ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

மலரே பேசு மௌன மொழி.....




கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் அதாவது மார்ச் 14 முதல் 29 வரை பதிவுலகம், முகப்புத்தகம் பக்கமே வராமல் இருக்க நேர்ந்தது. காரணம் ஒரு நீண்ட பயணம். அந்தப் பயணம் எனது நெடு நாள் ஆசையும் கூட. எங்கே பயணம் என்று கேட்குமுன்னர் சொல்லி விடுகிறேன். வட கிழக்கு மாநிலங்களுக்கு பயணம் சென்று வந்தேன்.  சில நண்பர்கள் அங்கே செல்ல ஆர்வத்துடன் இருக்க, அனைவருமாய் அங்கே சென்று வந்தோம். பதினைந்து நாட்களில் கிடைத்த அனுபவங்கள் எத்தனை எத்தனை......

இப்பயணம் பற்றிய பதிவுகள் எழுத ஆரம்பித்தால் எத்தனை பதிவுகள் வரும் என்று சொல்வது கடினம்! உணவு, உடை, நடவடிக்கை, பழக்க வழக்கங்கள், சுற்றுலாத் தலங்கள், வரலாறு என எத்தனை எத்தனை விஷயங்கள் எத்தனை எத்தனை அனுபவங்கள்! தற்போதைய பயணத் தொடர் முடிந்த பின்னர் இந்தப் பயணம் பற்றியும் எழுதுவேன்.  இப்போதைக்கு, பயணத்தில் எடுத்த சில புகைப்படங்கள் – குறிப்பாய் மலர்களின் படங்கள் உங்களுடன் இந்த ஞாயிறில் பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கிறேன்.

ஒரு சில மலர்களின் பெயரோ அவை பற்றிய குறிப்புகளோ என்னிடம் கிடையாது.  ஆனாலும் பெயர் தெரிந்து தான் ரசிக்க வேண்டுமென ஏதும் சட்டமில்லையே! அதனால் இப்பூக்களை ரசிப்பீர்கள் தானே!

வாருங்கள் பூக்கள் பேசும் மௌன மொழியைக் கேட்போம்!

































மீண்டும் அடுத்த ஞாயிறில் வேறு சில படங்களுடன் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.  

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

ஃப்ரூட் சாலட் – 130 – பாலம் - காசு படுத்தும் பாடு - ஆண் குழந்தை



இந்த வார செய்தி:

பல இடங்களில் கிராம மக்கள் தங்கள் இருப்பிடத்தினை விட்டு வெளியே செல்ல மிகவும் கஷ்டப்படுவது இந்தியாவில் பல இடங்களில் இருக்கிற ஒரு பிரச்சனை. அவர்கள் இடத்திலிருந்து வெளியே செல்லத் தடையாய் வழியில் ஒரு ஆறு அல்லது பள்ளத்தாக்கு இருந்தால் வெளியே செல்ல பாதையே இருப்பதில்லை. பாலங்கள் அமைத்துக் கொடுக்க அரசு முயற்சி செய்யாத போது என்ன செய்ய முடியும். மக்களாகவே முயன்று செய்யக் கூடிய காரியமும் இல்லையே. 

இவர்களைப் போன்றவர்களுக்கு ஒரு ஆபத்பாந்தவனாக இருக்கும் ஒரு நபர் பற்றி ஆங்கில நாளிதழ் ஹிந்துவில் படித்த ஒரு செய்தி இன்றைய செய்தியாக......  

திரு கிரிஷ் [b]பரத்வாஜ் பற்றிய ஆங்கிலச் செய்தி கீழே.



Girish Bharadwaj builds suspension bridges that connect isolated villages with opportunity and link them to future.
Mechanical Engineer, Ist class, 1973 batch, P.E.S. College of Engineering, Mandya, Karnataka.On father’s directive set up a workshop in Sullia to repair farm machinery.Girish Bharadwaj’s story would have ended there, if Forest Officer Narayan had not been transferred from Sullia to Kushalnagar. “Can you connect an island (Nisargadham) in Cauvery to mainland?” he asked GB one day. It was a 50 m span and there were big trees on both sides. With help from a friend who had seen the Lakshman Jhoola, GB arranged to hang a pathway of wooden slats from wire ropes with steel rods as suspenders. “There was no design,” he said. “Only trial and error.”
He was the knight who would lead them out of isolation. “I asked for time, referred to books and decided on a suspension footbridge,” he said. “You know, I got my inspiration studying the Golden Gate!” 
Villagers in India are made of steely stuff. “Make it low-cost,” they said, and went house to house raising money. When he rolled his machinery to the site, 40 volunteers waited with building material. Wooden planks stood stacked. Women served snacks and tea. Two months later, in August 1989, GB’s first, self-designed suspension footbridge, three feet wide, stood inviting. He became the local hero.

திரு கிரிஷ் பரத்வாஜ் அவர்களுக்கு இந்த வாரப் பூங்கொத்து....

இந்த வார முகப்புத்தக இற்றை:

LIES WILL DESTROY YOU. LIES WILL DESTROY OTHERS. LIES, ONCE FOUND OUT, WILL MAKE EVERYONE QUESTION EVERYTHING YOU SAY. SO, DON’T TELL THEM.



இந்த வார குறுஞ்செய்தி:

EVERYDAY IS A NEW BEGINNING. SO JUST SMILE, TAKE A DEEP BREATH AND START AGAIN.



இந்த வார காணொளி:

காசு படுத்தும் பாடு.....  பாருங்களேன் ஒற்றை நோட்டு என்ன பாடு படுத்துகிறது!






ராஜா காது கழுதை காது:

கடை வீதியில் நண்பருடன் நின்று கொண்டிருந்தேன். அவருக்கு அலைபேசியில் அழைப்பு. அழைத்தது அவர் மகன் – ஐந்து வயதாகிறது. “அப்பா நீ வரும் போது ஒரு [b]பேபி [b]பாய் வாங்கிட்டு வா”. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. வாங்கல்லாம் முடியாதுப்பா....என்று சமாளிக்க, “அதெல்லாம் எனக்குத் தெரியாது. வரும் போது ஹாஸ்பிடல் போய், காசு கொடுத்து வாங்கிட்டு வா!என்று கட்டளை. சரி முதல்ல வீட்டுக்கு வரேன். அப்புறம் வாங்கலாம்என்று வீட்டுக்குச் சென்றார். வீட்டுக்குச் சென்று மனைவியிடம் கேட்க, அவர் சொன்னது இது தான் – “பெண்கள் இருவரும் அவர்கள் தோழிகளுடன் விளையாட, இவர் தனியாக, விளையாட முடியாததால் இப்படி கேட்டிருக்கிறார் என்று தெரிந்திருக்கிறது! அடுத்த நாள் இதைச் சொல்லிவிட்டு, ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருக்கும் அவர் சொன்னது – “மூணு நாலு வருஷம் முன்னாடி சொல்லிருந்தாலாவது முயற்சி செய்திருக்கலாம்!  



படித்ததில் பிடித்தது:

மாபெரும் இசைமேதை தன குழுவினருடன் இசை வெள்ளம் உருவாக்கிக்கொண்டிருந்தார். அப்போது தட், தட் என்று சப்தம்.

திரும்பிப் பார்த்தால் அந்த அரங்கின் ஒரு பகுதியில் தச்சு வேலை நடந்து கொண்டிருந்தது. இசைக் குழுவில் இருந்தவர்கள் பொறுமை இழந்தார்கள் .

''இப்படி இடையூறு செய்தால் ஒத்திகை பார்ப்பது எப்படி?'' என்று கோபப்பட்டார்கள். அவர்களின் தடுமாற்றத்தைக் கண்ட இசை மேதை ஒத்திகையை நிறுத்தினார்.

தச்சு வேலை செய்பவர்கள் பக்கம் திரும்பிக் கேட்டார், ''ஐயா, எங்களின்இசை உங்களுக்கு தொந்தரவாக இருக்கிறதா?''

ஆணியை அடிக்கக் கையை ஓங்கியவர்கள் அப்படியே நிறுத்திக் கொண்டார்கள்.

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை; நமக்குத் தொந்தரவாகத் தெரிபவர்களுக்கு நாம் தொந்தரவாகத் தெரிகிறோம்.

-          முகப்புத்தகத்தில் நண்பர் ராஜகோபாலன் பகிர்ந்து கொண்டது.  அவருக்கு நன்றி.



மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வியாழன், 2 ஏப்ரல், 2015

சிந்த்பூர்ணியில் கவலைகளை மறப்போம்...



தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 5

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1 2 3 4

 படம்: கூகிளாண்டவர் உபயம்....

இப்படியாக வழியெங்கும் உணவு வகைகளை ருசித்தபடியும், பயணத்தினை சுகமான முறையில் தொடர்ந்தும் நாங்கள் தில்லியிலிருந்து ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் சிந்த்பூர்ணி எனும் இடத்திற்கு மாலையில் வந்து சேர்ந்தோம். எங்கள் அலுவலக நண்பரின் உறவினர் ஹிமாச்சலத்தில் இருப்பதால் அவர் மூலமாகத் தான் நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தோம். அன்று மதியத்திலிருந்தே அவர் அலைபேசியில் அழைத்து எப்போது வருவீர்கள் என விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.


 மாலை நேர நடை உடலுக்கு நல்லது என்று சொல்லாமல் சொல்கிறாரோ இவர்.... - நெடுஞ்சாலையில் நடை பழகும் பெரியவர்.


காய்ந்த சருகுகளுடன் தேக்கு மரங்கள் - நெடுஞ்சாலைக் காட்சி......


நெடுஞ்சாலையில் சிறிய லாரிக்குள் அடைக்கப்பட்டு பயணிக்கும் எருமைகள் - இப்படிச் செய்தவர்களுக்கும் இதே ஏற்பாடு செய்தால் நல்லது! - மற்றுமொரு நெடுஞ்சாலைக் காட்சி...
 
எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த தங்குமிடம் பற்றிய விவரங்களைத் தந்ததோடு சிந்த்பூர்ணியில் இருக்கும் ஒருவரிடம் எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும்படியும் பணித்திருந்தார். நாங்கள் அனைவரும் சிந்த்பூர்ணி பேருந்து நிலையம் அருகிலேயே இருக்கும் தங்குமிடத்தில் உடைமைகளை வைத்துவிட்டு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோவிலுக்கு எங்கள் வாகனத்திலேயே பயணித்தோம்.

 விறகு சுமக்கும் பெண்மணி - அவரின் உடையைப் பிடித்தபடி செல்லும் சிறுமி.... - நெடுஞ்சாலைக் காட்சி.

பொதுவாக பேருந்து நிலையத்திற்கு மேல் தனியார் வாகனங்களை அனுமதிப்பதில்லை. ஆனாலும் எங்களுக்கான உதவி செய்ய வந்திருந்த நபர் எங்கள் வாகனத்தினை கோவில் வரை கொண்டு செல்ல உதவினார். பாதை சற்றே குறுகலானது மட்டுமல்லாது இரண்டு புறமும் கடைகள் நிறைய இருப்பதால் மெதுவாகத்தான் செல்ல வேண்டும். சற்றே மேட்டுப்பாங்கான சாலையும் கூட.  கோவிலின் அருகே இறங்கிக் கொண்டோம்.

 பூஜைக்குத் தயாராகும் தங்குமிட உரிமையாளர்

இக்கோவில் இருக்கும் இடம் சற்றே வித்தியாசமானது.  கீழ்ப்புறம் இருக்கும் சாலையில் நிறைய கடைகள் பூஜைக்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்கிறார்கள். கோவிலுக்குச் செல்லும் பாதை மேலே உள்ள சாலையில் இருக்கிறது. என்றாலும் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு அக்கடையில் இருக்கும் படிக்கட்டுகள் வழியே மேலே சென்றால் நீங்கள் மேலுள்ள சாலைக்கும்/கோவில் பாதைக்கும் சென்று விடலாம்! இப்படிப்பட்ட வசதியை நான் எங்கும் பார்த்த நினைவில்லை.


 கோவிலுக்குச் செல்லும் பாதையில் பார்த்த சிறுமி - வருங்காலத்தில் நீதிபதியாக வருவாரோ?

அப்படி ஒரு கடைக்குச் சென்று அங்கே காலணிகளை கழற்றி வைத்து விட்டு, பூஜைப் பொருட்களை வாங்கிக் கொண்டோம் – 10 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரை வசதிக்குத் தகுந்தவாறு வாங்கிக் கொள்ளலாம் – விதம் விதமாய் தட்டுகளில் பூஜைப் பொருட்களை வைத்திருக்கிறார்கள்.  கட்டாயம் அதில் ஒரு இனிப்பு – ரவா ஹல்வா, பாயசம் [(kh)கீர்], லட்டு, பர்ஃபி என ஏதாவது ஒரு இனிப்பு உண்டு.  இப்படி வைத்துக் கொடுப்பதை எடுத்துக் கொண்டு படிகளின் வழியே மேலே சென்றோம்.

சின்னமஸ்திகா தேவி - படம் இணையத்திலிருந்து....

பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொண்டு கோவிலுக்கான பாதையில் முன்னேறினோம். சாதாரணமாக இக்கோவிலில் நவராத்திரி சமயங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். நாங்கள் சென்ற சமயத்தில் அப்படி திருவிழாக்கள் இல்லாத காரணத்தினால் அத்தனை கூட்டமில்லை. மிகச் சுலபமாக தேவியை தரிசிக்க முடிந்தது. நின்று நிதானித்து அன்னையின் சரண் பற்றினோம். இக்கோவிலில் இருக்கும் தேவியின் பெயர் சின்னமஸ்திகா தேவி.

சிந்த்பூர்ணி கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்று. சக்தி பீடங்கள் பற்றிய கதை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். சதி தேவியின் உடல் 51 பகுதிகளாக பிரிந்து 51 இடங்களில் விழ, அவ்விடங்களில் சக்தி பீடங்களாக தேவிக்கு கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மா சிந்த்பூர்ணி அப்படி ஒரு சக்தி பீடம் – தேவியின் நெற்றி/தலைப் பகுதி விழுந்த இடம் என்று சொல்கிறார்கள். அதனால் இங்கே இருக்கும் தேவிக்கு தலை கிடையாது. அலங்காரம் தான்.

தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் சிந்தையில் இருக்கும் அனைத்து கவலைகளையும் போக்க வல்லவள் என்றும், அவளைச் சரணடைந்தால் போதும் என்றும் நம்புகிறார்கள்.  உலகியல் கவலைகளை மறந்து விட இத்தலம் சிறப்பானது என்றும், எல்லா கவலைகளையும் அன்னையிடம் விட்டு கவலையில்லாத மனிதனாக வாழ இதை விட வேறு வாய்ப்பில்லை என்றும் நம்புகிறார்கள்.  இக்கோவில் பற்றிய வேறு சில வரலாறும் உண்டு. அதைப் பற்றியும் வேறு சில அனுபவங்கள் பற்றியும் அடுத்த பகுதியில் பார்க்கலாமா?


குளிர் காலமாயிற்றே - கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த வண்ண வண்ண ரஜாய்கள்....


குரங்கு குல்லாய்கள்.....

 வீட்டிற்குள் அணிந்து கொள்ள செருப்புகள்....

இப்பகுதியினை முடிக்குமுன்னர், கோவில் இருக்கும் இடம் பற்றியும் சொல்லி விடுகிறேன்.  ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஊனா [UNA] மாவட்டத்தில் இருக்கிறது இந்த சிந்த்பூர்ணி. சோலா சிங்கி மலைத் தொகுப்பில் இருக்கிறது இவ்விடம். கோவில் காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். பொதுவாகவே இங்கே மிதமான வெட்பநிலை தான்.  வருடம் முழுவதுமே இங்கே சென்று தரிசனம் செய்ய முடியும் என்பதும் ஒரு வசதி.

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.