எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, June 25, 2015

சோள ரொட்டியும் கடுகுக் கீரையும் கொஞ்சம் வெல்லமும்


தேவ் பூமி ஹிமாச்சல் பகுதி 23

தேவ் பூமி ஹிமாச்சல்  பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

பனிமூட்டத்தில் மெதுவாகச் செல்லும் வாகனம்

இப்பயணத்தில் பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் என அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. தொடர்ந்து படித்து வந்த உங்களுக்கும் புதியதாய் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்திருந்தால் இன்னமும் அதிக மகிழ்ச்சி. இப்பயணத்தின் கடைசி பகுதிக்கு நாம் வந்து விட்டோம்

Fully Packed
குளிரில் பயணிக்கும் ஒரு குடும்பம்

அதிக குளிர் என்றாலும் நான்கு மணிக்கே எழுந்து குளித்து தயாராகிவிட்டேன். தங்குமிடத்தில் Geyser மட்டும் இல்லாவிட்டால் சுடு நீர் இல்லாமல் குளிக்க யோசிக்க வேண்டியிருந்திருக்கும்! சில தங்குமிடங்களில் சுடு நீர் வசதிகள் சரியாக இருப்பதில்லை. நாங்கள் தங்கிய இடம் பரவாயில்லை. இவ்வசதிகள் இருந்தன! காலையிலே குளித்து விட்டதால், மற்றவர்கள் தயாராவதற்குள் கொஞ்சம் தொலைவு நடந்து சென்று வந்தேன். இப்படி நடந்து செல்வதால் அதிகாலையில் நல்ல காற்று சுவாசிக்க முடிந்தது

உள்ளே இடம் இல்லைன்னா என்ன?
நாங்க மேலே கூட அமர்ந்து பயணம் செய்வோம்....

நடை முடித்து திரும்பவும் தங்குமிடம் வந்தபோது பெரும்பாலானவர்கள் தயாராகி இருந்தார்கள். இப்பயணத்தில் எங்களுக்கு நிறையவே உதவி செய்த நண்பர் மனீஷ்-ஐ அலைபேசியில் அழைத்து நாங்கள் புறப்படத் தயார் என்று சொல்லவே  அவரும் இதோ வருகிறேன் எனச் சொல்லி வந்தார். வரும்போது காங்க்ரா தேவி [வஜ்ரேஷ்வரி தேவி] கோவிலுக்குச் சென்று அன்னையின் பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து அனைவருக்கும் அளித்தார். அவருக்கு நன்றி தெரிவித்து தில்லி வந்தால் கட்டாயம் தெரிவிக்கச் சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்.

நங்கல் அணைக்கட்டு.....

துள்ளித் துள்ளி ஓடும் பெண்ணே......
அணைக்கட்டிலிருந்து வெளியேறும் தண்ணீர்!

வழி நெடுகிலும் பனிமூட்டம் தொடர்ந்து இருக்க, மிதமான வேகத்திலேயே பயணிக்க முடிந்தது. திரும்பி வரும் வழியில் பக்ரா-நங்கல் அணைக்கட்டு பார்க்க நினைத்திருந்தோம். நாங்கள் பயணித்த பாதையிலிருந்து விலகி சில கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டியிருக்கும் என்பதாலும், பனி மூட்டத்தில் அத்தனை தெளிவாகப் பார்க்க முடியாது என்பதாலும் அத்திட்டத்தினை கைவிட்டு, நாங்கள் சென்ற பாதையிலே இருந்த ஒரு சிறிய அணைக்கட்டினைப் பயணித்தபடியே பார்த்து, சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டோம்.சாலையில் பயணிக்கும் அனைவருக்கும் உணவு.....
சீக்கியர்களின் லங்கர்

நாங்கள் செல்லும்போது சொன்ன மாதிரியே இப்போதும் வழியெங்கும் சீக்கியர்கள் சில கொட்டகைகளை அமைத்து சாலையில் செல்லும் அனைவருக்கும் உணவளித்துக் கொண்டிருந்தார்கள். தங்களது ஒவ்வொரு குருமார்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று இப்படி அனைவருக்கும் உணவு அளிப்பதில் இவர்களுக்கு இணை யாருமில்லை. அதுவும் தானம் தானே என்ற எண்ணமில்லாது நல்ல உணவு அளிப்பார்கள்வழி நெடுகிலும் இப்படி பல இடங்களில் வாகனங்களை நிறுத்தி பயணிகள் அனைவருக்கும் நாள் முழுவதும் உணவளிப்பது சுலபமான விஷயமல்ல. அதனையும் களைப்பே இல்லாது மகிழ்வுடன் செய்வது எத்தனை நல்ல விஷயம்.

சோள ரொட்டியும் கடுகுக்கீரையும்
படம்: இணையத்திலிருந்து.....

மக்காச்சோள மாவில் செய்த ரொட்டியும், அதற்கு பக்க துணையாக  கடுகுக் கீரையில் செய்த சப்ஜியும், வெண்ணைத் துண்டும் வைத்து ஒரு இடத்தில் கொடுக்க, மற்றொரு இடத்தில் தந்தூரி ரொட்டி, வெண்ணை, இரண்டு சப்ஜிகள் என கொடுத்தார்கள். சில இடங்களில் தேநீரும் ப்ரெட் பகோடாவும் கொடுத்தார்கள். அனைத்தையும் வாங்கிச் சாப்பிட்ட படியே பயணிப்பது நமக்கு நல்லதல்ல! என்றாலும் ஒரு சில இடங்களில் அவர்களின் அன்பிற்கு கட்டுப்பட்டு ஒரு தட்டில் வாங்கி, அனைவரும் சிறிது பங்கிட்டு உண்டோம். அவர்களுக்கும் கொடுத்த மகிழ்ச்சி, நமக்கும் சாப்பிட்ட திருப்தி!


வெல்லம் காய்ச்சும் பெரியவர்.....

சுடச்சுட காய்ச்சிய வெல்லம்.....

தொடர்ந்து பயணித்து வரும் வேளையில் வயலில் வெல்லம் காய்ச்சுவதைப் பார்த்தவுடன் திரும்பி வரும்போது வெல்லம் வாங்கிக் கொள்ள வேண்டும் எனச் சொன்னது நினைவுக்கு வர, அப்படி ஒரு இடத்தில் வாகனத்தினை நிறுத்தினோம். அனைவரும் தேவையான வெல்லத்தினை வாங்கிக் கொள்ள, நானும், ஓட்டுனர் ஜோதியும் அங்கே அடுக்கி வைத்திருந்த கரும்புகளில் இரண்டினை எடுத்து சுவைக்க ஆரம்பித்தோம். இப்படி கரும்பினைச் சுவைத்து எத்தனை வருடங்களாகி விட்டன! நெய்வேலியில் இருந்தவரை பொங்கல் சமயத்தில் கரும்பு நிறையவே சாப்பிட்டிருக்கிறேன். தில்லி சென்ற பிறகு கரும்பு இப்படிச் சாப்பிட வாய்ப்பு இருந்ததில்லை.


கரும்பு சுவைக்கும் எங்கள் ஓட்டுனர் ஜோதி....


கரும்பு விவசாயி.....

மேலே இருப்பவரின் மகன்...
வெல்லம் விற்பனைக்கு!

பத்து பதினைந்து நாட்களிலேயே பொங்கல் வருவதால், அனைவரும் வெல்லம் வாங்கிக் கொண்டு தயாராக எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம். வழியில் இன்னும் ஒரு இடத்தில் ஆரஞ்சு போலவே இருக்கும்கின்னுவிற்க அதனையும் வாங்கி வண்டியில் போட்டுக் கொண்டு தொடர்ந்து பயணித்தோம். நான்கு நாட்கள் பயணம் முடிவடைவதில் அனைவருக்கும் வருத்தம். இப்படித் தொடர்ந்து பயணித்தபடியே, பல இடங்களைப் பார்த்தபடியே, பல்வேறு அனுபவங்களை பெற்றபடியே இருந்தால் நன்றாக இருக்கும் என்றாலும், வேலைக்குச் சென்று தானே ஆகவேண்டும்!

சாலையில் சென்று கொண்டிருந்த சீக்கிய திருமண ஊர்வலம்.....


சாலையோரத்தில் சுடச்சுட வேர்க்கடலை விற்பனை....

 சாலையோரங்களில் கொட்டி வைத்திருக்கும் கின்னு....
இவையும் விற்பனைக்கே!

குழுவினர் அனைவரும் இப்பயணித்தினைப் பற்றியும், அனைத்து விஷயங்களையும் சிலாகித்துப் பேசியபடி பயணிக்க, தில்லி வந்து சேர்ந்தோம்ஓட்டுனருக்கும், வாகனத்திற்குமான கட்டணங்களைக் கொடுத்து அனைவரும் வீடு வந்து சேர்ந்தோம். டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி புறப்பட்டு 29-ஆம் தேதி திரும்பி வந்தோம். மொத்தம் நான்கு நாட்கள். கிடைத்த அனுபவங்கள், பார்த்த இடங்களை கணக்கில் கொண்டால் பயணத்திற்கான மொத்த செலவு மிகக் குறைவே. ஆளொன்றுக்கு ரூபாய் 4000/- அளவில் தான் ஆனது.

”இறக்கி விட்டுப் பாருய்யா.... நானே ஓடிக் காட்டறேன்!”
வாகனத்தில் பயணிக்கும் வாகனங்கள்....

இத்தொடரில் பார்த்த, படித்த அனைத்து பகுதிகளையும் படிக்க முடியாதவர்களின் வசதிக்காக அப் பகுதிகளின் தலைப்பும், சுட்டியும் இதோ இங்கே!

பகுதி 23: சோள ரொட்டியும் கடுகுக் கீரையும் கொஞ்சம் வெல்லமும்

அடர் பனியோ, அடைமழையோ, சுட்டெரிக்கும் வெயிலோ....
எதுவாக இருந்தாலும் பயணிப்போம்!

பயணத்தில் தொடர்ந்து வந்து பதிவுகளை படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லிய, சொல்லாத அனைவருக்கும் நன்றிபயணம் செய்வது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறதுபோலவே கட்டுரைகளும்இருந்தாலும் இக்கட்டுரைகளில் சற்றே இடைவெளி இருந்தாலும் இருக்கலாம். எழுத நினைத்தாலும் அலுவலகப் பணிகள் சற்றே அழுத்துகின்றன. சில காலத்திற்கு பதிவுகள் எழுத முடியாது போனாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை!

முடிந்த போது எழுத எண்ணம்குஜராத் பயணம், வடகிழக்கு மாநிலப் பயணம் ஆகியவை பற்றி எழுத நிறையவே இருக்கிறது. பார்க்கலாம்!

ஆதலினால் தொடர்ந்து பயணிப்போம்….

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து


56 comments:

 1. சீக்கியர்களின் தானம் சிறப்பு...

  நிறைவான பயணம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. பிரமாதம். முந்தைய பதிவுகளின் வரிசையும் சுட்டியும் நல்ல ஐடியா.

  தொடர்ந்து எழுதி முடித்தமைக்கு பாராட்டுக்கள். சில பதிவுகளில் எழுத்தோட்டத்தை ஒரு முறை சரி பார்த்து புத்தகமாக வெளியிட வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்திற்கு நன்றி. புத்தகம் வெளியிட எண்ணம் உண்டு - At least மின் புத்தகமாவது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 3. இன்ன நாளில் இன்ன இடம் இன்ன. வரிசையில் என்று கூடவே ஒரு time/location map போல கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தமிழில் travelogue எழுதுபவர்கள் ஏனோ இதைத் தருவதில்லை. அடுத்த பயண அனுபவத் தொகுப்பிற்கு;-)

  ReplyDelete
  Replies
  1. நல்ல ஒரு ஐடியா கொடுத்தமைக்கு நன்றி. அடுத்த தொடரில் எழுதி விடலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
  2. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் யோசிக்கணும்!

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 4. கூரை மேல் பயணம் எங்க ஊர் பஸ்ஸிலும் அடிக்கடி காண முடியும்.

  சுடச்சுட புது வெல்லம், எடுத்து சுவைக்கத் தூண்டுகிறது. அன்னதானத்தின் சிறப்பு தெரிந்தவர்கள் போலும்.

  பயணத்தின் சில பதிவுகளைத் தவற விட்டிருந்தாலும் வேண்டும்போது பார்த்துக்கொள்ளலாம். குறைந்த செலவில் நிறைவான பயணம். நாங்களும் இலவசமாக எல்லா இடங்களையும் பார்த்துவிட்டோம். நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 5. வெல்லமாக இனிக்கிறது இன்றைய பயணப்பதிவும். மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 6. Excellent summary sir,
  I felt that I made this travel, that is the power of your writing.
  Thanks

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ் குமார்.

   Delete
 7. பாராட்டுகள். என்னால் எல்லாம் இவ்வளவு பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலையில் உங்கள் பயணக்கட்டுரைகள் வாயிலாக நானும் பயணித்த உணர்வு.

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் பயணிக்கலாம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. பயணத்தொடரை சுவாரஸ்யமாக எழுதியதோடல்லாமல் அழகிய படங்களை வெளியிட்டு நேரில் பார்ப்பதுபோன்ற தோற்றத்தை உண்டாக்கியதற்கு நன்றி! அடுத்த பயணத் தொடருக்கு காத்திருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 9. சிறப்பான பயணப் பகிர்வு! சீக்கியர்களின் அன்ன தானம் மற்றும் வெல்லம் காய்ச்சி விற்பது ஆகியவை மனதில் பதிந்தது! வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 10. ஆஹா எத்தனை அழகு அந்த வெல்லம்... பரோட்டா சப்ஜியும் பார்க்க அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 11. பயணங்கள் என்றுமே அலுக்காதவை. அதுவும் இமயமலைப் பகுதிகள் பார்க்கப் பார்க்க அழகு. தொடர்ந்து படிக்க முடியாவிட்டாலும் அவ்வப்போது வந்து படித்துக் கொண்டிருந்தேன். கூடிய சீக்கிரம் மின் புத்தகமாகப் போடுங்கள்.
  மேலும் மேலும் பயணங்கள் வாய்க்கவும் அவற்றைப் பற்றி எழுதவும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete
 12. படங்களும் பகிர்வும் அருமை
  மக்கி கி ரோடி ஔர் சர்சோங் க சாக்,தேசி கீ கே சாத்!
  ஆகா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 13. வித்தியாசமான உணவு வகைகளை ரசித்தேன் ,ருசிக்க முடியவில்லை :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 14. படத்தோடு இணைந்து பயணித்த அனுபவத்தைத்தருகிறது பதிவு!! அந்த உணவு பண்டங்களின் மணம் !!! ஆஹா!!! படமே சொல்லுதே!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 15. அருமையான பயணத்தொடரை மனமார ரசித்தோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 16. சீக்கியர்கள், இந்தியாவில் மட்டுமின்றி உலகில் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் அவாகளது குருத்வாராவில் உணவு அளிக்கிறார்கள். மத பேதம் கிடையாது. இங்கிலாத்தில் இவர்களுடைய குருத்வாராவில், ஹோம் லெஸ் என்று சொல்லக்கூடிய தெருக்கோடிகளில் வாழ்பவர்கள் நிறைய பேருக்கு உணவளிக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். பல குருத்வாராக்களில் இவர்களது சீரிய பணி தொடர்ந்து நடக்கிறது. இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லும் பலர் இந்திய உணவு கிடைக்கும் என்பதற்காகவே குருத்வாராவிற்குச் சென்று சாப்பிடுவதுண்டு.

   தங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி.

   Delete
 17. தங்களால் நாங்களும் பயணித்தோம்
  இதுநாள் வரை காணாத காட்சிகளைக் கண்டோம்
  நன்றி ஐயா
  படங்கள் ஒவ்வொன்றும் கவிதைதான்
  நன்றி தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 18. ஆரம்பத்தில் இருந்து பணிசூழல்
  காரணமாக இப்போதுதான்
  படிக்கத் துவங்குகிறேன்
  படங்களுடன் பகிர்வு உடன் பயணிக்கிற
  உணர்வை ஏற்படுத்திப் போகிறது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 19. மணக்குது சர்சன் கா சாக்......அதுதானே அது?!!! அருமையான புகைப்படங்கள். சீக்கியர்கள் உலகம் முழுவதும் பெயர்ந்து வாழ்கின்றார்கள்....கானடாவில் நிறைய என்று சொல்லலாம்...பஞ்சாபிற்கும் கானடாவிற்கும் நிறைய தொடர்புகள் இருப்பதாகத் தெரிகின்றது...கானடாவில் கூட அவர்கள் இது போன்று செய்கின்றார்கள்...

  நல்ல பயண அனுபவம்...மிகவும் ரசித்து வாசித்தோம் வெங்கட் ஜி!

  (கனடா-சீக்கியர் பற்றிய குறிப்பு கீதா: மகனிடம் இருந்து அறிந்தது....)

  ReplyDelete
  Replies
  1. சீக்கியர்களின் உலகின் பல பகுதிகளிலும் இருக்கிறார்கள். அங்கேயும் இந்த நல்ல விஷயத்தினை தொடர்கிறார்கள்....

   சர்சோன் கா சாக்.... :) அதே தான்..

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 20. பயணக் கட்டுரை அருமை. கரும்பு ஜூஸ் சாப்பிடக் கொடுத்துவைக்கலையா? சீக்கியர்களைப் பற்றிய குறிப்பு நன்றாக இருந்தது. அவர்களும், குஜராத்திகளும் இந்திய சிந்திக்களும் உணவுதானம் (பிரசாதம்) செய்யும் குணம் உடையவர்கள்.

  கடைசில, சாப்பாட்டுப் படம், இணையத்தில் சுட்டுவிட்டீர்களே. சாப்பிடுவதற்கு முன், போட்டோ பிடிக்க மறந்துவிட்டீர்களா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   சாப்பாட்டு படம்! - சாப்பிடுவது தான் அந்த நேரத்தில் முக்கியம் இல்லையா! படம் கிடைக்குமே! :)

   Delete
 21. படங்கள் கலக்கல் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 22. சேர்ந்து பயணிக்கிறோம்.
  படங்கள் அழகு அழகு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 23. படிச்சபொறவு இங்கேயெல்லாம் போவோணும்னு ஆசையாவுதுங்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன் ஜி!

   Delete
 24. Replies
  1. தமிழ் மணம் பத்தாம் வாக்கிற்கு நன்றி குட்டன் ஜி!

   Delete
 25. அற்புதமான பயணக் கட்டுரை. நான் முழுவதுமாக படிக்கவில்லை என்றாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம். வந்து படித்திருக்கிறேன். எழுதும் திறமையும் படம் எடுக்கும் நுட்பமும் ஒன்றாக அமைவது ஒரு வரம். தங்களுக்கு இரண்டுமே பிரமாதமாக அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
  த ம 11

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 26. ரசிக்கவைக்கும் பயண அனுபவங்களை நாங்களும் உணர்ந்து அனுபவிக்கும் வகையில் அழகாக எழுதியுள்ளீர்கள். படங்கள் கூடுதல் பலம். பாராட்டுகள் வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 27. இன்றைக்கு உக்கார்ந்து இந்த 23 பதிவுகளையும் படிச்சேன். அப்பப்ப வந்துதான் போயிருக்கேன் என்றாலும் சின்னமஸ்தாவை எப்படி விட்டேன்னு இன்னும் புரியலை !!!

  ஹிமாச்சல் பகுதி போய் வரலாமான்னு இப்பத் தோணுது.

  ReplyDelete
  Replies
  1. ஒன்றிரண்டு பதிவுகள் படிச்சுருப்பீங்க.... முழுசா இப்ப படிக்க முடிஞ்சுதே! - விளம்பரம் போட்டதும் ஒரு விதத்தில் நல்லாச்சு! :)

   ஹிமாச்சலில் நிறைய இடங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் - இப்போது கூட என் பக்கத்தில் ஹிமாச்சலப் பிரதேச சுற்றுலா தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....