ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி முப்பத்தி ஏழு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று  

பகுதி பதினான்கு பகுதி பதினைந்து  பகுதி பதினாறு 

பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது 

பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு

பகுதி இருபத்தி மூன்று  பகுதி இருபத்தி நான்கு

பகுதி இருபத்தி ஐந்து பகுதி இருபத்தி ஆறு

பகுதி இருபத்தி ஏழு பகுதி இருபத்தி எட்டு

பகுதி இருபத்தி ஒன்பது பகுதி முப்பது பகுதி முப்பத்தி ஒன்று

பகுதி முப்பத்தி இரண்டு பகுதி முப்பத்தி மூன்று

பகுதி முப்பத்தி நான்கு பகுதி முப்பத்தி ஐந்து

பகுதி முப்பத்தி ஆறு 


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



அழகா சூப்பர் ஆ இருக்க மயிலண்ணா. அதான் சொல்லிட்டேனே, நான் ஒரு தடவ சொன்னா ஒரு லட்சம் தடவ சொன்ன மாதிரி.... ok?

இப்ப வண்டிய start பண்ணு, இன்னிக்கி முதல் படைவீடு திருப்பரங்குன்றத்துல கும்பாபிஷேகம், அமர்க்களமா நடந்துக்கிட்டிருக்கு..


இதோ கிளம்பிட்டேன், உன் வேலை மட்டும் கொஞ்சம் நகத்திக்கோ கந்தா...அழுத்துது..


வெற்றிவேல் வீரவேல்🙏🏻🙏🏻

ஓம் நமோ சண்முகாய நமஹ

 🙏🏻🙏🏻🙏🏻


*******



அம்மா இந்தக் கிரீடம் விழற மாதிரி இருக்கு, கனமா வேறே இருக்கு. இப்பிடி பிடிச்சிட்டே இருக்க முடியல கொஞ்சம் எடுத்திடறயா.. நான் தாச்சிக்கணும்....


Ok கிருஷ்ணா.. wait இன்னும் 2 snap மட்டும் எடுத்திடரேன்....


(100 snaps எடுத்தாச்சு இதுவரைக்கும்... ஹ்ம்ம்)


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



கிருஷ்ணா... பயமாயிருக்கு, யார் கழுத்துக்குக் குறி? நான் சிசுபாலா இல்ல.....


சே சே மழை பெய்யுதே, தீபாவளிக்கு வாங்கி மிச்சமிருந்த விஷ்ணு சக்கரமெல்லாம் நமுத்து போயிருக்கான்னு check பண்றேன் ராதா.... பயப்படாத...


ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



ஆவின் வெண்ணையை ஆட்டயப் போட்டு ஆகாயதுல இருக்கரமாதிரி செட்டப்போட்டு அதுல உக்காந்து மனசால பறந்துகிட்டே  சாப்பிடற சுகம் இருக்கே ஆஹா...


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



என்னம்மா பொண்ணு மாதிரி டிரஸ் போட்டு விட்டிருக்க? நல்லவேளை என் அடையாள மயில் பீலி இருக்கோ பிழைச்சேன். சரி சரி சீக்கிரம் உத்துப் பாக்காம நான் காட்ற இடத்துல progress report ல sign பண்ணு... டைம் ஆச்சு school க்கு, dress மாத்திக்கிட்டு கிளம்பணும்....


இதுல கையெழுத்து போடும்போது மட்டும் எப்பவும் school க்கு போக டைம் ஆயிடும் கிருஷ்ணா உனக்கு....


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



அப்பாடா முதுகு வலிக்கு இதமா இருக்கு கிருஷ்ணா..... இனி எப்ப வலி வந்தாலும் உன்னையே கூப்பிடறேன்...


அது Ok  கணா, கொஞ்ச தூரம் அப்படியே சவாரி கூட்டிண்டு போ.... கரும்பு தோட்டத்தைப்  பார்த்தா நின்னுடக் கூடாது என்ன?



ஓம் கம் கணபதயே  நமஹ🙏🏻🙏🏻🙏🏻

ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



கிரீடம் தான? உங்க சந்தேகம் Correct தான். என் கைல இருக்கறமாதிரி இன்னொரு பாத்திரத்தோட மூடிதான். முன்னாடி மட்டும் கொஞ்சம் அட்டையை cut paste பண்ணினது அம்மா. ஏன் நல்லாத்தான இருக்கு? Thanks...

(எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா அம்மாவோட ஆஸ்தான ஓவியர் ஏன் என் ரெண்டு காலையும் இடது காலாவே வரஞ்சார்னு தான் தெரியல.....)



ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

28 செப்டம்பர் 2025


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....