அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது. அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று
பகுதி இரண்டு பகுதி மூன்று பகுதி நான்கு பகுதி ஐந்து
பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு பகுதி ஒன்பது பகுதி பத்து
பகுதி பதினொன்று பகுதி பன்னிரண்டு பகுதி பதிமூன்று
பகுதி பதினான்கு பகுதி பதினைந்து பகுதி பதினாறு
பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது
பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு
பகுதி இருபத்தி மூன்று பகுதி இருபத்தி நான்கு
பகுதி இருபத்தி ஐந்து பகுதி இருபத்தி ஆறு
பகுதி இருபத்தி ஏழு பகுதி இருபத்தி எட்டு
பகுதி இருபத்தி ஒன்பது பகுதி முப்பது பகுதி முப்பத்தி ஒன்று
பகுதி முப்பத்தி இரண்டு பகுதி முப்பத்தி மூன்று
பகுதி முப்பத்தி நான்கு பகுதி முப்பத்தி ஐந்து
பகுதி முப்பத்தி ஆறு பகுதி முப்பத்தி ஏழு
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
*******
அப்பா, வீடு வரை நடத்தியே கூட்டிட்டு போகப் போறீங்களா???
உங்க வாகனத்துல என்ன ஏத்தி உக்கார வைங்களேன். லேசா கால் வலிக்கற மாதிரி இருக்கு...
கொஞ்சம் நடக்கவும் நடக்கணும் முருகா... அருவில 2 மணி நேரம் ஆட்டம்போட்டபோது கால் வலிக்கல இல்ல????
(சே இனிமே மயிலண்ணா இல்லாம எங்கேயும் நகரக் கூடாது..)
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமோ குமாராய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
ராதா அந்தக் கண்ணாடியக்குடு பாக்கறேன், நான் தெரியறேனா இல்ல என் விழியில் நிறைந்திருக்கும் நீ தெரிகிறாயா என்று....
இந்த பிட்டெல்லாம் நீ ஏற்கெனெவே போட்டாச்சு கிருஷ்ணா. ஏன் யாராவது வெயிட் பண்றாங்களா? முக அலங்காரத்த சரி பண்ணிக்கிட்டு போகணுமாக்கும்?
சே சே என்ன ராதா என்னப்போய் இப்படி கேட்டுட்ட? (எப்படித் தெரிஞ்சுது🤔.....)
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
என்ன கிருஷ்ணா நாக்கு இப்பிடி சிவந்திருக்கு உனக்கு?
தெரியலையேம்மா, ஒருவேளை பீட்ரூட் கறி சாப்பிட்டதால இருக்குமோ.... (நீ வெச்சிருந்த பீடாவை taste பண்ணினேன்னு சொன்னா தீந்தேன்...)
அது பண்ணி 3 நாளாச்சே கிருஷ்ணா...
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
ராதா உனக்கு என்ன மனக் குறை இருந்தாலும் எங்கிட்ட சொல்லு...
நீயே கூட இருக்கும்போது எனக்கென்ன மனக்குறை கிருஷ்ணா? அப்புறம் ....
அப்புறம்???
ஒண்ணுமில்ல, என்னோடதவிட உன் கம்மல் இன்னும் அழகா வித்தியாசமா cute ஆ இருக்கு.மெதுவா நாளைக்கு குடு போதும், அவசரமில்ல...
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
என்னது? முருகன் வேலோட நுனிய பிடிச்சிண்டிருக்கான், ஆனா வேல் அவன் பின்னாடி இருக்கு! புரியல.....
மாமா மாதிரி மயிலிறகு வெச்சுண்டா அவன் மாதிரி மாயைலயும் கலக்கணுமா என்ன????
ஓம் தேவ்யை நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சண்முகாயை நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
நல்லா இருக்கேனா கிருஷ்ணா?
சூப்பர். perfect ஆ இருக்கு ராதா makeup.. அந்த ரோஜா இலைகள மட்டும் எடுத்துடு. பசுவெல்லாம் உத்துப் பாக்குது பாரு...
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
குழந்தையும் நம்மளோட சேர்ந்து தியானம் பழகறான் பாருங்க நாதா, சமத்து....
அப்படியா லேசா குறட்டை சத்தம் கேக்குதே தேவி....
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் தேவ்யை நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
5 அக்டோபர் 2025
படங்களும் அருமை.அதற்கான விளக்கமும் அருமை..
பதிலளிநீக்குபடங்கள் அழகு. வரிகள் சுவாரஸ்யம். ரசித்தேன்.
பதிலளிநீக்கு