எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, February 22, 2014

மதுரைத்தமிழனும் பூரிக்கட்டையும்....நேற்று அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் கணினியை முடுக்கினேன்.  ஜிமெயில் திறந்ததும் ஒரே அழுகைச் சத்தம் – என்னடா இது நம்ம மெயில் திறந்தா அழுகைச் சத்தமா இருக்கே, ஒருவேளை கூகிளுக்கே கஷ்டமா இருக்கோ என நினைத்தால் – ஒரு மின்னஞ்சல் மட்டும் விம்மி விம்மி அழுவது போல இருந்தது! யாரிடம் இருந்து வந்திருக்கிறது என்பதைப் பார்த்தபோது மதுரைத்தமிழன் வீட்டு பூரிக்கட்டை அனுப்பியதாகத் தகவல் சொன்னது. 

பட உதவி: கூகிள்

சரி வந்தது வரட்டும் என அந்த மின்னஞ்சலைத் திறந்தால், மதுரைத் தமிழன் வீட்டு பூரிக்கட்டை கண்ணீரும் கம்பலையுமாக நின்று கொண்டிருந்தது. என்ன ஆச்சு?என்று சோகத்துடன் நான் விசாரிக்க, ‘என் கஷ்டத்தினை போக்க யாருமே இல்லையா, நானும் எத்தனை நாளா இவங்க கிட்ட மாட்டிட்டு முழிக்கிறது. ஒவ்வொரு நாளும் என்னை வைத்து இவரை அடிக்கறேன்ற பேரில் என்னை படுத்துகிறார். எனக்கு ஒரு விடிவுகாலம் கிடையாதா? அவரை அடிக்கற அடியில் அவருக்கு வலிக்குதோ இல்லையோ, எனக்கு ரொம்பவே வலிக்குது....., என்னை யாராவது காப்பாத்துங்க!அப்படின்னு கதறி கதறி அழ, எனக்கும் ரொம்பவே கஷ்டமா ஆயிடுச்சு. பட உதவி: கூகிள்

பல இடங்களில் இப்படி பூரிக்கட்டையை அதனுடைய முதல் வேலையான சப்பாத்தி/பூரி செய்ய பயன்படுத்தாம, கட்டின கணவனை அடிக்க மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பது பல காலமாக சொல்லப்பட்டு வரும் விஷயம் என்பதால, நானும் யோசிச்சேன்.  நம்ம வீடு தேடி உதவின்னு வந்துட்டா, உதவி செய்யறது தானே மனிதாபிமானம்.... சரி அந்த பூரிக்கட்டையை நைசா லவட்டிடலாம்னு யோசனை சொன்னா, வேற ஒரு பூரிக்கட்டை வாங்கிடுவாங்க..... நான் மட்டுமல்ல, என் இனமே காப்பாற்ற வேண்டும்னு பூரிக்கட்டை தனது அழுகையை அதிகமாக்கி ஒப்பாரி வைக்க ஆரம்பிக்க,  இதேதடா வம்பாச்சுன்னு தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டேன்.

சரி எப்படியாவது இந்த விஷயத்துக்கு ஒரு நல்ல தீர்ப்பு வழங்கியே தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோமேன்னு தில்லியில் இருக்கற பல தலைவர்களை அழைத்து ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்தேன். பூரிக்கட்டையின் துயர் துடைக்க வாரீர்என ஒரு அழைப்பை அனைத்து கட்சி தலைவர்களுக்கும் மின்னஞ்சல் மூலமா அனுப்பி வைத்தேன். கூட்டம்னா தான் உடனே வந்துடுவாங்களே, அதுவும் துயர் துடைக்க வாரீர்னு சொன்னா, ஆஹா ஓட்டு வங்கின்னு வந்துடுவாங்கன்னு எதிர்பார்த்தது வீணாகலை.

எல்லாக் கட்சிகளின் தலைவர்களும் துயர் துடைக்க வாரீர்னு சொன்ன உடனே குறிப்பிட்ட நாளில் தங்களுடைய வீட்டில் இருக்கும் பொன்னாடைகளை மொத்தமாக எடுத்துக்கொண்டு வந்து. அந்த அபலைப் பெண் எங்கே, நான் தான் முதல்ல பூமாதிரி தொட்டு துடைப்பேன்எனப் போட்டி போட, அட நீங்க வேற துயர் ஒரு அபலைப் பெண்ணுக்கு அல்ல, அபலை பூரிக்கட்டைக்கு என்று சொன்னவுடன், அடப் போய்யா, பூரிக்கட்டைக்கு என்ன ஆனால் எங்களுக்கென்ன, இதால எங்களுக்கு ஒரு ஓட்டும் கிடைக்காதுன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க!

சரி வேற வழியில்லை, இந்தப் பிரச்சனைக்கு நாமே யோசிச்சு ஒரு தீர்வு கண்டுபிடிக்கலாம்னு நினைத்தபடியே குளிக்கப் போனேன். ரெண்டு சொம்பு தண்ணீர் கூட ஊற்றி இருக்க மாட்டேன், தலை மேலே அடிக்கற மாதிரி சத்தம். என்னடான்னு பார்த்தா, மேல் வீட்டு பாத்ரூம்ல இருந்து தான் சத்தம் வருது! அட என்னடா சத்தம்னு யோசிச்சப்ப தான் புரிஞ்சது அது என்ன சத்தம்னு!


 பட உதவி: கூகிள்

தில்லி வந்த புதுசுல கடைத்தெருவுக்குப் போய் பக்கெட், பிரஷ்னு வாங்கினப்போ, கடைக்காரர் BAT வேண்டாமான்னு கேட்டார்.  எதுக்குன்னு புரியாம பார்த்தப்ப, “துணி தோய்க்கதான்!என்று சொன்னபோது நான் பேய் முழி முழித்தேன்! அப்பதான் பக்கத்துல இருந்த நண்பர் சொன்னார், “நம்ம ஊர் மாதிரி இங்க தோய்க்கற கல் கிடையாது, நாம் தோய்க்கற கல்லில் துணியை அடித்து தோய்ப்போம். இங்கே துணியை கீழே போட்டு அதை இந்த மாதிரி ஒரு BAT-டால் அடிப்பார்கள் எனச் சொன்னார்.

 பட உதவி: கூகிள்


இந்த விளக்கம் குளித்துக் கொண்டிருந்த எனக்கு நினைவுக்கு வர, அட இது தான் நாம கொடுக்கப்போற தீர்வுன்னு முடிவு பண்ணி குளித்து முடித்தேன். திரும்பவும் கணினிக்கு முன் அமர்ந்து பூரிக்கட்டையே உனக்கு விடிவுகாலம் வந்து விட்டது. இனிமேலும் அழுது புலம்பாதே. உன்னை வைத்து பூரியும் சப்பாத்தியும் செய்ய மட்டுமே பயன்படுத்தவேண்டும் என ஒரு தீர்மானம் கொண்டு வந்துடலாம்.  உனக்கு பதிலா துணி தோய்க்கற கட்டையை எல்லார் வீட்டுக்கும் கொடுத்துடலாம், ஏன்னா இப்பதான் எல்லார் வீட்டிலும் அதுக்கு மிஷன் இருக்கே, தயாரிச்ச துணிதோய்க்கும் கட்டைகள் வீணாத்தானே போகும்!என்று சொல்ல, பூரிக்கட்டையின் முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது!

இந்த யோசனையை நான் சொல்லிக் கொண்டிருந்தது ஏதோ ஒரு அரசியல் கட்சியின் அடிப்பொடிக்குக் கேட்டுவிட, அவர் மூலமாக இந்த விஷயத்தினைத் தெரிந்து கொண்ட அவரது கட்சி, “இருக்கும் தோய்க்கிற கட்டைகள் போதாது போனால், வீட்டுக்கு வீடு துணிதோய்க்கும் கட்டைகள் இலவசமாகத் தருவோம்!னு தெருவுக்குத் தெரு Flex Banner வைக்க ஆரம்பிச்சுட்டாங்க!  

இந்த கட்டைகள் கொடுப்பதில் இன்னுமொரு வசதியும் இருக்கு, யார் மேலே கோவம் இருக்கோ, அவங்க துணியை துவைக்கும்போது அவங்களை அடிக்கறதா நினைச்சு துணியை அடிக்கலாம். பூரிக்கட்டை அடியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த யோசனையை இலவசமா வழங்கலாம். அடிகொடுத்து, காயம்பட்டு அதுக்கு வேற செலவு ஆகறதை தடுக்கலாமே!

பூரிக்கட்டைக்கு நல்ல விமோசனம் என்று நினைத்து சந்தோஷமா இருக்க, திடீர்னு என் மண்டையில் ஒரு பலத்த அடி. வேற ஒண்ணும் இல்லைங்க! துணிதோய்க்கற கட்டை தான் என் தலையில விழுந்தது! வெளியாட்களுக்கு எல்லாம் இதை கொடுக்கறதுக்கு முன்னாடி சோதனை பண்ணிப் பார்க்க நினைத்தார்களாம்! யாருன்னு கேட்கறீங்களே..... வீட்டுக்கு வீடு வாசப்படி! இப்படி எடக்கு மடக்கா கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது!

ஆனா நம்ம மதுரைத் தமிழனுக்கு பூரிக்கட்டையோ, துணிதோய்க்கும் கட்டையோ தேவைப்படாது போல! பாருங்களேன் அவர் நிலையை!மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி:  பூரிக்கட்டை/துணி தோய்க்கும் கட்டையின் மீது சத்தியமாக சொல்வது என்னவென்றால் “இப்பகிர்வு யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதவில்லை என்பது தான்!

76 comments:

 1. ஹா... ஹா... யோசனைகள் ரொம்ப "பலமாத்தான்" இருக்கு...! பூரிக்கட்டைக்கு நல்ல விமோசனம்...

  மதுரைத் தமிழன் ரொம்ப சந்தோசப்படுவாரா என்று தான் தெரியவில்லை...

  ReplyDelete
  Replies
  1. பூரிக்கட்டைக்கு நல்ல விமோசனம் ஆனால் எனக்கு இல்லையே... நல்லவேளை எங்க வூட்டும்மா வலைபப்திவு பக்கம் வருவதில்லை அதனால் நான் BAT அடியில் இருந்து தப்பிவிட்டேன் இனிமே யாரும் ஐடியா தரும் போது மிக கனமான பொருளை சொல்ல வேண்டாம் காரணம் அடிவாங்குவது நாந்தான்

   அது சரிங்க பூரிக்கட்டை அழுவதுக்கு வருத்தப்பட்ட நம் வெங்கட் தினமும் அடிவாங்கி அழும் எனக்கு வருத்தப்படலை அது போலதான் நிறைய பதிவர்கள் நான் அழுவதற்கு வருத்தப்படாமல் பலர் பூரிக்கட்டையை வாங்கி என் மனைவிக்கு பரிசாக தொடர்ந்து அனுப்பி வருகிறார்கள்

   இப்படிப்பட்டவர்களை அழுக வைக்க எனக்கு தெரிந்த வழி இன்னும் அதிக மொக்கை பதிவுகளை போட்டு அவர்களை அழ வைக்கப் போகிறேன்

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
  3. உங்கள் பதிவுகள் எத்தனை வந்தாலும் மகிழ்ச்சி தான் மதுரைத் தமிழன்! :))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 2. பூரிக்கட்டையே அழுகுதுன்னா இந்த மதுரைதமிழன் நிலமையை யோசிச்சு பாருங்க...

  ReplyDelete
  Replies
  1. உங்களை நினைச்சா பாவமா தான் இருக்கு.... :) அதனால தான் தோய்க்கற கட்டை கொடுத்து உங்க துணியை தோய்க்கும்போது அடிக்கச் சொன்னேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 3. சுத்தமான ( 100% ) தமிழன் இந்த மதுரைத்தமிழன்.. அதுதானங்க இந்த மதுரைத்தமிழனை தினம் தினம் அவரது மனைவி வெளுக்கிறாங்கல்ல அப்படின்னா மதுரைத்தமிழன் சுத்தமான தமிழன்தானே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீங்க 100% அக்மார்க் தமிழன் தான்! :))))

   Delete
 4. நண்பர்களே இந்த பதிவை படித்துவிட்டு பூரிக்கட்டையை என்னிடம் இருந்து பிரித்து BAT யை வாங்கி அனுப்ப வேண்டாம்

  ReplyDelete
  Replies
  1. என்ன ஒரு கரிசனம் பூரிக்கட்டையின் மீது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 5. நகைச்சுவையான பதிவு, கடைசி படம் பதிவுக்கே சிகரம் வைத்தாற்போல் அமைந்துவிட்டது.

  துணியை bat ஆல் அடிப்பதை இப்போதான் கேள்விப்படுகிறேன். இது இன்னும் காமெடியா இருக்குங்க‌.

  ReplyDelete
  Replies
  1. துணியை மட்டும் அடிங்க வூட்டுகாரரை அடித்து துவைத்து வீடாதீங்க

   Delete
  2. பலருக்கு இந்த விஷயம் [bat-ஆல்] துணியை அடிப்பது புது விஷயம் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்....

   Delete
  3. சித்ரா சுந்தர் அவர்களுக்கு நல்ல அறிவுரை கொடுத்தாச்சு நம்ம மதுரைத் தமிழன்.... :)))

   Delete
 6. ஹா... ஹா... ஹா...! சற்றே நீளமாக அமைந்துவிட்டாலும்... நல்ல நகைச்சுவை! அசத்திட்டேள் போங்கோ... அதுவும் அந்த கடைசிப் படம்... சூப்பரு!

  ReplyDelete
  Replies
  1. அடடா... கொஞ்சம் நீளமாகிவிட்டதோ பகிர்வு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 7. blogகில் பூரி கட்டையின் புகழ் பரவுகிற வேகத்தை பார்த்தால் அது தேர்தல் சின்னமாக அறிவிக்க பட்டு விடுமோ என நான் நினைத்துக்கொண்டிருந்த வேளையில் போட்டிக்கு இப்டி bat டை களம் இறக்கிடீங்களே அண்ணா! ஏன் இந்த கொலைவெறி ?!

  ReplyDelete
  Replies
  1. ஐயோ சகோதரி நீங்க சொன்னாமாதிரி நாங்க அத வைச்சுத்தான் மதுரைத் தமிழனை கொஞ்சம் ஓட்டலாம்னு நினைச்சிருந்தோம்........

   Delete
  2. கொலைவெறி... :)) அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... சும்மா தமாஷ்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.

   Delete
  3. நீங்களும் எழுதலாமே துளசிதரன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 8. துணி தோய்க்கற கட்டையோ , பூரிக்கட்டையோ -
  வல்லவர்களுக்கு புல்லும் ஆயுதமாயிற்றே...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 9. பல இந்திப்படங்களில் துணிதோய்க்கப் பயான்படும் இந்தக் கட்டாஇயை மராத்திய பெண்கள் பயன் படுத்துவதைப் பார்த்தால் கதிகலங்கும் நல்ல யோசனைதான்,....... கார்ட்டூன்ஸ் சூப்பர். அது யார் மதுரைத் தமிழன்.பாவம்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் பரிதாபடுபவர் ஒருத்தர் இருக்கிறார் போல இருக்கே?

   Delete
  2. அவருக்கு உங்களைப் பற்றி தெரியலை. அதனால் தான் பரிதாப்பட்டிருக்கிறார்.

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா..... மதுரைத் தமிழன் வலைப்பூ படிச்சதில்லையாம்மா...

   Delete
  4. மதுரைத் தமிழன், உங்களுக்காக பரிதாபப் படுபவர்கள் ஒரு பெரிய லிஸ்டே இருக்கு.... :)

   Delete
  5. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 10. கடைசி படம்தான் நச். இன்னும் கொஞ்சம் நாளில் துணி துவைக்கும் கட்டையும் அழ ஆரம்பித்துவிடும். அப்புறம் என் அண்ணிஆயுதத்துக்கு என்னப் பண்ணுவாங்க!? அதனால உங்க ஃப்ரெண்டை அடக்கம் ஒடுக்கமா அண்ணி சொல் பேச்சுக் கேட்டு நடக்கச் சொல்லுங்க. அதான் அண்ணிக்கும், உங்க ஃப்ரெண்டுக்கும் நல்லது.

  ReplyDelete
  Replies
  1. ///என் அண்ணிஆயுதத்துக்கு என்னப் பண்ணுவாங்க!?///நீங்கதான் மைசூர்பாகு நல்லா செய்வீங்களாமே? அதை கொஞ்சம் உங்க அண்ணிக்கு அனுப்பிபாருங்களேன். ஒரு வேளை அது மிக நன்றாக உதவுமே

   Delete
  2. உங்க தங்கச்சி ராஜி அவங்க, உங்களுக்காக வாயில கரையற மைசூர்பாகு செஞ்சு அனுப்பி அவங்க அண்ணிய அப்படியே மெய்மறந்து இருக்கச் செஞ்சா, அட்லீஸ்ட் ஒரு மணி நேரமாவது, பூரிக்கட்டை பூசையிலிருந்து அண்ணன் தப்பிக்கலாமேனு நினைக்கற நல்ல மனச இப்படி எல்லாமா ஹொல்றது!???? இல்ல அந்த கரைதலில் நீங்களும் மெய் மறந்தீங்கனா அதுவே ஒரு அனஸ்தீசியா போல ஆகுமேனு....அவங்க நல்ல மனச போயி......

   கீதா.....துளசிதரன்...

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
  4. மதுரைத் தமிழன்.... உங்களுக்கு அனுப்பறதுக்கு பதில் தவறுதலா தில்லிக்கு அனுப்பிடப் போறாங்க.... மீ பாவம்!

   Delete
  5. அடாடா.... என்ன நல்ல மனசு ராஜிக்கு.... கண்டுபிடிச்சிட்டீங்களே கீதா... துளசிதரன்.

   Delete
 11. கடைசிப் படத்தில் துவைக்கப் படுகிறவர் 'NRI மதுரை தமிழன் 'என்பதை சுட்டிக் காட்டி இருக்கலாம் .எல்லோரும் ஒரிஜினல் மதுரை தமிழனான என்னை சந்தேகப் படுகிறார்கள் !
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 12. வெங்கட் அண்ணா, நீங்க ரொம்ப சாப்ட் பெர்சனா இருக்கீங்க.. தலைவரோட கெத்துக்கு பட்டாவது, லட்டாவது: அரிவாள், சவுக்கு, கன் இப்படி சமாச்சாரங்களும் ட்ரை பண்ணலாம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
  Replies
  1. நாட்டுல நிறைய கொலைகார பசங்க இருக்காங்க போல இருக்கே நாம இனிமே ஜாக்கிரதையாதான் இருக்கணும்

   Delete
  2. ஏம்பா ஹாரி.... எதுக்கு இந்த கொலைவெறி! பாவம் நம்ம மதுரைத் தமிழன்....

   Delete
  3. பார்த்து சூதானமா நடந்துக்கோங்க மதுரைத் தமிழன்!

   Delete
 13. நம்ம டெக்னாலஜி தான் எவ்ளவ் முன்னேறி இருக்கு? திருவரங்கத்துல அடிச்சா, தில்லிக்கு கேட்குதே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மூவார் முத்தே.....

   அடாடா... திருவானைக்கோவிலில் அடித்தாலும் கேட்கும்! :))))

   Delete
 14. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

  வலைச்சர தள இணைப்பு : தேனிலவு செல்ல அழகான இடங்கள்

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு மிக்க நன்றி தனபாலன்.....

   Delete
 15. ஹா...ஹா...ஹா... ப்ளஸ் கடைசிப் படம் சூப்பருங்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்...

   Delete
 16. மதுரைல ஒரு கடைல ரொம்ப பெரிய Q. என்னன்னு போய் பாத்தா அங்க ஒரு போடு. //இங்கு வாங்கும் இரண்டு புடவைகளுடன் ஒரு துவைக்கும் கட்டை இலவசம்.// வரிசைல என் சம்சாரம் வேர நிக்கறா.

  பல ஆண்களும் வரிசைல நிக்கராங்க. கட்சிக்காரங்களாம். இங்க என்ன பண்றீங்கன்னு விசாரிச்சேன். தேர்தல் வருதுல்ல. போலீசுகிட்ட மாட்டிக்கிட்டா சம்சாரம் கேட்டுச்சுன்னு சொல்லிருவோம் அப்டீன்னாங்க.

  இனியாவது இதுபோன்ற பதிவுகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்வது

  வருத்தப்படும் வாலிபர் சங்கம்.

  தலைவர்,
  கோபாலன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வருத்தப்படும் வாலிபர் சங்கத் தலைவரே...... இதில் உறுப்பினர் ஆக என்ன செய்ய வேண்டும்!

   Delete
 17. ஒரு வழி பண்ணிட்டீங்க!பாவம் ஐயா அவர்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 18. இந்த விஷயம் ஒபாமா மாமா வரைக்கும் தெரிஞ்சு போச்சே .
  என்னமா படம் போட்டுக் காட்டியுள்ளார் சகோதரர் வெங்கட் !
  சுத்தமான தமிழனே மன்னிக்கணும் விஷயம் முத்திப் போச்சு
  இனி ஒன்றும் செய்ய முடியாது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது
  பேசாம நல்ல பிள்ளையாட்டம் வீட்டம்மா சொல்லுவதைக் கேட்டு
  நடவுங்க இது ஒன்று தான் சரியான வழி .இல்லையேல் சாமியாராத் தான்
  போகணும் :))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 19. என்ன இருந்தாலும் bat ஆங்கிலேயர் கண்டுபிடிப்பு, அதைக் கொண்டு ஒரு மானமுள்ள வீரத் தமிழன் போராடுவதா?
  Never...
  இரண்டு கட்டைகளுக்கும் பதிலாக தமிழனின் பாரம்பரிய சின்னமான உலக்கையை பரிந்துரை செய்கிறேன்...!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலரின் நினைவுகள்.

   Delete
 20. அன்பின் வெங்கட்..
  தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு.

   தகவல் தந்தமைக்கு நன்றி.

   Delete
 21. ஹஹஹாஹாஅ! அருமையான ஹாஸ்யம்!

  நண்பரே நீங்க தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் க்கு பின்னூட்டம் எங்களுக்கு இட்ட போது தாங்களும் எழுத நினைத்ததாகவும், ஆனால் எங்கள் விமர்சனம் பார்த்த பின் எழுதப் போவது இல்லை என்றும் சொல்லி இருந்தீர்கள்! இப்பொது அதையே நாங்களும் தங்களுக்குச் சொல்ல வேண்டிய நிலை! ஏனென்றால் நாங்களும் மதுரைத் தமிழனின் பூரிக்கட்டையை வைத்து தலைப்பு வேறு இதேதான் ......எழுத நினைத்து...ஒரு பாரா எழுதி வைத்துள்ளோம்! தவறாக நினைக்க வேண்டாம்......அடுத்த வாரம் போடுவதாக இருந்தோம்!...ஆனால் தற்போது தங்களது இந்த அருமையான ஹாஸ்யப் பதிவை வாசித்தப் பின் வேண்டுமா என்று யோசனை!

  "என்னைய வைச்சு காமெடி கீமெடி பண்ணலயே!" அப்படினு வைகைப் புயலின் குரல்....ஸாரி மதுரைத் ஹ்டமிழனின் குரல் கேட்கிறது!!!!

  மிகவும் ரசித்தோம்!

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. மதுரைத்தமிழனை யாரு வேண்டுமானாலும் திட்டலாம் பாராட்டலாம் கலாய்க்கலாம்... நான் தவறாக எடுத்து கொள்ள மாட்டேன். அதனால் உங்கள் பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்...

   Delete
  2. துளசிதரன், கீதா
   நீங்க எப்பவுமே லேட்டு....!!
   DD யைப் பற்றிய ஒரு பதிவையும் இப்படித்தான் நீங்க எழுதி வைத்துக் கொண்டு இருக்கையில, ஒரு பிரபஞ்ச பிரபல பதிவர் வெளியிட்டு விட்டார்..!!

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.

   நீங்களும் எழுதுங்கள்... உங்கள் பாணியில் படிக்க ஆவலுடன்!

   Delete
  4. மதுரைத் தமிழனே டபுள் ஓகே சொல்லியாச்சு! அதனால் தயங்காம எழுதுங்க துளசிதரன்....

   Delete
  5. பிரபஞ்ச பிரபல பதிவர்! - வாவ் நல்ல அடைமொழி!

   Delete
 22. இது என்ன பூரிக்கட்டைக்கு வந்த சோதனை ? இங்கே மும்பையிலும் அந்த கட்டைதான் துணி துவைக்க...!

  ReplyDelete
  Replies
  1. தென் மாநிலங்களில் தான் இல்லை போல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete


 23. //“இப்பகிர்வு யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதவில்லை”//
  இது எனக்கு வேறொரு வழக்கு சொல்லை நினைவூட்டுகிறது!
  நகைச்சுவை பதிவை இரசித்தேன். !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா....

   எந்த வழக்குச் சொல்?

   Delete
 24. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 25. அய்யோ... கட்டை... மட்டை... அடி... உதை... ரத்தம்... கொலை... எல்லாரும் ஓடிருங்க... எல்லாரும் ஓடிருங்க...!

  அய்யையோ... போட்டாச்சு... போட்டாச்சு...!

  ReplyDelete
  Replies
  1. அடடா... என்ன ஒரே ஓட்டமா இருக்கு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முட்டா நைனா....

   Delete
 26. நல்ல நகைச்சுவை பதிவு! பேட்டால் அடித்தால் தாங்க முடியாது! மறு பரிசீலனை செய்யவும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.....

   Delete
 27. ஆஹா, என்னமா யோசிச்சிருக்கீங்க வெங்கட்.
  அதுவும் அந்த கடைசிப் படத்தை, பார்த்தவுடன், எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.

  ஆமா, உங்களுக்கு ஏன், மதுரைத் தமிழன் மேல் அவ்வளவு பாசம்?????

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.....

   Delete
 28. நல்ல நகைச்சுவை...அதிலும் அந்த கடைசி புகைப்படம் அருமை.... இனிமே பூரி செய்ய கட்டைகள் வாங்காமல் பூரி அழுத்தும் இயந்திரம் வாங்கும்படி புதிய தம்பதிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது( பொருள் இருந்தால் தானே பயன்பாடு தெரியும்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....