
    தொடர்ந்து உங்களுடன் நாங்களும் நடக்கிறோம் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....