வெள்ளி, 5 செப்டம்பர், 2025

மாரீசன் - திரை விமர்சனம் - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


விஜி வெங்கடேஷ் அவர்கள் தான் பார்த்து ரசித்த மாரீசன் திரைப்படம் குறித்த அனுபவங்களை நம்முடன் இன்று பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், புது தில்லி. ஓவர் டு விஜி வெங்கடேஷ். 


******


*கேட்டதும் கிடைத்ததும்* - மாரீசன் - பட விமர்சனம் 



ஆரம்பத்தில் பட போஸ்டரின் extension ஆக படம் முழுவதும் பைக்கிலேயே பயணம் செய்வதைக் காட்டுவார்கள் என்று தோன்றியது. நல்ல வேளை அதிலிருந்து இறங்குகிறார்கள்.


வடிவேலுவின் முழுத் திறமையை இதுவரை இப்படி யாரும் பயன்படுத்தியிருக்கவில்லை. அசாத்தியத் திறமை. அசத்தியிருக்கிறார். படங்களிலும், தினம் தினம் memes இலும் நம்மைச் சிரிக்க வைத்தவர், இதில் வியக்க வைக்கிறார் நடிப்பால். ஆச்சர்யம், அவரைப் பார்த்தால் இதில் சிரிப்பு வரவில்லை. நாகேஷுக்கு அடுத்து காமெடி, சீரியஸ் என இரண்டிலும் கலக்குகிறார்.


தாயால் வளர்க்கப்பட்ட பிள்ளை எப்படி தடம் மாறும் என்று யோசிக்கும்போது Fahad fazil தன் அப்பாவை பற்றி வெறும் கையசைவாலேயே வேஸ்ட் என்று காண்பிப்பதால்  புரிகிறது. திருட்டு முழி பக்காவாக பொருந்துகிறது அவருக்கு.


வடிவேலுவை மீறாமல் அடக்கியே ஆனால் அழகாக வாசித்திருக்கிறார். கடைசி சீனில் நானும் யாரையும் அப்பான்னு கூப்பிட்டதில்ல எனும் போது நெகிழ்ச்சி.


சித்தாராக்கு நடிக்க ரொம்ப chance இல்லை. ஆனாலும் வந்த 2,3 சீன்களில் நடிப்பில் நல்ல முதிர்ச்சி👌🏻(முகத்திலும்!).


சண்டைக் காட்சிகளில் தொந்தியும் தொப்பையுமாக இருக்கும் இப்போதைய வடிவேலு எதிரியைத் தூக்கி அடிக்கிறார், எகிறி அடிக்கிறார் என்று காட்டாமல்  இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தானும் சிரமப்பட்டு நம்மளையும் சிரமப் படுத்துகிறார்.


அதுபோல் வில்லனை கழுத்தில்  கடப்பாரையால் குத்தி screwdriver போல அதைத் திருகி  ரத்தம் கொப்பளிப்பதை எல்லாம் விஸ்தாரமாகக் காண்பிக்காமல்  இருந்திருக்கலாம். கிட்டத்தட்ட நாமளே கொலை செய்ததுபோலவும் கையெல்லாம் ரத்தம் வழிவது போலவும் தோன்ற ஆரம்பித்து விடுகிறது. எப்போ police வருமோன்னு பயப்பட ஆரம்பிச்சுடுறோம்.😧


வடிவேலு மறதி வியாதிக்காரர் இல்லை சீரியல் கொலையாளி என்பது நமக்குத் தெரியவருமிடம் director touch தெரிகிறது.


படம் முழுவதும் எப்போது பார்த்தாலும் கிளாசும் பாட்டிலிலுமாகவே இருக்கிறார்கள். இப்போது படிக்க முடியாத பொடி எழுத்தில் குடி குடியைக் கெடுக்கும் என்கிற வாசகமும் ஸ்க்ரீனில் வருவதில்லை. அதைப் பார்த்துவிட்டு யாராவது திருந்தி விட்டால்?? அப்புறம் டாஸ்மாக் sales  target என்னாவது!


வடிவேலு ஒரு ஜகஜ்ஜால கொலையாளி என்றால் fahad பாசிலும் ஒண்ணும் சாமானிய திருடன் அல்ல என்பதை தனக்கு தூக்கமாத்திரை வடிவேலு கலப்பதை குளிக்கச் செல்லுமுன்  மொபைல் கேமராவை on செய்து கண்டு பிடிப்பதும், வடிவேலுவின் ATM PIN கண்டுபிடிப்பதையும் காட்டியிருப்பது மறுபடி directorial touch👌🏻சிறப்பு👏🏻.


வடிவேலு கடைசியில் அட நிஜமாவே மறந்துட்டேன்பா என்று சொல்லுமிடம் கலகலப்பு.


குத்துப் பாட்டு இல்லாத குறையை கோவில் விழாவில் நடக்கும் record dance ஈடு செய்கிறது! அது எதற்கு என்றுதான் தெரியவில்லை.


சிறு பெண் குழந்தைகளுக்கு நடக்கும் அநியாயங்கள் (அதுவும் குரு ஸ்தானத்திலிருக்கும் வாத்தியார்களாலேயே) எனும்போது பகீரென்கிறது. வடிவேலு serial கொலை செய்வதை நியாயம் தான் என்று நினைக்கும் அளவுக்கு படு பாதகம்..😡


சிறந்த கதை, இயக்கம், நடிப்பு👏🏻👏🏻👏🏻


இயக்குனர் சுதீஷ்குமாருக்குப்பாராட்டுக்கள்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻


Fahad fazil பற்றி சொல்லவேண்டியதில்லை. எந்த கதாபாத்திரத்தையும் அனாயாசமாக நடித்துக்கொண்டு போய்க்கொண்டே இருப்பார். 


ஆனால் வடிவேலு!


எதிர்பாராத இதுவரை பார்த்திராத வடிவேலு!சபாஷ். Extraordinary performance👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻 அட்டகாசமான second innings காத்திருக்கிறது, பார்த்து இதுபோல் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தால்..


Record dance பாடலில் தனயனுக்கு நிறைய தந்தை சாயல் (அதாங்க யுவனுக்கு - Maestro). ரசிக்கலாம்.


Fahad fazil லின் கிராமத்து வீடு - மலைத்தொடர்களும் பசுமையான வயல் வெளியும் - ஆஹா கண்ணுக்குக் குளிர்ச்சி - கலைச்செல்வன் சிவாஜியின்  camera அள்ளித் தந்திருக்கிறது பசுமையை...


விட்ட குறை👇🏻:


கோவை சரளாவிற்கு police inspector வேடம், Drishyam பட நடிகை ஆஷா சரத் போல் நினைத்துக்கொண்டு கொடுத்திருக்கிறார்கள். வேஷம் மட்டுமே. நடிக்க scope இல்லை. இப்படி போங்க அப்படி போங்க அவன் travelling அ தான் இருப்பான் என்று சொல்வதோடு சரி. waste செய்யப் பட்டிருக்கிறார். சீரியல் கொலையின் pattern, subordinate மூலம் தெரிய வருமிடம் சுவாரசியம்...


இந்த மாரீசன் பொய் மானல்ல, பொன் மான்!


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

5 செப்டம்பர் 2025


1 கருத்து:

  1. படத்தை அலசி ஆராய்ந்து துவைச்சு உலர்த்திட்டீங்க... நானும் படம் பார்த்தேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....