புதன், 12 நவம்பர், 2025

கல்யாண (வரவேற்பு) வைபோகமே - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட முகநூல் இற்றைகள் - நிழற்பட உலா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


விஜி வெங்கடேஷ் அவர்கள் கலந்து கொண்ட ஒரு திருமண வரவேற்பு குறித்த எண்ணங்களை, அவரது அனுபவங்களையும் நம்முடன் இன்று பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு விஜி வெங்கடேஷ். 


******


மோகன்ராம்,வைஷ்ணவி கல்யாண  (வரவேற்பு) வைபோகமே 💐



09.11.2025 அன்று மதியம் Smt.கலைச்செல்வியின் செல்வப் புதல்வன் சிரஞ்சீவி. மோகன்ராம் திருமண வரவேற்புக்குச் (அன்னபூர்ணா, RS Puram) சென்றிருந்தோம்.


நாங்கள் உள்ளே நுழைந்த போதுதான் மணமக்களை மேடைக்கு மேள தாளத்தோடு sorry  ஆட்டம் பாட்டத்தோடு அழைத்துச் சென்றனர். ஜிலு ஜிலுவென உடையணிந்த இளம் பெண்கள் மணமக்களைச் சுற்றி சினிமா பாட்டுக்கு தாளம் தப்பாமல் ஆடிக்கொண்டே மேடை வரை சென்றனர். அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்த்தனர்...... மணமக்களை..😊


அழகான ஜோடி, மணமகன் Shri.மோகன்ராம் & Smt. வைஷ்ணவி. அதுவும் மணமகன் இப்போதுதான் college படிப்பு முடிந்து வெளி வந்ததுபோல் (M tech gold medalist & Robotics engineer ஆம்🫢👍🏻👏🏻 ) பால் வடியும் முகம்!  (நினைந்து நினைந்து வைஷ்ணவி உள்ளம் பரவசமானது ஆச்சர்யமில்லை) அவர் உயரத்திற்கும் லட்சணத்துக்கும்  (படிப்பும் உத்தியோகம் கூட - MBA - L&T employee!) பொருத்தமான தேர்வு மணமகள் வைஷ்ணவி❤️.. congrats👏🏻👏🏻


ஒரு இளம் பெண் (அனு) நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாள்.


மணமக்களிடம் அவள் கேட்ட கேள்விகள்...


உங்கள்ள night owl🦉 யாரு - என்ன கேள்வி இதுன்னே புரியல...😟


இந்தாங்க பூ, பொண்ணுக்கிட்ட propose செய்யுங்க பாக்கலாம் -


என்னங்க? இதெல்லாம் முடிஞ்சுதான கல்யாணம்???


கோவம் வந்தா யாரு முதல்ல சமாதானம் ஆவீங்க?


கல்யாணம் ஆகி கை மருதாணி கூட காயல.... என்னம்மா நீ..🙁


உங்க spouse க்காக ஒரு பாட்டு பாடுங்க என்றதும் இருவரும் ஜகா வாங்கி விட்டனர்...


அந்தப் பெண் அனு சஷ்டியப்த பூர்த்தி மணமக்களை பேட்டி எடுத்து வழக்கம் போலிருக்கிறது😁


பாவம் couple… ஏதோ பதில் சொல்லி புன்னகையால் சமாளித்துக் கொண்டிருந்தனர்..


ஒரு தமிழ் சினிமா பாட்டுக்கு (ஏதோ sparrow arrow ன்னு வரும் - தேடிப் பிடிச்சு கேக்கணும்) அழகாக அபிநயம் பிடித்து ஆடினாள் வைஷ்ணவி (Surname குல்கர்னி -  தாய்மொழி கன்னடம்!) வியப்பு! கேள்விகளுக்கு கொஞ்சு தமிழிலும் பதில்! சபாஷ்👍🏻👏🏻 


ஒரு மாறுதலான ஆறுதலான விஷயம் மணமகள் வைஷ்ணவி வரவேற்புக்கு அழகாக பாந்தமாகப் புடவை அணிந்திருந்தது! (மேலை நாட்டின் gown கலாச்சாரம் மிகுந்த இந்நாட்களில் இக்காட்சி கண்களுக்கு இதம், இனிமை👌🏻👌🏻👌🏻keep it up Vaishnavi👏🏻)


அனு கல கலவென  அனைவரிடமும் பேசிக் கொண்டு வந்தவர்களிடம் மைக்கை குடுத்து வாழ்த்து சொல்லச் சொல்லி, ஹாலை வலம் வந்து கொண்டிருந்தாள்..


திடீரென ஒரு twist.. மணமக்களுக்காகப் பாட யார் தயார் என்று அவள் கேட்க, ஒருவர் மைக்கை வாங்கிப் பாடினார். பாடல் நல்ல பாடல்தான்...ஆனால் அவர் அதற்கு நியாயம் செய்யவில்லை..😣.


பின்னர் அவர் பாடிய பாடலை DJ க்கள் music ஓடு mix செய்து என்னென்னவோ செய்து பார்த்தார்கள்.. அது தனியாகத் தனித் தன்மையுடன் (ஒட்டாமல்) நின்றது! அடுத்த முறை நன்றாக practice செய்துவிட்டு வந்தால் நலம் (அனைவருக்கும்😟). ஆனால் அவர் குரல் வளம் நன்றாகவே இருந்தது....🙂


(அவர் மணமக்களின் நெருங்கிய உறவுக்காரராக இருந்தால் (இல்லாவிட்டாலும்) மன்னிக்க🙏🏻🙏🏻 இருப்பினும் என் (எல்லோர்) தாழ்மையான வேண்டுகோள் இது🙏🏻) 


இதில், அனு ஒரு பாட்டுத்தானா? உங்களிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் என்றவுடன் அனைவர் வயிற்றிலும் tamarind mix...😯


மணமகள்  வைஷ்ணவியின் தாய் திருமதி இந்துமதி  ஒரு ஹிந்தி பாடலை அழகாகப் பாடினார்.👌🏻


மற்றொரு பெண்மணி மணமக்களை வாழ்த்தி ஒரு நான்கு வரி கவிதை சொன்னார். (நன்றாக இருந்தது, அதை மீண்டும் கேட்க ஆசை - கிடைத்தால், கலை பகிர்ந்தால் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்)


குழந்தைகளிடம் colour paints குடுத்து brush 🖌️ ஐயும் குடுத்து canvass board இல் paint பண்ணுங்கள் என்று சொல்ல.. அந்த board இல் ஏற்கெனவே நிழலாக வரையப் பட்டிருந்த இரு உருவத்தின் மேல் கலர் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தால்... (தவறுதான் - குழந்தைகள்தானே!🙂) அதுகள் 🎨 brush ஐ எடுத்து கேன்வாஸ் முழுவதும் ச்சும்மா தீத்தித் தள்ளிவிட்டனர்.


picasso க்கு சற்றும் குறைந்ததல்ல அந்த படைப்பு! பார்த்தால் அவரே பொறாமைப் படுவார்!😁


பின்னர் ஒரே போல் உடையணிந்த (அதே ஜிலு ஜிலு -  வேர்க்காதோ பாவம்😟) இளம் ஆண் பெண்கள் மேடையில் ஆட்டம், பாட்டம்💃


மணமக்கள்  ஆடலுடன் பாடலைச் சேர்த்து ரசித்து (சகித்து) புன்சிரிப்பு தவழும் முகத்தோடு நின்ற பொறுமைக்கு ஒரு ஜே👍🏻🙌🏻


பின்னர் அனைவரும் வரிசையில் நின்று மணமக்களை வாழ்த்தி, பரிசளித்து group போட்டோவுக்காக cheese (😬) சொல்லும் படலம்....


மேடையின் இரு புறமும் பெரிய  monitors வைத்து கல்யாண வீடியோ ஓடிக் கொண்டிருந்தது.. நேரில் பார்க்கவில்லையே என்ற குறை அனைவருக்கும் தீர்ந்தது… நிறைவான திருமண சடங்குகள், நிகழ்வுகள்.. பார்க்கப் பார்க்க ஆனந்தம்..👌🏻👌🏻


மணமகனின் தாய் மாமா (திரு.ஜெயராம், மாமி திருமதி ஷிரின்) மிகச் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து, அனைவரையும் மிக அன்பாக வரவேற்று உபசரித்தது மனதிற்கு மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது அருமை, மிகச் சிறப்பு👌🏻👌🏻👏🏻 நன்றிகள்🙏🏻🙏🏻


மிக அழகான கலைநயத்துடன் கூடிய (கலை க் குடும்ப திருமணமென்பதாலோ?) return 🎁 gift!👌🏻👌🏻👌🏻


மணமகனின் தாயார் திருமதி கலைச்செல்வி முகத்தில் ஆனந்தம், கடமையைச் செவ்வனே நிறைவேற்றிய திருப்தி.. வாழ்த்துக்கள் கலை💐💐


அனு பேசியதிலேயே ரொம்ப மியூசிக்கலா இனிமையா இருந்த வாசகம், food ரெடியா இருக்கு, பின்னால இருக்கற டைனிங் ஹால்ல போய்  சாப்பிடலாம்.. எனும் வரிகள்தான்!😁(ச்சும்மா fun😊) அருமையான விருந்து.. பலப் பல items.. அனைத்து பதார்த்தங்களும் மிகவும் சுவையாக இருந்தன..👌🏻👌🏻கவனிப்பும் நன்று நன்று👌🏻👌🏻


(சாப்பிடும்போது video, photo எடுக்கிறார்கள் எதற்கு?? ஒருவேளை சாப்பிட்டவர்களே அடுத்த பந்தியிலும் உட்காருகிறார்களா என்று checking காகவோ?😟 சே சே இருக்காது😌.. Atleast அழகா style ஆ (photo!) சாப்பிட கத்துக்கணும்...😟)


மணமக்கள் நீண்ட நாட்கள் (வருடங்கள்) மிக மிக சந்தோஷமாக ஆனந்தமாக சகல சௌபாக்கியங்களுடன் வாழ வந்திருந்த அனைவர் சார்பாகவும் உங்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றேன்.  


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

12 நவம்பர் 2025


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....