அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது. அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று
பகுதி இரண்டு பகுதி மூன்று பகுதி நான்கு பகுதி ஐந்து
பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு பகுதி ஒன்பது பகுதி பத்து
பகுதி பதினொன்று பகுதி பன்னிரண்டு பகுதி பதிமூன்று
பகுதி பதினான்கு பகுதி பதினைந்து பகுதி பதினாறு
பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது
பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு
பகுதி இருபத்தி மூன்று பகுதி இருபத்தி நான்கு
பகுதி இருபத்தி ஐந்து பகுதி இருபத்தி ஆறு
பகுதி இருபத்தி ஏழு பகுதி இருபத்தி எட்டு
பகுதி இருபத்தி ஒன்பது பகுதி முப்பது பகுதி முப்பத்தி ஒன்று
பகுதி முப்பத்தி இரண்டு பகுதி முப்பத்தி மூன்று
பகுதி முப்பத்தி நான்கு பகுதி முப்பத்தி ஐந்து
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
*******
நான் போட்டுட்டிருக்கிற அலங்கார cheppal cum தண்டை எல்லாம் உனக்கு suit ஆகாது மயிலண்ணா. சொன்னா கேக்கணும்.... முரண்டு பண்ணாம இப்ப கிளம்பு திருச்செந்தூருக்கு. கோலாகலமா அங்க கும்பாபிஷேகம் பாக்கலாம்… சமத்து....
ஓம் நமோ சரவணாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
நீ வெற்றி வேல் வீர வேல் சொல்லி வேலை தூக்கிப் பிடிக்கிறது எல்லாம் Ok வேலவா, பாக்கவே வீரம் பிறக்குது..... கொஞ்சம் என்னைக் கீறாம மட்டும் வேலை உசத்து..... ஆ..... neosporin ointment அ தேடணும் இப்ப......
ஓம் நமோ குமாராய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
கிருஷ்ணா உன் கால் தூசிக்கு நான் பெறமாட்டேன்தான், ஆனாலும் உன் கால் தூசியெல்லாத்தையும் என் புது புடவையில் நீ தீத்தறது நல்லாயில்ல...
என்ன ராதா பேசற என் ரெண்டு காலும் எங்கிட்ட safe ஆ இருக்கு, நான்பாட்டுக்கு தேமேன்னு வாசிச்சுக்கிட்டிருக்கேன்....
அப்போ அது உன்னோட மூணாவது காலா இருக்கும்..... நீயே பாத்து confirm பண்ணு....
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
இப்பிடி சூழண்டு சூழண்டு வேகமா ஆடும்போது சுத்தி இருக்கற எதுவுமே தெரியல இல்ல ராதா?.... ஆஹா....
Slow down கிருஷ்ணா, என் காலே எங்க எப்படி இருக்குன்னு தெரியல...
தல கால் புரியாம ஆடறோம்னு சொல்றியா ராதா??
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
தூங்கும்போதும் அபய முத்திரை காட்டிக் கொண்டே தூங்கற உன் கருணைதான் என்னே தேவி! காலை மட்டும் கவனமா வெச்சுக்கோ, விளக்கு இருக்கு. Burnol வேற கொண்டு வரல....
மாதா ச பார்வதி தேவி பிதா தேவோ மகேஷ்வரஹ🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
ஓம் தேவ்யை நமஹ🙏🏻🙏🏻
*******
கீச்சு மூச்சுனு என்னச் சுத்தி வந்து கத்தாதீங்க கண்ணுகளா… அப்புறம் எனக்கு flute சுஸ்வரமா வாசிக்கவே மறந்துடப் போகுது....
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
கிருஷ்ணா, ரோஜா மாலையை என்தலையில் வைத்து விட்டது போக மீதியை நீ ஆரமாக அணிந்துகொள்...
Sure ராதா👍🏻
(வரும்போது தோட்டத்துல பூவே இல்லையேன்னு பாத்தேன்!) உனக்குன்னு 2 தாமரைப்பூ கொண்டு வந்தேனே அது?
அத உன் கையிலயே வெச்சுக்கோ கிருஷ்ணா உன் தாமரைப் பாதத்துக்குப் பொருத்தமா..
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
21 செப்டம்பர் 2025
படங்களையும், வரிகளையும் ரசித்தேன்.
பதிலளிநீக்கு