ஞாயிறு, 12 அக்டோபர், 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி முப்பத்தி ஒன்பது - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று  

பகுதி பதினான்கு பகுதி பதினைந்து  பகுதி பதினாறு 

பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது 

பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு

பகுதி இருபத்தி மூன்று  பகுதி இருபத்தி நான்கு

பகுதி இருபத்தி ஐந்து பகுதி இருபத்தி ஆறு

பகுதி இருபத்தி ஏழு பகுதி இருபத்தி எட்டு

பகுதி இருபத்தி ஒன்பது பகுதி முப்பது பகுதி முப்பத்தி ஒன்று

பகுதி முப்பத்தி இரண்டு பகுதி முப்பத்தி மூன்று

பகுதி முப்பத்தி நான்கு பகுதி முப்பத்தி ஐந்து

பகுதி முப்பத்தி ஆறு பகுதி முப்பத்தி ஏழு பகுதி முப்பத்தி எட்டு


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



ஆஹா பெண்களுக்கு கூந்தல்ல இயற்கையாவே மணம் இருக்கறது நிஜம்தானோ தேவி..


அது கேசவர்தினினால நாதா… நக்கீரன மறந்துட்டீங்களா....


ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

ஓம் தேவ்யை நமஹ 🙏🏻🙏🏻🙏🏻



*******



பாத்தியா மயிலண்ணா திருச்செந்தூர் கும்பாபிஷேகம் இப்பத்தான் முடிஞ்சுது. ஆனா பீச் எத்தன சுத்தமா இருக்கு பாத்தியா குப்ப கூளம் இல்லாம… மக்கா திருந்திட்டாங்களா...


இது swachcha பாரத் முருகா… இனிமே அப்படித்தான்..


ஓம் நமோ குமாராய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻


*******



கந்தா என் தோகையை உருவி எனக்கே சொருகிட்டியா? பேஷ் பேஷ். அதோட உன் பச்ச கலர் necklace அயும் போட்டுவிட்டாத்தான் என்னவாம்?


கொஞ்சம் சும்மா இரு மயிலண்ணா நானே அம்மா குடுத்த சீடையைக் கொறிச்சுட்டு பல்வலில தவிக்கிறேன்...


ஆனாலும் அத காட்டிக்காம சிரிச்சுக்கிட்டே pose குடுக்கிற பாரு அங்கதான் நீ நிக்கற முருகா...👍🏻


ஓம் நமோ சண்முகாயை நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



எழுந்திரு ராதா photo shoot முடிஞ்சு photographer போய் கால் மணிநேரம் ஆச்சு....


இரு கிருஷ்ணா இப்பிடியே போஸ் குடுத்ததுல கழுத்து சுளுக்கிக்கிச்சு… moov கொண்டு வா...


ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



ஊஞ்சல வேகமா ஆட்டி விடாதீங்க நாதா பயமாயிருக்கு… ஊஞ்சல் கயிறு பூங்கொடி மாதிரி இருக்கு... பின்னாடி பள்ளம்… மழை வேற...


கண்ணை மூடிக்கோ தேவி, பயம் போயிடும்.... (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பர்வதகுமாரி....  இனிமே கேப்ப?)


ஓம் சிவசக்த்யைக ரூபிண்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



புதுசா மாருதி மார்ட் திறந்திருக்கியா ஆஞ்சநேயா?


இல்ல பிரபு, உடல் நலம், பலம் வேண்டும்னு எங்கிட்ட வராங்க. ஆனா சத்தானத சாப்பிடறதில்ல.

அவரைக்காய் சாப்டா இதயத்துக்கும் எடை குறைக்கவும் மிக நல்லதுனெலாம் சொல்லிட்டிருக்க முடியுமா? அதான் என் போட்டோல அது தெரியரமாதிரி எடுத்துக்கிட்டேன்.... 


பரவாயில்ல வாயு புத்ரா நிச்சயமா காய்கறி வியாபாரி உன்ன வாழ்த்தி வணங்குவான்!


ஜெய் ஶ்ரீராம்🙏🏻🙏🏻🙏🏻


*******



இன்னிக்கி ஆடிப்பெருக்கு. நதில நல்லா முங்கி  குளிச்சாச்சு. ராதா சித்ரான்னங்கள் பண்ணி கொண்டு வரேன்னிருக்கா. அது வரைக்கும் flute வாசிச்சிட்டு இருக்கலாம். பசி தெரியாது....


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

12 அக்டோபர் 2025


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....