எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, February 10, 2016

திருவரங்கத்தில் பதிவர் சந்திப்பு – ஃபிப்ரவரி 2016விடுமுறையில் தமிழகம் வரும்போதெல்லாம், அங்கே இருக்கும் நண்பர்களையும், அச்சமயத்தில் தமிழகம் வரும் பதிவுலக நண்பர்களையும் சந்திக்க முயல்வது எனக்கு வழக்கமாக இருக்கிறது. இம்முறையும் விதிவிலக்கல்ல…..  சில நாட்கள் முன்பு புதுக்கோட்டை சென்று அங்கே இருக்கும் பதிவுலக நண்பர்களைச் சந்திக்க விரும்பியதும், சந்தித்தது பற்றியும் ஏற்கனவே பதிவாக வெளியிட்டு விட்டேன். அதற்குப் பிறகும் சில பதிவுலக நண்பர்களைச் சந்தித்தேன். சகோ தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் மகன் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கவே அங்கும் சென்று அவர்கள் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு அவர்களையும் சந்தித்தேன். சென்னையிலும் திரு பால கணேஷ் மற்றும் திருமதி கீதா [தில்லையகத்து] அவர்களையும் திங்களன்று சந்தித்தேன்.

திரு கோபால் - திரு வை. கோ.

திருவரங்கத்திலேயே இருக்கும் பதிவர்களான திரு ரிஷபன், திருமதி கீதா சாம்பசிவம், திருமதி ருக்மணி சேஷசாயி ஆகியோர்களை ஒவ்வொரு தமிழக வருகையின் போதும் தனித்தனியாக சந்தித்திருக்கிறேன்ஆனாலும், திருச்சி பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சந்திக்க எனக்கு வாய்ப்பிருக்கவில்லை.  இம்முறை நான் அங்கே இருக்கும்போது துளசிதளம் வலைப்பூவில் எழுதும் திருமதி துளசி கோபால் [துளசி டீச்சர்] அங்கே வரப்போவது தெரிந்தவுடன் திருச்சியில் ஒரு மினி பதிவர் சந்திப்பினை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம்.

திருமதி துளசி கோபால் - திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி

துளசி டீச்சர் வரும் நாள் முடிவானதும், அவர் எனக்குத் தெரிவிக்க, எனக்குத் தெரிந்து  திருச்சியில் வசிக்கும் பதிவர்களானதிரு ரிஷபன், திருமதி ருக்மணி சேஷசாயி, திருமதி கீதா சாம்பசிவம், திரு தமிழ் இளங்கோ, திரு வை.கோபாலகிருஷ்ணன், திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி மற்றும் திருமதி ராதா பாலு ஆகிய அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பினேன்கூடவே எங்கள் வீட்டில் மூன்று பதிவர்கள்என்னையும் சேர்த்து! திருமதி ராதா பாலு அவர்களிடமிருந்து மட்டும் பதில் வரவில்லை

புகைப்படம் எடுக்கும் திரு வை.கோ....  போஸ் கொடுக்கும் நண்பர்கள்...

அனைவரும் [பதிவர்கள் – 10, துணைவர்/துணைவி – 3] என மொத்தம் பதிமூன்று பேர், திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் வீட்டில், கடந்த ஞாயிறு 7 ஃபிப்ரவரி 2016 மாலை 04.00 மணிக்குச் சந்தித்தோம். 04.00 மணியிலிருந்தே சந்திப்பு நடந்த இடத்தில் ஒரே கல கல! அனைவரும் பேசிக் கொண்டும் மகிழ்ச்சியில் புன்னகைத்ததாலும் சந்திப்பு நடந்த இடத்தின் வெகு அருகே இருக்கும் அம்மாமண்டப காவிரியில் சலசலப்பு!
சந்திப்பு என்று சொல்லிவிட்டு சிற்றுண்டி இல்லாமலா? அனைவருக்கும் சிற்றுண்டியாக கிடைத்த விஷயங்கள் நிறையவே…  ஒரு பட்டியல் போடலாமா?

ஸ்வீட் எடு.... கொண்டாடு....
ஸ்வீட் சாப்பிட்டு முடிச்சா - சட்னி கிடைக்கும்!

திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் உடல் நிலை சரியில்லாதபோதும் சந்திப்பிற்காகவே அவர்கள் வீட்டில் செய்த ரவா கேசரி!

அவர்கள் வீட்டின் கீழேயே இருக்கும் உணவகத்திலிருந்து வரவழைத்த போண்டாதொட்டுக்கொள்ள சட்னி!

திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் வாங்கிக் கொண்டு வந்த தேங்காய் பர்ஃபி.

திருமதி துளசி கோபால் அவர்கள் திருவரங்கம் கிருஷ்ணா ஸ்வீட்ஸ்லிருந்து வாங்கிக் கொண்டு வந்த ஸ்பெஷல் சோன்பாப்டி [துண்டு துண்டாக சிகப்பு வண்ணக் காகிதத்தில் பொதிந்து வைத்தது.

திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் வீட்டில் தயாரித்த காஃபி!      

அய்யோடா…. இப்படி ஒரு பட்டியல் போட்டு எங்களை எல்லாம் ஏன் இப்படி சோதிக்கிறாய்? என்று கேட்டால் பதில் என்னிடம் இருந்து வரப்போவதில்லை! பதில் சொல்ல சாப்பிட்டு முடிக்க வேண்டுமே!


திரு வை.கோ. அவர்களிடமிருந்து புத்தகம் பெறுகிறார் 
திருமதி துளசி கோபால் 


திரு தமிழ் இளங்கோ அவர்களிடமிருந்து புத்தகம் பெறுகிறார் 
திருமதி துளசி கோபால்

திரு ரிஷபன் அவர்களின் புத்தகத்தோடு திருமதி துளசி கோபால் - 
அருகில் திரு ராமமூர்த்தி

சந்திப்பு அதுவும் பதிவர்கள் சந்திப்பு என்றால் புத்தகப் பரிமாற்றம் இல்லாமலா? பதிவர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை மற்றவர்களுக்குக் கொடுத்தார்கள்அப்படி கொடுக்கப்பட்ட புத்தகங்களின் விவரங்கள் கீழே:

திரு ரிஷபன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு – “முற்றுப் பெறாத ஓவியம்” – வந்திருந்த அனைத்து பதிவர்களுக்கும் ஒன்று.

திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்புஎங்கெங்கும் எப்போதும் என்னோடு” – திருமதி துளசி கோபால் அவர்களுக்கு.

புதுக்கோட்டை பதிவர் சந்திப்பின் போது வெளியிட்டஉலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு” – திரு தமிழ் இளங்கோ ஐயா திருமதி துளசி கோபால் அவர்களுக்கு

தான் எடுத்த புகைப்படத்தினை ரசிக்கும் திரு வை.கோ....
அருகில் திரு கோபால்...

புத்தகப் பரிமாற்றங்கள், சிற்றுண்டி என சிறப்பாக நடந்து கொண்டிருக்க, பதிவுலகம், ஒவ்வொருவர் எழுதுவதிலும் தங்களுக்குப் பிடித்தது, சில பல ஜோக்ஸ், தற்போது வெளிவரும் இதழ்களின் தரம் என பலவும் பேசினோம்நடுநடுவே ஒருவொரை ஒருவர் கிண்டலடிப்பதும், சிரிப்பதும் என ஒரே மகிழ்ச்சிச் சாரல்சிலர் முதல் முதல் சந்தித்துக் கொண்டாலும் நீண்ட நாள் நண்பர்கள் போல உரையாட முடிந்ததும் மகிழ்ச்சியைத் தந்தது.

எங்களுக்கு மாலை கிடையாதா?

வந்திருந்த ஆண்களுக்கு காதில் புகை வர வைக்கும் சம்பவம் ஒன்றும் நடந்தேறியதுபெண்களுக்கு விதம் விதமாய் காதணிகள், மாலைகள் என கிடைப்பது போல ஆண்களுக்கு அலங்காரப் பொருட்களே கிடைப்பதில்லை! இங்கேயும் அதே அதேதிருமதி ருக்மணி சேஷசாயி அவர்கள் தன் கைப்படத் தயாரித்த மணி மாலைகள், அதற்கு ஒத்த காதணிகள் என அன்றைக்கு வந்திருந்த பெண்மணிகள் அணிந்திருந்த உடைக்குத் தகுந்த வண்ணத்தில் கொடுக்க, அவர்களும் அதை அப்போதே - ஆண்களுக்குக் காதில் புகை வந்தது என்றாலும்அடுப்புல ஒண்ணும் இல்லையே எங்கே இருந்து புகை என்று யோசித்தபடியே அணிந்து கொண்டார்கள்கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்….. 

கைப்பைக்குள் ஆண்களுக்கும் ஏதாவது வைத்திருக்கலாம்!
திருமதி ருக்மணி சேஷசாயி, அருகில் ரோஷ்ணி மற்றும் திரு சாம்பசிவம்

சிறு வயதில் காது குத்திக் கொண்டிருந்ததுதுந்து போய் விட்டதுஇல்லை எனில் காதணியாவது தரச் சொல்லிக் கேட்டிருப்பேன். அடுத்த முறை தயாரிக்கும்போது Press Type காதணிகள் தயாரிக்க திருமதி ருக்மணி சேஷசாயி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்! – அனைத்து ஆண்கள் சார்பிலும்!


மேற்குச் சூரியனும், காவிரி ஆறும்......

சூரிய ஒளியில் ஜொலிக்கும் காவிரி ஆறு.....

இப்படியாக தொடர்ந்து பேச்சும் சிரிப்பும் இருக்க, சந்திப்பு நடந்த அடுக்கு மாடி வாசிகள்என்ன இங்கே இத்தனை சத்தம் என நினைத்திருக்கக் கூடும்சந்திப்பு நடந்த திருமதி கீதா சாம்பசிவம் அவர்களது வீட்டு மொட்டை மாடி பதிவுலகில் பிரபலம்திரு வை.கோ. வீட்டு பால்கனி போலவேதிரு. சாம்பசிவம் அவர்கள் மொட்டைமாடிக்கு அழைத்துச் செல்ல அனைவரும் சென்று அங்கிருந்து தெரியும் திருவரங்க கோவில் கோபுரங்கள், காவிரி ஆறு, St. Joseph’s Church, மலைக்கோட்டை என அனைத்தையும் பார்த்து ரசித்தோம்சில பல புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம்…..

தொடரும் பேச்சு.....

மொட்டை மாடியிலிருந்து திரும்பவும் அவர்கள் வீட்டுக்கு வந்து தொடர்ந்தது சந்திப்புபேசிக் கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லைஅனைவருக்கும் சந்திப்பை முடிப்பதில் ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லைஎனக்கும் தான்என்றாலும் அடுத்த நாள் காலை திருச்சியிலிருந்து புறப்பட வேண்டும்தில்லி நோக்கிய பயணம் என்ற நினைப்பு வரவே இல்லை. என்றாலும், எந்தவொரு நிகழ்வும் முடியத்தானே வேண்டும்போலவே இந்த மகிழ்ச்சியான சந்திப்பும் முடிவுக்கு வந்தது!

திரு கோபால் மற்றும் திரு ராமமூர்த்தி...

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கடந்து போனதே தெரியவில்லைகடைசியில் திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் வந்திருந்த பெண்களுக்கு விளக்கு பரிசளித்தார்இதிலும் ஆண்கள் பாவம்ஒன்றும் கிடைக்கவில்லை! பொதுவாகவே வீட்டுக்கு வரும் பெண்களுக்கு இப்படி பரிசளிப்பவர்கள் கூட வரும் ஆண்களுக்கும் உபயோகமான பரிசு ஏதாவது கொடுக்கலாம்ஏனிந்த தனி கவனிப்பு! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…  இதை யாரும் கேட்கவே மாட்டாங்களா சொக்கா!

திரு தமிழ் இளங்கோ, திரு வை.கோ. 
மற்றும் திரு ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி.... 


வந்திருந்த அனைவரும் ஒருவொருவருக்கு ஒருவர் பிரியாவிடை தந்து பிரிந்தோம்……  சந்திப்பு இனிதே முடிவடைந்தது

இப்படியே தொடர்ந்து பதிவர் சந்திப்புகளும், இனிய உரையாடல்களும் தொடரட்டும்…..  சகோ தேனம்மை அவர்கள் சொல்வது போல சொல்லி முடிப்போமா!

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


82 comments:

 1. மகிழ்ச்சியான மாலைப்பொழுதினைப் பகிர்ந்து கொண்ட விதம் அழகு.. அருமை..

  செல்வி ரோஷிணிக்கு அன்பின் நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
  2. Dear venkat, i had been reading thualsihalam website past 3-4 yrs -2 yrs back i met her @ chennai and last year she visited our home very good writing and please mail me at cananthu@gmail.com here after i will regularly read yours also

   Delete
  3. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி. உங்களது மின்னஞ்சல் முகவரியை சேமித்துக் கொண்டேன். இனி என்னுடைய பதிவுகள் வெளியிடும் தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனந்து ஜி!

   Delete
 2. அந்த நினைவுகளை மீண்டும் மனத்திரையில் ஓட்டியது பதிவு

  ReplyDelete
  Replies
  1. இனிய நினைவுகளைத் தந்த சந்திப்பு. சந்திப்பின் நினைவுகள் இப்போதும்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 3. சந்திப்பைப் பற்றி வாசிப்பதே மகிழ்வாக இருக்கிறதே!
  ஹ்ம்ம்ம் ஆண்களுக்கு ப்ரெஸ் டைப் கம்மல் :-)))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 4. இது ஒரு பொன்மாலைப் பொழுது என்று

  கீதா மாமி பாடி இருப்பார்களே !!

  ஸ்ரீரங்கம் செல்லும்போது இந்த தடவை
  அந்த பெருமாளை தாயாரை தரிசிப்பதுடன்
  கீதா மாமி தரும் ரவா கேசரியும் போண்டாவும்
  சாப்பிடணும்.

  நீங்கள் சென்னை வரும்போது சொல்லலாமே !!

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. அடுத்த முறை சென்னை வரும்போது உங்களையும் சந்திக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் மிகக் குறைவான நேரமே சென்னையில் இருப்பதால் சென்னை நண்பர்கள் பலரையும் சந்திக்க முடியவில்லை. அடுத்த முறை உங்களை நிச்சயம் சந்திக்க வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா...

   Delete
 5. பதிவையும் படத்தையும் பார்த்து கொண்டிருக்கும் போது என் மனைவி என்னமோ கருகுகிற வாசனை வருகிறது என்னன்னு போய் பாருங்க என்கிறாள்...  ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ற பெருமுச்சைதான் விட முடிகிறது....

  ReplyDelete
  Replies
  1. கருகும் வாசனை! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 6. உண்மையில் இப்படி கூடி மகிழ்வது மிகவும் சந்தோசமே .வலைபதிவர் ஒற்றுமைக்கு கடல் கடந்தாலும் மனதால் குரல் கொடுக்கிறேன் .படங்களில் உங்களை காணவில்லையே ?
  நீங்கள்தான் படங்கள் எடுத்தீர்களா ?

  ReplyDelete
  Replies
  1. படங்கள் நான் தான் எடுத்தேன். அதனால் தான் என்னைக் காண முடியவில்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரிகாலன்.

   Delete
 7. ஆஹா அருமையான சந்திப்பு, பகிர்ந்த விதம் அருமை,, தொடருங்கள்,,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 8. மீண்டும் அந்த இனியநாளை நினைத்துப் பார்க்கச் செய்த பதிவு. உங்கள் கேமராவில் எடுத்த படங்கள் என்றாலே ஒரு தெளிவுதான். நானும் இந்த வலைப்பதிவர் சந்திப்பு பற்றி ஒரு பதிவினை எழுதி இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அன்றைய நாளின் இனிய நினைவுகளை மீட்டெடுத்தது உங்கள் பதிவும்..... இனியதோர் சந்திப்பு பற்றிய நினைவுகள் இப்போதும். அனைவருக்கும் இச் சந்தோஷ அலைகள் நிச்சயம் இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 9. செம ஜாலி சந்திப்பு போல! உங்கள் பதிவும் உற்சாகத் துள்ளலாக இருக்கின்றது வெங்கட்ஜி! பல நினைவுகளை மகிழ்வுடன் சுமந்து கொண்டே தில்லிக்குப் ப்யணித்திருப்பீர்கள் அடுத்த சந்திப்பு வரை இது உங்களுக்குப் புத்துணர்வு தரும் ஒரு டானிக்...அடுத்த சந்திப்பிற்குக் காத்திருக்கவும் உதவும். சரி அடுத்த முறையாவது உங்கள் வருகையின் போது சந்திக்க வேண்டும்..பார்ப்போம்..

  கீதா: வெங்கட்ஜி உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்றாலும் சிறு வருத்தம் உங்களைச் சரியாக உபசரிக்க முடியவில்லை என்று. எங்கள் வீட்டில் என்றால் கண்டிப்பாக உங்களை என் கைவண்ணத்தைக் கொடுத்து உபசரித்து???!!! வேறு வழியில்லாமல் உங்களைச் சாப்பிட வைத்து ஒரு வழி செய்திருப்பேன். அதற்கு வழியில்லாமல் எனது கடமை கோடம்பாக்கத்தில் ஆனதால் இயலாமல் போனது. சென்னையிலும் கூட அனைவரையும் அழைத்துச் சந்தித்திருக்கலாமோ என்றும் தோன்றியது. அடுத்தமுறை சந்திப்பாக்கிவிடுவோம் எங்கள் வீட்டில்...

  உங்கள் உற்சாகப் பதிவு இது! அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள் ஜி!

  ReplyDelete
  Replies
  1. துளசிதரன்: உங்களைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகவே பாலக்காடு வர வேண்டும்.... :) வருவேன்.

   கீதா: உங்களைச் சென்னையில் சந்தித்ததில் மகிழ்ச்சி. வருத்தம் வேண்டியதில்லை - சந்திப்பின் போது சாப்பிட கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சந்திப்பது மட்டுமே முக்கியம். சென்னை சந்திப்பின் நினைவுகள் இப்போதும் நெஞ்சில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 10. எங்கே சென்றாலும் சந்திக்க வலையுலக உறவுகள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது !

  ReplyDelete
  Replies
  1. செல்லுமிடமெல்லாம் நண்பர்கள் இருந்து விட்டால் மகிழ்ச்சி தானே..

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 11. மகிழ்ச்சி. இனிய சந்திப்பினைக் குறித்த அருமையான பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 12. ஆகா... பதிவுலக பீஷ்மர் அய்யா வை.கோ.அவர்களைச் சந்தித்திருக்கலாம், மூத்த மற்றும் இளைய பதிவர்களைச் சந்தித்திருக்கலாம்...முக்கியமாக இனிப்பு, வடை சட்னி எல்லாத்தையும் வெளுத்திருக்கலாம்.. இப்படித் தகவல் சொல்லாமல் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்ட உங்களை என்ன செய்யலாம்? அடுத்த முறையாவது அருகில் இருக்கும் பதிவர்களையும் அழைக்கலாம் என்று கேட்கலாம் (வேறென்ன சொல்லலாம்?) நன்றி நண்பரே! தலைநகரைச் சேர்ந்தாச்சா? உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளவும்.

  ReplyDelete
  Replies
  1. பக்கத்து நகரங்களில் இருக்கும் பதிவர்களையும் அழைக்கலாம் என நினைத்தாலும், திருச்சி வரை பயணிக்க வேண்டுமே - மாலை நேரம் சந்திப்பில் கலந்து கொண்டு வீடு திரும்ப இரவாகிவிடுமே என நினைத்ததால் தான் அழைக்கவில்லை ஐயா.....

   தலைநகர் சேர்ந்து விட்டேன் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.

   Delete
 13. பேசும் படங்கள்.....ஆஹா அடுத்த வலைப்பதிவர் சந்திப்பை திருச்சியில் கொண்டாடிவிடலாமே....

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பதிவர் சந்திப்பு - திருச்சியில் :) நடத்த ஆசையிருந்தாலும் நடத்த முடியாது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வகுமார்.

   Delete
 14. திரு தமிழ் இளங்கோ வலைப்பதிவைப் பார்த்ததுமே தங்களிடமிருந்து இவ்வாறான பதிவை எதிர்பார்த்தோம். எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அழகான படங்கள். அருமையான பதிவு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 15. அருமையான பதிவு! நன்றாக எழுதி இருக்கீங்க! எனக்கு உடம்பு சரியாக இருந்திருந்தால் ஆண்களுக்கும் ஏதேனும் பரிசு கட்டாயம் கிடைத்திருக்கும். மாமா தான் மட்டும் போய் வாங்கி வருவதாகத் தான் சொன்னார். அவரோட தேர்விலே எனக்கு நம்பிக்கை இல்லாததால் நான் சம்மதிக்கவில்லை. இதே போல் தான் ஜிஎம்பி சாரும் புலம்பினார். அப்போதும் வெளியே போகமுடியாமல் உடல்நலக் கேடு. பொதுவாக வாங்கி வைத்திருப்போம். இப்போது அடுத்தடுத்துப் பயணங்கள், ஆஸ்பத்திரி விஜயம் என்பதால் இம்மாதிரிக் கடைகளுக்குப் போக முடியாமல் ஆகி விடுகிறது. :( என்றாலும் உங்களுக்கெல்லாம் காதில் புகை வந்ததில் மகிழ்ச்சி பொங்கிற்று! :))))

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு உடல் நிலை சரியில்லாதபோதிலும் உங்கள் வீட்டில் சந்திப்பினை சிறப்பாக நடத்தியதற்குப் பாராட்டுகள்.

   காது புகை நீங்கள் மகிழ்ச்சியுறும் அளவுக்கு அதிகமில்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 16. 1
  ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்துடன் ஆரம்பித்துள்ள தங்களின் இந்தப்பதிவு மிக அருமையாகவும், அழகாகவும் அமைந்துள்ளது.

  அதுவும் அதன் கீழே காட்டியுள்ள 7th February 2016 என்பதில் எனக்கோர் தனி மகிழ்ச்சி.

  7th February ..... என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள். அது ஒரு சுவாரஸ்யமான அல்லது சுவாரஸ்யமில்லாத தனிக்கதை. இதோ இந்தப்பதிவினில் அதைப்பற்றி லேஸாகச் சுட்டிக்காட்டியுள்ளேன்:

  http://gopu1949.blogspot.in/2012/03/1.html

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவினில் சொன்ன விஷயத்தினையும் படிக்கிறேன்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 17. 2
  // சகோ தேனம்மை லக்ஷ்மணன்அவர்கள் மகன் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கவே அங்கும் சென்று அவர்கள் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு அவர்களையும் சந்தித்தேன்.//

  மிக்க மகிழ்ச்சி. என்னிடமும் இதை ஹனி மேடம் அவர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. திருமணத்தில் கலந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 18. 3
  //இம்முறை நான் அங்கே இருக்கும்போது துளசிதளம் வலைப்பூவில் எழுதும் திருமதி துளசி கோபால் [துளசி டீச்சர்] அங்கே வரப்போவது தெரிந்தவுடன் திருச்சியில் ஒரு மினி பதிவர் சந்திப்பினைவைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம்.//

  நல்லதோர் முடிவெடுத்து, சந்திப்பு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து நன்கு திட்டமிட்டு செயல்பட்டு, வெற்றிகரமாக நடத்திக் காட்டிவிட்டீர்கள்.

  தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 19. 4
  //திருமதி ராதாபாலு அவர்களிடமிருந்து மட்டும் பதில் வரவில்லை. //

  அவர்கள் ஒருவர் மட்டும் வந்து கலந்துகொள்ளாதது எனக்கும் மிகவும் வருத்தமாக இருந்தது. அவர்களை என்னாலும் தொடர்பு கொள்ள இயலாமல், பல மாதங்களாகவே என் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்து வருகிறார்கள். எங்காவது வெளியூர் அல்லது வெளிநாடு போய் இருப்பார்களோ ... என்னவோ.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. திருமதி ராதா பாலு மின்னஞ்சலை பார்த்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 20. 5
  //ஸ்வீட் எடு.... கொண்டாடு.... ஸ்வீட் சாப்பிட்டு முடிச்சா - சட்னி கிடைக்கும்!//

  இந்தப்படத்தினையும் வெளியிட்டுள்ளது தங்களின் தனிச்சிறப்பாகும்.

  நான் எடுத்த எவ்வளவோ படங்களை அனைவருக்கும் நான் உடனடியாக அனுப்பியிருந்தும், இந்தச் சிற்றுண்டிகள் படம் மட்டும் எடுக்கப்படவில்லையே, அனுப்பப்படவில்லையே என திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் தனது பதிவினில் என்னிடம் குறைபட்டுக்கொண்டார்கள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. நானும் துளசி டீச்சரும் மட்டுமே கேசரி-போண்டா-ஸ்வீட்ஸை புகைப்படம் எடுத்தோம்... அதனால் இங்கே பகிர்ந்து விட்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 21. 6
  //திருமதி துளசி கோபால் அவர்கள் திருவரங்கம் கிருஷ்ணா ஸ்வீட்ஸ்லிருந்து வாங்கிக் கொண்டு வந்த ஸ்பெஷல் சோன்பாப்டி [துண்டு துண்டாக சிகப்புவண்ணக் காகிதத்தில் பொதிந்து வைத்தது.//

  இது மிகவும் டேஸ்டோ டேஸ்ட் ஆக இருந்தது. உடம்பு முழுவதும் எப்போதும் இனிப்பாக உள்ள + தினமும் இரு வேளையும் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டு வரும் என் மனைவியே துளியூண்டு அதில் டேஸ்ட் செய்துவிட்டு, இதன் தனி டேஸ்டுக்கு மிகப்பெரிய சர்டிஃபிகேட் கொடுத்துவிட்டாள்.

  ‘ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’இல் இது கிடைக்கும் என்ற தங்களின் இனிய தகவலுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், வெங்கட்ஜி.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. திருவரங்கத்தில் இக்கடை சமீபத்தில் மெயில் ரோடில் திறந்திருக்கிறார்கள். முன்னர் பஸ் ஸ்டாண்ட் சாலையில் இருந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 22. 7
  //திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பு – “எங்கெங்கும் எப்போதும் என்னோடு” –திருமதி துளசி கோபால் அவர்களுக்கு.//

  அங்கு நாம் சந்தித்த மற்றவர்கள் அனைவருக்கு நான் இதே என் சிறுகதைத் தொகுப்பு நூலை ஏற்கனவே அன்பளிப்பாகக் கொடுத்துள்ளேன் என்பதால், புதிதாக சந்திக்க நேர்ந்த பதிவர் திருமதி. துளசி கோபால் அவர்களுக்கு மட்டும் அன்று என்னால் கொடுக்க நேர்ந்தது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. உங்கள் புத்தகத்தினை எங்களுக்கும் முதலிலேயே கொடுத்திருப்பதைச் சொல்ல விடுபட்டுவிட்டது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 23. 8
  //சிலர் முதல் முதல் சந்தித்துக் கொண்டாலும் நீண்ட நாள் நண்பர்கள் போல உரையாட முடிந்ததும் மகிழ்ச்சியைத் தந்தது.//

  ஆம். உண்மைதான். ஒருசில சந்திப்புகளின் சுவாரஸ்யமே இதில்தான் அடங்கியுள்ளது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. சுவாரஸ்யமான சந்திப்பு தான். இன்னமும் சந்திப்பின் நினைவுகள் மனதில்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 24. 9
  //கைப்பைக்குள் ஆண்களுக்கும் ஏதாவது வைத்திருக்கலாம்! அடுத்தமுறை தயாரிக்கும்போது Press Type காதணிகள் தயாரிக்க திருமதி ருக்மணிசேஷசாயி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்! –அனைத்துஆண்கள் சார்பிலும்!//

  //கடைசியில் திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் வந்திருந்த பெண்களுக்கு விளக்கு பரிசளித்தார் – இதிலும் ஆண்கள் பாவம் – ஒன்றும்கிடைக்கவில்லை! பொதுவாகவே வீட்டுக்கு வரும் பெண்களுக்கு இப்படிப் பரிசளிப்பவர்கள், கூடவரும் ஆண்களுக்கும் உபயோகமான பரிசு ஏதாவதுகொடுக்கலாம் – ஏனிந்த தனி கவனிப்பு! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்… இதை யாரும்கேட்கவே மாட்டாங்களா சொக்கா!//

  :))))) மிக்க நன்றி. பெண்களுக்கு ரவிக்கைத்துணி போல ஆண்களுக்கும் ஆளுக்கு ஒரு கர்சீஃப் ஆவது கொடுத்திருக்கலாம்தான். இனியாவது இதனை கவனத்தில் கொள்வார்களாக :)))))

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆண்களுக்கு ஒரு கர்சீஃப் ஆவது! ) ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 25. 10

  அன்புள்ள வெங்கட் ஜி,

  அன்று நடைபெற்ற நம் இனிய சந்திப்பினை இதைவிட அழகாக யாராலும் படங்களுடன் கோர்வையாக சொல்லிவிட முடியாது. பாராட்டுகள். வாழ்த்துகள்.

  இருப்பின் ஓர் சின்ன குறை:

  இந்தப்பதிவினில் திரு. ரிஷபன் அவர்களையும், வெங்கட்ஜி அவர்களையும் எந்த ஒரு இடத்திலும் / படத்திலும் என்னால் காணவே முடியவில்லை.

  மிகவும் கவனமாகப் பதிவிட்டுள்ளீர்கள். :)

  அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. நான் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்ததால் என்னை பதிவில் காண முடியவில்லை! ரிஷபன் ஜி படம் - இருந்தாலும் இணைக்கவில்லை - அவரது விருப்பத்திற்கிணங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 26. படிக்க மகிழ்வாக இருந்தது பதிவர்களின் மாலைநேர சந்திப்பு...வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 27. காவிரியாற்றின் ஜொலிப்பு அழகு.

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 28. அன்பு நண்பரே
  தாங்களின் திருவரங்கத்தில் பதிவர் சந்திப்பு – ஃபிப்ரவரி 2016 படித்தோம். மிக அருமை. பதிவர் சந்திப்பில் நேரில் கலந்துகொண்ட மகிழ்ச்சி அய்யா. சூப்பர்.
  வாழ்த்துக்கள்
  டில்லி விஜயராகவன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 29. ஒரே சந்திப்பு பற்றிய மூன்றாவது கண்ணோட்டம் ( நான் படிப்பது)நாங்கள் கீதா சாம்பசிவம் வீட்டுக்குப் போனபோதும் என் மனைவிக்கு நினைவுப் பரிசு எனக்கேதும் இருக்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 30. நாங்களும் உடன் இருந்தது போல
  உணர முடிந்தது
  படங்களும் பகிர்வும் அத்தனை அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 31. உறவினர்கள், சினேகிதர்கள் என்பதெல்லாவற்றையும் தூக்கி விழுங்கிவிடும்படியான உறவு முறை பதிவர்களிடையே இப்பொழுது அமைந்து வருகிறது. எவ்வளவு இனிய உறவு,உறையாடல், பகிர்தல்,விருந்தோ,சிற்றுண்டியோ என்ற பெயரில்,வகை வகையான
  விருந்தோம்பல் ஆஹா எவ்வளவு அருமையாக இருந்திருக்கும். போதாக்குறைக்கு காவிரித்தாயின் சிறந்த ஊர். புத்தகப் பரிசுகளும்,ஆபரணப் பரிசுகளும். கொடுத்து வைத்தவர்கள்யாவரும். குட்டிப்பதிவர் ரோஷிணி சபாஷ். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....

   Delete
 32. ஏக்கத்தை உண்டாக்கிய பதிவு. பதிவர்கள் சந்திப்பை சிறப்பாக பதிவு செய்து தந்தது அருமை!
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 33. நானும் கலந்து கொண்டதைப் போன்ற உணர்வு ஜி அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 34. வாழ்த்துக்கள். மறக்காம சாப்பிட்டவைகளைப் படமெடுத்துப்போட்டதுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   Delete
 35. அருமையான புகைப்படங்கள். இனிமையான சந்திப்பு. இந்தச் சந்திப்பில் தரப்பட்ட சிற்றுண்டிகளின் புகைப்படத்தை வெளியிடும் முதல் ஆள் நீங்கள்தான்! கீதா மேடம் கூட தனது பதிவில் அந்தப் படம் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டிருந்தார்கள். அந்தக் காவிரி படம் சூப்பரோ சூப்பர்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 36. அன்று மனம் முழுவதும் அன்பு நிறைந்து வழிந்தது உண்மை. சந்திப்பு ஏற்பாடு செய்த உங்களுக்கு என் அன்பும் ஆசிகளும்.

  ReplyDelete
  Replies
  1. உங்களை அன்று சந்தித்ததில் மகிழ்ச்சி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 37. ஆஹா... சுகமான தருணங்கள்.. சுவையான எழுத்து. பதிவர்களோடு நான் பிறந்த ஊரையும் தரிசிக்க அழகானதொரு வாய்ப்பு. நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 38. மகிழ்வான தருணங்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்.

   Delete
 39. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

   Delete
 40. மகிழ்ச்சியான சந்திப்பு அண்ணா... அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....