வெள்ளி, 7 ஜனவரி, 2022

கதம்பம் - That’s My Girl - கோலங்கள் - காணொளி - புளி உப்புமா


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

முட்டி மோதி முளைக்கும் விதைகளை கேள் முயற்சியின் அர்த்தம் என்னவென்று தெரிய வரும்.

 

******

 

THAT'S MY GIRL! - 28 DECEMBER 2021:

 

'அவரும் நானும்' தொடருக்கு நீங்கள் எல்லோரும் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாசித்து வந்தவர்கள் முடிந்து விட்டதே என்று ஃபீல் செய்தது மனதுக்கு நெகிழ்வாக இருந்தது. இந்தத் தொடர் நிறைவு பெற்றதை தொடர்ந்து அடுத்து என்ன எழுதுவது?? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

 

கல்லூரி முதல் கல்யாணம் வரையுள்ள கதைகளை 17 பகுதிகளாகவும், அதற்கடுத்ததாக மதுரைப் பயணத்தை 12 பகுதிகளாகவும் எழுதியிருந்தேன். இப்போது எழுதிய 'அவரும் நானும்' தொடர் தான் நான் எழுதியதில் பெரிய தொடராக நினைக்கிறேன். மனதுக்கு நெருக்கமான தொடரும் கூட! இந்தத் தொடருக்கு தான் மிகுந்த வரவேற்பும் கிடைத்தது!

 

என்ன எழுதுவது! என்று யோசித்துக் கொண்டே மகளிடமும் கேட்டுக் கொண்டிருந்தேன். கண்ணா! எங்க ஊரப் பத்தி எழுதலாமான்னு யோசிக்கிறேன் என்றதும் 'காமெடி பண்ணாதம்மா'! என்றாள்!!

 

ஏன் அப்படிச் சொல்கிறாள்!?

 

சில வருடங்களுக்கு முன் கோவைக்குச் சென்றிருந்த போது, அவரும் நானும் டவுன் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் ஒப்பணக்கார வீதி என்ற இடத்தில்  இறங்கணும்! கண்டக்டரிடம் கூட ஸ்டாப்பிங் வந்தா கொஞ்சம் சொல்லுங்க! என்று அவர் சொல்லி வைத்திருந்தார்!

 

பேருந்தில் நல்ல கும்பல்!

 

குறிப்பிட்ட இடம் வந்ததும் 'ஒரு நிமிஷம் இங்க பாருங்கோ! இங்க தான் நாம இறங்கணும்! என்றேன்.

 

இல்லம்மா! கண்டக்டர் சொல்றேன்னு சொன்னாரே!

 

கூட்டமா இருக்கறதால மறந்திருப்பார்! சீக்கிரம்! நாம இறங்கிடுவோம். எடுத்திடப் போறாங்க! வாங்கோ!

 

இருவரும் இறங்கி விட்டோம். சிறிது தூரம் நடந்ததும், இன்னும் எவ்வளவு தூரம்! நடந்துண்டே இருக்கோம்! என்றேன்!

 

ம்ம்ம்! முதல் ஸ்டாப்பிங்லயே இறங்கினா நடக்கணும் தானே!

 

என்ன!! 

 

உனக்கு உங்க ஊர்லயே ஒரு இடமும் தெரியல..🙂

 

அசடு வழிய ஒரு புன்னகையை உதிர்த்தேன்..🙂 உலகம் தெரியாத புள்ளயா இருந்துட்டேன்..🙂

 

இப்பப் புரிகிறதா மகள் சொன்னதன் காரணம்..:)) நேற்று அலைபேசிய போது அவர் அடுத்து என்ன எழுதப் போற? என்றதும் இந்த விஷயத்தை சொன்னதும் அப்படியொரு சிரிப்பு அவரிடமிருந்து..🙂 கூடவே That's my girl என்றார்..🙂

 

அது தான் இங்க ஒரு ஜெராக்ஸ் காப்பிய விட்டுட்டு போயிருக்கீங்களே! அவ என்னை கலாய்க்காம இருந்தா தான் ஆச்சரியம்! என்றேன்..🙂

 

******

 

மார்கழி - கோலங்கள் - இரண்டாம் ஐந்து:







 

மார்கழி மாதத்தின் இரண்டாம் ஐந்து நாட்கள் எங்கள் வீட்டில் மகள் போட்ட கோலங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு!  

 

******

 

மார்கழி - கோலங்கள் - YOUTUBE SHORTS காணொளி:

 

மார்கழி மாதம் வீட்டில் வாசலில் போடும் கோலங்களின் சிறு காணொளிகள் (YOUTUBE SHORTS) மகளின் ROSHNIS CREATIVE CORNER பக்கத்தில் தினமும் வெளியிடுகிறாள். அந்தக் காணொளிகளை கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம். 

 

Roshni's Creative Corner - YouTube

 

******


புளி உப்புமா - 29 டிசம்பர் 2021:



 

காலை உணவாக புளி உப்புமா செய்தேன். பாட்டிம்மா பலகாரம் இது..🙂 வீட்டில் இருக்கும் பொருட்கள் தான். கொஞ்சம் மெனக்கெட்டு விடாமல் கிளறணும்! சூடாக இருக்கும் போது தான் சாப்பிடணும்..🙂

 

******

  

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

24 கருத்துகள்:

  1. மனதுக்கு நெருக்கமாக, உணர்வுகளைக் கொட்டி எழுதியதால் அவரும் நானும் மிக அருமையாக அமைந்து விட்டது.  இலக்கிய படைப்பு.  வாழ்த்துகள்.எல்லோரும் உங்களைப் பற்றி நினைக்கும்படி செய்து விட்டீர்கள்.  எல்லோர்களின் நல்லெண்ணமும் வாழ்த்துகளும், ஆசியும் உங்களிருவருக்கும் இருக்கும்.

    கோலங்கள் அழகு.

    புளி உப்புமா ஜோர்.  ஆம், சூடாய்ச் சாப்பிட்டால்தான் நன்றாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரும் நானும் தொடர் நல்ல வரவேற்பை பெற்றதில் எங்களுக்கும் மகிழ்ச்சி ஸ்ரீராம். பதிவின் மற்ற பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. இப்பப் புரிகிறதா மகள் சொன்னதன் காரணம்..:)) நேற்று அலைபேசிய போது அவர் அடுத்து என்ன எழுதப் போற? என்றதும் இந்த விஷயத்தை சொன்னதும் அப்படியொரு சிரிப்பு அவரிடமிருந்து..🙂 கூடவே That's my girl என்றார்..🙂//

    மிக மிக ரசித்தேன் ஆதி. சந்தோஷமாகவும் இருக்கிறது. வெங்கட்ஜி உங்களை அடுத்து என்ன எழுதப் போகிறீர்கள் எனக் கேட்டதும், கலாய்த்ததும்!!!! பொக்கிஷத் தருணங்கள்! ஊக்கமும் ஆதரவும் இருக்கும் போது என்ன! ஜமாய்ங்க!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி.


      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. புளி உப்புமா ரொம்பப் பிடிக்கும். ஆமாம் சூடாகச் சாப்பிட வேண்டும். நன்றாக உதிர் உதிராக வந்திருக்கிறது! சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புளி உப்புமா சூடாக இருந்தால்தான் சுவை. உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.


      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. கோலங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.


      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. கோயம்புத்தூர் நிறைய மாறியிருக்கிறது ஆதி. நான் அப்போது இருந்த போது இருந்த அடையாளங்கள் எல்லாம் இப்போது மாறியிருப்பதால் ரொம்பவே கவனமாக இருந்துதான் இறங்க வேண்டியுள்ளது. ஸ்டாப் சந்தேகமும் வந்துவிடுகிறது!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என்பது உண்மைதானே. நிறைய இடங்கள் மாறிவிட்டது என்றாலும் அவர் இருந்த ஊர் எனும்போது முன் நிறுத்தத்திலேயே இறங்கி இருக்க வேண்டாம் :) அதுவும் நான் சொன்ன பிறகும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. மிக இனிமையான பேச்சுகள்.
    அன்பிருக்கும் இடத்தில் தான் கலாட்டாவும்
    இருக்கும்.
    கோவை பதிவுகள் எழுதுங்கோ.
    பஸ்ஸில் போனது மட்டும் இல்லையே. அதைத் தவிர பல
    அருமையான சிறப்புகள் சொந்த ஊரில் உண்டே.
    அருமையான பதிவு ஆதி. வாழ்த்துகள்.
    குழந்தையின் கோலங்கள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு இருக்கும் இடத்தில் தான் கலாட்டா இருக்கும் என்பது சரிதான் வல்லிம்மா. பதிவின் மற்ற பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.


      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. பேருந்து நிகழ்வு ரசனை.
    கோலங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.


      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. சிறப்பான தொடர்... கோலங்கள் அழகு...

    வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். அவரும் நானும் தொடர் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    வாசகம் அருமை. உங்கள் அனைத்து தொடர் பதிவுகளும் நன்றாக இருந்தன. அதிலும் அவரும், நானும் தொடர் சற்று எங்கள் மனதிலும் நெருக்கமாக வந்தமர்ந்து விட்டது. பெண் பார்க்கும் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு நாள் தொடரைப் படிக்கையில் எங்கள் வாழ்வின் சில நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்து சுவாரஸ்யமாக சென்றது.நல்ல நடையுடன் அழகாக எழுதியிருந்தீர்கள். வாழ்த்துகள். பாராட்டுகள்.

    இன்றைய கோவை அனுபவ பதிவும் சுவாரஸ்யம். நானும் அம்மா வீட்டில் எங்கும் தனியே அனுப்பி பழக்கப்படாததால், எங்களூரான தி.லியில் இப்படி முழித்து மாட்டியிருக்கிறேன்.

    கோலங்கள் அத்தனையும் அழகாக உள்ளது. புளி உப்புமா நன்றாக வந்துள்ளது. கொஞ்சம் கை நோக சிரமபட்டால் இப்படி உதிராக வந்து விடும்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி மகிழ்ச்சி. தொடர்ந்து ஊக்கம் தரும் வகையில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.


      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. ரோஷ்ணி கோலங்கள் அழகு.

    கலாய்த்தலும் வாழ்வை இனிமையாக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.


      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  12. பதில்கள்
    1. கோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....