ஞாயிறு, 20 மே, 2018

தலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 1



தலைநகரில் எங்கள் வீட்டின் வெகு அருகிலேயே திருமலா திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் பெருமாள் கோவில் இருப்பது பற்றி முன்னரே எழுதி இருக்கிறேன். சமீபத்தில் இந்த பெருமாள் கோவிலில் ப்ரஹ்மோத்ஸவம் விமரிசையாக நடைபெற்றது. தினம் தினம் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாளும் தாயார்களும் வீதி உலா கண்டார்கள். பிரஹ்மோத்ஸவம் நடக்கும் போது நானும் சில நாட்கள் கலந்து கொண்டேன். பிறகு தமிழகம் வந்து விட்டதால் கலந்து கொள்ள முடியவில்லை.

பிரஹ்மோத்ஸவம் சமயத்தில் நான் எடுத்த சில படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு! இன்றைய படங்கள் முத்துப் பல்லக்கில் பவனி வந்த பெருமாள்! உறியடி கிருஷ்ணர் அலங்காரத்தில்…


கோலாட்டம்....










































என்ன நண்பர்களே புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
தமிழகத்திலிருந்து….

20 கருத்துகள்:

  1. அதிகாலையில் பெருமாள் தரிசனம். குட்மார்னிங் வெங்கட். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  3. நல்ல தரிசனம். கோலாட்டம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரஹ்மோத்ஸவம் சமயங்களில் கோலாட்டத்திற்காகவே ஆந்திரா/தெலுங்கானாவிலிருந்து சிலர் வருகிறார்கள். அதில் மகிழ்ச்சி தான் எனக்கும்.

      திருவரங்கத்தில் தேரோட்டம் சமயத்தில் இப்படி ஒரு குழு எல்லா தேரோட்ட நாட்களிலும் தேருக்கு முன்னால் வருகிறார்கள் - பெரும்பாலானவர்கள் சிறுவர்/சிறுமியர்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  4. ப்ரம்மோத்சவம் படங்கள் நல்லா இருந்தது.

    இடையில் வந்த சந்திரனையும், பார்வையாளரான குழந்தையின் படமும் நல்லா இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திரன் படம் - எனக்கும் பிடித்தது! குழந்தை - கோலாட்ட நாயகிகளில் ஒருவர்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    தெய்வீகமான பதிவு அருமை.
    பெருமாளின் முத்துப் பல்லக்கில் வீதி உலா படங்கள் மிக அருமை. கன்னத்தில் திருஷ்டிப் பொட்டுடன் இதழ்களில் முறுவலுடன் பெருமாளின் படம் மிக மிக அழகாக இருந்தது.

    வானத்து சந்திரன் பார்க்க மனதிற்கு ரம்யம். கோலாட்டம் பார்த்து மிக நாட்கள் ஆகி விட்டன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்துப் பல்லக்கு - எங்கள் பகுதியில் உள்ள நண்பர்களின் துணைவிகள் செய்த மாலை கொண்டு அலங்கரித்தார்கள்.

      சந்திரன் படம் எனக்கும் பிடித்தது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  7. தில்லி TTD பெருமாள் கோவில் பிரம்மோத்சவம் பற்றிய புகைப்படங்கள் நிறைந்த பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

      நீக்கு
  8. அழகிய படங்களுடன் இனிய பதிவு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  9. பெருமாள் கோவில் பிர்ம்மோத்சவம் பற்றிய பதிவு படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  10. துளசி: படங்கள் அனைத்தும் அழகு!

    கீதா: படங்கள் அனைத்தும் அழகு என்றாலும் அந்த நிலவும் (வாவ்!!செமபடம்) குட்டிப் பெண்ணும் மிகவும் கவர்ந்தன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திரன் படமும் அந்தக் குட்டிப் பெண் படமும் அனைவருக்குமே பிடித்திருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....