ஞாயிறு, 19 அக்டோபர், 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி நாற்பது - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று  

பகுதி பதினான்கு பகுதி பதினைந்து  பகுதி பதினாறு 

பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது 

பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு

பகுதி இருபத்தி மூன்று  பகுதி இருபத்தி நான்கு

பகுதி இருபத்தி ஐந்து பகுதி இருபத்தி ஆறு

பகுதி இருபத்தி ஏழு பகுதி இருபத்தி எட்டு

பகுதி இருபத்தி ஒன்பது பகுதி முப்பது பகுதி முப்பத்தி ஒன்று

பகுதி முப்பத்தி இரண்டு பகுதி முப்பத்தி மூன்று

பகுதி முப்பத்தி நான்கு பகுதி முப்பத்தி ஐந்து

பகுதி முப்பத்தி ஆறு பகுதி முப்பத்தி ஏழு பகுதி முப்பத்தி எட்டு

பகுதி முப்பத்தி ஒன்பது


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



சுதாமா, என் ஆத்ம நண்பா,  இன்னிக்கி friendship day ஆச்சே உனக்கு என்ன வேண்டும் கேள், தோடுகளா, முத்துமாலையா, கைவளையா , தோள்வளையா, கிரீடமா.....


கிரீடத்த வெச்சுக்கிட்டு நான் என்ன பண்றது கிருஷ்ணா? ஆனாலும் உனக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்திதான்....

பரவாயில்ல, அதுதான் உனக்கு அழகு...

உன் தோழமைதான் எனக்கு  எப்பவும் வேணும் கிருஷ்ணா...


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



அதிக அலங்காரமில்லாம Simple ஆ இருந்தா நீ இன்னும் அழகா இருக்க தேவி...


மாத்திக் கட்டிக்க ஒரு 4 காட்டன் புடவ வேணும்னு நான் கேட்டத மறந்துட்டு சமாளிக்காதீங்க நாதா.. இது discard பண்ணின புடவ...


 நீ கட்டிண்டதால அது கூட அழகா இருக்கு… (சே, இனிமே reminder போட்டு வெச்சுக்கணும்...)


ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

ஓம் தேவ்யை நமஹ 🙏🏻🙏🏻🙏🏻


*******



சே எனக்குப் போட்டியா வந்த இந்த கிளிய விரட்ட வேகமா வரும்போது சிந்தின தயிர் மேல கால வெச்சுத் தொலைச்சிட்டேன். அதை 

தொடச்சாலும் அம்மா கண்டு பிடிச்சுடுவா… பேசாம ஜன்னல் ஏறி குதிச்சு எஸ்கேப்......


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



தரையத் தொடச்சா ஒழுங்காத் தொடைக்கணும். தரைல ஈரத்தோட என்ன தவிழவிட்டுட்டு இப்படி பாரு, இங்க திரும்பு, தவழ்ந்து முன்னாடி வான்னு torture பண்ணவேண்டியது! நானும் எத்தன நேரம்தான் வழுக்காத மாதிரியே pose குடுக்கறது!.... முடியல...😫


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻


*******


நீங்க கொண்டு வந்த எட்டு தாமரைப் பூக்கள்ல இது மலர்ந்தும் மலராம பாதி மலர்போல 

அழகா அம்சமா இருக்கு நாதா.... இன்னிக்கி வரலக்ஷ்மி சிரசுல வைக்க இதுதான் சரி....


Thanks தேவி, எப்படி perfect ஆ தேர்ந்தெடுக்கற! (அப்பாடா திரும்ப குளத்துக்குள்ள இறங்க வேண்டியிருக்கும்னு நெனச்சேன்....)


ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

ஓம் தேவ்யை நமஹ 🙏🏻🙏🏻🙏🏻


*******



கிருஷ்ணா அது flute..

 நான்தான் கரும்பு juice வாங்கித்தரேன்னு சொல்லிட்டேனே...


தெரியும்மா, வாசிச்சுட்டு இப்பத்தான் கைய எடுத்தேன், உடனே உன் கதைய ஆரம்பிச்சுடாத....


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



கணேசண்ணா நாம ஒத்துமையா இருக்கணும் என்ன?

நீயோ நானோ ஜாலியா பண்ற சில  விளையாட்டுகளை  (அதை விஷமம்னு அம்மா exaggerate பண்ணுவா) அம்மா, அப்பா வரைக்கும் கொண்டு போகக் கூடாது ok? உம்மா😘


Done முருகா👍🏻(மூஞ்சூறு ஒட்டு கேட்டுக்கிட்டிருக்கு… பாத்து...)


ஓம் கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻

ஓம் சண்முகாயை நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

19 அக்டோபர் 2025


1 கருத்து:

  1. படங்களை நுட்பமாக கவனித்து அதில் இருக்கும் சிறிய விஷயங்களைக் கூட வரிகளில் கொண்டு வருவது சிறப்பு. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....