அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட Gut Health - ஆதி வெங்கட் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது. அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று
பகுதி இரண்டு பகுதி மூன்று பகுதி நான்கு பகுதி ஐந்து
பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு பகுதி ஒன்பது பகுதி பத்து
பகுதி பதினொன்று பகுதி பன்னிரண்டு பகுதி பதிமூன்று
பகுதி பதினான்கு பகுதி பதினைந்து பகுதி பதினாறு
பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது
பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு
பகுதி இருபத்தி மூன்று பகுதி இருபத்தி நான்கு
பகுதி இருபத்தி ஐந்து பகுதி இருபத்தி ஆறு
பகுதி இருபத்தி ஏழு பகுதி இருபத்தி எட்டு
பகுதி இருபத்தி ஒன்பது பகுதி முப்பது பகுதி முப்பத்தி ஒன்று
பகுதி முப்பத்தி இரண்டு பகுதி முப்பத்தி மூன்று
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
*******
முருகா எங்க கிளம்பிட்ட?
என் பேர்ல மாநாடு மதுரை ல மாநாடு நடக்கப் போகுது இன்னிக்கி, தெரியாதாமா?
என் பக்தர்கள் பல லக்ஷம் பேரு அங்க கூடி சஷ்டி கவசம் பாராயணம் பண்ணப் போறாங்க.அப்ப பாக்கணும் அந்த vibration ஐ! ச்சும்மா அதிருமில்ல?....
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻
*******
தேவி, நீ கேட்ட இந்தப் பூவை தேடிப் பிடிச்சு கொண்டு வந்திருக்கேன், இந்தா...
நன்றி நாதா இன்னிக்கி பிரதோஷம், அது திருப்பியும் உங்க சிரசுக்குத் தான் வரும்...
ஓ எனக்காத்தான் கேட்டியா, சரி சரி...
(அப்ப இவ்வளவு சிரமப் பட்டிருக்கவேண்டாம்... ஹ்ம்ம்)
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் தேவ்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
ஆஹா அந்த பூரண நிலவுப் பின்னணியில உன் pose, smile எல்லாம் perfect குமரா👌🏻 ஆமா வேல் பாதிதான் தெரியுது? மீதி எங்க??
கொஞ்சம் சத்தம் போட்டு கேக்காதம்மா… யானை necklace ல சொருகி வெச்சிருக்கேன். யானைமாமா கூட கழுத்துல ஏதோ உறுத்தரமாதிரி இருக்குன்னாரு. ஒண்ணுமில்ல உன் மாலைதான்னு சொல்லி சமாளிச்சிட்டுருக்கேன். கொஞ்ச நேரம்தான!... நடுவுல நீ வேற...
ஓம் நமோ குமாராய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
நல்லா பளிச்சுன்னு ஈரம்போக தொடச்சுண்டு fresh ஆ dress பண்ணினுட்டோம் இல்ல குமரா?
ஆமாம்பா, ஏன்?
இல்ல நாம மட்டும் வந்து அருவில நல்லா குளிச்சு ஆட்டம் போட்டது அம்மா, கணாக்குத் தெரிய வேண்டாம். அவங்கள அப்புறமா கூட்டிட்டு வந்துக்கறேன்… அதனால சும்மா இரு சொல் அற கந்தா 🤫
(எனக்கேவா....)
👍🏻🫢😶🤐🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமோ குமாராய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
*******
நீ சொன்னமாதிரி வந்துட்டோம் கிருஷ்ணா..
ஏண்டா, எல்லாரும் சீக்கிரமா குளிச்சுட்டு வாங்க இன்னிக்கி வன போஜனம் இருக்குன்னேன், அதுக்காக இப்பிடியேவாடா வருவீங்க? மானத்த வாங்கறீங்களேடா...
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
கிருஷ்ணா, ஜாஸ்தியா இருக்கு உங்கிட்ட, அதக்குடு இப்படி
....
ஏம்மா தட்டுலதான் இன்னொன்னு இருக்கே. அதோட திருப்திப் பட்டுக்கோ. அதிகமா ஆசப் படாத.. போகும்போது பானையை வெச்சுட்டுப் போ. அப்புறம் நான் கொண்டு வரேன்...
க்கும். வேற வினையே வேண்டாம்....
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
பாவம் கிச்சா தூங்கிடுத்து… அசதி...
ஆமாம்மா, தூங்கிட்டேன், ஆடாம அசையாம தொட்டில்ல கொண்டு போட்டுடு.... போதும்.. தாலாட்டு பாட்டு பாடறேன்னு ஆரம்பிக்காத, please… தூக்கம் கலைஞ்சுடுது...
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
7 செப்டம்பர் 2025
படங்கள் அழகு. வரிகள் ரசனை. சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குவாசகம் நன்று . உண்மை. ஆனால் இது பொதுவான ஒன்று.
பதிலளிநீக்குஎல்லாப்படங்களும் வரிகளும் ரசித்தேன்.
வனபோஜன படம் செம க்யூட்.
அது போல முதல் படம் மயில்வாகனன் . திருப்பரங்குன்றத்திலே நீ சிரித்தால் முருகா என்ற பாடல் நினைவுக்கு வந்தது. முருகன் சிரிப்பு என்ன அழகு!
அது சரி வேலன்டைன்ஸ் டே இனி அடுத்த வருஷம் தானே! சிவன் என்ன இப்ப ப்ரப்போஸ் பண்ணுவது போல போஸ் கொடுத்திருக்கிறார்!!
கீதா