ஞாயிறு, 10 ஜூன், 2018

ஒரு நாள் ஒரு புகைப்படம் – புகைப்பட உலா – கவிதை தாருங்கள்!

Photo of the Day Series-1

புகைப்படங்கள் எடுப்பது எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம். பயணக்கட்டுரைகளிலும் மற்ற பதிவுகளிலும் பெரும்பாலும் நான் எடுத்த புகைப்படங்களையே பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சமயமும் எடுக்கும் படங்கள் அனைத்தையுமே வலைப்பூவில் பகிர்ந்து கொள்வது முடியாததாக இருக்கிறது. புகைப்படங்களை Flickr அல்லது Google Photos-ல் சேமித்து வைக்கலாம் என்றாலும் அதனைப் பார்க்க ஒருவரும் வருவதில்லை. இந்த வலைப்பூவிலேயே தினம் தினம் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டால் இப்போது வருகின்ற சிலர் கூட வருவதை நிறுத்தி விடலாம்! தனியாக புகைப்படங்களுக்கென்று வலைப்பூ தொடங்கும் எண்ணம் வந்தாலும் செயல்படுத்த விருப்பம் இல்லை!

சனி, 9 ஜூன், 2018

புதுச்சேரியில் இரு நாட்கள் – என்னவரின் கல்லூரி நட்புகளுடன் சந்திப்பு



முத்தமிழ் வாயில் - வரவேற்கும் புதுச்சேரி.....

சென்ற மாதத்தின் மூன்றாம் வாரம் – என்னவரின் கல்லூரி நட்புகளைச் சந்திக்க ஏற்பாடு ஆகியிருந்தது – சந்திப்பு நடந்த இடம் புதுச்சேரி. போவதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருந்து பிறகு போவதென முடிவு செய்து புதுச்சேரிக்குப் புறப்பட்டோம். காலையில் தெரிந்த ஓட்டுனருடன் வாகனத்தில் சொகுசான பயணம் ஆரம்பித்தது. திருச்சியிலிருந்து விழுப்புரம் வழியாக புதுச்சேரி செல்லப் போகிறோம். காலையிலேயே வீட்டிலிருந்து புறப்பட்டதால் காலை உணவு வழியில் தான்! திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை டோல்கேட் தாண்டியபிறகு இருக்கும் A2B உணவகத்தில் தான் காலை உணவு. இட்லி, தோசை, என அவரவருக்குத் தேவையானதை சாப்பிட்ட பிறகு தொடர்ந்து பயணம். பாண்டிச்சேரி எங்களை வருக வருகவென வரவேற்றது.

வெள்ளி, 8 ஜூன், 2018

குஜராத் போகலாம் வாங்க – பயணத்தின் முடிவு – நல்ல மனம் வாழ்க



இரு மாநில பயணம் – பகுதி – 49

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


Riverfront, Ahmedabad

அழகிய விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆற்றங்கரையில் [Riverfront, Ahmedabad] சில மணித்துளிகள் இருந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த பிறகு எங்கள் தங்குமிடத்திற்குத் திரும்பியபோது இரவு மணி 10.30-க்கு மேல். அடுத்த நாள் காலையில் அஹமதாபாத் நகரிலிருந்து நான் தலைநகர் தில்லிக்கும் கேரள நண்பர்கள் திருவனந்தபுரத்திற்கும் செல்ல வேண்டும். எங்கள் விமான நேரங்களுக்கிடையே ஒரு மணி நேரத்திற்கும் மேல் என்பதால் நான் முதலில் புறப்பட வேண்டும். அவர்கள் ஒரு மணி நேரம் கழித்துப் புறப்படுவார்கள். காலை நேரத்தில் அறையைக் காலி செய்யும் போது கணக்கு வழக்கு பார்க்க முடியாது என்பதால் முதல் நாள் இரவிலேயே அறை வாடகை பாக்கியும் கொடுத்து, பயணத்திற்கான எங்கள் பங்கினையும் கணக்கிட்டு கொடுக்கல் வாங்கல்களை முடித்துக் கொண்டோம்.

வியாழன், 7 ஜூன், 2018

சிவகங்கைச் சீமையில் இரு நாட்கள்



சமீபத்தில் என்னுடைய பிறந்த ஊரான சிவகங்கைச் சீமைக்கு உறவுகளைக் காணச் சென்றோம். சிவகங்கை என்றதும் முகநூல் தோழியான S MalarVizhi Amudhan அவர்களின் நினைவு தானே வந்தது! திருச்சியிலிருந்து ரயிலில் தான் பயணம் – கொஞ்சம் தூரம் தான் என்றாலும் ரயில் பயணம் தான் எனக்குச் சரிப்பட்டு வரும் என்பதால் Passenger இரயிலில் ஒரு பயணம்!

புதன், 6 ஜூன், 2018

குஜராத் போகலாம் வாங்க – ஒன்பதாம் மாடியில் உணவகம் – நதியை நோக்கியபடி



இரு மாநில பயணம் – பகுதி – 48

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!



நண்பர் குரு காலையில் சொன்னபடியே, சரியாக எட்டு மணிக்கு மேல் அழைத்தார். ”தயாராக இருங்கள், இதோ வந்து கொண்டிருக்கிறேன் – தங்குமிடம் பெயர் மட்டும் இன்னுமொரு முறை சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொள்ள பெயரையும் முகவரியும் சொல்ல, நாங்கள் தயார் ஆகியவுடன் வந்து சேர்ந்தார். நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைத்த பிறகு அவரது வாகனத்திலேயே எங்களை உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். எந்த உணவகம் – சைவமா அசைவமா என்ன சாப்பிட்டோம் என்பதையெல்லாம் சொல்லத் தான் போகிறேன்! கொஞ்சம் காத்திருங்கள்! அதற்கு முன்னர் எந்த உணவகம் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன்.