ஞாயிறு, 16 ஜனவரி, 2022

விதம் விதமாய் உணவு - நிழற்பட உலா

 

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

வீட்டுக்கு அழைத்து உணவு கொடுத்தால் அது விருந்து; கேட்ட பின் கொடுத்தால் அது பிச்சை; இருக்கும் இடம் தேடிச்சென்று கொடுத்தால் அது தர்மம்; யாரெனத் தெரியாமல் கொடுத்தால் அது தானம்!

 

******

 

சமீபத்தில் (டிசம்பர் மாதக் கடைசியில்) எனது மூத்த சகோதரி, அவரது மகன், மகள் என மூன்று பேராக தலைநகர் தில்லிக்கு ஒரு வாரப் பயணமாக வந்திருந்தார்கள். அப்போது பெரும்பாலும் வெளியே தான் உணவு சாப்பிட வேண்டியிருந்தது.  அப்படிச் சென்ற போது சுவைத்த உணவுகளின் படங்கள் உங்கள் பார்வைக்கு! இப்படி படங்களைப் போட்டு எங்களை உசுப்பேத்துவது சரியா என உங்களில் சிலர் மனதில் நினைப்பது எனக்குத் தெரிகிறது! ஹாஹா…  நாங்கள் உண்டதை உங்களுக்குப் பார்க்கவாது தரலாமே என்று தான் இங்கே பகிர்ந்து கொண்டேன்.  தில்லி வந்தால் இவற்றைச் சுவைக்கவும் செய்யலாம்!  வாருங்கள் இப்போதைக்கு உணவுகளின் படங்களைப் பார்க்கலாம்.



காலை உணவு - ப்ரதாப்கட் ஃபார்ம்ஸ், ஹரியானா


ரொட்டி/பராட்டாவில் தடவிக் கொள்ள நெய் - ப்ரதாப்கட் ஃபார்ம்ஸ், ஹரியானா


ராஜ்மா சாவல் - பிகானேர் வாலா, கனாட் ப்ளேஸ், தில்லி


சமோசா - பிகானேர் வாலா, கனாட் ப்ளேஸ், தில்லி


Bபேல் பூரி - பிகானேர் வாலா, கனாட் ப்ளேஸ், தில்லி


சோலே குல்ச்சா - பிகானேர் வாலா, கனாட் ப்ளேஸ், தில்லி


பகோடா - ஹுனர் ஹாட்-2021, தில்லி


பகோடா - ஹுனர் ஹாட்-2021, தில்லி


சோலே - ஹுனர் ஹாட்-2021, தில்லி


சோலே - ஹுனர் ஹாட்-2021, தில்லி


Gகேவர் - ஹுனர் ஹாட்-2021, தில்லி


மிளகாய் பஜ்ஜி - ஹுனர் ஹாட்-2021, தில்லி


விதம் விதமாய் உணவு - ஹுனர் ஹாட்-2021, தில்லி


Gகேவர் உடன் ரப்டி - ஹுனர் ஹாட்-2021, தில்லி


ஆலு சாட் - ஹுனர் ஹாட்-2021, தில்லி


டபேலி - ஹுனர் ஹாட்-2021, தில்லி


பாவ் பாஜி - ஹுனர் ஹாட்-2021, தில்லி


தயாராகும் லிட்டி - ஹுனர் ஹாட்-2021, தில்லி


பனீர் பராட்டா - தில்லி ஹாட், தில்லி


தந்தூரி சாய் - தில்லி ஹாட், தில்லி


மசாலா பால் - தில்லி ஹாட், தில்லி

 

*****

 

இந்த வாரத்தின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

30 கருத்துகள்:

  1. டபேலி, லிட்டி லாம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.

    மற்ற படங்கள் அழகு. பிகானீர்வாலா.. மிக நல்ல உணவுக்கடை. ஹூனர் சாட்... பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை டபேலி கச் - குஜராத் ரொம்ப ஃபேமஸ் ஆனா இப்ப எல்லா இடங்களிலும் கிடைக்கிறது.

      நல்லாருக்கும்.

      கீதா

      நீக்கு
    2. லிட்டி-சோக்கா பிஹார் மாநில உணவு. டபேலி குஜராத் மாநிலத்தின் உணவு. லிட்டி நன்றாகவே இருக்கும் நெல்லைத் தமிழன். பெங்களூருவிலும் கிடைக்கலாம். கிடைத்தால் சுவைத்துப் பாருங்கள்.

      நீக்கு
    3. தற்போது தலைநகரிலும் கூட கிடைக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப்
      பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  2. அருமை.  என்னைக் கவர்ந்தவை முதல் படம்,  முதல் பகோடா, மிளகாய் பஜ்ஜி, டபேலி (சுவீட்டா காரமா என்று கூட தெரியாமல்!  பார்த்தால் ஸ்வீட் போல தெரிகிறது!), பாவ் பாஜி, தந்தூரி சாய்,

    ஆஹா..  மசாலா பால்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் டாபேலி ஸ்வீட் இல்லை. நல்லாருக்கும். இங்க செய்வதுண்டு...

      கீதா

      நீக்கு
    2. பதிவு வழி வெளியிட்ட பதார்த்தங்களில் உங்களுக்குப் பிடித்தவற்றை சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம். Dabeli இனிப்பு அல்ல.

      நீக்கு
    3. டபேலி நீங்கள் வீட்டிலேயே செய்தது அறிந்து மகிழ்ச்சி கீதா ஜி. தேவையான பொருட்கள் இருந்தால் செய்வது சுலபம் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. //வீட்டுக்கு அழைத்து உணவு கொடுத்தால் அது விருந்து; கேட்ட பின் கொடுத்தால் அது பிச்சை; இருக்கும் இடம் தேடிச்சென்று கொடுத்தால் அது தர்மம்; யாரெனத் தெரியாமல் கொடுத்தால் அது தானம்!//
    நல்ல விளக்கம் . ஆனாலும் தான தர்மம் என்று இவை இரண்டையே நீதி நூல்கள் முன் நிறுத்துகின்றன. 


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  4. எல்லா படங்களுமே ஆசையை தூண்டுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த உணவுப் பதார்த்தங்கள் கிடைத்தால் நீங்களும் சுவைத்துப் பாருங்கள் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. பதிவின் உணவு படங்களும் தெளிவாக அழகாக உள்ளது. சிலது வாயில் நுழையாத பெயர்களாக இருந்தாலும் சுவை நன்றாக இருக்குமென படங்கள் சொல்கின்றன. சமோசா, பாவ் பாஜி, மிளகாய் பஜ்ஜி, இரு தினுசான பக்டோக்கள் மசாலா பால் என தெரிந்த உணவுகள் மனதை ஈர்க்கின்றன. அனைத்துமே நன்றாக இருக்கிறது. தில்லி வரும் போது சாப்பிடலாம். அதுவரை கொஞ்சம் பொறுமையாகத்தான இருக்க வேண்டும்..:) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி....

      //வாயில் நுழையாத பெயர்கள்// ஹாஹா.... வேற்று மொழி வார்த்தைகள் என்பதால் சில சமயம் புரிவதில்லை தான். நாம் உச்சரிப்பதும் தவறாக இருப்பதுண்டு.

      தில்லி வரும்போது நிச்சயம் சுவைக்கலாம் வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. இப்படி படங்களைப் போட்டு எங்களை உசுப்பேத்துவது சரியா என உங்களில் சிலர் மனதில் நினைப்பது எனக்குத் தெரிகிறது!//

    ஹையோ வெங்கட்ஜி ...சத்தியமா கிளப்பிட்டீங்க ஆசையை...உசுப்பேத்திட்டீங்க...

    டாபேலி வீட்டில் செய்ததுண்டு. எல்லாமே கண்ணைக் கவர்கிறது. முதல் ஆஹா...அது போல பனீர் பராட்டா யம்மி!! நாவூறுது....எல்லாமே...

    கிளப்பீட்டீங்க போங்க. பிக்கானேர் வாலாவில் நல்லாருக்கும் போயிருக்கேன் ஆனால் ஹூனர் ஹாட் போனதில்லை. நான் சென்ற போது இருந்ததா என்றும் தெரியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசையை கிளப்பி விட்டுவிடுவது மட்டும் நோக்கமல்ல கீதா ஜி. தகவலுக்காகவும் தான். :)

      ஹுனர் ஹாட் ஒவ்வொரு வருடமும் சில நாட்களுக்கு மட்டும் நடக்கும் ஒரு கண்காட்சி. சில வருடங்களாக நடக்கிறது. முன்னரும் இது குறித்து எழுதி இருக்கிறேன் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. எல்லா உணவு படங்களும் நன்றாக இருக்கிறது. வித விதமான உணவுகளை பயமில்லாமல் வாங்கி சாப்பிட வேண்டிய வயதில் சாப்பிட்டு விட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிட வேண்டிய வயதில் சாப்பிட்டுவிட வேண்டும் என்பது சரிதான் கோமதி அம்மா. பிறகு ஆசைப்பட்டாலும் சாப்பிட முடிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. வாசகம் அருமை ஜி.

    லிட்டி சாப்பிட்டிருக்கேனா என்று யோசிக்கிறேன். நினைவு இல்லை....செய்ததும் இல்லை

    ப்ரெட்) குல்ச்சா சோலே ஆஹா...இதுவும் வீட்டிலும் செய்வதுண்டு....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லிட்டி பிகார் மாநில உணவு. கூடவே ஜோக்கா என்று ஒன்று தருவார்கள். சத்துமாவு சேர்த்து செய்யப்படும் ஒரு உணவு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. இந்த உணவு வகைகளை வாய்ப்பு கிடைத்தால் சுவைத்துப் பாருங்கள் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. நாவூறச் செய்யும் படங்கள்:-)!

    பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  11. தில்லி நாட்களை நினைவுபடுத்தியது பதிவு. Gevar அற்புதமாக இருக்கும். படங்களை பார்த்ததும் மனம் சொன்னது - இப்போதைக்கு இந்த உணவு வகைகளை கண்களால் ருசிப்போம். அடுத்த வாய்ப்பு கிடைக்கும்போது புசிப்போம் - என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் தில்லியில் வசித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி. அடுத்த முறை வந்தால் சொல்லுங்கள். வாய்ப்பு இருந்தால் சந்திப்போம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி இணைய திண்ணை.

      நீக்கு
  12. படங்களை பார்க்கும்போதே பசிக்கின்றது வெங்கட் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தால் சுவைத்தும் பாருங்கள் ராமசாமி ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....