அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.
இதற்கு முன்னர் வெளியிட்ட மாரீசன் - திரை விமர்சனம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
Gut Health - 28 ஆகஸ்ட் 2025:
அந்தக் காணொளிகளில் தன்னுடைய கற்பனைக் கதாப்பாத்திரங்களான my friend saravana Kumar, my patient Arokiasamy என்று சொல்பவர்கள் gut healthக்கு எதிரான உணவுப்பழக்கங்கள் கொண்டவர்களாக சித்தரித்திருப்பார்! அவர்களைப் போன்று சாப்பிட்டால் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதையும் நகைச்சுவையாக சொல்லியிருப்பார்! ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யாமல் அதில் தன்னுடைய அனுபவங்களையும், உணவுப் பழக்கங்களையும் கூட நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்!
Intermittent fasting என்பதைப் பற்றி ஆங்காங்கே சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்! ஆனாலும் இதுவரை அதை செயல்படுத்த நினைத்ததில்லை! அது நமக்கு ஒத்து வருமா! நம்மால் அதை தொடர்ந்து கடைபிடிக்க முடியுமா! என்றெல்லாம் நினைத்து அதற்காக முனைந்ததில்லை! இத்தனை வருடங்களில் உடல்நலத்திற்கு நல்லது, எடையை குறைக்கவல்லது என்று காலையில் வெந்நீரில் எலுமிச்சை சாறும், தேனும் சேர்த்துப் பருகியது, கறிவேப்பிலை சுவைத்தது, நெல்லிக்காய் சாறு பருகியது என்று சிலவற்றை தொடர்ந்து செய்திருக்கிறேன்!
Dr pal அவர்களின் காணொளிகளைப் பார்த்த பின் தான் உடல்நலம் சார்ந்த சில புரிதல்களும், உணவுப்பழக்கத்தின் நெறிமுறைகளும் புரிய வந்தது! வீட்டை சுத்தமாக பராமரிப்பது போல் உடலையும் முக்கியமாக வயிற்றையும் சுத்தமாக பராமரிக்கணும் எனத் தெரிந்து கொண்டேன்! தேவையில்லாத பொருட்களை Declutter செய்வது போல் உணவையும் நேரத்தையும் சீரமைத்தால் மிகுதி வாழ்வை நோயின்றி வாழலாம் என்ற உண்மை புரிய வந்தது!
பசியின்மை, செரிமானக் கோளாறுகள், உடல் சோர்வு, எடை கூடுதல்,வலிகள் என்று பல காரணங்கள் தொடர்ந்து கொண்டிருக்க சட்டென்று ஒருநாள் முடிவெடுத்து Intermittent fasting ஐ துவக்கி விட்டேன்! இந்த திட்டத்தை செயல்படுத்தி இரண்டு மாதங்கள் ஆச்சு! இப்போது வரை 13 மணிநேர fastingஐ கடைபிடித்து வருகிறேன்! இன்னும் செல்லச் செல்ல fasting நேரத்தை கூடுதலாக்கலாம் என்ற எண்ணம்! கூடவே இனிப்பு சேர்த்துக் கொள்வதையும் 90 சதவிகிதம் விட்டுவிட்டேன்!
இந்தப் பழக்கத்தை துவக்கிய போது முதலில் சில தொந்தரவுகள் இருந்தது என்றாலும் போகப் போக இந்த நடைமுறையை உடல் ஏற்றுக் கொண்டு விட்டது! இப்போது தான் சாப்பிடும் உணவில் உள்ள தரமும், ருசியும், மணமும் முழுமையாக உணர முடிகிறது என்று சொல்வேன்! Fasting நேரம் போக சாப்பிடும் நேரத்திலும் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் gut healthக்கு அது நன்மையைத் தரும் என்றும் விளங்குகிறது! நாம் எல்லோருமே புத்துணர்வான ஆரோக்கிய வாழ்வுக்கு ஏற்ற வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யலாமே!
காணொளி பார்க்க விருப்பமிருந்தால் கீழே உள்ள சுட்டி வழியும் பார்க்கலாம்.
Intermittent FASTING - இருப்பது எப்படி ?
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
6 செப்டம்பர் 2025
gut health - நானும் மருத்துவர் பழனியப்பன் அவர்களின் பல காணொளிகள் கண்டதுண்டு. நகைச்சுவையுடனும் இருக்கும். எனக்கு அவர் ரொம்ப வேகமாகப் பேசுவது மட்டுமே டக்கென்று புரியாது. எனவே அதை மறுபடியும் நிறுத்தி நிறுத்திப் பார்ப்பேன்.
பதிலளிநீக்குஆதி! ரொம்ப நல்ல விஷயம் நீங்கள் பின் பற்றத் தொடங்கியிருப்பது. சூப்பர். நிச்சயமாக நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.
கீதா
இவர் காணொளிகள் பார்ப்பதற்கு முன்னரே இந்த gut health என்பது மிகவும் முக்கியம் என்பது 25 வருடமாக இனியவளாக இருக்கும் எனக்குப் பரிச்சயமான ஒன்று. இனியவர்களாக இருப்பவர்களுக்கு ரொம்பவே முக்கியம் என்றாலும் Special குழந்தைகளுக்கும் மிக மிக முக்கியம். என் மகனுக்கும் (அவன் கொஞ்சம் Special kid border child என்பதால்) பின்பற்றிய ஒன்று. அதே போல என் தங்கையின் மகன் ரொம்பவே severe autistic குழந்தை என்பதாலும் அப்பவே இந்த ஆரோக்கியம் பரிச்சயம். அப்போதைய என் ஆயுர்வேத மருத்துவர் (அவர் இப்போது இல்லை) ரொம்பவே இது பற்றிச் சொல்வார்.
பதிலளிநீக்குபொதுவாகவே எல்லோருக்குமே இது ரொம்ப முக்கியம். gut is the second brain. நாம் உண்ணும் உணவிற்கும் மூளையின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் தொடர்புண்டு.
நான் பல வருடங்களாக இந்த intermittent fasting பின் பற்றி வருகிறேன். சர்க்கரை அளவைச் சரியாக வைத்திருக்க உதவுகிறது. வீட்டில் இருந்தால் இரவு உணவை மிகவும் சீக்கிரமாக முடித்துக் கொண்டுவிடுவது வழக்கம். அதுவும் மிகவும் எளிய உணவு கொஞ்சமே கொஞ்சம். எந்த நிகழ்வுக்குச் சென்றாலும், கல்யாணங்களிலும் சரி, பயணத்தில் இருந்தாலும் மாலை/இரவு 7 மணிக்கு மேல் உணவு சாப்பிடுவதில்லை.
நெஞ்சைக் கரிக்கும் உணவுகளைக் கூடியவரை தவிர்த்துவிடுவதுண்டு. ஊறுகாய் அறவே இல்லை. காரம்....நொறுக்குத் தீனி தவிர்ப்பதுண்டு.
கீதா
ஏற்கனவே எனக்கும் இந்த எண்ணம், ஆசை இருந்தது. உங்கள் எழுத்து ஏதோ எனக்கு "ஆம், ஆரம்பி" என்று சொல்வதற்காகவே இந்து கண்ணில் பட்டது போல இருக்கிறது. முயற்சிக்கிறேன். உருப்படியாய் Fasting இருக்க முடிந்து நடைமுறையில் சாத்தியமாகி விட்டால் தெரிவிக்கிறேன்.
பதிலளிநீக்கு