புதன், 19 ஜனவரி, 2022

தொற்றும் இழப்பும் - லதா மாமி


எங்கேயோ! யாருக்கோ! என்று கேட்டதெல்லாம் போய்!  நெருங்கிய வட்டத்துக்குள் என வரும் போது அதன் வலியை நடுக்கத்துடன் உணர முடிகிறது..🙁 இந்த நோய்த்தொற்று இன்னும் எத்தனை உயிர்களை எடுத்துக் கொள்ள காத்திருக்கிறதோ??


சமீபத்தில் சென்று வந்த மாமாவின் சஷ்டியப்த பூர்த்தி விழா பற்றி நான் மகிழ்வுடன் எழுதியிருந்தது நினைவிருக்கலாம். சரியாக மூன்று மாதம் கூட நிறைவு பெறவில்லை.. இன்று மாமி இல்லை என்பதை ஒத்துக் கொள்ளவே முடியவில்லை...🙁


சிரித்த முகமும், அன்பும் நிறைந்த பெண்மணி! என்னுடைய சிறுவயதிலிருந்து மாமியை பார்த்த காட்சிகள் மட்டுமே இன்று கண்களுக்குள் பசுமையாய்! பத்து நாட்களுக்கு முன் நான் பேசிய போது கூட இவ்வுலகை விட்டு எட்டா உயரத்திற்கு செல்லப் போகிறார் என்பது தெரியாமல் போனது தான் இறைவனின் சித்தம்.


சேர்ந்தாற் போல பத்து நாட்கள் கூட நான் மாமியுடன் இருந்ததில்லை..! ஆனாலும் நேற்று இரவு முதல் என்னால் இந்தப் பிரிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..🙁 தாயை இழந்த மகள்களின் நிலையை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.. அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது..🙁


இணையை இழந்து வாடும் மாமாவுக்கும், அம்மாவை இழந்து தவிக்கும் மகள்களுக்கும் மாமி தான் கடவுளாக உடனிருந்து வழிநடத்தணும்.. எத்தனை ஆறுதல் சொன்னாலும் தேற்ற இயலாத இழப்பு..🙁 இனி யாருக்கும் இந்த நிலை வேண்டாம் இறைவா!


******


அழகு தேவதை!





நீ எழுதறது எல்லாமே படிச்சிடுவேன் புவனா! சூப்பரா எழுதற!


எதுக்கு மாமி! இப்ப எனக்கு புடவை??


அப்படி சொல்லக்கூடாது புவனா! நீ ஒவ்வொரு தடவையும் இங்க வரணும்! நான் உனக்கு புடவை வாங்கித் தரணும்!


புடவையை உடுத்திக் கொண்டு ஃபோட்டோ எடுத்து மாமியிடம் பகிர்ந்து கொண்டதும்..


இந்தப் புடவை அழகா இருக்கோ! இல்லையோ! உனக்கு அம்சமா இருக்குப்பா!


அன்று ஒருநாள் அவியல் மற்றும் பாயசத்துடன் அருமையான உணவை செய்து பரிமாறி விட்டு..


சாரி புவனா! வடை மட்டும் தட்ட முடியலடா! என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.


அன்று மாமியின் கைப்பக்குவத்தில் சுவைத்த அவியலின் ருசி இன்றும் நாவில்!


நான் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது என் இரு மாமாக்களுக்கு திருமணமானதாக நினைவு. என் மாமிகள் எல்லோரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொருவருமே தங்கள் தனித்திறமைகளாலும், அன்பை வெளிப்படுத்தும் குணத்தாலும் தனித்துவம் பெற்றவர்கள்.


இன்று யாருக்கும் எட்டாத உயரத்தில் அழகு தேவதையாக மாறிப் போன லதா மாமியும் விண்ணுலகிலிருந்து என் எழுத்தை ரசிப்பார் என்று எண்ணிக் கொள்கிறேன். 


இனிமே இவையே என் மனதில் நினைத்துப் பார்த்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டிய பசுமையான நினைவுகள்.


மன வருத்தத்துடன்


ஆதி வெங்கட்


30 கருத்துகள்:

  1. நெருங்கிப் பழகிய நட்பின் இழப்பு சட்டென ஜீரணிக்க முடியாதது.  ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெருங்கிய உறவு, நட்பு என எதுவாக இருந்தாலும் ஜீரணிக்க முடியாத இழப்புதான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. துயரமான நிகழ்வு... ஆழ்ந்த இரங்கல்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. சமீபத்தில் சென்று வந்த மாமாவின் சஷ்டியப்த பூர்த்தி விழா பற்றி நான் மகிழ்வுடன் எழுதியிருந்தது நினைவிருக்கலாம். சரியாக மூன்று மாதம் கூட நிறைவு பெறவில்லை.. இன்று மாமி இல்லை என்பதை ஒத்துக் கொள்ளவே முடியவில்லை...��//

    அடக் கடவுளே. நன்றாக நினைவிருக்கிறது ஆதி.

    ஆழ்ந்த இரங்கல்கள். வேறு என்ன சொல்ல? வார்த்தைகள் இல்லை ஆதி. இழப்பை ஏற்பது ரொம்ப ரொம்பக் கஷ்டம் அதுவும் பாசப் பிணைப்புடன் இருப்பவர்களின் இழப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  5. இழப்பு எதுவாக இருந்த போதும் அதை ஏற்பது என்பது மிகவும் கஷ்டம்..

    காலம் தான் மனதின் துயரங்களை மாற்ற வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரி

    நீங்கள் சஷ்டியப்தபூர்த்தி விழா பற்றி எழுதியது நினைவிருக்கிறது. அதன் பின்பு உங்கள் மாமிக்கு இப்படி நடந்த விஷயம் மனதுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. இழப்பு என்பது சாதாரண விஷயமல்ல.. மனது நொறுங்கித்தான் போகும். வேறு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. காலம தான் உங்கள் மனதுக்கு ஆறுதலை தர வேண்டும். உங்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  7. "அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது"

    ஆழ்ந்த இரங்கல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோயில்பிள்ளை.

      நீக்கு
  8. "அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது"

    தங்கள் மாமியின் இழப்பு வருத்தமளிக்கிறது.

    ஆழ்ந்த இரங்கல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோயில்பிள்ளை.

      நீக்கு
  9. நம்முடன் அன்பாய் வலம் வந்தவர்களின் மறைவு மிகுந்த வேதனை தரும். மாமியின் ஆசீர்வாதங்கள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு. ஆழ்ந்த இரங்கல்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி காயத்ரி சந்திரசேகர் ஜி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு
  11. ஆழ்ந்த இரங்கல்கள் . அவர்கள் ஆசீர்வாதம் என்றும் உங்கள் குடும்பத்தினருக்கு கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  12. துயரமான நிகழ்வு... ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  14. நிச்சயம் தாங்க முடியாத வேதனை தான். ஆழ்ந்த இரங்கல் நண்பரே.

    வேதனையை உங்கள் பதிவு மிகவும் அழகாக விவரிக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி குமார் ராஜசேகர்.

      நீக்கு
  15. முகநூலில் படித்து மிகவும் வருத்தப்பட்டேன். இவர்களின் மணீவிழாவில் கலந்து கொண்டு எவ்வளவு மகிழ்வாய் ஆதி பதிவு போட்டார்.
    இறைவன் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலை தர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....