அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
விஜி வெங்கடேஷ் அவரது குடியிருப்பு வளாகத்தில் இந்த வருடம் நடந்த தீபாவளி கொண்டாட்டங்கள் குறித்த தனது அனுபவங்களையும் நம்முடன் இன்று பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு விஜி வெங்கடேஷ்.
******
CGV தீபாவளிக் கோலாகலம் அக்டோபர் 2025
அனைவரும் திரண்டு வாருங்கள், விளையாடுவோம், வாணம் விடுவோம், கொண்டாடுவோம் தீபாவளியை என CGV கமிட்டி அழைப்பு விடுத்தவுடன் அனைவரும் தீபாவளியன்று மாலை ஒரு எதிர்பார்ப்போடு banquet ஹாலில் குழுமினோம்.
Group forming game
அனைவரையும் ஒரு வளையம் போல் நிற்கச் சொல்லி பின் மெதுவாக வட்டமாக சுற்றிவரச் சொன்னார்கள். அப்போது அந்நிகழ்ச்சியை நடத்தும் பெண்மணிகள், நடந்து கொண்டே இருங்கள் என்பதற்கு வாக் வாக் வாக் என்று திருவாக்கு சொல்லிக் கொண்டிருக்க நாங்களும் catwalk போல🪿🦆 வாக் வாக்கினோம். பிறகு ஒரு எண் சொல்கிறார்கள் அந்த எண்ணிக்கையில் எல்லோரும் குரூப் form செய்யவேண்டும். 11 என்றால் 11 பேர் சேரவேண்டும். அதற்குக் குறைவான அல்லது ஜாஸ்தியான நபர்கள் கொண்ட குரூப் அவுட். கடைசியில் மூவர் மிஞ்சுகின்றனர். அப்போது 2 என்று சொல்ல இருவர் சேர்ந்து ஒருவரை அவுட் செய்து ஜெயிக்க, அவ்விருவருக்கும் பரிசு 🎁 கிடைத்தது.
ஜாலியாக இருந்தது. அதுவும் சொன்ன எண்ணிக்கையை நிறைவு செய்ய அடுத்த குரூபில் இருந்து சிலரை தர தரவென (கிட்டத்தட்ட கதறக் கதற) ஆட்களை இழுத்து வந்து சேர்த்துக் கொண்டது படு தமாஷ். நிஜ அரசியல் போலவே இருந்தது. அதுவும் இப்படி இழுத்து வந்ததெல்லாம் பெரும்பாலும் பெண்கள்தான்! பிறர் கையைப் பிடித்து இழுப்பது இதில் தவறாகப் பார்க்கப் படுவதில்லை, எண்ணிக்கை முக்கியம்🙂. இந்த விளையாட்டு விளையாடி அவுட் ஆகும் risk எடுக்க விரும்பாத சிலரும் நடுவில் நின்று வாக் கு சேகரித்தனர்.
விளையாட்டு 2: குப்பை கொட்டுவது எப்படி?
அட ஆமாங்க, dust bin ன்னுக்குள் கசக்கிய காகிதப் பந்தை ஒரு 5, 6 அடி தள்ளி நின்று சரியாக அதற்குள் விழுமாறு போட வேண்டும்.
நம்ம வீட்டில் கிட்டத்தட்ட trash bin ஐ உரசிக் கொண்டு நின்று நாம் குப்பையைப் போட்டாலும் அது சிதறி வேறு பக்கம் விழும் perfectionist நாம்! அதுவும் குனியாமல் வணங்காமுடி dustbin வந்தபிறகு இன்னும் மோசம். காலால் lever ஐ அழுத்திவிட்டு குப்பை அதனுள் விழுமுன் காலை எடுத்துவிடுவதால் (ஆஹா what a timing!) குப்பை சரியாக, தானாக மூடிக்கொண்ட மூடி மேல் சப்பென்று விழுந்து தொலையும். நாம் (நாம் என்பதெல்லாம் நான் தான்😊 (வேறு) யார் தருவார் இந்த அரியாசனம்!) குனிந்து எடுத்து போடும்போது நாமும் முனக, நம் இடுப்பும்😫! (அப்படியும் இடுப்பு அடுப்பாகவே இருப்பதற்கு குப்பைதொட்டி பொறுப்பல்ல😌)
அந்தமாதிரி சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்த எங்களுக்குதான் இந்த game. எல்லோரும் சுத்திவர நின்று கைதட்டி கோஷம் போட்டால் மட்டும் சரியாக trash bin க்குள் 🗑️ குப்பையை போட்டுவிடுவோமா என்ன? யாருகிட்ட?
ஆனால் வெகு சிலர் சரியாக bin க்குள் போட்டு விட்டனர். அவர்கள் ஆண்களும், சிறுவர்களும்! ஓரிரு பெண்கள் (கை தவறுதலாக😜) சரியாகப் போட்டுவிட்டனர். பின் அவர்களுக்குள் போட்டி வைத்து இருவருக்கு பரிசு தரப்பட்டது. (dust bin ஐ உபயோகிக்கத் தேவையில்லாத நல்ல பரிசு👌🏻 🎁😊).
பட்டாசு வெடிக்கும் வைபவம் கேட்டுக்கு வெளியே ஆரம்பமாயிற்று.
சிலர் வெடி வெடிக்க, பலர் வேடிக்கை பார்க்க ஆயிரம்வாலா பட்டாசுகள் வெடித்துச் சிதறி அங்கு ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி நடந்தேறியது.
புஸ்வாணங்கள்
இரவு வானத்தை பட்டப் பகலாக்கி பல நிறப் பூக்களைச் சொரிந்தன...
ராக்கெட்டுகள் நேராய் மற்றும் வளைந்து, நெளிந்து வித விதமாய் இரவைக் கிழித்துக் கொண்டு பாய்ந்தன..
பல நூறு கண்கள் அக் காட்சிகளைப் பருகின;
வாய்கள், வாய்ப்பை நழுவ விடாமல் ஒலி எழுப்பின...
காதுகள் ஓசையால் அடை(க்கப்)பட்டன.. பின் விடு(விக்கப்)பட்டன..
குழந்தைகளின் உற்சாகம் அவ்வானம் தொட்டது.
பெரியவர்களின் உற்சாகம் கரை புரண்டது..
ஒரு வாண்டு பட்டாசு வெடித்து அதன் பொறி அருகில் வந்து விழுந்தவுடன் பயந்து தன் தந்தையை இழுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு அவசரமாக நகர, அதைப் பார்த்து சிலர் சிரிக்க… சிலர் அருகில் போய் அவனை மேலும் சீண்ட, சமாதானப் படுத்த... உற்சாகமாய் பொழுது கழிந்தது..
சொன்னதும் சொல்ல விட்டதும்..
அன்றைய நிகழ்ச்சியின் கலகல பகுதியான விளையாட்டுக்களைப் பற்றிச் சொன்னேன்.
சொல்ல விட்டது:
விளையாட்டுக்களை திறம்பட தேர்வு செய்து, கச்சிதமாக plan பண்ணி, அழகாக நடத்தி அனைவரையும் மகிழ வைத்தது மட்டுமல்லாமல் வென்றவர்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுப் பொருட்களை Sponsor ம் செய்த Smt.Shirin Jeyaraman அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் CGV சார்பாகத் தெரிவித்துக்கொள்கிறேன்🙏🏻🙏🏻
Smt.Shirin mam தன் முகத்தைக் காட்டி விளம்பரம்,புகழ் தேடிக்கொள்பவர் அல்லர் ஆதலால் இந்த photo வில் முகத்தை காட்டவில்லை எனினும் அவர் நிற்கிறார்👍🏻(நம் மனதில்😊)
(உங்கள் mind voice: சரியான photo கிடைத்து போடாததற்கு இத்தனை சுற்றா?அடேயப்பா🫢)
நிகழ்ச்சிகளை அருமையாக நடத்தி, கலந்துகொண்டு கலகலப்பூட்டி இத் தீபாவளியை அழகிய தீபத்திருநாளாக்கிய 🪔 அனைவருக்கும்
நன்றிகள் பல🙏🏻🙏🏻
பி. கு.
மேற்கண்ட photo வில் ஆஞ்சநேயர் தன் வாலையே பற்ற வைத்து அதிலிருந்து மத்தாப்பை பற்ற வைக்கப் பணிவாகச் சொல்லுவது அழகு. அதனால் இணைத்தேன். மற்றபடி எனக்கு CVG photos கிடைக்கவில்லை என்பதால் அல்ல😌 அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
30 அக்டோபர் 2025



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....