திங்கள், 10 ஜனவரி, 2022

கதம்பம் - ஓவியம் - குரங்கு ஃபேமிலி - திரும்பிப் பார்க்கிறேன் - கேரட் பாயசம் - கோலங்கள் - தீநுண்மி - கொத்தமல்லி சாதம்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

TWO FUNDAMENTALS OF COOL LIFE….  WALK LIKE YOU ARE KING OR WALK LIKE YOU DON’T CARE WHO IS KING!

 

******

 

ரோஷ்ணி கார்னர் - ஓவியம்:



 

நீண்ட நாட்களுக்குப் பிறகு மகள் வரைந்த ஓவியம்!

 

******

 

குரங்கு ஃபேமிலி:

 

அவர்: குரங்கு குட்டிங்க எல்லாம் இங்க ஃபேமிலியா உட்கார்ந்து பேன் பார்த்துண்டிருக்கு!

நான்: !!

நான்: எங்க உங்க ஆஃபீஸ் கிட்டக்கயா??

அவர்: ஆமா!

நான்: பார்த்து! ஃபோன பிடிங்கிண்டு போயிடப் போறது!!

அவர்: அப்படில்லாம் ஒண்ணும் பண்ணாது!

நான்: சரி! சரி! 

நான்: எதுக்கும் ஒரு கண்ணு அது மேல இருக்கட்டும்!

நான்: வேற என்ன விஷயம்??

அவர்: இதுங்கள பார்க்கும் போது தான் இந்தக் குரங்கு ஞாபகம் வந்தது!

நான்: எது????

அவர்: அதான் கால் பண்ணேன்...🙂

நான்: ஏய்ய்ய்ய்ய்!!!

அவர்: ஹா..ஹா..ஹா..🙂

 

******

 

2021 (திரும்பிப் பார்க்கிறேன்):



 

சென்ற வருடம் புதிதாகத் தெரிந்த நோய்த்தொற்று இந்த வருடம் தன்னுடைய பரிமாணங்களை விதம்விதமாக மாற்றிக் கொண்டாலும் நாம் அதற்கேற்றாற் போல் வாழப் பழகிக் கொண்டு விட்டோம்! ஆனாலும் இன்னும் முழுமையாக எதுவும் மாறவில்லை! மிகவும் கவனத்துடன் தான் இருக்கணும்!

 

இந்த வருடம் துவங்கியதும் தெரியலை! முடிந்ததும் தெரியலை! எனும் படியாகத் தான் இருந்தது. வழக்கமான வேலைகளும், எனக்கான கடமைகளும் நாட்களை கடத்தியது ஒருபுறம் என்றாலும் மனதளவில் சற்றே பக்குவப்பட வைத்தது. எதையும் தள்ளி வைத்து பார்க்க முடிந்தது!

 

எழுத்தில் கூடுதல் ஆர்வத்தை உண்டாக்கிய வருடம் இது என்று சொல்லலாம்! சென்ற வருடம் போலவே இந்த வருடமும் Amazonல் மூன்று மின்னூல்களை வெளியிட முடிந்தது. என்னுடைய எழுத்து உலகின் ஏதோவொரு மூலையில் யாரோ ஒருவரால் வாசிக்கப்படுகிறது என்பது என்னைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய விஷயம்!

 

இந்த வருடத்தில்  மனதுக்கு நெருக்கமான மூன்று தொடர்களை எழுத முடிந்தது. இவை என்னை திரும்பி பார்க்க வைத்து, கடந்த வாழ்வின் தருணங்களில் சந்தோஷப்பட்டுக் கொள்ளவும், என்னளவில் சமாதானம் செய்து கொள்ளவும் என நிறைய விஷயங்கள் கிடைத்தன. 

 

பல வருடங்கள் கழித்து உறவுகளோடு நேரத்தை செலவிட்டது, குலதெய்வ வழிபாடு என இனிமையான நிகழ்வுகள் மனதை நிறைத்து புத்துணர்வைத் தந்தது. 'அவரும் நானும்' தொடர் எழுதியது மூலம் இல்லற வாழ்வில் நாங்கள் கடந்து வந்த தருணங்களை அசைபோட வைத்தது! இறையருள் இருந்தால் அடுத்த 20 வருட வாழ்வையும் இது போன்று அசை போடணும் என்ற ஆசை எட்டி பார்க்க வைத்தது...🙂

 

புத்தாண்டில்  'அவரும் நானும்' தொடரை மின்னூலாக்கணும்! ஏறக்குறைய முடியும் நிலையில் உள்ள ரெசிபி புக்குக்கான வேலைகளை முடித்து வெளியிடணும்! புதிதாக ஏதாவது எழுதணும்! இவை தவிர புத்தாண்டில் எடுக்கப் போகும் தீர்மானங்களாக எதுவும் இல்லை..🙂 ஒவ்வொரு நாளையும் நல்லபடியாக செலவிடணும் என்பதைத் தவிர எந்த சிந்தனைகளும் இல்லை..🙂

 

பிறக்கப் போகும் புத்தாண்டில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க இறைவன் அருள்புரியட்டும்!

 

******

 

கேரட் பாயசம் - புத்தாண்டு இனிப்பு!:



 

பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு சேர்த்து இன்னிக்கு புலாவ் பண்ணலாம் என நினைத்து விட்டு இறுதியில் மூன்றும் மூன்று வித பதார்த்தமாக மாறிப் போனது..🙂

 

பீன்ஸ் தேங்காய் சேர்த்த கறி, உருளைக்கிழங்கு சாம்பார் மற்றும் கேரட் பாயசமாக ஆனது..🙂

 

இனிப்புடன் புத்தாண்டை துவக்குவோம்! நல்லதே நடக்கட்டும்!

 

******

 

மார்கழி - கோலங்கள் - மூன்றாம் ஐந்து:






 

மார்கழி மாதத்தின் மூன்றாம் ஐந்து நாட்கள் எங்கள் வீட்டில் மகள் போட்ட கோலங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு!  

 

******

 

தீநுண்மி:

 

காலை Hello FMல் இன்றைய சூழலில் முகக்கவசமும், சேனிடைசரும் மிகவும் அத்தியாவசியமானது. அவை மக்களுக்கு தொந்தரவாக உள்ளதா? அல்லது செயல்படுத்த கடினமாக உள்ளதா? என்று கேட்டிருந்தார்கள்.

 

என்னுடைய கருத்தாக பதிவு செய்வது என்னவென்றால்

 

நம்மை காக்கும் ஆயுதங்களாகத் தான் இரண்டும் உள்ளன. கண்ணுக்குத் தெரியாத வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த தொற்றிலிருந்து ஓரளவு நம்மை காத்துக் கொள்ள தடுப்பூசிகளும், தனி மனித இடைவெளியும், முகக்கவசத்தின் அவசியமும், சேனிடைசரின் உபயோகமும் தான் நம்மை பாதுகாக்கும். 

 

இந்த இரண்டு வருடங்களில் வெளியே செல்லும் சந்தர்ப்பங்களில் முகக்கவசம் அணிந்து தான் சென்று கொண்டிருக்கிறேன். இதுவரை தவறியதில்லை. அது ஒன்றும் இடைஞ்சலாகவோ, செயல்படுத்த கடினமாகவோ இருந்ததில்லை! 

 

மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. பெரும்பாலும் தாடைக்குக் கீழே அணிந்து செல்பவர்களைத் தான் பார்க்க முடிகிறது..🙁 நாம் நம்மைக் காத்து கொள்ளத் தான் அணிய வேண்டுமே தவிர பிறருக்காக இல்லை!

 

வரும் நாட்களில் நம்மை காக்கும் நடைமுறைகளை சரியாக பின்பற்றினால் நிச்சயம் உலகிலிருந்து  பெருந்தொற்றை  விரட்டிடலாம். 

 

******

 

One Pot Meal - கொத்தமல்லி சாதம்:



 

சமீபத்தில் மகளின் மதிய உணவாக செய்த கொத்தமல்லி சாதம்! செய்முறை குறிப்பு சுருக்கமாக கீழே!

 


 

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

16 கருத்துகள்:

  1. ரோஷ்ணியின் ஓவியம் அழகு.

    நோய்த்தொற்று மறுபடியும் பயமுறுத்துகிறது.

    கேரட் பாயசம், கொத்துமல்ல சாதம் இரண்டுமே பார்ப்பதற்கு அருமையாய் இருக்கின்றன.

    கோலங்கள் வெகு அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. கொத்தமல்லி சாதம்  செய்முறையையும் சேர்த்திருக்கலாம். பட்டாணி கடலை எல்லாம் தெரிகிறதே. அதுவும் குக்கெரில் வேக வைத்தது போல் உள்ளதே. அதனால் தான்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கனவே இதன் செய்முறை வெளியிட்டிருக்கிறார். உங்களுக்காகவே செய்முறை குறிப்பின் ஒரு படம் பதிவில் சேர்கிறேன் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. கோலங்கள் அழகு... அனைத்து பகுதிகளும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. கதம்பம் நன்று.
    குரங்குகளின் பேச்சொலி ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. ரோஷிணி வரைவதில் நல்ல முன்னேற்றம். பாராட்டுகள் வாழ்த்துகள்!

    குரங்கு ஃபேமிலி!! ஹாஹாஹாஹ் ரசித்தேன்

    கேரட் பாயாசம், கொத்தமல்லி சாதம் சூப்பர். யம்மி!!!

    கோலங்கள் அழகு.

    உங்கள் எழுத்து மேலும் வளர வாழ்த்துகள். தீநுண்மி என்ன சொல்ல? நாளுக்கு நாள் ஒவ்வொன்றாய்....அதுவும் வளர்கிறது மக்களும் அட போ என்றுதான் இருக்கிறார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரி

    கதம்பம் நன்றாக உள்ளது. ரோஷ்ணியின் ஓவியம் அழகாக உள்ளது. கொத்தமல்லி சாதம், கேரட் பாயாசம் அனைத்தும் வெகு ஜோராக வந்துள்ளது. ரோஷிணியின் கோலங்கள் ஒவ்வொன்றும் மிக அழகாக திருத்தமாக உள்ளது. தங்கள் மகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். தலைத்தூக்கும் தீநுண்மி இறைவன் அருளால் குறைய வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. கதம்பம் நன்றாக இருக்கிறது.
    ரோஷ்ணியின் ஓவியம், கோலம் எல்லாம் அழகு.
    குரங்கைப் பார்த்து நினைவு வந்த உரையாடல் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. அனைத்தும் அருமை. ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....