செவ்வாய், 28 அக்டோபர், 2025

நவராத்திரி கொண்டாட்டம் September 2025 - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


விஜி வெங்கடேஷ் அவரது குடியிருப்பு வளாகத்தில் இந்த வருடம் நடந்த நவராத்திரி கொண்டாட்டங்கள் குறித்த தனது அனுபவங்களையும் நம்முடன் இன்று பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு விஜி வெங்கடேஷ். 


******


Casa Grande Verdant நவராத்திரி கொண்டாட்டம் Sep' 2025




இந்த நவ ராத்திரி பதினோரு நாட்கள் அதுவே ஒரு சிறப்பு!


வித விதமான பொம்மைகள்

பார்க்கப் பார்க்க வியப்பு!


நாளொரு வண்ணமாய் சேலைகள் கண்ணுக்கு விருந்து;


அதே வண்ணத்தில்  ஆண்களும் அணிந்தது சிறப்பு; 


பலப் பல பாடல்கள், பஜனைகள் காதுக்கு விருந்து;


விதவிதமாய் உடுத்தி உலா வந்த சிறார்கள் அழகு;


அவர்தம் சிறு வாயால் மழலையில் பாடியது கொள்ளை அழகு;


மகேஷ்வரன் பாடல்கள் தினமும் முதலில் ஒலித்தன;


உமையொருபாகனவன் எனப் பறைசாற்றின;


நவராத்திரியில் இது சிவராத்திரியாய் சிறந்தது;


கேட்டு மகிழ்ந்த அம்பிகையின் முகம் குங்குமமாய்ச் சிவந்தது;


அவளிரு பிள்ளைகள் புகழும்  பாட்டால் பரவின;


அவளின் மகிழ்ச்சிக்கு எல்லை எது என வினவின;


குறையில்லாமல் அவள் புகழும் பாடப் பெற்றது;


அதில் ஆழ்ந்த நெஞ்சமதில் பக்திமணம் சூழ்ந்தது;


கோலாட்டமும், கும்மியும் நிலவொளியில் கோலாகலம்;


பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கொண்டாட்டமோ கொண்டாட்டம்;


தொகுத்து வழங்கிய அன்பர்கள் மொழி கலகலப்பூட்டிட;


காண்போர் கண்ணுக்கும் கருத்துக்கும் அவை சுவையூட்டியதே!


பிரசாத வகைகள் ஒவ்வொரு நாளும் பல விதம்;


ஏங்கியது மனமும் நாவும் தினம் தினம்!


2025 CGV நவராத்திரி  அதகளம்;

அமர்க்களம்!


நெடுநாட்கள் நினைவில் அவை அலைமோதும்;


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

28 அக்டோபர் 2025


2 கருத்துகள்:

  1. நவராத்திரி கவிதை அருமை. கொலு படமும் அருமை.

    //நாளொரு வண்ணமாய் சேலைகள் கண்ணுக்கு விருந்து;


    அதே வண்ணத்தில் ஆண்களும் அணிந்தது சிறப்பு; //

    ஒவ்வொரு கிழமை ஒவ்வொரு வண்ணம் அறிவித்து விட்டதால் அன்று எல்லோரும் ஒரே நிறத்தில் அணிந்து வந்தார்கள் இந்த முறை.

    பதிலளிநீக்கு
  2. வரிவரியாய் வர்ணனையில் வந்து சென்ற நாட்களின் சிறப்பு தெரிந்தது. உங்கள் உள்ளம் அதனால் அடைந்த மகிழ்ச்சியும் புரிந்தது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....