சனி, 18 மே, 2019

காஃபி வித் கிட்டு – பொறுமை – அவஸ்தைகள் – தும்பா பாடல் – மா – ஹாய் நலமா



காஃபி வித் கிட்டு – பகுதி – 33

அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை ஒரு இனிய சிந்தனையோடு துவங்குவோம்! இதுவும் கடந்து போகும்… எவ்வளவு பெரிய புயலாக இருந்தாலும், அது சில மணி நேரங்களில் கடந்து விடுகிறது. அது போல, எவ்வளவு பெரிய துயரமாக இருந்தாலும், அது சில நாட்களில் கடந்து விடும்! அதனால் பொறுமை கொள்வோம்!

படித்ததில் பிடித்தது – அவஸ்தைகள் – இந்திரா பார்த்தசாரதி:



இரயில் பயணம் ஒன்றில் நடக்கும் கதை – முழுக் கதையும் படிக்க விரும்பினால் இங்கே படிக்கலாம்!

இந்த வாரத்தில் ஒரு தமிழ் பாடல் – புதுசாட்டம்

தும்பா எனும் படத்திலிருந்து ஒரு பாடல். படத்தின் ட்ரைலர் பார்த்தால் நன்றாக எடுத்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது. காட்டுக்குள் நடக்கும் கதை – அனிமேஷனும் உண்டு! கூடவே காதலும் உண்டு! பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் பார்க்க நினைத்திருக்கிறேன்.




ராஜா காது கழுதைக் காது – படுத்துட்டுக் கூட படம் எடுக்கலாம்!

விடுமுறை நாட்கள் என்பதால் தலைநகரில் நிறைய சுற்றுலா வாசிகள் – நம் தமிழகத்திலிருந்தும் பலர் வந்திருக்கிறார்கள்! சமீபத்தில் குடும்பத்துடன் இந்தியா கேட் பகுதிக்குச் சென்ற போது அங்கே ஒரு தமிழ்க் குடும்பம். மகள் படம் எடுக்க, அம்மா, அப்பா மற்றும் அண்ணன் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். குடும்பத்தினரையும், இந்தியா கேட்டையும் ஒரே ஃப்ரேமில் கொண்டு வர கொஞ்சம் கஷ்டப்பட்ட அந்தப் பெண்ணிடம் அவள் அண்ணன் சொன்னது – ”படம் நல்லா வரணும்னா, படுத்துட்டுக் கூட எடுக்கலாம்! கீழே உட்கார்ந்து எடு – நாங்களும் வருவோம், இந்தியா கேட்டும் வரும்!

முகநூலிலிருந்து – சும்மா நச்சுன்னு சொல்லிட்டாங்க:



சரியாத்தான் இருக்கு! ஆனா பலரும் இதை உணர்வதில்லை! மூழ்கியில்ல போயிட்டாங்க!

இந்த வாரத்தின் வலைப்பூ அறிமுகம்:

மருத்துவர் முருகானந்தம் அவர்களின் ஹாய் நலமா? வலைப்பூ – நல்ல பல தகவல்களைக் கொண்டுள்ள ஒரு வலைப்பூ. இதுவரை படித்ததில்லை எனில் படிக்கலாமே! உதாரணத்திற்கு ஒரு பதிவு கீழே!


இந்த வாரத்தின் காணொளி - மா:

மே 12 – இந்த வருடத்தின் அன்னையர் தினம்! அன்று அமிதாப் பச்சனின் குரலில் வெளியிடப்பட்ட ஒரு காணொளி. கேட்டுப் பாருங்களேன்.




என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

36 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    இந்திரா பார்த்தசாரதி வரிகள் ஸ்வாரஸ்யமாக இருக்கிறதே. லிங்க் எடுத்து வைத்துக் கொண்டேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாஜி!

      அந்த வலைத்தளத்தில் மேலும் சில கதைகள் உண்டு. முடிந்த போது படித்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  2. படுத்துக் கொண்டு படம் எடுத்தல்// ஹா ஹா ஹா

    நான் கூட அப்படி நினைத்ததுண்டு ஃப்ரேமுக்குள் படம் சிக்க. அப்படி ஒரு தோப்பில் தென்னையை கொஞ்சம் கீழிருந்து மரத்தின் உச்சி விரிந்திருக்க இடையே வானின் அழகு அதை எடுக்க நான் படுக்காமல், ஹிஹிஹி கேமராவை ஆங்கிளில் வைத்து எடுத்தேன். (நாமதான் ஏதோ உலக புகழ் புகைப்படக் கலைஞர் போன்ற நினைப்பு ஹிஹிஹி)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகப் புகழ் புகைப்படக் கலைஞராக நினைத்துக் கொள்வதில் தவறில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  3. குட்மார்னிங்.

    முதல் தத்துவம் : இப்போது என் வீட்டில் வீசிக்கொண்டிருக்கும் புயல் கடந்துபோகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பிரச்சனைகள் விரைவில் தீர எனது பிரார்த்தனைகள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. இதுவும் கடந்து போகும்// ஆம் அப்படித்தான்!! நல்ல தத்துவம்.

    முகநூல் நச்!! சூப்பர் ல!

    பாட்டும், காணொளியும் பின்னர் வருகிறேன் ஜி.

    மருத்துவர் முருகானந்தம் வாசிப்பதுண்டு ஜி!

    அனைத்தும் ரசித்தோம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்துப் பகுதிகளையும் ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  5. இபா லிங்க் குறித்துக் கொள்கிறேன். - அப்புறம் படிக்க.

    என் மகன் அனிருத்தின் பயங்கர விசிறி. அவன் இந்தப் பாடலை ஏற்கெனவே கேட்டு மனப்பாடம் செய்திருப்பான்! தும்பா இன்னும் வெளியாகாத படமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் நேற்று சொல்ல நினைத்து விட்டுப் போச்சு உங்க மகன் அனிருத்தின் விசிறி என்று...எனக்கு நல்ல நினைவு இருக்கிறது நீங்கள் முன்னர் சொல்லியிருந்தது

      கீதா

      நீக்கு
    2. அந்தச் சுட்டியில் மேலும் சில கதைகள் உண்டு. முடிந்த போது படிக்கலாம்.

      உங்கள் மகன் அனிருத்தின் பயங்கர விசிறி! மகிழ்ச்சி. எனது மகள் தான் எனக்கும் இப்பாடல் பற்றி சொன்னார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. எனக்கும் நினைவிருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  6. நோட்டுக்குறிப்பு டாப். மருத்துவர் பக்கத்துக்கு அவ்வப்போது செல்வதுண்டு.

    ஆ... அமிதாப்பா... இதோ கேட்கிறேன்.. அனிருத்தை நிறுத்தி விட்டு அமிதாப் இப்போ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனிருத்தை நிறுத்தி விட்டு அமிதாப்! ஹாஹா... உங்கள் மகனுக்குத் தெரிந்து விடப் போகிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. அமிதாப் வீடியோ சூப்பர். சற்றே... சற்றே சல்தே சல்தே படப்பாடலான "ஜானா கஹான் ரே பாடலை ஸ்லோ டெம்போவில் பாடுவது போல இருக்கிறது. மொழி, மாநில வாரியாக அம்மாக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமிதாப் பாடல் உங்களுக்கும் பிடித்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  11. எல்லாம் அருமை! என்னதான் புயல் கடந்து சென்றாலும் அதன் தாக்கம் மறைய நாட்கள் பிடிக்குமே! :( அமிதாபின் குரலில் பாடலும் படங்களும் அருமை! இந்திரா பார்த்தசாரதியின் இந்தக் கதை படித்த நினைவு. எதுக்கும் போய்ப் பார்க்கிறேன். மருத்துவர் பதிவுகள் அவ்வப்போது போய் வருவது உண்டு. முகநூல் சொல்லி இருக்கும் தத்துவம் எழுதியது யாராக இருந்தாலும் உண்மை. அப்பட்டமான உண்மை! எல்லோரும் புரிஞ்சுக்கணும்! போனால் வராது குடும்ப வாழ்க்கையின் இனிமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  12. ஆமாம்,போய்ப் பார்த்துட்டு வந்தேன். படிச்சுட்டேன் ஏற்கெனவே! இருந்தாலும் மறுபடியும் படித்துக் கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  13. சுவையான பகிர்வுகள்! அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  14. அனைத்தும் அருமை.
    காணொளிகள் பார்த்தேன் கேட்டேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  16. திரு நங்கைக்ளும் கடவுளின் உருவங்கள்தானே அதனால்தான் அவர்களை ஒன்பது என்கிறோமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  17. எனது ஹாய் நலமா புளக்கை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முருகாநந்தன் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....