அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
********
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்:
ஆச்சர்யப்படுத்தும் குணநலன் ஆசிரியரிடமே காணலாம்.
காரில் போகும் மாணவன் கதவைத் திறந்து அழைத்தாலும் மறுதலித்து கால்நடையாகவே பயணிக்கும் எளிமை!
தன் சிறு குடும்பமோ பெரும் குடும்பமோ தன் சொற்ப வருமானத்தை ஏழை மாணவனுக்கும் பகிரும் தயாளம்!
பழைய மாணவனைப் பார்த்து நீ வந்திருக்கும் உயரம் என்னால் என ஒருபோதும் காட்டிக் கொள்ளாத அடக்கம்!
தன் பிள்ளைக்கும் ஊரார் பிள்ளைக்கும் வித்யாசம் பாராட்டாத தன்மை!
ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமக்கு வாழ்வியலைக் கற்றுத்தரும் அனைவரும் நம் ஆசிரியரே!
தர்மம்,பணிவு, மரியாதை முதல் சமையல் வரை பெற்றோர்;
வாகனம் ஓட்ட,தைரியம் ஊட்ட சகோதரன்;
ஊக்கம்,தோழமை நண்பர்கள்;
எறும்பிலிருந்து யானை வரை
தாயிலிருந்து வாயில் காப்பான் வரை
கற்றது ஏராளம்; அது தந்தது தாராளம்!
அடித்துச் சொன்னாலும் பாடமே. அணைத்துச் சொன்னாலும் பாடமே.
கற்பித்தோர் அனைவரும் ஆசிரியரே.
அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏🏻🙏🏻🙏🏻
அனைத்தையும் ஆட்டுவிக்கும் எல்லாம் வல்ல ஜகத்திற்கே குருவான மஹாபெரிய குருவுக்கு அனந்த கோடி நமஸ்காரம்🙏🏻🙏🏻🙏🏻
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
5 செப்டம்பர் 2026


குருவே சரணம்.
பதிலளிநீக்குஆசிரியர்கள் பற்றிய நல்ல பகிர்வு.
ஆசிரியர் தின வாழ்த்துகள்.