ஞாயிறு, 26 அக்டோபர், 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி நாற்பத்தி ஒன்று - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று  

பகுதி பதினான்கு பகுதி பதினைந்து  பகுதி பதினாறு 

பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது 

பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு

பகுதி இருபத்தி மூன்று  பகுதி இருபத்தி நான்கு

பகுதி இருபத்தி ஐந்து பகுதி இருபத்தி ஆறு

பகுதி இருபத்தி ஏழு பகுதி இருபத்தி எட்டு

பகுதி இருபத்தி ஒன்பது பகுதி முப்பது பகுதி முப்பத்தி ஒன்று

பகுதி முப்பத்தி இரண்டு பகுதி முப்பத்தி மூன்று

பகுதி முப்பத்தி நான்கு பகுதி முப்பத்தி ஐந்து

பகுதி முப்பத்தி ஆறு பகுதி முப்பத்தி ஏழு பகுதி முப்பத்தி எட்டு

பகுதி முப்பத்தி ஒன்பது பகுதி நாற்பது 


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



அம்மா necklace ரெண்டுத்த என் கழுத்துலயும் தலலயும் மாட்டி விடும்போதே நெனச்சேன், இந்தப் புதுப் புடவய எனக்கு சுத்திவிட்டுட்டு கைல மொபைல எடுத்துக்கப் 

போறான்னு… யப்பா செம கனம்! இதுல இத்தன ஜரிக வேற! நல்லா உறுத்தும்😟.

அவ வரதுக்குள்ள இத எங்கயாவது ஒளிச்சு வைப்போம்.. டயத்துக்கு எனக்கு ஏதாவது குடுக்கணுமே தொப்ப பசிக்குமேங்கற அக்கறை கிடையாது.. இந்த smart phone அ கண்டு பிடிச்சவன.....🤨☹️👊🏻


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



அம்மா, பாவம் எல்லாத்தையும் எனக்கே கொடுத்துட்டா அப்புறம் உனக்கு? இந்தா இத நீ  சாப்டுக்கோ.. ஆ… காமி..


கணா, எல்லாம் உனக்கு இல்ல. உடம்புக்கு ஒத்துக்காது..இன்னிக்கி மஹா சங்கடஹர சதுர்த்தியாச்சேன்னு பண்ணினேன்...


(ஆமா, என் பேர சொல்லி பண்ணிட்டு எனக்கே தடா...ஹ்ம்ம்)


ஓம் ஶ்ரீ கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻

ஓம் தேவ்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



ஆஹா.. அருவிக்கு கீழ என்ன உக்கார வெச்ச மாதிரியே ஒரு feeling.... எப்டிப்பா?


அப்படித்தான் முருகா… இது mobile அருவி, கங்கானு பேரு… சித்தின்னும் நீ சொல்லலாம்...


ஓஹோ... சர்தான்...


ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

ஓம் நமோ குமாராய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻



*******



பெரிய தாமரையா பாத்து என்ன படுக்கவெச்சாலும் தலகாணி, போர்வையெல்லாம் போட்டிருக்கா அம்மா.. பரவாயில்ல. ஆனா காலத்தான் நல்லா நீட்ட முடியல… இதோ குளிச்சுட்டு வந்துடுவா... அதுக்குள்ள அவளுக்கு  phone வராம இருக்கணும்😧...


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻



*******



சுதந்திர தினம், கோகுலாஷ்டமி ரெண்டுக்கும் வாழ்த்துக்கள்💐💐. நாளைக்கு வீட்டுக்கு வரேன். முறுக்கு, சீடையெல்லாம் கணிசமா வெண்ணை போட்டு பண்ணுங்க. அனாவசியமா எதுக்கு dentist க்கு செலவழிக்கணும்? Ok?


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



என்னது நம்ம வாயில குச்சிய சொருகிட்டு  கிருஷ்ணன் நிம்மதியா தூங்கறான்?


ஆமா உஷ் உஷ் னு சத்தம் வந்தா தூங்க முடியலையாம்… nap முடிஞ்சு சாயந்திரம் எல்லார் வீட்டுக்கும் விசிட் அடிக்கணுமாம்.. ஜன்மாஷ்டமியாம்.அவனுக்குக் கொண்டாட்டம்தான்.. நம்மளயெல்லாம்  உள்ள விடமாட்டாங்க... இல்ல??

 

Happy janmaastami to you all💐


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



இந்த மாதிரி சிரிச்சுக்கிட்டே பாட்டுப் பாடி, dance ஆடி என்னத் தூக்கிட்டு போனாங்களா, நானும் நம்பி போனேன். அங்கபோனா என்ன மண போட்டு உக்காரவெச்சு  அவங்க youtube பாத்து try பண்ணின முறுக்கு சீடையெல்லாம் நான் கத்தக் கத்த எனக்கு ஊட்டி விட்டுட்டாங்க...😫

இனி 1 வாரத்துக்கு வெண்ணெய் சாப்டாலே வாய் வலிக்கும்போல இருக்கு...😧 எதுலயும் ஒரு நியாயம் வேணாமாடா...


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

26 அக்டோபர் 2025


1 கருத்து:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    இன்றைய படங்களும், அதற்கான பொருத்தமான வாசகங்களையும் மிகவும் ரசித்தேன். தாமரையில் படுத்துறங்கும் குட்டி கிருஷ்ணாவை பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல உள்ளது. உங்கள் அபரிமிதமான கற்பனைத் திறனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....